06 டிசம்பர், 2014
28 ஜூலை, 2014
ஈகைத் திருநாள் சிந்தனைகள்
மவ்லானா எஸ்.எஸ். அஹ்மது பாகவி ஹழ்ரத் கிப்லா அவர்களின் நோன்புப் பெருநாள் உரை (28/07/2014)
23 ஜூலை, 2014
நடுவர் தீர்ப்பு (மனிதநேயம்)
மாஷா அல்லாஹ்.
மனிதநேயத்தைப் பத்தி விலாவாரியா விளாசித் தள்ளிட்டாங்க இரண்டுபேரும். இப்ப
தீர்ப்பு சொல்லணும்.
பொதுவாப்
பார்த்தீங்கன்னா இன்னைக்கு மனிதநேயம் முற்றிலும் மாய்ந்துவிட்டதா என்றால் இல்லை.
சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
மனிதநேயம் வீழ்கிறதே- இரண்டாம் சுற்று
- உஸ்தாத் முஹம்மது ஷாஃபிஈ வாஹிதி
ஆகஸ்ட் 19 ம்
தேதி மனித நேயம் தினம் அனுசரிக்கப்படுதுன்னு சொன்னாங்க. மனித நேயம் குறைஞ்சி
போச்சி அத கொஞ்சமாக வளர்த்துக்கோங்க அப்டின்னு சொல்றதுக்காகத்தான் அந்த தினமே
அனுசரிக்கப்படுது என்பதை உஸ்தாது அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து சுனாமியைப்
பத்தி சொன்னாங்க.
மனிதநேயம் வாழ்கிறது - இரண்டாம் சுற்று
- உஸ்தாத் காதிர் மீரான் மஸ்லஹி
இங்கு எனக்கு
முன்னால் பேசிய உஸ்தாத் ஷாபி அவர்கள் மனிதநேயம் வீழ்ந்துவிட்டது என்றும்
அநியாங்கள் மலிந்து விட்டது என்றும் மிகுந்த வேதனையோடு கூறினார். இந்த வேதனை படும்
பண்பு மனிதநேயமுள்ளவருக்கு தான் இருக்குமே தவிர இல்லாதவருக்கு இருக்காது.
நடுவர் தொகுப்புரை-2
சும்மா வெளுத்து
வாங்கிட்டார் நம்ம உஸ்தாத் ஷாஃபி. இன்று மனிதநேயமில்லாத மருத்துவர்கள்
பெருகிவிட்டனர் என்றார். சமீபத்தில் படித்த ஒரு விஷயம். நமக்கு ஏதாவது வியாதின்னு
மருத்துவர்ட்ட போனா அவர் மருந்து எழுதித் தருவார். அதை வாங்கிக் கொண்டு அவருக்கு
காசு கொடுக்கவேண்டும். அப்பத்தான் அவர் பொழைக்க முடியும்; அந்த சீட்டை எடுத்துகிட்டு
மெடிக்கல் போனா அவங்க மருந்து தருவாங்க. அதை வாங்கிக்கொண்டு அவங்களுக்கு காசு
கொடுக்கணும் அப்பத்தான் அவங்க பொழைக்க முடியும்; வாங்குன அந்த மருந்தை...
குப்பையில வீசணும். அப்பத்தான் நாம பொழைக்க முடியும். இது காமெடிக்காக
சொல்லப்பட்டாலும் பல நேரங்களில் இதுதான் நிதர்சனம்.
இரண்டாம் சுற்று
இப்ப மறுபடியும் “மனித நேயம் வாழ்கிறதே” என்று ஆணித்தரமாய் ஆதாரங்களை
அடுக்க வருகிறார் உஸ்தாத் காதிர் மீரான் மஸ்லஹி.
மனித நேயம் வீழ்கிறதே- 1
- உஸ்தாத் முஹம்மது ஷாஃபிஈ வாஹிதி
அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகிறேன்.அன்பான மின்னல் fm நேயர்களே ! ஆரம்பமாக
ஈகைத்திருநாள் வாழ்த்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆனந்தம் அடைகிறேன்.
இன்றைய நவீன காலத்தில் மனித நேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா? என்ற அருமையான தலைப்பில் இங்கே பட்டிமன்றம் அறங்கேறிக் கொண்டிருக்கிறது.
இன்றைய கால
கட்டத்தில் மனித நேயம் அதிகம் வீழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்ற கருத்தை
மையப்படுத்தி ஒரு சில தகவல்களை உங்களது சிந்தனையில் பதிய வைக்க விரும்புகிறேன்.
நடுவர் தொகுப்புரை-1
அடேங்கப்பா..அஞ்சு
நிமிஷத்துல சும்மா அட்டகாசமா அடுக்கிட்டுப் போயிருக்காரு.
மலேசியா விமானம்
“mh370” மாயமாய் மறைந்தபோது மதவேறுபாடின்றி எல்லா மக்களும்
பிரார்த்தித்தோமே.. இது மனிதநேயம் இல்லையா?.. கேட்டாரு. உண்மைதான். ஏன்னா
இன்னைக்கு சிலபேர் எப்படி இருக்காங்க தெரியுமா?
ஒரு ஊருல ஒரு
பண்ணையார் ஹெலிகாப்டர் வாங்கினார். அந்த ஊரு மக்கள்லாம் அந்த ஹெலிகாப்டரில் ஏறிப்
பயணிக்க ஆசைப்பட்டாங்க.
மனித நேயம் வாழ்கிறது-1
-உஸ்தாத் காதிர் மீரான் மஸ்லஹி
ஆரம்பமாக மின்னல்
F.M நேயர்களாகிய உங்கள் அனைவருக்கும் ஈகை திருநாள்
வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மிகவும் மகிழ்சியடைகிறேன்.
இந்த உலகத்தில்
மனித நேயம் வாழ்கிறதா.... அல்லது வீழ்கிறதா என்றால் வாழ்கிறது என்பது தான்
உண்மையான தெளிந்த சிந்தனையுடைய ஒரு பதிலாக இருக்கிறது.
மனித நேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா?- நடுவர் முன்னுரை
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அல்ஹம்து லில்லாஹ்.
நஹ்மதுஹு வநுசல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃது.
இந்நிகழ்ச்சியை அவதானித்துக் கொண்டிருக்கும் அன்பு நேயர்களே!
யாருக்கும் இன்னல் தராத மின்னல் FM நேயர்களே! மனித நேயர்களே!!
ஈதுல் பித்ர் ஈகைத்
திருநாள் நல்வாழ்த்துக்கள்!
இன்று ஒரு அருமையான
பட்டிமன்றம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மனித நேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா?
மனிதநேயம் என்றால்
என்ன?
17 ஜூலை, 2014
நோன்பின் மாண்பு-1
கடும் வெயிலிலும் நோன்பு
عن ابن عباس رضي الله عنهما:
أن رسول الله - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بعث أبا موسى على سرية في البحر،
فبينما هم كذلك، قد رفعوا الشراع (3) في ليلة مظلمة، إذا هاتف فوقهم يهتف: يا أهل
السفينة! قفوا أخبركم بقضاء قضاه الله على نفسه، فقال أبو موسى: أخبرنا إن كنت مخبراً،
قال: إن الله تبارك وتعالى قضى على نفسه أنه من أعطش نفسه له في يوم صائف، سقاه الله
يوم العطش (رواه البزار بإسناد حسن إن شاء الله، وحسنه الألباني في "صحيح الترغيب" (1/412)
அபூமூஸா ரலி அவர்கள் தலைமையில் ஒரு படையை அண்ணல் நபிகளார் ஸல் அனுப்பி வைத்தார்கள். கடலைக் கடந்து பயணம். கப்பல் புறப்படத் தயாரான போது மேலிருந்து ஒரு அசரீரி சப்தம்.
கப்பல் பயணிகளே.. கொஞ்சம் நில்லுங்கள்! அல்லாஹ் தன் மீது விதித்துக் கொண்ட ஒரு சட்டவிதியைக் கூறுகிறேன் கேளுங்கள் :
கடும் வெயில் காலத்திலும் அல்லாஹ்விற்காக நோன்பு வைத்து தாகத்தைத் தாங்கிக் கொண்டால் அந்த நோன்பாளிக்கு மறுமையில் எல்லோரும் தாகத்துடன் தண்ணீருக்காக அலைகிறபோது அல்லாஹ் இவருக்கு விஷேசமாக தண்ணீர் அருந்தச் செய்வான்.
قال ابن رجب: "عن بعض السلف قال: بلغنا أنه يوضع للصوّام مائدة يأكلون
عليها والناس في الحساب فيقولون: يا رب نحن نحاسب وهم يأكلون، فيقال: إنهم طالما صاموا
وأفطرتم وقاموا ونمتم".
மறுமையில் நோன்பாளிகளுக்கு விஷேசமான உணவுத் தட்டு இருக்கும் அதில் அவர்கள் சாப்ப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். வேறு சிலருக்கோ இன்னும் விசாரணையே முடிந்திருக்காது . அதனால் அவர்கள் முறையிடுவார்கள். இறைவா.. எங்களுக்கோ இன்னும் விசாரணையே முடிந்தபாடில்லை. ஆனால் அவர்களோ (எந்தக் கவலையுமின்றி ) ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களே..
அவர்களுக்கு சொல்லப்படும்: ஆமாம்.. அவர்கள் உலகில் நோன்பு வைத்திருந்தார்கள்; நீங்களோ உண்டு கொழுத்தீர்கள். அவர்கள் இரவு வணங்கினார்கள்; நீங்களோ உறங்கினீர்கள் .
13 ஜூலை, 2014
ரமளான் குறித்த பதிவுகள்
ரமளான் குறித்து இதுவரை நமது தளத்தில் வெளியான பதிவுகள்:
http://www.maslahi.in/search/label/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
http://www.maslahi.in/search/label/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
28 ஜூன், 2014
மக்தப் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள்
- இதுவரை நாம் எழுதி இயக்கிய மக்தப் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள்.
- சுமார் 35 வீடியோக்கள் தொகுத்து இங்கே உங்களின் பார்வைக்கு ...
PLAYLIST ஐ கிளிக் செய்யுங்கள்.. வரிசையாக ஓடி வரும்.
18 ஏப்ரல், 2014
07 ஏப்ரல், 2014
22 மார்ச், 2014
01 மார்ச், 2014
அற்புதத் திருமறை அல்குர்ஆன் (வீடியோ)
மவ்லானா அல்ஹாஜ் எஸ்.எஸ்.அஹ்மது பாகவி ஹழ்ரத் கிப்லா
(தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா.)
அவர்களின் ஜும்ஆ உரை (28-02-2014) வீடியோ
(தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா.)
அவர்களின் ஜும்ஆ உரை (28-02-2014) வீடியோ
28 பிப்ரவரி, 2014
22 பிப்ரவரி, 2014
கண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே
| قدم محمد عليه الصلاة والسلام |
கண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே
திங்கள் இரசூலே
உங்கள் அன்பை மனம் நாடுதே
கண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே
மக்க நகர் மண்ணாய்ப் பிறந்தேனா நானும்
மஹ்மூதர் பாதம்
தொடர்ந்தேனா நானும்-2
என்றுலகில் காண்பேன் எங்கள் நபி நாதர்
இனிதான தோற்றம் கண்டாலே ஏற்றம்-2
(கண்கள் இரண்டும்)
மதினாவிலே ஓர் மரமாகினேனா
மாநபிக்குத் தென்றல் காற்றும்
தந்தேனா-2
அவர் கையில் ஏந்தும் வாளாகினேனா
அன்னல் நபி அன்புக்கு
ஆளாகினேனா-2
(கண்கள்
இரண்டும்)
கஃபாவிலே ஓர் கல்லாகினேனா
காப்பவனின் வீட்டில் உள்ளாகினேனா-2
கடும்பசி தாங்கி கருணை நபி வயிற்றில்
கட்டிய கல்லில் இடமாகினேனா-2
(கண்கள் இரண்டும்)
ஒட்டகமாய் உலகில் பிறந்தேனா நானும்
உத்தம நபியை சுமந்தேனா
நானும்
பேரித்தங்கனியாய் கனிந்தேனா நானும்
பெருமானின் உமிழ் நீரில் கலந்தேனும் நானும்
(கண்கள் இரண்டும்)
21 பிப்ரவரி, 2014
20 பிப்ரவரி, 2014
பழைய பதிவுகளைப் பார்வையிடுவது எப்படி?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரிய சகோதரர்கள் பலரும் அடிக்கடி கருத்துரையிலும் மின்னஞ்சலிலும் முன்வைக்கிற முக்கிய கேள்வி:
இந்த வலைப்பதிவில் பழைய பதிவுகளைப் பார்வையிடுவது எப்படி?
கடந்த கால ஜும்ஆ உரைகளைத் தேடுவது எவ்வாறு?
இதற்கு சுலபமான வழி இதுதான்:
கண்ணியத்திற்குரிய சகோதரர்கள் பலரும் அடிக்கடி கருத்துரையிலும் மின்னஞ்சலிலும் முன்வைக்கிற முக்கிய கேள்வி:
இந்த வலைப்பதிவில் பழைய பதிவுகளைப் பார்வையிடுவது எப்படி?
கடந்த கால ஜும்ஆ உரைகளைத் தேடுவது எவ்வாறு?
இதற்கு சுலபமான வழி இதுதான்:
14 பிப்ரவரி, 2014
09 பிப்ரவரி, 2014
யோகா..ஆகா! (யோகா குறித்த ஓர் இஸ்லாமியப் பார்வை)
யோகா.. என்றதும் ஆகா ஓகோ என்று அங்கலாய்ப்பவர்கள் அநேகர்.
ஆனால் அதன் ஆணிவேர் எது? அதன் மூலம் விளையும் விபரீதங்கள் என்ன? என்று அலசும் அட்டகாசமான உரை...
ஆனால் அதன் ஆணிவேர் எது? அதன் மூலம் விளையும் விபரீதங்கள் என்ன? என்று அலசும் அட்டகாசமான உரை...
ஆடியோ :
வீடியோ :
சூபிகள் எனும் ஞானிகள் இறைதியானத்துடன் கூடிய அருமையான மூச்சுப் பயிற்சி முறையை தொன்று தொட்டு வழங்கி வந்திருக்கும்போது நாம் ஏன் ஷிர்க் கலந்த யோகா முறையைப் பின்பற்றவேண்டும்?
சூபிகள் எனும் ஞானிகள் இறைதியானத்துடன் கூடிய அருமையான மூச்சுப் பயிற்சி முறையை தொன்று தொட்டு வழங்கி வந்திருக்கும்போது நாம் ஏன் ஷிர்க் கலந்த யோகா முறையைப் பின்பற்றவேண்டும்?
02 பிப்ரவரி, 2014
வலிமார்கள் வாழ்வினிலே..1-2
குர்ஆன் கூறும் வலிமார்கள், அல்குர்ஆனில் அவ்லியாக்களின் அற்புதங்கள்,
அன்னை மர்யம் அலை அவர்களுக்கு கிடைத்த அரிய கனிகள், அன்னை சாரா (அலை)அவர்களுக்கு தள்ளாத வயதிலும் கிடைத்த குழந்தைச் செல்வம், இன்னாரின் தோட்டத்தில் மழை பொழியட்டும் என்று ஆகாயத்தில் அறிவிக்கப்பட்ட அற்புதமான மனிதர், இன்னும் பல ..
அன்னை மர்யம் அலை அவர்களுக்கு கிடைத்த அரிய கனிகள், அன்னை சாரா (அலை)அவர்களுக்கு தள்ளாத வயதிலும் கிடைத்த குழந்தைச் செல்வம், இன்னாரின் தோட்டத்தில் மழை பொழியட்டும் என்று ஆகாயத்தில் அறிவிக்கப்பட்ட அற்புதமான மனிதர், இன்னும் பல ..
அலா இப்னு ஹழ்ரமீ(ரலி),
உசைத் இப்னு ஹுளைர் (ரலி),
உப்பாத் இப்னு பிஷ்ர்( ரலி) போன்ற
அருமைத் தோழர்களுக்கு நடந்த அற்புதமான நிகழ்வுகள்
உசைத் இப்னு ஹுளைர் (ரலி),
உப்பாத் இப்னு பிஷ்ர்( ரலி) போன்ற
அருமைத் தோழர்களுக்கு நடந்த அற்புதமான நிகழ்வுகள்
31 ஜனவரி, 2014
30 ஜனவரி, 2014
மனிதனை மதிக்கும் மகத்தான மார்க்கம்
- இஸ்லாத்தில் மனித மரியாதைப் போற்றப்படுவதைப் போல மற்ற மதங்களில், இசங்களில் இல்லை என்பதுதான் நிதர்சனம்.
- பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் பரிசுத்தமானவனாக இம்மார்க்கத்தில் மதிக்கப்படுகிறான்.
- உதாரணமாக, ஒரு முஃமின் இறந்துவிட்டால் நாம் அவரை நல்ல முறையில் குளிப்பாட்டி கஃபனிட்டு நறுமணம் தெளித்து அலுங்காமல் குலுங்காமல் பத்திரமாக தோளில் தாங்கித் தூக்கி வருகிறோம். புனித பள்ளிவாசலுக்கு- இறைவனை வணங்கும் ஆலயத்திற்கு- கொண்டு வந்து வைத்து தொழுது அவருக்காகப் பிரார்த்தித்து அழகிய முறையில் அடக்கம் செய்கிறோம்.
- பல மதங்களில் இந்த மரியாதை இல்லை. அங்கே யாரவது இறந்துவிட்டால் அவரை ஆலயத்திற்கு கொண்டு வரமாட்டார்கள். அப்படிக் கொண்டு வந்தால் ஆலயம் தீட்டுப் பட்டுவிடும் என்றும் ,
- இறந்த பிரேதம் என்பது ஆலயத்திற்கு கொண்டு வரத் தகுதியற்றது என்றும்,
- அவ்வாறு பிரேதம் ஆலயத்திற்குள் கொண்டு வரப்பட்டால் ஆலயத்தின் விக்கிரகங்கள் தனது சக்தியை இழந்துவிடும் என்றும் அழுத்தமாக நம்புகிறார்கள்.
இது கற்பனை அல்ல.. நம் தமிழகத்தின் பிரபல்யமான திருச்சி நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் நடைபெற்ற ஒரு விறுவிறுப்பான நிகழ்வு இதற்கு சான்று. அது என்ன .. இந்த ஆடியோவைக் கேளுங்களேன்....
உத்தம நபி (ஸல்) உதயம்
- முன் வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட்ட முத்தான நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்.
- அவர்களின் வருகை குறித்து முன்னறிவிப்பு செய்யாத எந்த நபியும் இல்லை. எந்த வேதமும் இல்லை.
- அவர்களை அவர்களின் அருமைத் தோழர்கள் வர்ணித்த விதத்தை ஹதீஸ்களில் படித்தால் மெய்சிலிர்த்துப் போகிறோம்.
28 ஜனவரி, 2014
23 ஜனவரி, 2014
பெற்றோரைப் பேணுவோம் -2
நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களும் இறை வணக்கத்திற்கு அடுத்தபடியாக வலியுறுத்திக் கூறுவது பெற்றோர் நலம் பேணுவதைத் தான்:
அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ ல்லம் அவர்களிடம் வினவினேன்:
19 ஜனவரி, 2014
வறுமை வந்தால் வாடாதே! வசதி வந்தால் ஆடாதே!!
قال أبو حازم: من عرف الدنيا لم يفرح فيها برخاء ولم يحزن على بلوى.
இந்த துன்யாவின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டவர் செழுமையின் போது (அதிகம்) சிரிக்கவும் மாட்டார்; வறுமையின் போது வாடவும் மாட்டார். - அறிஞர் அபூ ஹாஸிம் (ரஹ்)
வலிகள் கோமான் முஹ்யித்தீன் அப்துல் கதிர் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் தங்கள் கப்பல் மூழ்கிவிட்டது என்று கூறப்பட்டபோதும் கலங்கவில்லை. அமைதியாக அல்ஹம்து லில்லாஹ் என்றார்கள். சிறிது நேரம் கழித்து
07 ஜனவரி, 2014
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
இதுவரை அடியேனின் பார்வையில் பட்ட தளங்கள்.! இன்னும் இருந்தால் அதை கருத்துரையில் தெரிவித்தால் அவசியம் சேர்த்துக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ். ...
-
1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் ? அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் ப...
-
ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள் ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவ...






