சுன்னத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுன்னத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஆகஸ்ட், 2013

எல்லா நேரமும் அல்லாஹ்வை நினையுங்கள்



      பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1)எதையும் செய்ய ஆரம்பிக்கும் போது என்ன ஓத வேண்டும்?
    பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருநாமத்தால்)

2)எதையும் செய்ய நினைக்கும் போது என்ன ஓத வேண்டும்?
    இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்)

3)எதுவும் புகழப்படும் போது என்ன ஓத வேண்டும்?
   சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)

4)துன்பத்தில் உழலும் போது என்ன ஓத வேண்டும்?
    யா அல்லாஹ் (அல்லாஹ்வே)

5) எதையும் பாராட்டும் போது என்ன ஓத வேண்டும்?
மாஷா அல்லாஹ் (எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே)

6) யாருக்கும் நன்றி கூறும் போது என்ன ஓத வேண்டும்?
ஜஸாக்கல்லாஹூ (அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக)

7) தும்மும் போது என்ன ஓத வேண்டும்?
    அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)

8) பிறர் தும்மும் போது என்ன ஓத வேண்டும்?
    யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் அருள் பாலிப்பானாக)

9) தவறை எண்ணி வருந்தும்போது என்ன ஓத வேண்டும்?    
   அஸ்தஃகு பிருல்லாஹ் (அல்லாஹ் பிழை பொறுப்பானாக)

10) உறுதி மொழி எடுக்கும் போது என்ன ஓத வேண்டும்?
  வல்லாஹிபில்லாஹ் (அல்லாஹ் மீது ஆணையாக)

11) தருமம் செய்யும் போது என்ன ஓத வேண்டும்?
   fபீ ஸபீலில்லாஹ் (அல்லாஹ்வின் பாதையில்

12) யார் மீதும் அன்பு பாராட்டும் போது என்ன ஓத வேண்டும்?
  லி ஹூப்பில்லாஹ் (அல்லாஹ்வின் அன்பிற்காக)

13) யாரிடமிருந்தும் விடைபெறும் போது என்ன ஓத    வேண்டும்?
   fபீ அமானில்லாஹ்(அல்லாஹ்வின் அடைக்கலத்தில்)

14) பிரச்சனைகள் எழும் போது என்ன ஓத வேண்டும்?
தவக்கல்து அலல்லாஹ் (அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தேன்)

15) விரும்பியவை நடக்கும் போது என்ன ஓத வேண்டும்?
    fபதபாரகல்லாஹ் (அல்லாஹ் உயர்வானவன்)

16) விரும்பாதவை நடக்கும் போது என்ன ஓத வேண்டும்?
     நஊதுபில்லாஹ் (அல்லாஹ்விடம் காவல் தேடுகிறோம்)

17) திடுக்கிடும் செய்திகேள்வியுறும் போது என்ன ஓத வேண்டும்?
  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன் (அல்லாஹ்விடமிருந்து வந்தோம் மேலும் அவனிடமே திரும்பிவருபவர்களாக உள்ளோம்.

28 அக்டோபர், 2012

பெருநாள் கொண்டாட்டமா? பெரும் திண்டாட்டமா?



பொதுவாக நோன்புப் பெருநாளாகட்டும்.. ஹஜ்ஜுப் பெருநாளாகட்டும்.. இஸ்லாமியப் பெருநாட்களில் என்னவெல்லாம் இருக்கும்?

வணக்கம் இருக்கும்! எல்லோருக்கும் மத்தியில் ஒரு இணக்கம் இருக்கும்!!
ஏழைகளை ஆதரிக்கிற ஏற்றமான பண்பு இருக்கும்.

15 மே, 2012

நபிவழியில் நம் நடைமுறை


சுன்னத்
உலகில் எத்தனையோ புரட்சியாளர்கள் சீர்திருத்தவாதிகள் தோன்றியுள்ளனர் மறைந்துள்ளனர். அவர்களில் யாரும் தன் மரணத் தருவாயில் இப்படிச் சொன்னதில்லை: எனக்குப் பின்னால் என் வாழ்வை விட்டுச் செல்கிறேன் அதை அப்படியே பின்பற்றுங்கள் வெற்றி பெறலாம். இப்படி சொல்லும் அளவுக்கு யாருடைய வாழ்வும் முழுத் தகுதிள்ளதாக அமையவில்லை. ஆனால் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தன் இறுதி காலத்தில் இப்படி கூறினார்கள்: நான் இரண்டை உங்களிடம் விட்டுச் செல்கிறேன் ஒன்று அல்லாஹ்வின் திருமறை மற்றொன்று எனது வழிமுறை இவற்றை யார் பின்பற்றி நடக்கிறாரோ அவர் வழிதவறமாட்டார்.