- உஸ்தாத் முஹம்மது ஷாஃபிஈ வாஹிதி
ஆகஸ்ட் 19 ம்
தேதி மனித நேயம் தினம் அனுசரிக்கப்படுதுன்னு சொன்னாங்க. மனித நேயம் குறைஞ்சி
போச்சி அத கொஞ்சமாக வளர்த்துக்கோங்க அப்டின்னு சொல்றதுக்காகத்தான் அந்த தினமே
அனுசரிக்கப்படுது என்பதை உஸ்தாது அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து சுனாமியைப்
பத்தி சொன்னாங்க.
அந்த சுனாமி நிகழ்வு மனித நேயத்துக்கு எடுத்துக் காட்டு இல்லையான்னு உணர்ச்சி பொங்க கேட்டாங்க.உஸ்தாது சரியா பேப்பர் பாக்கலன்னு நினைக்குறேன். சுனாமில சிக்கி இறந்து கிடக்குறவங்களோட நகைகளை திருடியது மோதிரம் வரலன்னு விரலையே வெட்டி எடுத்தது, வசூலிக்கப்பட்ட பணத்த பாதிக்கப்பட்டவங்களுக்கு கொடுக்காம சுருட்டியது இதுவும் அந்த சுனாமிலதான் நடந்தது என்பதை நாம் மறுக்க முடியாது.
அந்த சுனாமி நிகழ்வு மனித நேயத்துக்கு எடுத்துக் காட்டு இல்லையான்னு உணர்ச்சி பொங்க கேட்டாங்க.உஸ்தாது சரியா பேப்பர் பாக்கலன்னு நினைக்குறேன். சுனாமில சிக்கி இறந்து கிடக்குறவங்களோட நகைகளை திருடியது மோதிரம் வரலன்னு விரலையே வெட்டி எடுத்தது, வசூலிக்கப்பட்ட பணத்த பாதிக்கப்பட்டவங்களுக்கு கொடுக்காம சுருட்டியது இதுவும் அந்த சுனாமிலதான் நடந்தது என்பதை நாம் மறுக்க முடியாது.
பாலஸ்தீன
மக்களுக்காக குரல் கொடுத்தாங்க,ஆர்பாட்டம் செஞ்சாங்க, இந்த மாதிரி
அநியாயங்களுக்காக குரல் கொடுக்குறவங்க இல்லயான்னு காதர் மீரான் உஸ்தாது கேட்டாங்க.
நடுவர் அவர்களே நான் கேக்குறேன்... இந்த மாதிரியான
போராட்டங்களையும்,ஆர்பாட்டங்களையும் மனத் தூய்மையோட செய்றது எத்தன பேர் ? கட்சிக்கு பேர் கிடைக்கனும், தங்கள் கட்சிய யாரும் தப்பா
நினைச்சிடக்கூடாதுன்னு செய்றவங்க தான் அதிகம்.இதுல சுயநலம் தான் இருக்குது. மனித
நேயம் எங்க இருக்குது ?
விபத்துல ஒரு ஆள்
அடிபட்டு விட்டால் ஆம்புலன்ஸுக்கு போன் பன்னி அவர காப்பாத்துறதில்லையா ? முதலுதவி கொடுக்குறதில்லையா ?என்று கேட்டாங்க.நடுவர் அவர்களே போன் பன்னி
காப்பாத்துறது ஒரு ஆளுதான்.ஆனா நமக்கு எதுக்கு வம்புன்னு ஒதுங்கி போறவங்க 100 பேர்.
அடுத்து
கலப்படத்த பத்தி சொல்லி மனித நேயம் வீழுதுங்குறதுக்கே பாயிண்ட் சொல்லிறுக்காங்க நம்ம
காதர் மீரான் உஸ்தாது.
இறந்து போன இரண்டு ஆவிகள்
பேசிக்கிட்டாங்களாம். அதுல முதல் ஆவி, விஷம் குடிச்சி சாகலான்னு முயற்சி செஞ்சேன்....அதுல
கலப்படம்.... அதனால் பொழைச்சிட்டேன் அப்பின்னு சொல்லுச்சு. பின்ன எப்படி இறந்து
போன ? அப்டின்னு
இரண்டாவது ஆவி கேட்டுச்சு.காப்பாத்த மருந்து கொடுத்தாங்க. அதுல கலப்படம் அதனால
இறந்துட்டேன்னு முதல் ஆவி பதில் சொல்லுச்சாம். சிரிப்புக்காக சொல்லப்பட்ட
கதையானாலும் உண்மை இது தான்.
இறந்து போன
ஒருவனை எழுப்பி மனித நேயம் வாழ்கிறதா வாழ்கிறதா என்று கேட்டால், மனித நேயம்
வாழ்ந்திருந்தா நான் வீழ்ந்திருக்க மாட்டேனே அப்டின்னு சொல்வான். இன்னைக்கு
அதிகமான கொலைகள், தற்கொலைகள் நடப்பதும் மனித நேயம் இறந்து விட்டது என்பதற்கான
அடையாளம் தான்.
நடுவர் அவர்களே
இன்னைக்கு உலகத்துல மனித நேயமே இல்லன்னு நான் சொல்ல வரல,மனித நேய செயல்கள் 10
சதவீதம் என்றால் மனித நேயமற்ற செயல்கள் 90 சதவீதம் நடக்குது. அந்த பத்து சதவீதம்
கூட ஏதாவது ஒரு சுயநலத்தோடு தான் நடக்கிறது.
எனவே ஆழ்ந்த
கவனத்தோடு உலகையும் அதன் போக்கையும் கண்டால் சில சம்பிரதாயச் சமாச்சாரங்களைத் தவிர
உண்மையான நேயம் மலையேறி விட்டது என்று தான் தோன்றும். எனவே இன்றைக்கு மனித நேயம்
வீழ்ந்து விட்டது என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும் எனக்கூறி விடை
பெறுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்