20 ஜூலை, 2026

கருணை : அதிசய நிகழ்வுகள்



இறைத்தூதர்களின் பெருங்கருணை: 

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"ஒரு இறைத்தூதரை அவருடைய சமூகத்தினர் அடித்து காயம் ஏற்படுத்தியபோது, அவர் தன் முகத்தில் வழிந்த இரத்தத்தைத் துடைத்துக் கொண்டே, 'இறைவா! என் சமூகத்தினரை மன்னிப்பாயாக! நிச்சயமாக அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள்' என்று பிரார்த்தித்த ஒரு இறைத்தூதரின் வரலாற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விவரித்துக் கூறியது இப்போதும் என் கண்முன்னே நிழலாடுகிறது."

நபித்தோழர்களின் பண்பு பற்றிய குர்ஆன் வசனம்:

"முஹம்மது அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள்  எதிரிகளிடம் கடுமையானவர்களாகவும், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் கருணையுடையவர்களாகவும் இருக்கின்றார்கள்." (அல்-ஃபதஹ்: 29)

2. முன்னோர்களின் (ஸலஃபுகளின்) கருணைக்குச் சில சான்றுகள்:

அலி இப்னுல் ஹுஸைன் (ஸைனுல் ஆபிதீன்) அவர்களின் கருணை:

அம்ரு இப்னு தாபித் அவர்கள் கூறுகிறார்கள்: "அலி இப்னுல் ஹுஸைன் அவர்கள் மரணித்து, அவர்களுக்கு ஜனாஸா குளியல் (தஜ்ஹீஸ்) செய்தபோது, அவருடைய முதுகில் கருமையான தழும்புகள் இருப்பதைக் கண்டார்கள். 'இது என்ன?' என்று கேட்டதற்கு, 'அவர் இரவோடு இரவாகத் தன் முதுகில் மாவு மூட்டைகளைச் சுமந்து சென்று, மதீனாவின் ஏழை எளியவர்களுக்கு விநியோகம் செய்து வந்தார். அதனால் ஏற்பட்ட தழும்புகள் என்று கூறப்பட்டது."

உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் கருணை (விலங்கினங்கள் மீதான இரக்கம்):

உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் எகிப்தின் ஆளுநர் ஹய்யானுக்கு இவ்வாறு கடிதம் எழுதினார்கள்: "எகிப்தில் ஆயிரம் ரத்தல் (எடை) வரை சுமக்கும் பார வண்டிகள்/ஒட்டகங்கள் இருப்பதாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. எனது இந்தக் கடிதம் உமக்குக் கிடைத்தால், ஒரு ஒட்டகத்தின் மீது அறுநூறு ரத்தலுக்கு மேல் சுமை ஏற்றப்படுவதை நான் அறியக் கூடாது (சுமையைக் குறைப்பீராக)."

மேலும், சாலைகளைப் பராமரிக்கும் அதிகாரிக்கு எழுதும்போது: "மிருகங்களுக்குக் கடுமையான, பாரமான கடிவாளங்களைப் பூட்டக் கூடாது என்றும், அடியில் இரும்பு முனைக் கொண்ட சாட்டைகளால் அவற்றை அடிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்கள்."

பிஷ்ர் அல்-ஹாஃபி அவர்களின் இரக்கம்:

கடுமையான குளிர்கால ஒரு நாளில், பிஷ்ர் அல்-ஹாஃபி அவர்கள் உடம்பில் ஆடைக் குறைவாகக் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதை மக்கள் கண்டு, "அபூ நஸ்ர்! இது என்ன நிலை?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்: ("ஏழைகளையும் அவர்களின் குளிரையும் நினைத்துப் பார்த்தேன். அவர்களுக்குக் கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை. எனவே, என் உடலால் அவர்களின் குளிரைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன்") என்றார்.

இமாம் ஷுஃபா இப்னுல் ஹஜ்ஜாஜ் அவர்களின் ஏழைகள் மீதான இரக்கம்:

நழ்ர் இப்னு ஷுமைல் கூறுகிறார்கள்: "ஏழைகளிடம் ஷுஃபாவை விட அதிகக் கருணை காட்டுபவரை நான் கண்டதில்லை. அவர் ஒரு ஏழையைக் கண்டால், அந்த ஏழை தன் கண்ணிலிருந்து மறையும் வரை அவரையே பார்த்துக் கொண்டிருப்பார்."

முஸ்லிம் இப்னு இப்ராஹீம் கூறுகிறார்கள்: "ஷுஃபா அவர்களின் கல்விச் சபையில் ஏதேனும் ஒரு ஏழை உதவி கேட்டு நின்றால், அவருக்குத் தர்மம் செய்யும் வரை ஷுஃபா அவர்கள் பாடம் நடத்த மாட்டார்..."

ஷுஃபா அவர்களே கூறுவதைச் செவியுற்றுள்ளேன்: ("இந்த ஏழைகள் மட்டும் இல்லையென்றால் நான் ஹதீஸ்களைக் கற்பித்திருக்க மாட்டேன். அவர்களுக்குத் தர்மம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நான் பாடம் நடத்துகிறேன்").

யஹ்யா இப்னு ஸயீத் கூறுகிறார்கள்: "ஷுஃபா மனிதர்களில் மிகவும் இளகிய மனம் படைத்தவராக இருந்தார். ஒரு ஏழை அவரைக் கடந்து சென்றால், உடனே தன் வீட்டுக்குள் சென்று தம்மால் இயன்றதைக் கொடுப்பார்."

3. அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் தர்மமும் அவர்களுக்குக் கிடைத்த நற்செய்தியும்

"எனவே, எவர் (அல்லாஹ்வின் பாதையில் தர்மம்) கொடுத்து, (அவனுக்குப்) பயந்து, நன்மையானவற்றை உண்மைப் படுத்துகின்றாரோ, அவருக்கு நாம் (நற்கருமங்கள் செய்வதை) எளிதாக்குவோம்." (அல்-லைல்: 5-7)

அபூபக்கர் (ரலி) அவர்களின் தந்தை அபூ குஹாஃபா (அப்போது இஸ்லாத்தை ஏற்காத நிலையில்) அவரிடம் கூறினார்: "மகனே! நீ பலவீனமான, (நோஞ்சான்) தகுதியற்ற அடிமைகளையே விலை கொடுத்து விடுதலை செய்வதைப் பார்க்கிறேன். நீ செய்யும் இந்தச் செயலுக்குப் பகரமாக, உன்னைப் பாதுகாக்கும் அளவுக்கு வலிமையான மனிதர்களை விடுதலை செய்யக் கூடாதா?"
அதாவது நல்ல பலம் வாய்ந்த அடிமைகளை விலைக்கு வாங்கி உரிமையிட்டால் நாளைக்கு அவர்கள் உனக்கு உதவியாக இருப்பார்கள். மேன்பவர் கிடைக்கும். 

அதற்கு அபூபக்கர் (ரலி): "என் தந்தையே! நான் எதை நாடுகிறேன் (அல்லாஹ்வின் திருப்தியை) என்பதை நான் அறிவேன்" என்றார். (அதாவது என் லாபத்திற்கு அல்ல; அல்லாஹ்வின் திருப்திக்காக மட்டுமே நான் இதை செய்கிறேன். பலவீனர்கள் சிரமம் நீங்க வேண்டும்.) அப்போதுதான் மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள் அவர் விஷயத்தில் இறங்கின.

4. உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களின் பெருங்கருணை
குழந்தைகள் மீதான இரக்கம்:

ஒரு நாள் உயைனா இப்னு ஹிஸ்ன் என்ற அரபி, உமர் (ரலி) அவர்கள் தன் குழந்தைகளில் ஒருவரை மடியில் வைத்து அணைத்து முத்தமிடுவதைக் கண்டார். உடனே உயைனா: "நீங்கள் அமீருல் முஃமினீனாக (தலைவராக) இருந்துகொண்டே முத்தமிடுகிறீர்களா?! நான் தலைவராக இருந்தால் என் பிள்ளைகளில் ஒருவரையும் முத்தமிட மாட்டேன்" என்றார்.
அதற்குக் கோபமுற்ற உமர் (ரலி), "அல்லாஹ்வின் மீது ஆணையாகவா?" என்று மூன்று முறை சத்தியம் வாங்கிக் கேட்டுவிட்டு இவ்வாறு கூறினார்கள்:
"அல்லாஹ் உமது உள்ளத்திலிருந்து கருணையைப் பறித்துவிட்டான் என்றால் நான் என்ன செய்ய முடியும்? நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் கருணையுள்ளவர்களுக்கே கருணை காட்டுகிறான்."

விலங்குகள் மீதான இரக்கம், ஜீவகாருண்யம் 
 
ஒரு நாள் உமர் (ரலி) அவர்களுக்குப் புதிய மீன் (Fresh Fish) சாப்பிட ஆசை ஏற்பட்டது. "புதிய மீன் சாப்பிட வேண்டும் என்று என் உள்ளத்தில் ஆசை தோன்றுகிறது" என்றார்கள்.
உடனே அவருடைய பணியாளர் 'யர்ஃபா' ஒரு வாகனத்தில் ஏறி, இரண்டு நாட்கள் பயணம் செய்து, ஒரு கூடை நிறைய புதிய மீன்களை வாங்கிக் கொண்டு உமர் (ரலி) அவர்களிடம் வந்தார்.
வந்த பிறகு, யர்ஃபா அந்த வாகன மிருகத்தைக் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது உமர் (ரலி) அந்த மிருகத்தின் காதுக்குக் கீழே வியர்வை வழிந்திருப்பதைக் கண்டுவிட்டு அவரிடம் கூறினார்கள்:
"உமருடைய ஒரு ஆசைக்காக அல்லாஹ்வின் படைப்புகளில் ஒரு விலங்கை இந்த அளவு துன்புறுத்திவிட்டாயே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, இந்த மீனை உமர் ஒருபோதும் சுவைக்க மாட்டான். இந்தக் கூடையை நீயே எடுத்துச் செல்!" (மிருகம் சிரமப்பட்டதால் அந்த மீனை உண்ண மறுத்துவிட்டார்கள்)


## 1. الرحمة النبوية والقرآنية

من رحمة الأنبياء
 عَنِ ابنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْه قَالَ: كأنِّي أنظُرُ إلى النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم يحكي نبيًّا من الأنبياءِ ضَرَبه قومُه فأدْمَوه، فهو يمسَحُ الدَّمَ عن وَجهِه، ويقولُ:
(( رَبِّ اغفِرْ لقَومي؛ فإنَّهم لا يَعلَمونَ ))

 وصف الصحابة مع النبي:
﴿ مُحَمَّدٌ رَسُولُ اللهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ ﴾[الفتح: 29]

## 2. نماذِجُ من الرَّحمةِ عِندَ السَّلَفِ الصالح

### رحمةُ عَليِّ بنِ الحُسَينِ (زَينِ العابِدينَ)
 * عن عَمرِو بنِ ثابتٍ قال: (لمَّا مات عليُّ بنُ الحُسَينِ فغَسَّلوه جعَلوا ينظُرون إلى آثارٍ سوداءَ بظَهرِه، فقالوا: ما هذا؟ فقيل: كان يحمِلُ جُرُبَ الدَّقيقِ (أكياس الدقيق) ليلًا على ظهرِه يعطيه فُقَراءَ أهلِ المدينةِ**).

### رحمةُ عُمَرَ بنِ عبدِ العزيزِ (حتى بالحيوان)
 * كَتَب عُمَرُ بنُ عبدِ العزيزِ رحمه اللهُ إلى حيَّانَ بمِصرَ: (إنَّه بلغني أن بمصرَ إبِلًا نقَّالاتٍ، يُحمَلُ على البعيرِ منها ألفُ رِطلٍ، فإذا أتاك كتابي هذا **فلا أعرِفَنَّ أنَّه يُحمَلُ على البعيرِ أكثَرُ من ستِّمائةِ رِطلٍ**).
 * وكتب إلى صاحِبِ السِّكَكِ: (**أن لا يحمِلوا أحَدًا بلِجامٍ ثقيلٍ من هذه الرستنيَّةِ، ولا يُنخَسَ بمِقرَعةٍ في أسفَلِها حديدةٌ).

### رحمةُ بِشرٍ الحافي
 * دخَلوا عليه في يومٍ شديدِ البردِ، وقد تجرَّد وهو ينتَفِضُ، فقالوا: ما هذا يا أبا نَصرٍ؟ فقال: (**ذكَرْتُ الفُقَراءَ وبَرْدَهم وليس لي ما أواسيهم به، فأحبَبتُ أن أواسِيَهم في بَردِهم).

### رحمةُ الإمام شُعبة بن الحجّاج بالمساكين
 * عن النَّضرِ بنِ شُمَيلٍ قال: (ما رأيتُ أرحَمَ بمسكينٍ مِن شُعبةَ، وكان إذا رأى المسكينَ لا يزال ينظُرُ إليه حتَّى يغيبَ عن وَجهِه).
 * وعن مُسلِمِ بنِ إبراهيمَ قال: (كان شُعبةُ إذا قام في مجلِسِه سائِلٌ لا يحَدِّثُ حتَّى يُعطَى...).
 * وسمِعتُ شُعبةَ يقولُ: (**لولا المساكينُ ما حدَّثتُ؛ فإنِّي أحَدِّثُ ليُعطَوا**).
 * وقال يحيى بنُ سعيدٍ: (كان شُعبةُ من أرقِّ النَّاسِ، كان ربَّما مرَّ به السَّائِلُ، فيدخُلُ إلى بيتِه فيُعطيه ما أمكَنَه).

## 3. رحمة الصديق أبو بكر والتيسير له

 * قال أبو قُحافةَ لأبي بَكرٍ: أراك تُعتِقُ رِقابًا ضِعافًا، فلو أنَّك إذ فعَلْتَ ما فعَلْتَ أعتَقْتَ رِجالًا جُلدًا (أقوياء) يمنعونَك ويقومون دونَك.
 * فقال أبو بكرٍ: **يا أبتِ إنِّي إنما أريدُ ما أريدُ (أي يبتغي وجه الله ورأفة بالضعفاء)**. فنزلت هذه الآيات الكريمات فيه تنويهاً برحمته وعطائه : فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى * وَصَدَّقَ بِالْحُسْنَى * فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى ﴾** [الليل: 5-7]

## 4. رحمةُ عُمَرَ بنِ الخطَّابِ رَضِيَ اللهُ عنه

 رحمته بالأطفال والعيال
 * رآه عُيَينةُ بنُ حِصنٍ يومًا يُقَبِّلُ أحَدَ أبنائِه، وقد وضَعَه في حِجرِه وهو يحنو عليه، فقال عُيَينةُ: (أتُقَبِّلُ وأنت أميرُ المُؤمِنين؟! لو كنتُ أميرَ المُؤمِنينَ ما قبَّلْتُ لي ولَدًا).
 * فقال عُمَرُ: آللهِ؟ آللهِ؟ (حتى استحلفه ثلاثًا) ثم قال:
(فما أصنَعُ إن كان اللهُ نَزَع الرَّحمةَ من قَلبِك، إنَّ اللهَ إنَّما يرحَمُ مِن عبادِه الرُّحَماءَ)

### رحمته بالدواب والحيوان (قصة السمك الطري)

  اشتهى عمر الحوتَ (السمك) يومًا، فقال: (لقد خَطَر على قلبي شهوةُ الطَّرِيِّ من حيتانٍ).
 فخرج غلامه "يرفأ" في طَلَبِ الحوتِ لعُمَرَ، ورَحَل راحلَتَه، فسار ليلتينِ مُدبِرًا، وليلتينِ مُقبِلًا، واشترى مِكتَلًا (زبيلاً)، وجاء بالحوت.
 ثمَّ غَسَل يرفَأُ الدَّابَّةَ، فنظر إليها عُمَرُ فرأى عَرَقًا تحتَ أُذُنِها، فقال:
(عذَّبْتَ بهيمةً من البهائِمِ في شهوةِ عُمَرَ! لا واللهِ لا يذوقُه عُمَرُ، عليك بمِكتَلِك)[فرفض أكله رحمةً بالناقة التي أُجهِدت من أجله].



13 ஜூலை, 2026

நாணம் நல்லது !



வெட்கம் ஈமானின் ஒரு பகுதி
கூச்ச சுபாவம் தவறில்லை 

 أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ فَقَالَ دَعْهُ فَإِنَّ
 الْحَيَاءَ مِنْ الْإِيمَانِ
 
 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வெட்கப்படுவது குறித்து (அதிகம் வெட்கப்படுவதாகக் கருதி) தன் சகோதரனுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் கூறினார்கள்: "அவரை விட்டுவிடுங்கள், ஏனெனில் வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும்."

நபிமார்களின் நல்ல நடைமுறை

 قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ 
‏ أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ الْحَيَاءُ وَالتَّعَطُّرُ وَالسِّوَاكُ وَالنِّكَاحُ 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான்கு காரியங்கள் தூதர்களின் வழிமுறைகளில் (ஸுனன்களில்) அடங்கும்: வெட்கம் (அல்-ஹயாஃ), நறுமணம் பூசுதல், மிஸ்வாக் பயன்படுத்துதல் (பல் துலக்குதல்) மற்றும் திருமணம்."


உஸ்மான் அவர்களின் குளியல்

  وَذَكَرَ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ وَشِدَّةَ حَيَائِهِ فَقَالَ إِنْ كَانَ لَيَكُونُ فِي الْبَيْتِ وَالْبَابُ عَلَيْهِ مُغْلَقٌ فَمَا يَضَعُ عَنْهُ الثَّوْبَ لِيُفِيضَ عَلَيْهِ الْمَاءَ يَمْنَعُهُ الْحَيَاءُ أَنْ يُقِيمَ صُلْبَهُ‏.‏
 
அல்-ஹசன் அவர்கள் உஸ்மான் (ரழி) அவர்களின் அதீத வெட்கத்தைப் பற்றிக் கூறினார்கள்:
"அவர்கள் வீட்டிற்குள் இருப்பார்கள்; கதவு தாழிடப்பட்டிருக்கும். (அவர் தனிமையில் இருக்கும்போதும்) அவர் குளிப்பதற்காகத் தன் ஆடையைக் கழற்றி, தன் மீது தண்ணீர் ஊற்றிக்கொள்ள மாட்டார். வெட்கம் அவரை நிமிர்ந்து நிற்க விடாது (அதாவது, அவர் குனிந்த நிலையிலேயே இருப்பார்)." முஸ்னது அஹ்மத் : 543

வானவர்களே வெட்கப்படும் தோழர் உஸ்மான் (ரலி)

  أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعُثْمَانَ حَدَّثَاهُ أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ اسْتَأْذَنَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُضْطَجِعٌ عَلَى فِرَاشِهِ لَابِسٌ مِرْطَ عَائِشَةَ فَأَذِنَ لِأَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَهُوَ كَذَلِكَ فَقَضَى إِلَيْهِ حَاجَتَهُ ثُمَّ انْصَرَفَ

 ثُمَّ اسْتَأْذَنَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ فَأَذِنَ لَهُ وَهُوَ عَلَى تِلْكَ الْحَالِ فَقَضَى إِلَيْهِ حَاجَتَهُ ثُمَّ انْصَرَفَ 

قَالَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ ثُمَّ اسْتَأْذَنْتُ عَلَيْهِ فَجَلَسَ وَقَالَ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا اجْمَعِي عَلَيْكِ ثِيَابَكِ فَقَضَى إِلَيَّ حَاجَتِي ثُمَّ انْصَرَفْتُ 

قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا يَا رَسُولَ اللَّهِ مَا لِي لَمْ أَرَكَ فَزِعْتَ لِأَبِي بَكْرٍ وَعُمَرَ كَمَا فَزِعْتَ لِعُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ 

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ عُثْمَانَ رَجُلٌ حَيِيٌّ وَإِنِّي خَشِيتُ إِنْ أَذِنْتُ لَهُ عَلَى تِلْكَ الْحَالِ أَنْ لَا يَبْلُغَ إِلَيَّ فِي حَاجَتِهِ 

و قَالَ اللَّيْثُ وَقَالَ جَمَاعَةُ النَّاسِ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَلَا أَسْتَحْيِي مِمَّنْ يَسْتَحْيِي مِنْهُ الْمَلَائِكَةُ
‏ 
  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரழி) அவர்களின் மேலாடையைப் போர்த்திக்கொண்டு தமது படுக்கையில் படுத்திருந்தபோது, அபூபக்ர் (ரழி) அவர்கள் (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். அவர்கள் அதே நிலையில் இருந்தவாறே அபூபக்ர் (ரழி) அவர்களுக்கு அனுமதி அளித்தார்கள். அவர் தமது தேவையை நிறைவேற்றிக்கொண்டு பின்னர் சென்றுவிட்டார்கள். 

பின்னர் உமர் (ரழி) அவர்கள் (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். அவர்கள் அதே நிலையில் இருந்தவாறே அவருக்கு அனுமதி அளித்தார்கள். அவர் தமது தேவையை நிறைவேற்றிக்கொண்டு பின்னர் சென்றுவிட்டார்கள்.

உஸ்மான் (ரழி) அவர்கள் கூறினார்கள்: பின்னர் நான் (உள்ளே வர) அனுமதி கேட்டேன். அவர்கள் எழுந்து அமர்ந்து ஆயிஷா (ரழி) அவர்களிடம், 'உன்னைச் சரியாகப் போர்த்திக்கொள்' என்று கூறினார்கள். நான் எனது தேவையை நிறைவேற்றிக்கொண்டு பின்னர் சென்றுவிட்டேன்.

ஆயிஷா (ரழி) அவர்கள் கேட்டார்கள்: "அல்லாஹ்வின் தூதரே, உஸ்மான் (ரழி) அவர்களுக்காகத் தாங்கள் (உடனே) எழுந்து அமர்ந்ததைப் போல அபூபக்ர் (ரழி) அவர்களுக்கும் உமர் (ரழி) அவர்களுக்கும் ஏன் தாங்கள் (அவ்வாறு) எழுந்து அமரவில்லை?"

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உஸ்மான் (ரழி) அவர்கள் வெட்கம் மிகுந்த மனிதர். நான் அந்த நிலையில் இருக்கும்போது அவருக்கு அனுமதி கொடுத்தால், அவர் தமது தேவையை என்னிடம் கூறமாட்டார் என்று நான் அஞ்சினேன்."

அல்-லைஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இந்த ஹதீஸை அறிவித்த) சிலர் கூறினர்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களிடம், "வானவர்கள் வெட்கப்படும் ஒரு மனிதருக்கு முன்னால் நான் வெட்கப்பட வேண்டாமா?" என்று கேட்டார்கள். (முஸ்னது அஹ்மத் : 514, 515

வெட்கம் அழகு! ஆபாசம் இழிவு!

  عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ مَا كَانَ الْحَيَاءُ فِي شَيْءٍ إِلاَّ زَانَهُ، وَلاَ كَانَ الْفُحْشُ فِي شَيْءٍ إِلا شَانَهُ‏.‏
 
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எந்தவொரு விஷயத்தில் வெட்கம் இருக்கிறதோ, அது அதை அழகுபடுத்துகிறது. எந்தவொரு விஷயத்தில் ஆபாசம் இருக்கிறதோ, அது அதை இழிவுபடுத்துகிறது." அல்-அதப் அல்-முஃபரத் : 601

வெட்கம் இல்லையென்றால்…?

 قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ الأُولَى إِذَا لَمْ تَسْتَحِي فَاصْنَعْ مَا شِئْتَ ‏ ‏ ‏.‏

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: “முந்தைய நபித்துவத்தின் (போதனைகளிலிருந்து) மக்கள் கற்றுக்கொண்ட வார்த்தைகளில் ஒன்று: ‘உனக்கு வெட்கம் இல்லையென்றால், நீ விரும்பியதைச் செய் (இது ஒரு எச்சரிக்கை  கூற்று, அனுமதி அல்ல).’ அதாவது வெட்கம் இல்லையென்றால் எதுவுமே தவறாகத் தெரியாது. பெரும்பாவம் கூட பாவமாகவே நினைக்கத் தோன்றாது 
சுனன் இப்னுமாஜா : 4183


நாணம் நல்லது💥

1. நல்லொழுக்கமுள்ள பெண்ணின் நாணம்

அல்லாஹ் கூறுகிறான்:

 ﴿فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ...﴾
"அந்த இரு பெண்களில் ஒருவர் *மிகுந்த நாணத்துடன் நடந்து வந்து*, 'நீங்கள் எங்களுக்காக (ஆடுகளுக்கு) தண்ணீர் புகட்டியதற்குக் கூலியாக உங்களுக்கு வழங்குவதற்காக என் தந்தை உங்களை அழைக்கிறார்' என்று கூறினார்..."
(ஸூரத்துல் கஸஸ் 28:25)

விளக்கம்:

மூஸா (அலை) அவர்களிடம் வந்த அந்தப் பெண்:

✨ மிகுந்த நாணத்துடனும் அடக்கத்துடனும் நடந்துவந்தார்.

✨ தனது அழகை வெளிப்படுத்தாமல், கண்ணியத்துடன் நடந்தார்.

✨ வெட்கத்தை இழந்த நடை, அலங்காரக் காட்சி அல்லது ஆடம்பரம் எதுவும் அவரிடம் இல்லை.

✨ தந்தையின் அழைப்பை மட்டும் மரியாதையுடன் தெரிவித்தார்.


உமர் (ரலி) அவர்களின் விளக்கம்:

"அந்தப் பெண்  வெட்கமற்ற பெண்களைப் போல் வரவில்லை; அடிக்கடி வெளியே சுற்றுபவளாகவும் இல்லை; தனது ஆடையால் முகத்தை மறைத்தபடி வந்தார்."

கற்றுக்கொள்ளும் பாடம்:

பெண்களின் அழகிய அணிகலன் நாணமே.

அடக்கமும் கண்ணியமும் ஒரு முஸ்லிம் பெண்ணின் உயர்ந்த பண்பாகும்.

---

2. ஜாஹிலிய்யா கால அரபுகளின் நாணம்

இஸ்லாத்திற்கு முன்பே அரபுகளிடம் சில தீய பழக்கங்கள் இருந்தாலும், நாணம் என்ற பண்பு சிலரிடம் இருந்தது.

ஹிரக்லியஸ் (Heraclius) மன்னர், அபூ சுஃப்யான் (ரலி) அவர்களிடம் நபி ﷺ குறித்து கேட்டபோது, அவர் கூறினார்:

 "என்னுடன் இருந்தவர்கள் என்னை பொய்யன் என்று கூறிவிடுவார்களோ என்ற நாணம் இல்லையெனில், நிச்சயமாக நான் முஹம்மத் ﷺ குறித்து பொய் கூறியிருப்பேன்."
(ஸஹீஹுல் புகாரி)

அதாவது, அப்போது இன்னும் இஸ்லாத்தை ஏற்காதவராக இருந்தபோதும், பொய்யன் என்ற பெயர் வந்துவிடுமோ என்ற நாணம், அவரை பொய் பேசவிடாமல் தடுத்தது.

நாணம் மனிதனைப் பொய், அநீதி போன்றவற்றிலிருந்து தடுக்கிறது.
நாணம் ஒரு மனிதனின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் உயர்ந்த பண்பாகும்.

---

3. அந்தரா (عنترة) என்ற அரபுக் கவிஞரின் நாணம்

அவர் கூறுகிறார்:

 وأغُضُّ طَرْفي إن بدَتْ لي جارتي
حتَّى يواريَ جارتي مأواها


"என் அண்டை வீட்டு பெண் மகள் என் பார்வைக்கு வந்தால்,
அவர் தனது வீட்டிற்குள் நுழையும் வரை நான் என் பார்வையைத் தாழ்த்திக் கொள்வேன்."

பார்வையைத் தாழ்த்துவதும் நாணத்தின் ஓர் அங்கமாகும்.
பிறரின் கண்ணியத்தை மதிப்பது உயர்ந்த ஒழுக்கமாகும்.



"الحياء شعبة من الإيمان"
"நாணம் ஈமானின் ஒரு கிளையாகும்." (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நாணம் அவசியம்தான். ஆனால் 
மார்க்கம் கற்றுக்கொள்ள வெட்கம் தேவை இல்லை 

  وَقَالَتْ عَائِشَةُ نِعْمَ النِّسَاءُ نِسَاءُ الأَنْصَارِ لَمْ يَكُنْ يَمْنَعُهُنَّ الْحَيَاءُ أَنْ يَسْأَلْنَ عَنِ الدِّينِ وَيَتَفَقَّهْنَ فِيهِ ‏.‏ 

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'பெண்களிலேயே சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்கள்தான். மார்க்கத்தைப் பற்றிக் கேட்பதிலிருந்தும், அதில் மார்க்க விளக்கத்தைப் பெறுவதிலிருந்தும் வெட்கம் அவர்களைத் தடுத்ததில்லை.'
சுனன் அபூதாவூத் : 316




24 மே, 2026

பணிவு என்பது பலவீனம் அல்ல; ஆளுமையின் அடையாளம்!

பணிவு என்பது பலவீனம் அல்ல
ஆளுமையின் அடையாளம்!
------------
சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்த தலைவர்கள், தங்களின் பேராற்றலையும் அதிகாரத்தையும் கடந்து, மிக சாதாரண மனிதர்களிடம் காட்டிய பணிவு என்பது மனிதகுல வரலாற்றின் பொன்னான பக்கங்கள் ஆகும். அப்படிப்பட்ட சில உன்னதமான வரலாற்றுச் சம்பவங்கள் இதோ:

கலிஃபா உமர் (ரலி) அவர்களின் ஒட்டகப் பயணம்

இஸ்லாமிய பேரரசின் இரண்டாவது ஆட்சியாளரான கலிஃபா உமர் அவர்கள், ஜெருசலேம் நகரின் சாவியைப் பெற்றுக் கொள்வதற்காக அங்கு பயணம் மேற்கொண்டார்.

 *சம்பவம்:
அவரிடமிருந்தது ஒரே ஒரு ஒட்டகம் மட்டுமே. அவரும் அவருடைய பணியாளரும் மாறி மாறி அதில் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்று உமர் (ரலி) ஒரு நிபந்தனை விதித்திருந்தார்.

 உச்சக்கட்ட பணிவு:
 அவர்கள் ஜெருசலேம் நகர எல்லையை அடைந்தபோது, பணியாளர் ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருக்கும் முறை வந்தது. கலிஃபா உமர் அவர்கள் ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்துக்கொண்டு, காலால் நடந்து நகருக்குள் நுழைந்தார்.

 *பாடம்:* 
ஒரு மாபெரும் பேரரசர், தன் பணியாளருக்குக் கொடுத்த வாக்கை மதிக்கத் தன் அந்தஸ்தைப் பார்க்காமல் பணிவுடன் நடந்து கொண்டார்.

2. மகாத்மா காந்தியின் ரயில் பயணம் மற்றும் துப்புரவுப் பணி

இந்தியாவின் தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி, மிக எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்தார்.

 *சம்பவம்:*
ஒருமுறை அவர் ரயில் நிலையத்தில் இறங்கியபோது, அங்கிருந்த ஒரு பயணி காந்தியை யாரோ ஒரு சாதாரண கூலித் தொழிலாளி என்று நினைத்து, தன் கனமான பெட்டிகளைத் தூக்கி வருமாறு கூறினார். காந்தியும் மறுப்பு ஏதும் சொல்லாமல், அந்தப் பெட்டிகளைச் சுமந்து சென்று ரயிலில் ஏற்றி வைத்தார். பின்னர் அந்தப் பயணிக்கு காந்தி யார் என்று தெரிந்தபோது அதிர்ச்சியடைந்தார்.

 *மறுசம்பவம்:
காங்கிரஸ் மாநாடுகள் நடக்கும் இடங்களில், அவரே முன்வந்து கழிவறைகளைச் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வார்.

 பாடம்:
 "எந்த ஒரு வேலையும் தாழ்ந்தது அல்ல" என்பதைத் தன் பணிவான செயலின் மூலம் உலகிற்கு உணர்த்தினார்.

3. ஆபிரகாம் லிங்கன்
 செருப்பு தைப்பவரின் மகனாக...

அமெரிக்க அதிபராக ஆபிரகாம் லிங்கன் பொறுப்பேற்றபோது, நாடாளுமன்றத்தில் (செனட்) இருந்த சில பிரபுக்கள் அவரைப் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர் என்று கேலி செய்ய நினைத்தனர்.

 சம்பவம்:
ஒரு பணக்கார செனட்டர் எழுந்து, "மிஸ்டர் லிங்கன், உங்கள் தந்தை தைத்த செருப்பைத்தான் நான் இன்னமும் காலில் அணிந்திருக்கிறேன் என்பதை மறந்துவிடாதீர்கள்" என்றார்.

 பணிவான பதில்:
அதற்கு லிங்கன் கோபப்படாமல், "என் தந்தை மிகச்சிறந்த கலைஞர். அவர் தைத்த செருப்பில் ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள், எனக்கு செருப்பு தைக்கத் தெரியாது என்றாலும், அதை எப்படிப் பழுதுபார்ப்பது என்று என் தந்தை கற்றுக்கொடுத்திருக்கிறார். நானே அதைச் சரிசெய்து தருகிறேன்" என்று மிக பணிவாகக் கூறினார்.

 பாடம்:
தன் எளிய பின்னணியை மறைக்காமல், அதைத் பெருமையோடு ஏற்றுக்கொண்டு எதிராளியையும் தன் பணிவால் வென்றார்.

முத்தாய்ப்பு:

 وما تواضَعَ أحَدٌ للهِ إلَّا رفعه اللَّهُ)
அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவுடன் நடந்தால் அல்லாஹ் அவரை உயர்த்தாமல் இருப்பதில்லை
 
   - நபிமொழி.

"பணிவு என்பது பலவீனம் அல்ல; அது மாபெரும் ஆளுமையின் அடையாளம்."

இந்தத் தலைவர்கள் காட்டிய பணிவுதான், பல நூற்றாண்டுகள் கடந்தும் அவர்களை மக்கள் மனதில் அழியாத தலைவர்களாக வாழ வைக்கிறது.

13 மே, 2026

பரஸ்பர ஒத்துழைப்பும் உதவியும் முஸ்லிமின் நல்ல பண்பு

தோழர்களின் (ஸஹாபாக்களின்) ஒத்துழைப்பு – சில சிறந்த முன்னுதாரணங்கள்
-------------

நபித்தோழர்கள் (ரழியல்லாஹு அன்ஹும்) ஒத்துழைப்பில் உலகிற்கு முன்மாதிரியாக இருந்தனர்.

அவர்கள் ஒரே உடலின் உறுப்புகளைப் போன்றவர்கள்; உடலின் ஒரு பகுதி வலித்தால் மற்ற உறுப்புகளும் அதனால் பாதிக்கப்படுவது போல, ஒருவர் சந்திக்கும் சிரமத்தை மற்றவர்களும் பகிர்ந்து கொண்டனர்.

ஒருபுறம் அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ், ஸஅத் இப்னு அபீ வக்காஸ், காலித் இப்னுல் வலீத், அம்ர் இப்னுல் ஆஸ் ஆகியோர் எகிப்து, ஷாம், ஈராக் போன்ற நாடுகளை இஸ்லாமுக்கு திறந்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.

மற்றொரு புறம் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி (ரழி) ஆகியோர் மக்களின் நிர்வாகத்தையும் நலன்களையும் கவனித்தனர்.

முஆத் இப்னு ஜபல், இப்னு அப்பாஸ், இப்னு உமர் (ரழி) ஆகியோர் மக்களுக்கு கல்வி கற்பித்து, ஃபத்வா வழங்கி, நல்லொழுக்கத்தில் வளர்த்தனர்.

அபூஹுரைரா, அனஸ், ஆயிஷா (ரழி) ஆகியோர் ஹதீஸ்களை பாதுகாத்து பரப்பினர்.

அபூதர், அபூதர்தா ஆகியோர் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நல்லறிவுரை கூறினர்.

இவ்வாறு அவர்கள் ஒருவருக்கொருவர் துணை நின்றனர்; குறை கூறிக் கொள்ளவில்லை.
ஒருவரை ஒருவர் ஆதரித்தனர்; பிரிந்து செல்லவில்லை.

1. கந்தக் (அகழி) தோண்டும் பணியில் ஸஹாபாக்களின் ஒத்துழைப்பு

அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:

மதீனாவைச் சுற்றி அகழி தோண்டும் பணியில் முஹாஜிர்களும் அன்சாரிகளும் சேர்ந்து உழைத்தனர்.
மண்ணை தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு அவர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள்:

> “நாங்கள் முஹம்மதிடம் உறுதிமொழி அளித்தவர்கள்;
உயிரோடு இருக்கும் வரை இஸ்லாத்தில் நிலைத்திருப்போம்.”


அப்போது நபிகள் நாயகம் ﷺ அவர்களும் அவர்களுடன் சேர்ந்து:

> “இறுதி உலக நன்மையைத் தவிர உண்மையான நன்மை இல்லை.
ஆகையால் அல்லாஹ்வே! அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் பரக்கத் அளிப்பாயாக!”

என்று கூறினார்கள்.

2. ஹிஜ்ரத் பயணத்தில் அபூபக்கர் (ரழி) குடும்பத்தின் ஒத்துழைப்பு

நபிகள் நாயகம் ﷺ ஹிஜ்ரத் செய்ய அனுமதி பெற்றபோது, அபூபக்கர் (ரழி) இரண்டு ஒட்டகங்களை தயார் செய்து வைத்திருந்தார்கள்.
தங்களின் உயிரையே ஆபத்தில் வைத்து நபியவர்களுடன் பயணித்தார்கள்.

ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்:

அபூபக்கர் (ரழி) நான்கு மாதங்கள் ஒட்டகங்களை பராமரித்து வைத்திருந்தார்கள்.

நபி ﷺ அவர்களின் வருகையால் ஹிஜ்ரத் பயணம் தொடங்கியது.

அஸ்மா பின்த் அபூபக்கர் (ரழி) உணவுப் பொதியைத் தன் இடுப்புப் பட்டையை கிழித்து கட்டினார்கள். இதனால் அவர்களுக்கு “தாதுன் நிதாகைன்” (இரண்டு பட்டைகளின் பெண்) என்ற பெயர் கிடைத்தது.

அப்துல்லாஹ் இப்னு அபூபக்கர் இரவில் தகவல்களை கொண்டு வந்தார்.

ஆமிர் இப்னு ஃபுஹைரா ஆடுகளை மேய்த்து பால் கொண்டு வந்தார்.

வழிகாட்டியாக திறமையான ஒருவரை ஏற்பாடு செய்தனர்.

இவ்வாறு முழு குடும்பமும் நபி ﷺ அவர்களின் ஹிஜ்ரத் பணியில் இணைந்து உதவியது.


3. நபி பள்ளிவாசல் கட்டுமானத்தில் ஸஹாபாக்களின் ஒத்துழைப்பு

நபி ﷺ அவர்கள் பனூ நஜ்ஜார் மக்களிடம்:

 “உங்கள் இந்தத் தோட்டத்தின் விலையைச் சொல்லுங்கள்”
என்று கேட்டபோது, அவர்கள்:

 “அதற்கான கூலியை அல்லாஹ்விடம்தான் எதிர்பார்க்கிறோம்” என்று கூறினர்.

பின்னர்,
அங்கிருந்த முஷ்ரிக்குகளின் கல்லறைகள் அகற்றப்பட்டன.

இடிபாடுகள் சமப்படுத்தப்பட்டன.
பேரீச்ச மரங்கள் வெட்டப்பட்டன.
கற்களை சுமந்து கொண்டு ஸஹாபாக்கள் பள்ளிவாசலை கட்டினர்.

நபி ﷺ அவர்களும் அவர்களுடன் சேர்ந்து உழைத்தார்கள்.


4. ஹிஜ்ரத்திற்குப் பிறகு அன்சாரிகள் – முஹாஜிர்களுக்கு செய்த உதவி

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) கூறுகிறார்கள்:

நபி ﷺ அவர்கள் என்னையும் ஸஅத் இப்னு ரபீஅையும் சகோதரர்களாக இணைத்தார்கள்.

அப்போது ஸஅத் (ரழி) கூறினார்:
 “அன்சாரிகளில் நான் அதிக செல்வம் கொண்டவன்.
என் செல்வத்தின் பாதியை உங்களுக்கு தருகிறேன்.
என் மனைவிகளில் ஒருவரை விவாகரத்து செய்து, ‘இத்தத்’ முடிந்த பின் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.”

அதற்கு அப்துர் ரஹ்மான் (ரழி):
> “எனக்கு அவை தேவையில்லை. சந்தை எங்கு உள்ளது என்று மட்டும் கூறுங்கள்” என்று பதிலளித்தார்கள்.

அதேபோல் அன்சாரிகள் நபி ﷺ அவர்களிடம்:
 “எங்கள் பேரீச்ச தோட்டங்களை முஹாஜிர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறினர்.

---

5. ஸல்மான் அல்-ஃபாரிஸி (ரழி) அவர்களுக்கு உதவிய ஸஹாபாக்கள்

ஸல்மான் (ரழி) அடிமைத்தனத்திலிருந்து விடுபட தனது எஜமானருடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.
ஆனால் அதற்கான தொகையை செலுத்த முடியவில்லை.

அப்போது நபி ﷺ அவர்கள்:

 “உங்கள் சகோதரருக்கு உதவுங்கள்” என்று ஸஹாபாக்களிடம் கூறினார்கள்.

அவர்கள் அனைவரும் இணைந்து உதவி செய்ததால் ஸல்மான் (ரழி) அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றார்கள்.

கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

ஒற்றுமை வெற்றியின் அடிப்படை.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி பொறுப்புகள் இருந்தாலும் அனைவரும் ஒரே இலக்கிற்காக உழைத்தனர்.

உதவி, தியாகம், சகோதரத்துவம் ஆகியவை ஸஹாபாக்களின் முக்கிய பண்புகள்.

இஸ்லாமிய சமூகம் ஒத்துழைப்பின் மூலம் வளர்ந்தது.

نماذِجُ من التَّعاوُنِ عندَ الصَّحابةِ رَضِيَ اللهُ عنهم
---------------
كان الصَّحابةُ رِضوانُ اللهِ عليهم مثالًا يُحتذى في التَّعاوُنِ، وكانوا في ذلك المثَلَ الأسمى، فكانوا كالجسَدِ الواحِدِ إذا اشتكى منهم عضوٌ تداعى له سائرُ الجسَدِ بالسَّهَرِ والحُمَّى،



 و(في الوقتِ الذي كان فيه أبو عُبيدةَ بنُ الجرَّاحِ، وسعدُ بنُ أبي وقَّاصٍ، وخالدُ بنُ الوليدِ، وعمرُو بنُ العاصِ؛ يفتحون مصرَ والشَّامَ والعراقَ، 
كان أبو بكرٍ وعُمَرُ وعُثمانُ وعَليٌّ يسوسون النَّاسَ، ويرعون شُؤونَهم، 

وكان معاذُ بنُ جَبَلٍ وابنُ عبَّاسٍ وابنُ عُمَرَ يُعَلِّمون النَّاسَ، ويُفتونهم ويُرَبونهم،

 وكان أبو هريرةَ وأنَسٌ وعائشةُ يحفظون الحديثَ ويَروونه،

 وكان أبو ذَرٍّ وأبو الدَّرداءِ يَعِظون النَّاسَ والحُكَّامَ ويَنصَحونهم؛ فتعاوَنوا ولم يَتعايَبوا، وتناصَروا ولم يَتدابروا) . 

تعاوُنُ الصَّحابةِ رَضِيَ اللهُ عنهم في حَفرِ الخَندَقِ:

نقَل لنا الصَّحابيُّ الجليلُ أنسُ بنُ مالكٍ رَضِيَ اللهُ عنه صورةً من تعاوُنِ الصَّحابةِ وتكاتُفِهم في حَفرِ الخندَقِ، فيقولُ: (جعَل المهاجِرون والأنصارُ يحفِرون الخندَقَ حولَ المدينةِ، وينقُلون التُّرابَ على متونِهم، ويقولونَ:
نحنُ الذين بايَعوا محمَّدَا
على الإسلامِ ما بَقِينا أبَدَا
والنَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم يجيبُهم ويقولُ:
اللَّهُمَّ إنَّه لا خيرَ إلَّا خيرُ الآخِرَهْ
فبارِكْ في الأنصارِ والمُهاجِرَهْ) 

تعاوُنُ أبي بكرٍ وأهلِ بيتِه مع النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم في هِجرتِه:

 جهَّز أبو بكرٍ راحلَتينِ عندما أعلمَه النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم بالهِجرةِ، وخاطَر بنفسِه وهاجر مع النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم؛ 

فعن عائشةَ رَضِيَ اللهُ عنها قالت: ((حبَس أبو بكرٍ نفسَه على رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم ليَصحَبَه، وعَلَف راحلتَينِ كانتا عندَه وَرَقَ السَّمُر -وهو الخَبطُ- أربعةَ أشهُرٍ... فبينما نحن يومًا جلوسٌ في بيتِ أبي بكرٍ في نحرِ الظَّهيرةِ قال قائلٌ لأبي بكرٍ: هذا رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم متقَنِّعًا في ساعةٍ لم يكُنْ يأتينا فيها، فقال أبو بكرٍ: فداءٌ له أبي وأمي! واللهِ ما جاء به في هذه السَّاعةِ إلَّا أمرٌ. 

قالت: فجاء رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم فاستأذن، فأذِنَ له فدَخَل، فقال النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم لأبي بكرٍ: أخرِجْ مَن عندَك. فقال أبو بكرٍ: إنما هم أهلُك بأبي أنت يا رسولَ اللَّهِ! قال: فإنِّي قد أُذِن لي في الخُروجِ. فقال أبو بكرٍ: الصَّحابةَ بأبي أنت يا رسولَ اللَّهِ؟! قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم: نعَمْ. قال أبو بكرٍ: فخُذْ بأبي أنت يا رسولَ اللهِ إحدى راحِلَتَيَّ هاتينِ. قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم: بالثَّمَنِ. قالت عائشةُ: فجَهَّزْناهما أحَثَّ الجَهازِ، وصنَعْنا لهما سُفرةً في جِرابٍ، فقطَعَت أسماءُ بنتُ أبي بكرٍ قطعةً من نطاقِها، فربَطَت به على فَمِ الجِرابِ؛ فبذلك سمِّيَت ذاتَ النِّطاقِ، 

قالت: ثمَّ لحِقَ رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم وأبو بكرٍ بغارٍ في جَبَلِ ثَورٍ، فكَمَنَا فيه ثلاثَ ليالٍ، يَبيتُ عندَهما عبدُ اللهِ بنُ أبي بكرٍ، وهو غلامٌ شابٌّ ثَقِفٌ لَقِنٌ ، فيُدلِجُ من عندِهما بسَحَرٍ، فيُصبِحُ مع قُرَيشٍ بمكَّةَ كبائتٍ، فلا يسمَعُ أمرًا يُكتادانِ به إلَّا وعاه حتَّى يأتيَهما بخبرِ ذلك حينَ يختَلِطُ الظَّلامُ، ويرعى عليهما عامِرُ بنُ فُهَيرةَ مولى أبي بكرٍ مِنحةً من غَنَمٍ، فيُريُحها عليهما حين تذهَبُ ساعةٌ من العِشاءِ، فيَبيتانِ في رِسْلٍ، وهو لَبَنُ مِنحَتِهما ورَضيفِهما حتى يَنعِقَ بها عامِرُ بنُ فُهَيرةَ بغَلَسٍ ، يفعَلُ ذلك في كُلِّ ليلةٍ من تلك اللَّيالي الثَّلاثِ، واستأجَر رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم وأبو بكرٍ رَجُلًا من بني الدِّيلِ، وهو من بني عبدِ بنِ عَدِيٍّ، هادِيًا خِرِّيتًا -والخِرِّيتُ: الماهِرُ بالهدايةِ-، قد غَمَس حِلفًا في آلِ العاصِ بنِ وائِلٍ السَّهميِّ، وهو على دينِ كُفَّارِ قُرَيشٍ فأمِنَاه، فدَفَعا إليه راحِلَتَيهما، وواعَداه غارَ ثَورٍ بعدَ ثلاثِ ليالٍ براحِلَتَيهما صُبحَ ثلاثٍ، وانطلق معهما عامِرُ بنُ فُهَيرةَ والدَّليلُ، فأخذ بهم طريقَ السَّواحِلِ)) .

تعاوُنُ الصَّحابةِ رِضوانُ اللهِ عليهم في بناءِ المسجِدِ النَّبَويِّ:

عندما قال النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم لبني النَّجَّارِ: ((يا بني النَّجَّارِ، ثامِنُوني بحائِطِكم هذا، قالوا: لا واللهِ لا نطلُبُ ثمَنَه إلَّا إلى اللَّهِ، 

فقال أنَسٌ: فكان فيه ما أقولُ لكم قبورُ المُشرِكين، وفيه خَرِبٌ وفيه نَخلٌ، فأمر النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم بقبورِ المُشرِكين فنُبِشَت، ثمَّ بالخَرِبِ فسُوِّيَت، وبالنَّخلِ فقُطِع، فصَفُّوا النَّخلَ قِبلةَ المسجِدِ، وجعلوا عِضادَتَيه الحِجارةَ، وجعلوا يَنقُلون الصَّخرَ وهم يرتَجِزون والنَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم معهم، وهو يقولُ: اللَّهُمَّ لا خيرَ إلَّا خيُر الآخِرهْ فاغفِرْ للأنصارِ والمُهاجِرهْ)) 

تعاوُنُ الأنصارِ مع المهاجِرين بعدَ الهِجرةِ:

قال عبدُ الرَّحمنِ بنُ عَوفٍ رَضِيَ اللهُ عنه: ((لمَّا قدِمنا المدينةَ آخى رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم بيني وبَينَ سعدِ بنِ الرَّبيعِ، فقال سعدُ بنُ الرَّبيعِ: إني أكثَرُ الأنصارِ مالًا، فأقسِمُ لك نِصفَ مالي، وانظُرْ أيَّ زوجَتيَّ هَوِيتَ نزَلْتُ لك عنها، فإذا حَلَّت تزوَّجْتَها. قال: فقال عبدُ الرَّحمنِ: لا حاجةَ لي في ذلك، هل من سُوقٍ فيه تجارةٌ؟ قال: سوقُ قَينُقاعٍ. قال: فغدا إليه عبدُ الرَّحمنِ، فأتى بأَقِطٍ وسَمنٍ...)) .

وقالت الأنصارُ للنَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم: ((اقسِمْ بيننا وبينهم النَّخلَ، قال: لا. قال: يكفونَنا المَئونةَ وتَشْركَونَنا في التَّمرِ. قالوا: سمِعْنا وأطَعْنا)) .

ومِن تعاوُنِ الصَّحابةِ أيضًا:

موقِفُهم في قِصَّةِ سَلمانَ رَضِيَ اللهُ عنه عندما كاتَب سَيِّدَه، وكان فقيرًا لا يملِكُ ما كاتَبَ عليه، فقال النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم للصَّحابةِ: ((أعينوا أخاكم)) . فأعانوه حتى تحَرَّر من رِقِّه، وأصبحَ حُرًّا.

الدرر السنية - تطبيق الأخلاق والسلوك والآداب

24 ஏப்ரல், 2026

ஆபத்தில் சிக்கியவருக்கு அபயம் வேண்டுமா ? அற்புதமான துஆ

 


🤲🤲🤲🤲🤲
🤲🤲🤲🤲🤲

حكاية: قال مالك بن دينار ﵁ خرجت إلى الحج فرأيت طيرا في منقاره رغيف فتبعته فجاء إلى شيخ موثوق وصار يلقمه لقمة لقمة ثم طار وجاء بماء في فمه فسكبه في فم الشيخ فقلت له من أنت قال من الحجاج أخذني اللصوص وربطوني هاهنا فصرت على الجوع خمسة أيام ثم قلت

 *يا من يجيب دعوة المضطر إذا دعاه فأنا مضطر فارحمي*

 فأرسل الله لي هذا الغراب قال مالك فحللته من وثاقه ومضينا .

மாலிக் பின் தீனார் (ரஹ்) கூறினார்கள்: 

நான் ஹஜ் பயணத்திற்கு புறப்பட்டேன். அப்போது ஒரு பறவையின் அலகில் ஒரு ரொட்டி துண்டு இருந்தது. இது எங்கே போகிறது?
அதைப் பின்தொடர்ந்தேன். அது ஒரு கட்டிவைக்கப்பட்ட முதியவரிடம் வந்து, அந்த ரொட்டியை சிறுசிறு துண்டுகளாக அவருக்கு ஊட்டியது. 

பின்னர் அது பறந்து சென்று, தனது அலகில் தண்ணீர் கொண்டு வந்து அந்த முதியவரின் வாயில் ஊற்றியது.

நான் அவரிடம் கேட்டேன்: “நீங்கள் யார்?”

அவர் கூறினார்: “நான் ஹஜ் பயணிகளில் ஒருவர். கள்வர்கள் என்னைப் பிடித்து இங்கே கட்டிவிட்டார்கள். நான் ஐந்து நாட்களாக பசியுடன் இருந்தேன். பின்னர் நான் கூறினேன்:

يَا مَنْ يُجِيبُ دَعْوَةَ الْمُضْطَرِّ إِذَا دَعَاهُ، فَأَنَا مُضْطَرٌّ فَارْحَمْنِي.

 ‘துன்பத்தில் இருப்பவர் உன்னை அழைக்கும் போது அவருக்கு பதிலளிப்பவனே! 
நான் ஒரு துன்பத்தில் இருப்பவன்; என்மேல் இரக்கம் புரிவாயாக.’' 

அப்போது அல்லாஹ் இந்தக் காகத்தை எனக்கு அனுப்பினான்.”

மாலிக் கூறினார்: பின்னர் நான் அவருடைய கட்டுகளை அவிழ்த்து, நாங்கள் இருவரும் தொடர்ந்து சென்றோம்.

பாறைக்குள் புழுவுக்கும் உணவு

 


حكاية: خرج سليمان ﵇ إلى شاطئ البحر فوجد نملة في فمها ورقة خضراء فلما وصلت إلى الماء خرجت ضفدعة فحملتها على ظهرها وغاصت بها قليلا ثم رجعت فسألها سليمان ﵇ عن ذلك قالت يا نبي الله في البحر صخرة صماء في وسطها دودة وقد وكلني الله برزقها كل يوم مرتين وخلق ملكا على صورة الضفدع فيحملني إلى الصخرة فتنشق فتأخذها الدودة مني وتقول سبحان من خلقي وفي البحر أسكنني ومن الرزق لم ينسني اللهم كما لم تنسني من رزقك فلا تنسى أمة محمد من عفوك ورحمتك .

நபி ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) கடற்கரைக்குச் சென்றார்கள். அப்போது ஒரு எறும்பு தன் வாயில் பச்சை இலை ஒன்றை எடுத்துக்கொண்டு வருவதை கண்டார்கள்.

அது தண்ணீரின் அருகில் சென்றதும், ஒரு தவளை வெளியில் வந்து, அந்த எறும்பைத் தனது முதுகில் ஏற்றி, சிறிது நேரம் நீரில் மூழ்கிச் சென்று பின்னர் திரும்பி வந்தது.

இதைக் கண்டு நபி ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அந்த எறும்பிடம் இதன் விஷயம் என்ன என்று கேட்டார்கள்.

எறும்பு கூறியது:

“அல்லாஹ்வின் நபியே! கடலின் நடுவில் ஒரு கடினமான பாறை உள்ளது. அதன் உள்ளே ஒரு புழு இருக்கிறது. அதற்கு தினமும் இரண்டு முறை உணவு அளிக்கும் பொறுப்பை அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ளான்.

தவளையின் உருவில் ஒரு வானவரை அல்லாஹ் படைத்துள்ளான். அவர் என்னை தனது முதுகில் ஏற்றி அந்தப் பாறை வரை கொண்டு செல்கிறார்.

பாறை பிளந்து திறக்கும்; நான் கொண்டு வந்த இலையை அந்தப் புழு என்னிடமிருந்து எடுத்துக்கொள்கிறது.

 பின்னர் அது இவ்வாறு கூறுகிறது:

> ‘என்னை படைத்து, கடலின் உள்ளே தங்க வைத்தும், எனக்கு உணவை மறக்காத அல்லாஹ் தூயவன்!

> அல்லாஹ்வே! எனக்கு உன் அருளான உணவை மறக்காததுபோல், முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தினருக்கு உன் மன்னிப்பையும் கருணையையும் மறந்துவிடாதே.’”

21 ஏப்ரல், 2026

பிறர் தேவைக்கு முன்னுரிமை part 2 - முன்னோர்களின் வரலாறுகள்

  نماذِجُ من الإيثارِ عِندَ السَّلَفِ


-
خرَج عبدُ اللهِ بنُ جَعفَرٍ إلى ضَيعةٍ له، فنَزَل على نخيلِ قومٍ، وفيه غلامٌ أسوَدُ يعمَلُ فيه، إذ أتى الغلامُ بقوتِه فدَخَل الحائِطَ كَلبٌ ودنا من الغلامِ، فرمى إليه الغلامُ بقُرصٍ فأكَله، ثمَّ رمى إليه الثَّانيَ والثَّالِثَ فأكلَه، وعبدُ اللهِ ينظُرُ إليه، فقال: يا غُلامُ، كم قُوتُك كُلَّ يومٍ؟ قال: ما رأيتَ. قال: فلِمَ آثَرْتَ به هذا الكَلْبَ؟! قال: ما هي بأرضِ كِلابٍ، إنَّه جاء من مسافةٍ بعيدةٍ جائِعًا، فكَرِهْتُ أن أشبَعَ وهو جائِعٌ! قال: فما أنت صانِعٌ اليومَ؟! قال: أطوي يومي هذا! فقال عبدُ اللهِ بنُ جَعفَرٍ: أُلامُ على السَّخاءِ! إنَّ هذا الغلامَ لأسخى منِّي! فاشترى الحائِطَ والغُلامَ وما فيه من الآلاتِ، فأعتَقَ الغُلامَ ووَهَبَه منه  !


-
عن أبي الحَسَنِ الأنطاكيِّ: أنَّه اجتمع عِندَه نَيِّفٌ وثلاثون رجُلًا بقريةٍ مِن قُرى الرَّيِّ، ومعهم أرغِفةٌ معدودةٌ لا تُشبِعُ جَميعَهم، فكَسَّروا الرُّغْفانَ، وأطفَؤوا السِّراجَ، وجَلَسوا للطَّعامِ، فلمَّا رُفِع فإذا الطَّعامُ بحالِه، لم يأكُلْ منه أحدٌ شيئًا إيثارًا لصاحِبِه على نفسِه  !


-
قال الهَيثَمُ بنُ جَميلٍ: جاء فُضَيلُ بنُ مَرزوقٍ -وكان من أئمَّةِ الهُدى زُهدًا وفَضلًا- إلى الحَسَنِ بنِ حُيَيٍّ، فأخبَرَه أنْ ليس عِندَه شيءٌ، فقام الحَسَنُ، فأخرج سِتَّةَ دراهِمَ، وأخبره أنَّه ليس عِندَه غيرُها، فقال: سُبحانَ اللهِ أليس عِندَك غيرُها وأنا آخُذُها؟! فأخَذَ ثلاثةً وتَرَك ثلاثةً  .


-
ورُوِيَ أنَّ مسروقًا ادَّانَ دَينًا ثقيلًا، وكان على أخيه خَيثمةَ دَينٌ، قال: فذَهَب مسروقٌ فقضى دَينَ خيثمةَ وهو لا يَعلَمُ، وذَهَب خَيثمةُ فقضى دَينَ مَسروقٍ وهو لا يَعلَمُ  !


-
وقال عبَّاسُ بنُ دِهقانَ: ما خرَج أحدٌ من الدُّنيا كما دخَلها إلَّا بِشرُ بنُ الحارِثِ؛ فإنَّه أتاه رجُلٌ في مَرَضِه، فشكا إليه الحاجةَ، فنَزَع قميصَه وأعطاه إيَّاه، واستعار ثوبًا فمات فيه  !


-
عن أبي جَعفَرٍ محمَّدِ بنِ عبدِ الرَّحمنِ الصَّيرفيِّ، قال: (بَعَث إليَّ الحَكَمُ بنُ موسى في أيَّامِ عيدٍ أنَّه يحتاجُ إلى نَفَقةٍ، ولم يَكُ عِندي إلَّا ثلاثةُ آلافِ دِرهَمٍ، فوَجَّهْتُ إليه بها، فلمَّا صارت في قبضتِه وَجَّه إليه خلَّادُ بنُ أسلَمَ أنَّه يحتاجُ إلى نَفَقةٍ، فوَجَّه بها كُلِّها إليه، واحتَجْتُ أنا إلى نَفَقةٍ فوَجَّهْتُ إلى خَلَّادٍ: إنِّي أحتاجُ إلى نَفَقةٍ، فوَجَّه بها كُلِّها إليَّ، فلمَّا رأيتُها مصرورةً في خِرقتِها وهي الدَّراهِمُ بعَيْنِها أنكَرْتُ ذلك، فبعَثْتُ إلى خلَّادٍ: حَدِّثْني بقِصَّةِ هذه الدَّراهِمِ؟ فأخبَرَني أنَّ الحكَمَ بنَ موسى بعَث بها إليه، فوَجَّهْتُ إلى الحَكَمِ منها بألفٍ، ووَجَّهْتُ إلى خلَّادٍ منها بألفٍ، وأخذْتُ أنا منها ألفًا!)  .


-
عن محمَّدِ بنِ داودَ قال: (سمِعتُ أبا بكرٍ الفُوطيَّ وأبا عَمرِو بنَ الأدميِّ يقولانِ، وكانا يتواخيانِ في اللهِ تعالى: خرَجْنا من بغدادَ نريدُ الكوفةَ، فلمَّا صِرْنا في بعضِ الطَّريقِ إذا نحن بسَبُعينِ رابِضَينِ على الطَّريقِ، فقال أبو بكرٍ لأبي عَمرٍو: أنا أكبَرُ سِنًّا منك، دَعْني حتَّى أتقَدَّمَك، فإنْ كانت حادثةٌ اشتَغَلوا بي عنك ونجَوتَ أنت! فقال أبو عَمرٍو: نفسي ما تسامِحُني بهذا، ولكِنْ نكونُ جميعًا في مكانٍ واحدٍ، فإن كانت حادِثةٌ كُنَّا جميعًا، فجازا جميعًا في وَسَطِ السَّبُعينِ فلم يتحَرَّكا، ومَرَّا سالِمَينِ!)  

.
-
و(خرَج إبراهيمُ بنُ أدهَمَ رَحِمه اللهُ في سَفَرٍ ومعه ثلاثةُ نَفَرٍ، فدَخَلوا مسجدًا في بعضِ المفاوِزِ والبَردُ شديدٌ، وليس للمسجِدِ بابٌ، فلمَّا ناموا قام إبراهيمُ فوَقَف على البابِ إلى الصَّباحِ، فقيل له: لمْ تَنَمْ؟ فقال: خَشِيتُ أن يصيبَكم البَرْدُ، فقُمتُ مقامَ البابِ.


إيثارُ أحمدَ بنِ حَنبَلٍ:
 (
قال هارونُ المُستَملي: لقيتُ أحمدَ بنَ حَنبَلٍ، فقُلتُ: ما عِندَنا شيءٌ. فأعطاني خمسةَ دراهِمَ، وقال: ما عِندَنا غيرُها. قال المَرُّوذي: رأيتُ أبا عبدِ اللهِ قد وَهَب لرجُلٍ قميصَه، وقال: ربَّما واسى مِن قُوتِه


அபூல் ஹஸன் அல்-அந்தாக்கி பற்றி கூறப்படுகிறது: ரய்ய் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில், அவரிடம் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர். அவர்களிடம் சில ரொட்டிகள் மட்டுமே இருந்தன; அவை அனைவருக்கும் போதுமானதாக இல்லை. அவர்கள் அந்த ரொட்டிகளை துண்டித்தார்கள், விளக்கை அணைத்தார்கள், உணவிற்கு அமர்ந்தார்கள். பின்னர் பாத்திரம் எடுக்கப்பட்டபோது, உணவு இருந்தபடியே இருந்தது; தம்மைவிட மற்றவருக்கே முன்னுரிமை கொடுத்து யாரும் எதையும் சாப்பிடவில்லை!

அல்-ஹைதம் பின் ஜமீல் கூறினார்: ஃபுதைல் பின் மர்ஸூக் — அவர் துறவியிலும் நற்பண்பிலும் முன்னோடி — ஹசன் பின் ஹுயய்யிடம் வந்து, தன்னிடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே ஹசன் எழுந்து ஆறு திர்ஹம்களை எடுத்துவந்து, “என்னிடம் இதைத்தவிர வேறில்லை” என்றார். அதற்கு அவர், “சுப்ஹானல்லாஹ்! உன்னிடம் இதைத்தவிர வேறில்லை என்றபோது, அதை முழுவதும் நான் எப்படித் எடுத்துக் கொள்வேன்?” என்று கூறி, மூன்றை மட்டும் எடுத்துக் கொண்டு, மூன்றை விட்டுச் சென்றார்.

மஸ்ரூக் என்பவருக்கு பெரிய கடன் இருந்தது. அவருடைய சகோதரர் கைதமாவுக்கும் கடன் இருந்தது. மஸ்ரூக் சென்று கைதமாவின் கடனை அவர் அறியாமல் செலுத்தினார். அதேபோல் கைதமா சென்று மஸ்ரூக்கின் கடனை அவர் அறியாமல் செலுத்தினார்!

அப்பாஸ் பின் திஹ்கான் கூறினார்: “உலகத்திலிருந்து, உலகில் வந்தபடியே வெளியேறியவர் பிஷ்ர் பின் அல்-ஹாரித் மட்டுமே. அவருடைய இறுதி நோயில் ஒருவர் வந்து தன் வறுமையைச் சொன்னபோது, அவர் தன் சட்டையை கழற்றி அவனுக்குக் கொடுத்தார். பிறகு வேறொருவரிடமிருந்து ஆடை கடன் வாங்கி அதிலேயே மரணமடைந்தார்.”

அபூ ஜஃபர் முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் அஸ்-ஸைரஃபி கூறினார்:
“ஈத் நாட்களில் ஹகம் பின் மூசா எனக்கு செய்தி அனுப்பி, செலவிற்குப் பணம் தேவை என்று கூறினார். என்னிடம் மூவாயிரம் திர்ஹம்கள் மட்டுமே இருந்தன; அவற்றை அனைத்தையும் அவரிடம் அனுப்பினேன். அவர் பெற்றதும், கல்லாத் பின் அஸ்லம் அவரிடம் செலவிற்குப் பணம் தேவை என்று செய்தி அனுப்பினார்; உடனே ஹகம் அவற்றை அனைத்தையும் அவரிடம் அனுப்பிவிட்டார். பின்னர் எனக்கே செலவிற்குப் பணம் தேவைப்பட்டதால், கல்லாதிடம் செய்தி அனுப்பினேன்; அவர் அதே பணத்தை முழுவதுமாக மீண்டும் எனக்கு அனுப்பினார். அந்தப் பணப்பை அதே துணியிலும் அதே நாணயங்களுடனும் இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். பின்னர் கல்லாதிடம் கேட்டேன்; அவர், ஹகம் அதைப் அனுப்பியதாகச் சொன்னார். அதனால் ஆயிரம் திர்ஹம்களை ஹகமுக்கும், ஆயிரத்தை கல்லாதுக்கும் அனுப்பி, ஆயிரத்தை நான் வைத்துக் கொண்டேன்.”

முஹம்மத் பின் தாவூத் கூறினார்:
“நான் அபூபக்ர் அல்-ஃபூத்தியும் அபூஅம்ர் பின் அல்-அதமியும் பேசுவதை கேட்டேன். அவர்கள் அல்லாஹ்வுக்காக சகோதரர்களாக இருந்தனர். நாங்கள் பக்தாதிலிருந்து கூஃபாவிற்கு பயணம் செய்தோம். வழியில் இரு  சிங்கங்கள் பாதையில் படுத்திருந்தன. அபூபக்ர், அபூஅம்ரிடம், ‘நான் வயதில் பெரியவன்; நான் முன்னால் செல்வேன். ஏதாவது ஆபத்து வந்தால், அவை என்னைத் தாக்கும்; நீ தப்பிப்பாய்’ என்றார். அதற்கு அபூஅம்ர், ‘என் மனம் இதை ஏற்காது. நாம் இருவரும் ஒன்றாக இருப்போம்; ஏதாவது நடந்தால் இருவருக்கும் ஒன்றாகவே நடக்கட்டும்’ என்றார். அவர்கள் இருவரும் அந்த இரு சிங்கங்களின் நடுவே சென்றார்கள்; அவை அசையவே இல்லை. அவர்கள் பாதுகாப்பாகச் சென்றார்கள்.”

இப்ராஹீம் பின் அத்ஹம் رحمه الله பயணத்தில் மூவருடன் இருந்தார். அவர்கள் ஒரு வெறிச்சோடிய இடத்தில் உள்ள பள்ளிவாசலுக்குள் சென்றார்கள். கடும் குளிர்; அந்த பள்ளிவாசலுக்கு கதவு இல்லை. அவர்கள் தூங்கியபோது, இப்ராஹீம் எழுந்து கதவு இருக்கும் இடத்தில் காலை வரை நின்றார். அவரிடம், “ஏன் தூங்கவில்லை?” என்று கேட்டபோது, “உங்களுக்கு குளிர் தாக்கிவிடுமோ என்று பயந்தேன்; அதனால் கதவாக நின்றேன்” என்றார்.

இமாம் அஹ்மத் பின் ஹன்பலின் தன்னலமின்மை:

ஹாரூன் அல்-முஸ்தம்லி கூறினார்: “நான் அஹ்மத் பின் ஹன்பலை சந்தித்து, ‘எங்களிடம் எதுவும் இல்லை’ என்றேன். அவர் எனக்கு ஐந்து திர்ஹம்கள் கொடுத்து, ‘எங்களிடம் இதைத்தவிர வேறில்லை’ என்றார்.”

அல்-மர்ரூதி கூறினார்: “அபூ அப்தில்லாஹ் (இமாம் அஹ்மத்) ஒருவருக்கு தன் சட்டையை அன்பளிப்பாக வழங்கியதை நான் கண்டேன். அவர் தன் உணவிலிருந்தே பகிர்ந்து உதவுவார்.”