- உஸ்தாத் முஹம்மது ஷாஃபிஈ வாஹிதி
அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகிறேன்.அன்பான மின்னல் fm நேயர்களே ! ஆரம்பமாக
ஈகைத்திருநாள் வாழ்த்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆனந்தம் அடைகிறேன்.
இன்றைய நவீன காலத்தில் மனித நேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா? என்ற அருமையான தலைப்பில் இங்கே பட்டிமன்றம் அறங்கேறிக் கொண்டிருக்கிறது.
இன்றைய கால
கட்டத்தில் மனித நேயம் அதிகம் வீழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்ற கருத்தை
மையப்படுத்தி ஒரு சில தகவல்களை உங்களது சிந்தனையில் பதிய வைக்க விரும்புகிறேன்.
இன்றைக்கு மனித
நேயம் என்பது, வெறும் எழுதுறதுக்கும்,பேசுறதுக்கும் உள்ள விவாதப் பொருளாக மட்டுமே
காட்சி தர்ரத நாம பார்க்குறோம். எழுத்திலேயும்,பேச்சிலேயும் மட்டும் தான் மனித
நேயம் இருக்குதே தவிர செயல் வடிவத்தில இல்லைங்குறத நாம நிச்சயம் ஏத்துக்கிட்டு தான் ஆகனும்.
இந்த காலத்துல
மனிதர்கள் வெறும் பணத்த மட்டுமே குறிக்கோலாக வச்சி வாழ்றதை நாம பார்க்குறோம்.பணம்
சம்பாதிக்கனும், வசதியாக வாழனும் என்று சுயநல சிந்தனையிலேயே இருக்குறதனால பிறர்
நலத்த பார்க்குறதில்லை. பிறர் உரிமைகள மதிக்கிறதில்லை.பிறர் பாதிக்கப் படுறதைப் பத்தி யோசிக்கிறதும் இல்லை.
என்னப்பா இப்படி
பன்னிட்ட ? உன்னால இத்தனை
பேர் பாதிக்கப்பட்டிருக் கிறாங்களே ! என்று கேட்டா...., இதெல்லாம் பார்த்தா வாழ
முடியுமா? இதெல்லாம்
பார்த்தா பொழைக்க முடியுமா ? என்று கேக்குற
மனிதர்கள் தான் உலகத்தில அதிகம் என்பதை நடுவர் நன்றாக குறித்துக் கொள்ள வேண்டும். இப்படி
எல்லாரிடத்திலேயும் சுயநலம் அதிகமாகி விட்ட இந்த காலத்துல மனித நேயம் வாழுதுன்னு
எப்டிங்க சொல்லுங்க முடியும்?
அதுமட்டுமில்லாம இன்னைக்கு உலக ரீதியா வறுமைக் கோட்டுக்குக்
கீழே வாழும் நாடுகளோட எண்ணிக்கை அதிகரிச்சிக்கிட்டே வருது. சோமாலிய நாட்டுல உள்ள
ஒரு சகோதரர், ஒரு இஸ்லாமிய அறிஞரிடத்துல எங்க நாட்டுல நாங்க சாப்பாட்டுக்கு
வழியில்லாம இருக்குறோம். அதனால நாங்க ஸஹர் உணவு சாப்பிடாமயே நோன்பு வைக்குறோம்.
எங்க நோன்பு ஏற்றுக் கொளப்படுமா ? என்று கேட்டு அவரையே கண்கலங்க வைச்ச நிகழ்ச்சிய இந்த மன்றத்தில நான் பதிவு செய்ய ஆசைப்படுறேன்.
இப்படி ஒரு நேர உணவுக்குக் கூட கஷ்டப்படுற
பல நாடுகள் உலகத்துல இருக்குற நிலையில மனிதாபிமானம்,மனித நேயம் என்று சும்மா குரல்
கொடுக்குற எத்தனையோ நாடுகள், தங்களது நாட்டோட
தரத்த உயர்த்துறதுக்குத் தான் பல கோடிகள செலவழிக்கிறதே தவிர ஏழை நாடுகளை தன்
கவனத்துல எடுத்துக்குறதே இல்லை என்று பார்க்கும்போது மனித நேயம் வாழுதுன்னு எப்டி
சொல்ல முடியும் ?
அதேபோல இன்னைக்கு
உண்மையிலேயே பெத்தவங்கள வச்சி காப்பாத்துறதுக்கு புள்ளைங்க போட்டி போடனும் இல்லையா ! ஆனா இன்னைக்கு எத்தனை பேர் பெத்தவங்கள சரியா,முறையா கவனிக்கிறாங்க ? அம்மாவ நீ வச்சுக்கோன்னு அண்ணன் சொல்றான்.
இல்ல இல்ல நீ தான் வச்சிருக்கனும்னு தம்பி சொல்றான்.இந்த வயசான காலத்துல என்னை
ஏண்டா அங்க இங்கேயும் அலைய விடுறீங்கன்னு வேதனைப்படுற அம்மாக்கள் இன்றைக்கு அதிகமா
?இல்லையா ? சொல்லுங்க நடுவர் அவர்களே !
அன்னையின்
காலடியில் சொர்க்கம் என்று அண்ணல் நபி [ஸல்] அவங்க சொன்னாங்க.ஆனா
இன்னைக்கு அதிகமான அன்னையர்கள் இருக்குறது முதியோர் இல்லத்துல தான... இந்த மாதிரி
விஷயங்கள பார்த்த பிறகும் மனித நேயம் வாழுதுன்னு எப்டி காதர் மீரான் உஸ்தாது பேச வந்துருக்காங்கன்னு
தெரியல.
அதேபோல மருத்துவர்கள்
கூறும் கனிவான வார்த்தைகள் தான் நோயாளிகளோட பாதி நோயை குணப்படுத்தும்னு சொல்வாங்க.
ஆனால் இன்றைக்கு பாதி நோயோடு போறவன் கூட மருத்துவர்கள் எழுதக்கூடிய பிள்ளைப்
பார்த்த பிறகு முழு நோயாளியா ஆயிடுறான்.சேவைக்காக உருவாக்கப்பட்ட மருத்துவம் பணம்
பறிக்கும் தொழிலாக மாறிப் போனதும் இன்னைக்கு மனித நேயம் வீழ்ந்து விட்டது என்பதற்கு
சிறந்த உதாரணம்.
- இன்று நாம் நமது மேலதிகாரிகளுக்கு கொடுக்கும் மரியாதையில் பாதியையாவது நமது பணியாளர்களுக்கு கொடுக்கிறோமா ?
- நம் நண்பர்களின் மீது காட்டும் அன்பில் சிறிதேனும் நம் வீட்டு வேளைக் காரர்களின் மீது காட்டுகிறோமா ?
- நம் பிள்ளைகளைப் போலவே தெருவோர ஏழைக் குழந்தைகளையும் அரவணைக்கிறோமா ?
- நம் வயிறு நிறைய வேண்டும் நம் வீட்டாரின் வயிறு நிறைய வேண்டும் என்று நினைக்கிற நாம் நம் வீட்டுக்கு வெளியில் உள்ளவர்களின் பசி பட்டினியை என்றைக்காவது நினைத்துப் பார்க்கிறோமா ?
- இந்த கடையில் வாங்குவோமா அந்த கடையில் வாங்குவோமா என்று தேடித்தேடி அலைந்து வாங்கி விதவிதமான துணிகளை உடுத்துகிற நாம், நம் வீட்டு வெளியே ஒரு மாற்றுத் துணி கூட இல்லாமல் அரைகுறை அழுக்கு ஆடைகளோடு வளம் வருபவர்களின் மீது கவனம் செலுத்தி இருக்கிறோமா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்