ஆலிம்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலிம்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 டிசம்பர், 2012

அறிஞர்களின் மறைவும் அகிலத்தின் அழிவும்

நாடறிந்த பேச்சாளர், ஆன்மீகம், அரசியல் சகல துறைகளிலும் முதிர்ச்சி பெற்ற ஞானி,காயல்பட்டணம் மஹ்லரா அரபிக்கல்லூரி முதல்வர் கடையநல்லூர் S.S.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள் இன்று 20.12.121 இரவு 2.00 மணியளவில் சென்னை வேளச்சேரி விஜயா மருத்துவமனையில் மரணமடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் 

சமீப காலமாகவே அறிவிற் சிறந்த ஆன்றோர்கள் மூத்த உலமாக்கள் பலரும் அடுத்தடுத்து இறையடி சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். பண்பட்ட அறிஞர்கள் பலரும் மறைந்துகொண்டே இருப்பது ஆழ்ந்த துயரை உண்டாக்கி இருக்கிறது۔
அது குறித்து ஒரு கட்டுரை:


08 டிசம்பர், 2012

உலமாப் பெருமக்களின் உயரிய வலைதளங்கள்

இதுவரை அடியேனின் பார்வையில் பட்ட தளங்கள்.!
இன்னும் இருந்தால் அதை கருத்துரையில் தெரிவித்தால் அவசியம் சேர்த்துக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ்.
ssahamedbaqavi.blogspot.com

29 அக்டோபர், 2012

தூத்துக்குடி விவாதம் பாகம் 1

musthafa maslahi
குர்ஆனில் எழுத்துப் பிழைகளா? என்ற தலைப்பில் விறுவிறுப்பான விவாதம் ஒன்று சமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்றது நாம் அனைவரும் அறிந்ததே
தூத்துக்குடி ஜமாஅத்துல் உலமா சபை ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்வில் TNTJ வினரும் முஸ்தஃபா மஸ்லஹி அவர்கள் தலைமையிலான உலமாக்கள் குழுவும் பங்கேற்று இன்று பரபரப்பாக பேசிக்கொள்ளப்படுகிற விஷயம் இது.
அந்த விவாத CD கள் கிடைக்குமா? என்று பல நண்பர்களும் அங்கலாய்த்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது YouTube லேயே இது பதிவேற்றப்பட்டு பலரும் பார்த்து ரசிக்கும் வகையில் உள்ளது. இதோ அந்த காணொளி. கண்டு களியுங்கள்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-tT4w6qvIEA#t=18




07 அக்டோபர், 2012

அறிவு, செல்வம் இரண்டிலும் எது சிறந்தது?


கல்வி
ரு சமயம் பத்து யூதர்கள் அலி (ரலி) அவர்களிடம் வந்து '' அறிவு, செல்வம் இரண்டிலும் எது சிறந்தது? ஏன் சிறந்தது? எங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வெவ்வேறு பதிலகள் தரவேண்டும் '' என்று கேட்டனர்.
அலி ரலி அவர்கள் பத்து பதில்கள் தந்தார்கள்:

1. அறிவு என்பது இறைத் தூதர்களின் மரபுரிமைச் சொத்து; செல்வம் அரசர்களுடைய வழி வழிச் சொத்து. எனவே அறிவுதான் சிறந்தது.

2. செல்வத்தை நீங்கள் பாதுகாக்கவேண்டும்; ஆனால் அறிவு உங்களைப் பாதுகாக்கும். எனவே அறிவுதான் சிறந்தது.

3. செல்வத்தை வைத்திருக்கும் ஒருவனுக்கு அநேக எதிரிகள் இருப்பார்கள். அறிவை உடையவனுக்கு பல நண்பர்கள் இருப்பார்கள் எனவே அறிவுதான் சிறந்தது.

4. அறிவை விநியோகித்தால் அது பெருகுகின்றது; ஆனால் செலவத்தை விநியோகித்தால் அது குறைகின்றது. எனவே அறிவுதான் சிறந்தது. 

5. அறிவாளி பெருந்தன்மையுடன் நடந்துகொள்கிறான். செல்வந்தன் கஞ்சத்துடன் நடந்து கொள்கிறான். எனவே அறிவுதான் சிறந்தது. 

6. அறிவு திருட்டுப் போகாது; செல்வம் திருட்டுப் போகும் வாய்ப்புள்ளது. எனவே அறிவுதான் சிறந்தது. 

7. காலத்தின் ஓட்டத்திலே அறிவு பழுதடைவதில்லை. ஆனால் செல்வம் துருப்பிடித்து தேய்கிறது. எனவே அறிவுதான் சிறந்தது. 

8. அறிவு எல்லையற்றது; செல்வத்திற்கு எல்லையுண்டு அதைப் பற்றி கணக்கு வைத்துக்கொள்ளலாம். எனவே அறிவுதான் சிறந்தது. 

9. அறிவு உள்ளத்தைப் பிரகாசப்படுத்துகிறது; செல்வம் இருளடையச் செய்கிறது. எனவே அறிவுதான் சிறந்தது. 

10. அறிவு பணிவைத் தருகிறது; செல்வம் பகட்டைத் தருகிறது. எனவே அறிவுதான் சிறந்தது. 


சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! 

29 ஏப்ரல், 2012

இக்கால இப்றாஹீம்கள்





உலமாக்களே!
மதரசா எனும் அரண்மனையில் பிறந்த 
மவ்லவிகள் எனும் மன்னர்கள் நீங்கள். 
குர்ஆன் கோட்டைக்குள் ஹதீஸ் குடையின் கீழ் 
கோலோச்சுகின்ற காரணத்தால் 
நாங்கள் உங்களுக்கு குடிமக்கள். 


ஓதுதல் என்னும் நண்ணீர் கொண்டு 
உங்களின் இதயங்கள் இருப்பதால்தான் 
உங்கள் தூக்கம் கூட தொழுகைக்கு சமம். 
நீங்கள் ருகூவுக்குப் போகும் முன் 
ரூஹே போனாலும் நாங்கள் முந்தக் கூடாது. 


சூரியன் உதிப்பதே நீங்கள் 
சுப்ஹுக்கு எழுவதைக் கண்டுதான். 


உலமாக்களே! 
மதரசா சூளையில் 
மலர்ந்த செங்கற்கள் நீங்கள். 
நீங்கள் அடிக்கல்லாக 
அடுக்கப் படவில்லையானால் 
இறையச்சக் கோட்டை 
எழுவது எப்படி? 


உலகம் முழுவதும் செல்ல 
உங்களுக்கு தடையில்லை. 
காரணம், 
நீங்கள் ஆன்மீகத்தில் 
ஆசாத் விசா பெற்றவர்கள். 


உங்களைக் 
கண்ணியப் படுத்தும் போதெல்லாம் 
நாங்கள் 
புண்ணியப் படுத்தப் படுகிறோம். 


தீனுக்கு எதிரென்றால் 
தீக்குண்டத்திற்கும் அஞ்சாத 
இக்கால இப்றாஹீம்கள் நீங்கள்.


உலமாக்களே!
நீங்கள் கூடினால் 
அது எங்களுக்கு தேன்கூடு. 
நீங்கள் பேசினால் 
அது எங்களுக்கு பேரீச்சம் பழம். 


பலர் வருமானத்தால் வளர்கிறார்கள் 
தேய்வதற்காக... 
நீங்களோ தேய்கிறீர்கள் 
சமுதாய வளர்ச்சிக்காக! 


உலமாக்களே!  நீங்கள் 
ஆடம்பர சாட்டைக்கு 
ஆடாத பம்பரம். 
ஆன்மீக காற்று சேர 
அகல விரியும் பாய்மரம்.


அல்லாஹ்வின் அருள்தனை சுமந்திருக்கும் 
அண்ணல் நபியின் வாரிசுகளே !
உங்கள் மறை வாழ்க்கை வெற்றி பெற
மனதாற வாழ்த்துகிறேன்.

26 ஏப்ரல், 2012

இளம் மவ்லவி களம் இறங்கினார்



அன்பிற்கினிய ஆலிம் நண்பர்களே!

பொதுவாக சங்கைக்குரிய ஆலிம் பெருமக்கள் தங்களின் வீரிய உரைகளை ஜும்ஆ மேடைகளிலும் மீலாது மேடைகளிலும் மதரசாக்களிலும் விவாத அரங்குகளிலும் நிகழ்த்தி அதை மக்கள் நேரடியாகவும் வீடியோ ஆடியோக்கள் மூலமாகவும் கேட்டுப் பயன்பெற்றுக் கொண்டிருப்பது உண்மை.
ஆனால் அதையும் தாண்டி இன்று இண்டெர்நெட்டிலும் உலா வந்து குறுகிய நேரத்தில் தங்களின் கருத்துகளை உலகம் அறியச் செய்வதில் சில ஆலிம்கள் முனைப்பு காட்டுவது பாராட்டுக்குரியது மட்டுமல்ல.. காலத்தின் கட்டாயமும் கூட.