ஒப்பிலான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒப்பிலான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 மார்ச், 2013

ஒப்பற்ற ஒப்பிலானில் முப்பெரும் விழா

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 23, 24, 25 மார்ச் 2013 (சனி, ஞாயிறு, திங்கள் ) ஆகிய தேதிகளில் இராமநாதபுரம் மாவட்டம் ஒப்பிலானில் மீலாது உள்ளிட்ட முப்பெரும் விழாவில் 
வட்டார மக்தப் மதரசாக்களுக்கான 
மார்க்க அறிவுப் போட்டியும் மாணவர் பட்டிமன்றங்களும் 
உலமாக்கள் பங்குபெறும் நகைச்சுவைப் பட்டிமன்றமும் மிகச் சிறப்பாக நடைபெற வுள்ளன .  இன்ஷாஅல்லாஹ் விழா சிறக்க அன்பர்கள் அனைவரும் துஆ செய்வீர்கள்தானே !



19 ஜூன், 2012

ஒப்பிலான் மாணவர்கள் சாதனை



நேற்று (16-06-2012) சனி காலையிலிருந்து இரவு வரை பரமக்குடியில் நடைபெற்ற முகவை மாவட்ட அளவிலான மக்தப் மதரஸாக்களுக்கான மார்க்க அறிவுப் போட்டிகளில் ஒப்பிலான் மன்பவுல் ஹஸனாத் மதரஸா மாபெரும் வெற்றி பெற்றது. மாஷா அல்லாஹ்.


மொத்தம் 42 மதரஸாக்களிலிருந்து 121 மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்தினர். பல்வேறு போட்டிகள். 

அதில் பட்டிமன்றப் போட்டியில் 3 பட்டிமன்றங்கள் பங்கேற்றன. ஒப்பிலான் மாணவர்கள் நடத்திய பட்டிமன்றம் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் முதல் தரத்தையும் பெற்று சிறப்பு பரிசை வென்றது. அல்ஹம்து லில்லாஹ்.
மண்ணின் பெருமை காத்த மாணவர்கள்
வீடியோவிற்கு அனுமதி வழங்கப்படாததால் அதைப் பதிவு செய்யமுடியவில்லை என்ற வருத்தம் ஒருபக்கம் இருந்தாலும் தலைமை நடுவர் மவ்லானா O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்களின் திருவாயால் கிடைத்த பாராட்டும் துஆவும் வாழ்வில் மறக்கமுடியாதவை.  ''இந்த பட்டிமன்றத்தில் உரையாற்றிய மாணவச் செல்வங்களின் உரையைக் கேட்டால் அவர்களின் பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்கள்'' என்று திரும்ப திரும்ப ஹழ்ரத் அவர்கள் கூறிய அந்த வாழ்த்து மரணப் படுக்கையிலும் நம்மால் மறக்க முடியாது. அல்ஹம்து லில்லாஹ். 


பாகவி ஹழ்ரத் அவர்களின் பாராட்டு
நமது முயற்சிக்கு இறைவன் வழங்கிய அங்கீகாரம் என்பதால் உடனே நம் மாணவர்கள் இரண்டு ரக்அத் தொழுது இறைவனுக்கு நன்றி செலுத்தினர். 


மாவட்ட அளவில் ஒரு அழுத்தமான முத்திரையை நம் மாணவர்கள் பதித்ததற்காக அவர்களுக்கு இந்த வலை தளம் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் அவர்கள் சாதனை படைக்க மனமுவந்து வாழ்த்துகிறது. 


சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! 

03 ஜூன், 2012

சுகாதார விழிப்புணர்வு பேரணி



sadhak maslahi



தகவல்: சதக் மஸ்லஹி
படங்கள்: முஹம்மது மதாஸ் 

நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் டெங்கு போன்ற தொற்றுநோய்கள் சமீபத்தில் நம் ஒப்பிலானிலும் ஒரு சில குழந்தைகளைத் தொட்டதைத் தொடர்ந்து ஒப்பிலான் ஊராட்சி சார்பாகவும் ஜமாத் சார்பாகவும் சில துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஜும்ஆ மேடைகளில் இது பற்றி அதிகம் பேசப்பட்டது.
கிணறுகளிலும் பாதையோரங்களிலும் மருந்து தெளிக்கப்பட்டது. தெருக்களில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளபட்டது.
சுத்தம் சுகாதார விழிப்புணர்வு பேரணி:
இன்று (02-06-2012 சனி) மாலை 4 மணி அளவில் சுத்தம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 
  • பள்ளிவாசலிலிருந்து புறப்பட்ட இந்த பேரணியில் ஜமாஅத்தார்கள், மதரஸா மாணவ மாணவியர், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 
islamic valibar sangam
  • ஊராட்சி மன்றத் தலைவர், ஜமாஅத்தின் உதவித் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பெருமக்கள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்,
  • சுகாதார விழிப்புணர்வு பற்றிய முழக்கங்களை கோஷமிட்டுக்கொண்டே பேரணி புறப்பட்டுச் சென்றது.  
  • சுகாதார விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கரங்களில் ஏந்தியவர்களாக வந்த பேரணியை ஒப்பிலான் இஸ்லாமிய வாலிப சங்கத்தினர் குளிர்பானம் கொடுத்து வரவேற்றனர்.
  
    islamic valibar sangam
    வழிநெடுகிலும் வாலிபர் சங்கத்தின் வரவேற்பு
  • அனைத்து தெருக்களிலும் உலா வந்த பேரணி இறுதியாக பள்ளியில் வந்து நிறைவுற்றது.

பேரணியில் முழங்கப்பட்ட டெங்குக்கு எதிரான பத்து கட்டளைகள்:
குடிநீரைக் காய்ச்சி
வடிகட்டி அருந்துவோம்!

oppilan madrasa
டெங்கு போன்ற காய்ச்சலை
எங்குமின்றி துரத்துவோம்

பெருகிக் கிடக்கும் கூளங்கள்
பேரழிவின் மூலங்கள்!

குவிந்து கிடக்கும் குப்பைகள்
கூட்டிப் பெருக்கித் தள்ளுங்கள்!

ஈ மொய்க்கும் பண்டங்கள்
நோய் நொடியின் சொந்தங்கள்!

தெருக்களில் தேங்கும் கழிவு நீர்
கொசுக்கள் பெருகும் அழிவு நீர்!

குடியை ஒழிப்போம்!
செடியை வளர்ப்போம்!!

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்!
நாட்டுக்கு நலன் புரிவோம்!!

காய்கறிகள் உணவில் சேர்த்து
நோய் நொடியைத் துரத்துவோம்!

அளவோடு உண்டு
நலமோடு வாழ்வோம்!


சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! அல்லது கீழ்காணும் தளங்களில் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே!

11 பிப்ரவரி, 2012

அழுக்கில் கிடந்து புரளாதே








அழுக்கில் கிடந்து புரளாதே

அச்சம் கொண்டு மிரளாதே

நகத்தைப் பல்லால் கொறிக்காதே

நாளும் சோம்பல் முறிக்காதே





துரும்பை எடுத்து கடிக்காதே

சும்மா செடியை ஒடிக்காதே 


கண்ட இடத்தில் துப்பாதே

கருத்தாய் இருக்க தப்பாதே



பிறரை என்றும் திட்டாதே

பெரியோர் முன்னால் கத்தாதே

பாதையை அசுத்தம் செய்யாதே

படித்தவற்றை மறக்காதே

05 ஜனவரி, 2012

புனித ஹாஜிகள் பாராட்டு விழா

ஒப்பிலான்
oppilan
ஹாஜிகளுடன் ஜமாத் தலைவர் 
ஒப்பற்ற ஒப்பிலானில் 27.12.2011 செவ்வாய் கிழமை காலை 9.30 மணியளவில் கடலாடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையும் ஒப்பிலான் முஸ்லிம் ஜமாஅத்தும் இணைந்து புனித ஹாஜிகள் பாராட்டு விழா நடத்தியது.



ஒப்பிலான் ஜமாத் தலைவர் ஜனாப் அப்துர் ரஹ்மான் அவர்கள், மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் ஜனாப் காதர் ஷம்சு ஆகியோர் தலைமை தாங்க
ஹாஜிகளுடன் ஜமாத் உதவித்தலைவர் 

ஒப்பிலான்  ஜமாஅத்தார்கள், வட்டார உலமா சபையினர்  & வட்டார அனைத்து  
ஜமாஅத்தார்கள் முன்னிலை வகிக்க, தரைக்குடி இமாம் மௌலவி  ஜாஹிர் ஹுசைன் மஸ்லஹி கிராஅத் ஓதி துவங்கிவைத்தார்.
கடலாடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் துணைச் செயலாலரும்,
 ஒப்பிலான் தலைமை இமாமுமான
மௌலவி அல்ஹாஃபிழ் சதக்கத்துல்லாஹ் 
மஸ்லஹி ஃபாழில் தேவ்பந்த் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

ஹாஜிகளுடன் ஜமாத் செயலாளர்

ஹாஜிகளுடன் ஜமாத் பொருளாளர்



ஹாஜிகளை வாழ்த்தி உரையாற்றிய சங்கைக்குரிய அறிஞர் பெருமக்கள்:


ஷஹீது அரூஸி
மௌலவி கே.எஸ். எஸ். செய்யது இஸ்மாயீல் சிராஜி ஏர்வாடி தர்ஹா (தலைவர், கடலாடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை)
மௌலவி அல்ஹாஃபிழ் எஸ். ஷஹீது இப்ராஹீம் அரூஸி.  இமாம், சாயல்குடி (செயலாளர்,கடலாடி வட்டார ஜமாஅத்துல் உலமா 
மௌலவி அல்ஹாஃபிழ் ரூஹுல் அமீன் காஷிஃபி ஃபாழில் மழாஹிரி இமாம், கீழச்செல்வனூர் (பொருளாளர்,கடலாடி வட்டார உலமா சபை)
மௌலவி செய்யது இப்ராஹீம் ஜமாலி (ஆய்வாளர், மாவட்ட ஐக்கிய நலக் கூட்டமைப்பு, இராமநாதபுரம்)
மௌலவி உஸ்மான் மிஸ்பாஹி  இமாம், கடலாடி
மௌலவி ஜாஃபர் அலி ஃபைஜி இமாம், மரியூர்
மௌலவி ஹாஜா முஹ்யித்தீன் சிராஜி இமாம்,ஹனஃபி பள்ளி,நரிப்பையூர்
மௌலவி செய்யது சுலைமான் யூசுஃபி இமாம், ஷாஃபிஈ பள்ளி நரிப்பையூர்
oppilan
 சதக் மஸ்லஹி
மௌலவி அமானுல்லாஹ் மன்பஈ மதரசா ஆசிரியர்,ஷாஃபி பள்ளி,நரிப்பையூர் 
மௌலவி கியாசுத்தீன் இன்ஆமி  இமாம், இதம்பாடல்
மௌலவி அமானுல்லாஹ் மன்பயி  இமாம்,குருவாடி
மௌலவி மஹ்மூது மன்பஈ ஒப்பிலான்
மௌலவி சேக் சாஜித் அன்வாரி இமாம், மேலச்சிக்கல்
முஹம்மது இத்ரீஸ் ஆலிம் இமாம், வாலிநோக்கம்
தோட்டத்து லெப்பை ஆலிம் இமாம்,இராஜாக்கள்பாளையம்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பல ஆண்டுகளாக தொடர்ந்து ஹஜ் செய்துவரும் அனுபவம் வாய்ந்த அல்ஹாஜ் ஜபருல்லாஹ் (செயலாளர், ஜே.எம்.எஸ். அரபிக்கல்லூரி,மதுரை) அவர்கள் அற்புதமான சிறப்புரை நிகழ்த்தினார்கள்.


ரூஹுல் அமீன் காஷிஃபி
இறுதியாக புனித ஹாஜிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.



கவுரவிக்கப்பட்ட ஹாஜிகள்:


ஒப்பிலான்:
UNWO ஜமாலி
அல்ஹாஜ் வைப்பாத்தான்
அல்ஹாஜ் ரஷீத் கான்- அல்ஹாஜ்ஜா பஷரியா,
அல்ஹாஜ் இப்ராஹீம்ஷா-அல்ஹாஜ்ஜா ரஹீமா பீவி
அல்ஹாஜ்ஜா சுப்ஹானி, அல்ஹாஜ்ஜா பரீதா, அல்ஹாஜ்ஜா ரஃபீக்கா


மாரியூர்:
அல்ஹாஜ் முஹம்மது சலீம்


வாலிநோக்கம்:
அல்ஹாஜ் ந.க. செய்யது இப்ராஹீம்-அல்ஹாஜ்ஜா பூஹானிதா பேகம்


நரிப்பையூர்:
அல்ஹாஜ் ஷம்சு இப்ராஹீம்-அல்ஹாஜ்ஜா ரசூல் பீவி
அல்ஹாஜ் முஹம்மது ஆசாத்- அல்ஹாஜ்ஜா ரஹ்மத் பீவி


கீழச்செல்வனூர்
அல்ஹாஜ் நைனா முஹம்மது- அல்ஹாஜ்ஜா ஜமாலியா பேகம்
அல்ஹாஜ் ஷம்சுத்தீன்- அல்ஹாஜ்ஜா காதர் பீவி


மேலச்சிக்கல்:
அல்ஹாஜ் காதர் சுல்தான்- அல்ஹாஜ்ஜா சித்தீக்கா பீவி


சிக்கல்:
அல்ஹாஜ் சுக்கூர்


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒப்பிலான் ஜமாஅத்தின் உதவித் தலைவர் ஜனாப் ஷாகுல் ஹமீது,  செயலாளர் ஜனாப் ஃபக்ருத்தீன்,  பொருளாளர்
ஜனாப் முஹம்மது ஃபாரூக் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். ஒப்பிலான் துணை இமாம் அல்ஹாஃபிழ் புரோஸ் கான் பம்பரமாகச் சுழன்று வந்தவர்களை விழுந்து விழுந்து உபசரித்தார்.


விழாவுக்கு வந்திருந்த அனைத்து ஹாஜிகளும் ஜமாஅத்தினரும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டைப் பாராட்டி வட்டார உலமா சபையினருக்கும் ஒப்பிலான் ஜமாஅத்தினருக்கும் நன்றி செலுத்தி விடை பெற்றுக்கொண்டனர்.அல்ஹம்து லில்லாஹ்!

23 டிசம்பர், 2011

ஹாஜிகளுக்கு வரவேற்பும் பாராட்டு விழாவும்




இன்ஷா அல்லாஹ் வரும் 27-12-2011 செவ்வாய் காலை 9.30 மணியிலிருந்து பகல் 1-00 மணி வரை 



நமது ஒப்பிலான் தரீக்குல் ஜன்னா ஜும்ஆ பள்ளியில்
கடலாடி வட்டாரத்திலுள்ள ஊர்களிலிருந்து இவ்வருடம் ஹஜ்ஜுக்கு சென்ற சுமார் 20 புனித ஹாஜிகளுக்கு வரவேற்பும் பாராட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.


விழாவுக்கான ஏற்பாடுகளை கடலாடி வட்டார உலமா சபையினரும் ஒப்பிலான் ஜமாத்தினரும் தீவிரமாக செய்து வருகின்றனர். விழா சிறக்கவும் இனி வரும் காலங்களில் இதைவிட அதிகமான நபர்கள் ஹஜ்ஜுக்கு செல்லவும் தாங்கள் அனைவரும் துஆ செய்யுமாறு வேண்டுகிறோம்.

09 டிசம்பர், 2011

ஹாஜிகள் நலமுடன் நாடு திரும்பினர்

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் ஒப்பிலானிலிருந்து(oppilan) இந்த ஆண்டு அல்லாஹ்வின் அருளால் எட்டு 8 தனவந்தர்கள் ஹஜ்ஜுக்கு சென்றனர். அவர்கள் தங்கள் ஹஜ்ஜை நிறைவு செய்து தற்பொழுது டிசம்பர் 2011 இரண்டாம் வாரத்தில் அனைவரும் தாயகம் திரும்பினர். அல்ஹம்து லில்லாஹ்!
  • அவர்களுக்கு ஒப்பிலான் ஜமாத் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒப்பிலான் பேருந்து நிலையத்திலிருந்து தல்பியா ஊர்வலம் புறப்பட்டு ஜும்ஆ பள்ளியை வந்தடைந்தது.
  • அங்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் ஒப்பிலான் ஜும்ஆ பள்ளியின் துணைஇமாம் அல்ஹாஃபிழ் புரோஸ்கான் அவர்கள் இனிய கிராஅத் (இறைமறை) ஓதி துவங்கி வைக்க,
  • ஒப்பிலான் ஜமாத் தலைவர் ஜனாப் A.அப்துர் ரஹ்மான் அவர்கள் ஹாஜிகளை வரவேற்று உரை நிகழ்த்தி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். 
  • அதன் பிறகு ஒப்பிலான் ஜும்ஆ பள்ளியின் தலைமை இமாம் அல்ஹாஃபிழ் மவ்லவி A.சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஸில் தேவ்பந்தீ அவர்கள் வாழ்த்துரை வழங்கி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
  • அல்ஹாஜ் M. இப்றாஹிம்ஸா அவர்கள் அனைத்து ஹாஜிகள் சார்பாக ஏற்புரை நிகழ்த்தினார்.

அவரது ஐந்து நிமிட இரத்தினச் சுருக்கமான ஏற்புரையில் எல்லோரையும் நெஞ்சம் நெகிழச் செய்தார். தன் பயண அனுபவத்தை சுவைபட சொல்லி முடித்தபொழுது அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன.
''இனி வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாக ஒப்பிலான் மக்கள் ஹஜ்ஜுக்கு செல்லவேண்டும் என்றும் இளமையிலேயே செல்வதுதான் ஏற்றம்'' என்றும் இனிமையான பல தகவல்களைத் தந்தார்.
அதன்பிறகு மக்கள் ஹாஜிகளுக்கு கை கொடுத்து ஆரத்தழுவி பாசத்தை பகிர்ந்துகொண்டனர்; பின்பு பள்ளியிலிருந்து ஹாஜிகளின் இல்லம் வரை அழைத்துச் சென்று விடைபெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
ஜமாத்தின் உதவித் தலைவர் ஜனாப் M.S.ஷாகுல் ஹமீது
பொருளாளர் ஜனாப் முஹம்மது ஃபாரூக்
செயலாளர் ஜனாப் ஃபக்ருதீன் ஆகியோர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
இந்த வருடம் எட்டு பேர் ஹஜ்ஜுக்கு சென்றது ஒப்பிலான் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். அல்ஹம்துலில்லாஹ் !