வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 செப்டம்பர், 2025

இழந்தவனுக்கும் மாளிகை ! அடைந்தவனுக்கும் மாளிகை!!

 வறுமை வந்தால் வாடாதே! வசதி வந்தால் ஆடாதே !!


حكاية: قال في العقائق أيضا: 

أن ملكين نزلا من السماء أحدهما بالمشرق والآخر بالمغرب ثم رجعا إلى آخر النهار 

فالتقيا في السماء فقال أحدهما لصاحبه أين كنت قال في المشرق أرسلي ربي إلى كنز رجل فخسف به الأرض 

فقال الآخر وأنا أرسلني ربي بأمر عجيب أمرني أن اخرج الكنز من قرار الأرض وأجعله بدار رجل فقير بالمغرب ليس له درهم ولا دينار 

فسمعهما رضوان خازن الجنة قال قصتي أعجب من ذلك إن الله تعالى أمرني أن أذهب إلى دار ذلك الفقير الذي صار الكنز في داره وأعد الكنز كم درهم وكم دينار ثم أمرني أن أبني قصورا في الجنة بعدد كل درهم ودينار لصاحب الكنز والفقير 


فقال الملكان ربنا أطلعنا على هذه الكرامة التي كرمت بها صاحب الكنز والفقير 

فقال الله تعالى لما خسف الكنز قال صاحبه الحمد لله الذي جعلني راضيا بقدره وأما الفقير فلم يفرح بالكنز بل قال إن في خزانته ما لا يحوجني إلى غيره



இரண்டு வானவர்கள் வானத்திலிருந்து இறங்கினர், ஒருவர் கிழக்கிலும் மற்றவர் மேற்கிலும். பின்னர் அவர்கள் நாள் முடிவில் திரும்பினர். அவர்கள் வானத்தில் சந்தித்தனர். அவர்களில் ஒருவர் தனது தோழரிடம், "நீ எங்கே இருந்தாய்?" என்று கேட்டார், அவர், "கிழக்கில், ஒரு மனிதனின் புதையலை நோக்கி என்னை இறைவன் அனுப்பினான். பூமி அந்தப் புதையலை விழுங்கியது. 


மற்றவர், "என் இறைவன் என்னை ஒரு அற்புதமான கட்டளையுடன் அனுப்பினான். பூமியின் ஆழத்திலிருந்து புதையலைப் பிரித்தெடுத்து, மேற்கில் ஒரு திர்ஹமோ அல்லது ஒரு தினார் கூட இல்லாத ஒரு ஏழையின் வீட்டில் அந்தப் புதையலை வைக்க கட்டளையிட்டான்” என்றார். 


சொர்க்கத்தின் பாதுகாவலரான ரிள்வான் அவற்றைக் கேட்டு, "என் கதை அதை விட அற்புதமானது. மிக உயர்ந்த அல்லாஹ், புதையல் யாருடைய வீட்டில் இருக்கிறதோ அந்த ஏழையின் வீட்டிற்குச் செல்லும்படி எனக்குக் கட்டளையிட்டான். நான் புதையலை எண்ணினேன், அதில் எத்தனை திர்ஹம்கள் மற்றும் எத்தனை தினார்கள் உள்ளன. 

பின்னர் அந்த எண்ணிக்கைக்கு சமமான மாளிகைகளை  சொர்க்கத்தில் புதையலின் உரிமையாளருக்கும் ஏழைக்கும் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்." 


இரண்டு வானவர்களும் ஆச்சரியத்தில், "எங்கள் இறைவா, புதையலின் உரிமையாளருக்கும் ஏழைக்கும் நீர் அளித்த இந்த அற்புதத்தை  எங்களுக்கு விளக்கு" என்று கூறினர். 


அல்லாஹ் கூறினான்: "புதையல் விழுங்கப்பட்டபோது, ​​அதன் உரிமையாளர் என்னைப் பழிக்கவில்லை, 'தன் விதி குறித்து என்னைத் திருப்தி கொள்ள வைத்த  அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' என்று கூறினார். 

ஏழை மனிதனைப் பொறுத்தவரை, அவர் திடீரென புதையல் வந்ததால்  ஆனந்த கூத்தாடவில்லை; மாறாக, இதுவரைக்கும் அவனல்லாத வேறு யாரிடத்திலும் என்னை தேவையாகாமல் வைத்திருக்கிறானே அதுவே அவனது பெரிய கருவூலம் தான் என்று எனக்கு நன்றி சொன்னார். 


—--


எனவே இருவருக்கும் மறுமையில் சொர்க்கத்தில் அந்த தீனார் திர்ஹம் எத்தனையோ அத்தனை அளவுக்கு வசந்த மாளிகை ! 


04 ஜனவரி, 2016

குகையிலிருந்து மீண்ட மூவர்!


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் (சென்ற காலத்தில்) இருந்தவர்களில் மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, (திடீரென) மழை பிடித்தது. எனவே, அவர்கள் ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். உடனே, அந்தக் குகை (வாசலை மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை மூடி) அவர்களை அடைத்தது. அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நம்மை (நம்முடைய) வாய்மையான செயல் தான் காப்பாற்ற முடியும். எனவே, நம்மில் ஒவ்வொருவரும், தான் வாய்மையுடன் நடந்ததாக நம்புகிற விஷயத்தைக் கொண்டு (அல்லாஹ்விடம்) பிரார்த்திக்கட்டும்" என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

நன்றி மறவாதீர்!




தொழுநோயாளி, குருடர், வழுக்கைத் தலையர் ஆகியோர் தொடர்பான நிகழ்ச்சி.
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். 

அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான்.

08 டிசம்பர், 2013

அல்ஹம்து லில்லாஹ் ஒரு வரலாற்றுப் பார்வை (தஃப்ஸீர் வகுப்பு)




மூழ்கவே வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட டைட்டானிக் கப்பல் மூழ்கியது எப்படி?
உலகில் மறைக்கப்பட்ட இடங்கள் என்னென்ன?
துல்கர்னைன் (அலை) கட்டிய தடுப்புச் சுவரின் வரலாறு ..
இன்னும் பல அறிய தகவல்கள்...
கேளுங்க.. கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க!




12 ஆகஸ்ட், 2013

முதன்முதலாக..!



1.   முதன் முதலாக தோன்றிய மனிதர் யார்?
ஹழ்ரத் ஆதம்  அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்

2.   முதன் முதலாக பாங்கு சொன்ன நபித்தோழர் யார்?
ஹழ்ரத் பிலால்; ரலியல்லாஹு அன்ஹு அவர்களாகும்

3.   முதன் முதலாக தோன்றிய இறை இல்லம் எது?
புனித கஃபதுல்லாவாகும்

4.   முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்ற ஆண் யார்?
ஹழ்ரத் ஆபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களாகும்

5.   முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்ற பெண்மணி யார்?
ஹழ்ரத் கதீஜா ரலியல்லாஹூஅன்ஹா அவர்களாகும்

6.   முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்ற சிறுவர் யார்?
ஹழ்ரத் அலி ரலியல்லாஹீ அன்ஹீ ஆகும்.

7.   முதன்முதலாக இஸ்லாத்தை ஏற்ற அடிமை யார்?
ஹழ்ரத் ஸைத் ரலியல்லாஹூ அன்ஹூ ஆகும்.

8.   முதன் முதலாக இஸ்லாத்திலே ஷஹுதான பெண் யார்?
ஹழ்ரத் சுமையா ரலியல்லாஹு அன்ஹு அவர்களாகும்

9.   முதன் முதலாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்த பெண் யார்?
ஹழ்ரத் அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களாகும்.

10.  முதன் முதலாக காற்றடித்து சாய்ந்த மரம் எது?
நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் கப்பல் செய்ய பயன்படுத்திய மரமான அஷ்ஷாஜ் ஆகும்.
முதன் முதலாக வெண்ணிற நரைமுடி யாருக்கு ஏற்பட்டது?
ஹழ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்களுக்காகும்

 முதன் முதலாக  மறுமை நாளில் எழுப்படுப்பவர் யார்?
முஹம்மது நபி (ஸல்)

   முதன்முதலாக மறுமை நாளில் ஆடை அணிவிக்கப்படுபவர்  யார்?
ஹழ்ரத் இப்ராஹீம் (அலை)


   முதன் முதலாக நபி (ஸல்) அவர்களின் கரத்தால் கட்டப்பட்ட பள்ளி எது?
மஸ்ஜிதே குபா

   முதன் முதலாக நபி (ஸல்) அவர்களால் தொழ அவர்களால் வைக்கப்பட்ட ஜனாஸா எது?
ஹழ்ரத் ஆஸத் பின் ஜராரா (ரலி) அவர்களின் ஜனாஸாவாகும்.

முதன்முதலாக தீனுடைய கல்வியை கற்று கொடுப்பதற்காக ஆசிரியராக நபி (ஸல்) அவர்களால் நியமனம் செய்யப்பட்டு அனுப்பப்பட்ட ஸஹாபி யார்?
ஹழ்ரத் முஸ்அப் இப்னு உமைர் (ரலி)

முதன்முதலாக மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த பின் பிறந்த முதல் குழந்தை யார்?
ஹழ்ரத் அப்துல்லாஹ்(ரலி)
இவர்கள் ஹழ்ரத் ஜூபைர் (ரலி) ஹழ்ரத் அஸ்மா (ரலி) இந்த தம்பதிகளின் மகனாவார்.

முதன்முதலாக இஸ்லாத்திற்காக உயிர் துறந்த ஆண் தியாகி யார்?
ஹழ்ரத் அம்மார் பின் யாஸிர் (ரலி)

முதன் முதலாக இஸ்லாத்திற்காக  உயிர்துறந்த பெண் தியாகி யார்?
ஹழ்ரத் சுமைய்யா (ரலி)

முதன் முதலாக நபி(ஸல்) அவர்கள் மதீனா சென்ற பின் யார் வீட்டில் தங்கினார்கள்?
ஹழ்ரத் அபூ அய்யூபுல் அன்ஸாரி (ரலி)

முதன் முதலாக  தொழுகையை தொழுத பெண்மணி யார்?
அன்னை கதீஜா (ரலி) 

முதன் முதலாக கொலை செய்யப்பட்டவர் யார்?
ஹழ்ரத் ஆதம் (அலை) அவர்களின் மகனார் ஹாஃபிலாகும்.

முதன் முதலாக சுவனத்திலே நுழைபவர் யார்?
    ஹழரத் கண்மனி நாயகம் (ஸல்) அவர்களாகும்.

முதன் முதலாக முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்கு பின் மரணமான நபியின் சொந்தக்காரர் யார்?
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அன்பு மகளார் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களாகும் நபி (ஸல்) அவர்கள் இறந்த 6வது மாதத்திலே அன்னை ஃபாத்திமா (ரலி) இறந்தார்கள்

முதன் முதலாக மக்கா வெற்றி பெற்ற பின் நபிகளாரோடு மக்காவிலே நுழைந்த தோழர்கள் யார்? யார்?
உஸாமதிப்னு ஸைத் (ரலி)பிலால் (ரலி)உஸ்மானிப்னு தல்ஹா (ரலி) ஆகியோராகும்.

முதன் முதலாக சுவனவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு எது?
   மீனின் சினைப் பகுதியாகும்.

முதன் முதலாக கப்ரில் கேட்கப்படும் கேள்வி எது?
    தொழுகையைப்பற்றியாகும்.

முதன் முதலாக ஸம்ஸம் நீரை அருந்தியவர் யார்?
    ஆண்களில் ஹழ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்)
    பெண்களில் அன்னை ஹஜிரா (ரலி)

முதன் முதலாக மஸ்ஜிதுன் நபவியான மதினா பள்ளியிலே விளக்கேத்திய ஸஹாபி யார்?
     ஹழ்ரத் தமீமுத் தாரீ (ரலி) அவர்களாகும்.
-----------------------------------------------

16 ஜூன், 2013

இல்லற வாழ்க்கையில் வள்ளுவரும் வாசுகியும்

இல்லறம்
உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அவரது மனைவி வாசுகி தான்.

அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று வினவியதற்கு ''அன்னம்  புறத்து சிதறினால் அதை எடுத்து சுத்தம் செய்து உண்ணவேண்டும். அது விசாலமான இரணத்தை தரும்'' என்றார். 
வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவருக்கும், வள்ளுவருக்கும் துறவறம் பெரிதா, இல்லறம் பெரிதா என்ற பேச்சு எழுந்தது. வள்ளுவர் இல்லறத்தின் பக்கம் நின்றார். அவர்கள் சாப்பிட ஆரம்பித்தனர். வாசுகி அவர்களுக்கு பழைய சாதம் பரிமாறினார். பின், கிணற்றுக்கு தண்ணீர் எடுக்கச் சென்று விட்டார். வள்ளுவர் அவளை திடீரென அழைத்தார். "கிணற்றடியில் நிற்கிறேன், ஏதாச்சும் வேணுமினா போட்டுச் சாப்பிடுங்க' என்று கத்தவில்லை. அப்படியே கயிறை விட்டார். குடம் கிணற்றுக்குள் விழவில்லை. அப்படியே நின்றது. உள்ளே வந்த அம்மையாரிடம், ""இந்த சோறு சுடுகிறது,'' என்றார். அம்மையார் பதிலேதும் பேசாமல், விசிற ஆரம்பித்து விட்டார். பழைய சோறு எங்காவது சுடுமா? இருப்பினும், வாசுகி கணவரைக் கேள்வி ஏதும் கேட்காமல் பணிவிடை செய்தார். துறவி ஆச்சரியப் பட்டார். வள்ளுவர் நெசவுத்தொழில் செய்பவர். தறியின் ஓடத்தை பட்டப்பகல் வேளையில் கீழே போட்டு விட்டு, ""வாசுகி, ஓடம் கீழே விழுந்து விட்டது. விளக்கை எடுத்து வா,'' என்றார். பகலென்றும் பாராமல், கேள்வி கேளாமல் அம்மையார் விளக்கை எடுத்து வந்தார். கணவனின் சொல் கேட்கிற மனைவி மட்டும் கிடைத்து விட்டால், துறவறத்தை விட இல்லறமே மிகச்சிறந்தது என்றாராம் அந்த பெரியவர்.

இத்தகைய அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். ''நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு'' என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தப் புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,
அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு
என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!


15 ஜனவரி, 2013

அகிலம் கண்ட அதிசய பேரொளி


''அரபுப் பாலைவனத்தில் அரிய மாணிக்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது;
அதன் ஒளி அகிலமனைத்தையும் ஆட்கொண்டுள்ளது ''
என்றான் ஆங்கிலக் கவிஞன்.
ஆம் உண்மைதான். ஆதம் அலைஹிஸ் சலாம் மண்ணிற்கும் தண்ணீருக்குமிடையில் இருக்கும்போதே ஒளியாக பிரகாசித்த பெருமானாரின் ஜோதி, பிறப்பின்போதும் காட்சி வழங்கி, வாழ்க்கையில் பல கட்டங்களில் பலருக்கும் பயன் தந்தது. அந்த வரலாற்றை தொடர் கட்டுரையாக காண்போம்.

02 நவம்பர், 2012

ஆது சமுதாயமும் அமெரிக்க அபாயமும்

சாண்டி புயல்-ஆண்டிப் பயல் 
சாண்டி புயல், அமெரிக்காவின் கடற்கரையோர நகரங்களை நிலைகுலையச் செய்துள்ளது. 13 அடி உயரத்துக்கு மேல் எழும்பிய அலைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. 
மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றால்,

26 அக்டோபர், 2012

சோதனையில் சாதனை! இதுவே இப்றாஹீம் நபியின் போதனை!!


தியாகத் திருநாள் வந்துவிட்டது.
இந்த பக்ரீத் பண்டிகையை ஹஜ்ஜுப் பெருநாள் என்றும் தியாகத் திருநாள் என்றும் மக்கள் மகிமையோடு அழைப்பதுண்டு. காரணம் இதில் பிரதான வணக்கமாய் ஹஜ்ஜும் அந்த ஹஜ்ஜுக்கே முன்னோடியாய் நபி இப்றாஹீம் அலை அவர்களும் அவர்களின் குடும்பமும் செய்த தியாகமும் இந்த பெருநாளில் பின்னிப் பிணைந்திருக்கிறது.
ஹஜ்ஜின் அதிகமான கிரியைகளைக் உற்றுநோக்கினால் ஒரு உண்மை புரியும்:

11 ஜூலை, 2012

எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இக்லாஸ்
 (وَمَنْ أَحْسَنُ دِينًا مِمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ) (النساء/ 125
(قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَعْبُدَ اللَّهَ مُخْلِصًا لَهُ الدِّينَ) (الزمر/ 11).
(إِنَّا أَنْزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ فَاعْبُدِ اللَّهَ مُخْلِصًا لَهُ الدِّينَ * ألا لله الدِّينُ الخَالِصُ) (الزمر/ 2-3).
னத்தூய்மைக்கு மார்க்கம் தருகிற மதிப்பை விளங்கிக்கொள்ள ஒரு உதாரணம். பொதுவாக நறுமணத்தை மார்க்கம் விரும்புகிறது. அதை சம்பிரதாயமாக இல்லாமல் ஒரு சுன்னத்தாக ஆக்கிய மார்க்கம் நம் மார்க்கம். அதே சமயம் இதே நறுமணம் செத்த பிணத்தை விட துர்நாற்றமுள்ளதாக மாறிவிடும் எப்பொழுது தெரியுமா?

08 மே, 2012

பாபர் மதவெறியரா?

பாபர்
பாபர்
பாபர் மன்னனின் தளபதியான மீர் பக்கி என்பவர் ராமனின் கோயில் ஒன்றை உடைத்து அது இருந்த இடத்தில் மசூதியைக் கட்டியதாக ஒரு திட்டமிட்ட வதந்தியை தொடர்ந்து பரப்பி அதன் மூலம் வகுப்புவாத வெறியை மக்களிடையே தூண்டிவிட்டு 1992 டிசம்பர் 6- இல் கிட்டத்தட்ட 150,000 இந்துக்களால் இந்திய மேல்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி முற்றாக உடைத்து நொறுக்கப்பட்டது பாபர் மசூதி.(1)

ஆனால் மற்றவர்களின் கோயிலை இடித்து பள்ளிவாசல் எழுப்பும் அளவுக்கு மதவெறி உள்ளவரா பாபர் ? வரலாற்றை நடுநிலையோடு ஆராய்ந்தால் உண்மை புரியும். இதோ பாபரைப் பற்றி வரலாற்று நூல்கள் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம்:
''பாபர் கட்டுப்பாடு மிகுந்தவர்; மதவெறி இல்லாதவர்; இந்துக்களின் கோவில்களைப் பாழ்படுத்தவில்லை. கலைகள் இசை ஓவியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார்.  
பாபர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன் மகன் ஹுமாயூனுக்கு ரகசியமாக ஒரு உயில் எழுதினார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: 
''அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். சஹீருத்தீன் முஹம்மது பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு எழுதிய ரகசிய உயில். என் மகனே! இந்துஸ்தானப் பேரரசில் பல்வேறு மதங்கள் உள்ளன. உள்ளத்தில் இருந்து மதவெறிகளைத் துடைத்து எறிய வேண்டும் என்ற கடமை உமக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சமயத்திற்கும் அவற்றின் கோட்பாடுகளின்படி நியாயம் வழங்கப்பட வேண்டும் குறிப்பாக பசுக்களை கொல்லவேண்டாம். இதன்மூலம் இந்துஸ்தான் மக்களின் உள்ளங்களை வென்று விடலாம். நாட்டுமக்கள் அரசரிடம் பற்றுகொள்வார்கள். அரச ஆதிக்கத்தில் உள்ள கோவில்கள் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றின் தூய்மையை பாதுகாக்கவேண்டும் குடிமக்களின் மீது அரசனும் அரசன் மீது குடிமக்களும் அன்பு கொள்ளும் வகையில் நீதி வழங்கப் படவேண்டும். மக்களை வாள்முனையில் வழிக்கு கொண்டு வருவதைவிட கடமை உணர்ச்சியை ஆயுதமாகக் கொண்டு இஸ்லாத்தை மேன்படுத்துவது சாலச் சிறந்ததாகும் இவ்வாறு பாபர் தன் உயிலில் கூறியுள்ளார். 
ஆதாரம்: ''உலக வரலாறு'' (ஐ.சண்முகநாதன், மாலதிபாலன், ஸ்வர்ணலதா வேல்முருகன் உள்ளிட்டோர் எழுதிய வரலாற்று நூல்) பக்கம் 147,148.

அதுமட்டுமல்ல..  இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.

கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?



இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும்ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.  
-----------------------------------------------------------------------------------------

(1)மேலும் தகவலுக்கு பார்க்க:
 பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணை இன்று
 பிபிசி செய்தி
 பாப்ரி மசூதி இடிப்பு 10 மாதங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டது

    சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! அல்லது கீழ்காணும் தளங்களில் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே!

    25 மார்ச், 2012

    மண்ணின் மைந்தனே..




    மண்ணின் மைந்தனே மண்ணின் மைந்தனே மறவாதே!
    நீ செய்த சரித்திர சாதனை தன்னை மறவாதே!
    தியாகத்தின் பரம்பரையே! தூய வீரத்தின் விளை நிலமே!
    நாம் சிந்திய ரத்தத்தில் தியாகத்தில் வந்தது இந்திய சுதந்திரமே..
    தாய்நாட்டின் விடுதலையே.. நம் நாட்டின் விடுதலையே!
                                                   (மண்ணின் மைந்தனே)
    ஜாலியன்வாலா படுகொலை

    ஜாலியன்வாலா படுகொலை சோகக் காட்சிகளே
    அந்த மஸ்ஜிது கூனெனும் பள்ளியின் ரத்த சாட்சிகளே
    பூட்டிய ரயிலில் திணறிய மூச்சுக் காற்றுகளே
    அங்கு சிதைந்து விழுந்த கேரள முஸ்லிம் சடலங்களே
    சிப்பாய் கலகத்தில் வீரம் சொறிந்த சிங்கங்களே
    அங்கு சீரிய தோட்டா சுமந்து மடிந்த நெஞ்சங்களே
    ஆங்கில தர்பார் நடுங்கிடச் செய்த வீரர்களே
    என்றும் மறக்க முடியா நாட்டின் சொக்கத் தங்கங்களே!
    )                            தியாகத்தின் பரம்பரையே(
    திப்பு சுல்தான்
    திப்பு சுல்தானின் வீரமரணத் துணிவுகளே
    வங்கத்து வேங்கை சிராஜுத் தவ்லா எழுச்சிகளே
    சிறையின் சிங்கம் பகதூர்ஷாவின் உணர்வுகளே
    யூசுஃப்கானெனும் மருதநாயகத்து மறவர்களே
    எண்ணிலடங்கா தியாகச் சுடர்களின் வெளிச்சங்களே
    தன்னலம் மறந்து மண்ணகம் காத்த உண்மைகளே
    தேசியக் கொடியின் பச்சை நிறத்து சின்னங்களே
    ''ஹுப்புல் வதனி மினல் ஈமான்'' எனும் உணர்வுகளே
                                  ( தியாகத்தின் பரம்பரையே)

    சுதந்திரப் போரில் முன்னிலை வகித்த சமுதாயம்
    அதில் அரை நூற்றாண்டுகள் கல்வியை இழந்த சமுதாயம்
    எண்ணூறு ஆண்டுகள் நாட்டை ஆண்ட சமுதாயம்
    இன்று உரிமை இழந்து போராடுகின்ற சமுதாயம்
    உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழந்த சமுதாயம்
    என்றும் நாட்டுக்காகவே உழைத்து நிற்கும் சமுதாயம்
                                 ( தியாகத்தின் பரம்பரையே