கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 மார்ச், 2026

முயற்சியும் பிரார்த்தனையும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம்

இந்த காணொளி பீகாரில் ஒரு மசூதி இமாமின் மகள் (ஹபீபா புகாரி) அரசு நீதிபதியாக (Judge) உயர்ந்து சாதனை படைத்ததை முன்வைத்து இந்த வீடியோ பேசுகிறது. அந்தப் பெண் தனது வெற்றிக்கான காரணங்களாகக் குறிப்பிட்டவை:

 * தடைகளைத் தாண்டிய வெற்றி: லஞ்சம் (No Bribe), சிபாரிசு (No Recommendation) மற்றும் அதிக பணம் எதுவுமே இல்லாமல், ஒரு சாதாரண இமாமின் மகளாக இருந்து இந்த உயரிய பதவியை அவர் அடைந்துள்ளார் [01:05].

 * தந்தையின் நேர்மை: அவரது தந்தை ஒரு இமாமாக மிகக் குறைந்த வருமானம் கொண்டவராக இருந்தாலும், யாரிடமும் கையேந்தாத கௌரவமான மற்றும் பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்தவர் [01:53].

 * வெற்றியின் ரகசியம் (தஹஜ்ஜுத்): அந்தப் பெண் தனது வெற்றிக்கான மிக முக்கிய ரகசியமாகத் தெரிவிப்பது தஹஜ்ஜுத் தொழுகை மற்றும் பிரார்த்தனை. அவரோடு சேர்ந்து அவரது ஒட்டுமொத்த குடும்பமும் தஹஜ்ஜுத் நேரத்தில் அவருக்காக இறைவனிடம் கண்ணீர் மல்க துவா செய்துள்ளனர் [02:44].

 * முயற்சியும் இறை அருளும்: 
கடுமையான உழைப்பும் படிப்பும் அவசியம், ஆனால் அதையும் தாண்டி இறைவனின் கிருபை இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். இறைவனிடம் கேட்டால் இந்த உலகில் வெல்ல முடியாதது எதுவுமே இல்லை [03:07].

 * தொடர் பிரார்த்தனை: ரமலான் மாதத்தில் மட்டும் தஹஜ்ஜுத் தொழாமல், வாழ்நாள் முழுவதும் அந்தத் தொழுகையை ஒரு வைராக்கியமாகப் பற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய லட்சியங்களை அந்த நேரத்தில் இறைவனிடம் முன்வைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் [03:28].


Perseverance, Integrity, and Unceasing Prayer lead to Success.

27 மார்ச், 2026

தணியாத கல்வித் தாகம்

ஒரே வகுப்பில் 40 ஆயிரம் பேர் திரண்ட வரலாறு 

عن أبي حاتم الرازي الامام أحد أركان الحديث قال حضرت مجلس سليمان بن حرب رحمه الله ببغداد فحزروا من حضر مجلسه أربعين ألف رجل وكان مجلسه عند قصر المأمون فبنى له منبر وصعد سليمان وكان المأمون فوق قصره وقد فتح باب القصر وقد أرسل سترا وهو خلفه يكتب ما يملي سليمان فسئل عن أول شيء حدثت حوشب بن عقيل فلعله قد قال حدثنا حوشب بن عقيل اكثر من عشر مرار وهم يقولون لا تسمع حتى قالوا ليس الرأي إلا أن يحضر المستملي فذهب جماعة فأحضروه فلما حضر قال من ذكرت فإذا صوته خلاف الرعد فسكتوا وقعد المستملون كلهم وإستملى هارون قال أبو حاتم لا يسأل عن حديث الاحدث من سمعه.

ஹதீஸ் கலை மேதை அபூ ஹாதிம் அர்-ராஸி அவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை விவரிக்கிறார்கள்:

பக்தாத் நகரில் மாபெரும் ஹதீஸ் அறிஞர் சுலைமான் பின் ஹர்ப் அவர்களின் கல்வி சபையில் நான் கலந்து கொண்டேன். அந்த சபையில் சுமார் 40,000 மக்கள் திரண்டிருந்தார்கள். கலீஃபா மாமூன் தனது அரண்மனைக்கு அருகே இந்த சபைக்காக ஒரு மேடையை (Minbar) அமைத்துக் கொடுத்தார்.

அதிசயம் என்னவென்றால், அந்த காலத்து ஆட்சியாளரான கலீஃபா மாமூன், தனது அரண்மனையின் திரைக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு, சுலைமான் பின் ஹர்ப் அவர்கள் சொல்லிக் கொடுக்கும் ஹதீஸ்களைத் தனது கையால் எழுதிக் கொண்டிருந்தார்.

மக்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், சுலைமான் அவர்கள் தனது ஆசிரியரின் பெயரை (ஹவ்ஷப் பின் அகீல்) பத்து முறைக்கும் மேலாகக் கூறியும் யாருக்கும் கேட்கவில்லை. இறுதியில், உரத்த குரலில் பேசக்கூடிய "முஸ்தம்லி" - செய்தியை உரக்கச் சொல்பவர் ஒருவரை அழைத்து வந்தார்கள்.

அவர் பெயர் ஹாரூன். அவரது குரல் இடி முழக்கத்தைப் போல அதிரக் கூடியதாக இருந்தது. அவர் பேசத் தொடங்கியதும் மக்கள் அமைதியானார்கள். அந்த சபையில் ஹாரூன் என்பவர் செய்திகளை உரக்கச் சொல்ல, பாடம் இனிதே நடைபெற்றது.


10,000 (பத்தாயிரம்) பேர் கலந்து கொண்ட ஹதீஸ் வகுப்பு 

وذكر أبو سعيد السمعاني أنه كان يحضر مجلس املاء الامام القاضي أبو عبد الله المحاملي عشرة آلاف رجل

வரலாற்று ஆய்வாளர் அபூ ஸயீத் அஸ்-ஸம்ஆனி (ரஹ்) அவர்கள் ஒரு வியக்கத்தக்க தகவலைக் குறிப்பிடுகிறார்கள்:

மகா மேதையான இமாம் காழி அபூ அப்துல்லாஹ் அல்-முஹாமிலி அவர்களின் ஹதீஸ் பாடச் சபையில் சுமார் பத்தாயிரம் (10,000) மக்கள் கலந்துகொள்வார்கள்.

பக்தாத் நகரின் தலைமை நீதிபதியாகவும் (Qadi), ஹதீஸ் துறை அறிஞராகவும் திகழ்ந்த இமாம் முஹாமிலி  அவர்களின் சபையில், மக்கள் திரண்டு வந்து அவர் சொல்லிக் கொடுக்கும் ஹதீஸ்களைக் கேட்டுத் தங்கள் குறிப்பேடுகளில் பதிவு செய்வார்கள். இது அக்கால மக்கள் கல்விக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும், அறிஞர்களுக்கு அவர்கள் வழங்கிய கௌரவத்தையும் காட்டுகிறது.




15 ஜனவரி, 2013

குழந்தைகளுக்கான பாடங்கள் அரபி-ஆங்கிலம்

السلام عليكم  أخي ! كيف حالك؟ ان شاء الله بخير -- هنا في قسم الأطفال في موقع السنة،  نلتقي معكم لنتعلم عن أمور عديدة منها: تعلم معنا اللغة العربية، تعلم عن  التاريخ الإسلامي، استمع للمدائح والأناشيد الإسلامية الجميلة، استمع  لتلاوة من القرءان الكريم، تعلم كيف نتوضأ ونصلي، تعلم عن عقيدة المسلمين،  واقرأ قصص عجيبة حقيقية فيها العبر..السلام عليكم  أختي، كيف حالكِ؟ ان شاء الله بخير -- Here, in the kids page of  alsunna.org site, we meet with you to learn about many things like:  learn how to read and write in arabic, learn about Islamic History,  listen to Islamic Madih, listen to al-Quran, learn how to make wudu' and  pray, learn about the Muslim belief, and read about amazing true  stories..
இஸ்லாமியக் குழந்தைகளுக்கு மக்தப் மதரஸாக்களில் கற்றுக் கொடுக்கும் வகையில் ஏராளமான நல்லொழுக்கங்களும் பாடல்களும் செயல்முறை விளக்கங்களும் துஆக்களும் கீழ்கண்ட இணைப்புகளில் சென்று காணலாம்.





Zikr Words of Protection (Tahseen Du^aa)914

Islamic Presentations - عروض اسلامية10125

Test - The First Shahadah604

Islamic Rap: Droppin' facts621

Selecting the Right Friend856

Audio - How to Teach Your kids about Islam-

Quran Last 10 Chapters - ءاخر عشر سور من القرآن-

Flash الأربعين النووية..أحاديث نبوية للإمام النووي الأشعري..-

Did you know al-Fatihah has 14 doubled letters?1038

Adhan & Iqamah الأذان والإقامة1326

الصلوات المفروضة وأوقاتها1890

كيفية الاستنجاء والوضوء للصلاة3785

تعليم فقه الطهارة للأطفال2750

الثواب والعقاب ونعيم الآخرة1528

دروس في العقيدة للأطفال2237

الأحبة والأصدقاء والتحابب في الله1060

السرقة والأمانة1021

الصدق والكذب850

الغيبة والبهتان1080

تعليم الأطفال عن معصية الرياء851
 


25 ஏப்ரல், 2012

கோடைகால தீனியாத் பயிற்சி வகுப்பு





இராமநாதபுரம் நகர

& வட்டார செயலாளர்


இராமநாதபுரம் நகர ஜமாத்துல் உலமா சபை சார்பாக நகரின் மூன்று இடங்களில் கோடைகால தீனியாத் பயிற்சி வகுப்பு இன்று

25-04-2012 துவங்கப்பட்டது. அதில் கலந்து பயிற்சி பெற நகரின் அனைத்து மாணவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.


வகுப்பு நடைபெறும் இடங்கள்

  • பாசிப்பட்டரை ஜும்ஆ பள்ளிவாசல். சின்னக்கடை,இராமநாதபுரம்
  • வெற்றிலைக்காரத் தெரு மதரசா சிகில் ராஜவீதி, இராமநாதபுரம்
  • அபூபக்கர் சித்தீக் பள்ளிவாசல் ஓம் சக்தி நகர், இராமநாதபுரம்

10 பிப்ரவரி, 2012

தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ






தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ
உன்னுடைய தகுதியை இன்னும் கொஞ்சம் உயர்த்திக்கோ
கல்வியை கண்ணாக்கி காட்டிய இஸ்லாத்தில்
கண்மணி நீ அல்லவா! காரணம் நான் சொல்லவா!.........

பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,

21 நவம்பர், 2011

மஹிஸா : கல்வியே !


தொட்டில் முதல் மரணக் கட்டில் வரை
பிறப்பு முதல் இறப்பு வரை
தொடர்ந்து மனிதன் கட்டாயம் பெறவேண்டிய ஒன்று கல்வி.


கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
சீனா தேசம் சென்றேனும் சீரான கல்வியைத் தேடுங்கள்
முதல் வஹீ இக்ரஃ ஓது படி என்பதுதான்

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனுமிலர்

அறிவு கொடுக்கப்பட்டவர் அதிகமான நலவுகள் கொடுக்கப்பட்டவராவார்
             (அல் குர்ஆன்)

யூசுப் அலை அவர்களை (கனவு விளக்க)அறிவுதான்
சிறையிலிருந்து விடுதலையாக்கியது;எகிப்தின் ஆட்சிக்
கட்டிலில் அமர்த்தியது


(இன்னும் பல.......)



இது தொடர்பான மற்ற பதிவுகள்:

11 செப்டம்பர், 2011

ஜமிலத்: கல்வியே


கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
கல்லாதவருக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு

இந்த செருப்பு வாங்கத்தான் உதவும் உங்க செல்வம்;
சிறப்பு வேணும்னா அதுக்கு கல்வி வேணும்..புரியுதா?

வானளாவக் கோட்டைக் கட்டியவர்களெல்லாம் இன்று
மண்ணுக்குள்ளே மாண்டு விட்டனர்.அவர்கள்
உரம் போட்டு வளர்த்த உடலெல்லாம் உக்கி மக்கி
ஊணாகி வீனாகிவிட்டன.
இதுதான் துன்யா! இதுதான் செல்வம்!

மற்ற செல்வம் அழியக்கூடியது;
கல்வி பெருகக் கூடியது.

'அதோ போராரே அவரு 5 வருஷத்துக்கு முன்னாடி10 லட்சம் வச்சிருந்தாரு எல்லாம் செலவாகி இப்பநம்மகிட்ட வந்து டீ குடிக்க 10 ரூபா இருக்கான்னு
கேக்கறாரு' என்று சொல்வதுண்டு.

ஆனால் இப்படிச் சொல்லக் கேட்டதுண்டா:
'அதோ போராரே அவரு 5 வருஷத்துக்கு முன்னாடிM,A பட்டதாரியா இருந்தாரு;எல்லாம் செலவாகி இப்பஎட்டாம் வகுப்புக்கு எறங்கி வந்துட்டாரு.
கல்வி எவ்வளவு செலவழித்தாலும் பெருகிக் கொண்டே இருக்கும்.
அதைத்தான் திருவள்ளுவர் அழகாக சொன்னார்:
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு
மாடல்ல மற்றயவை .
செல்வத்திற்கு உயர்வே கல்வியை வைத்துத்தான் .
ஃப்ராங்க்ளின் என்ற அறிஞன் சொன்னான்:
'' செல்வம் அது கல்விக்காக செலவழிக்கப் படுமானால் நல்ல பலனைத் தரும் ''
(இன்னும் பல தகவல்கள்.... வீடியோவைப் பார்க்க.! )