08 பிப்ரவரி, 2023

மருத்துவர்கள் கைவிட்ட நோயாளி குணமாக திருக்குர்ஆன் மருத்துவம்

டாக்டர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு நிவாரணம் கிடைக்க...

ஒருவருக்கு எந்த மருந்தும் பலனளிக்க வில்லை, அல்லது என்ன நோய் என்று டாக்டர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை,

அல்லது நோயாளி அபாய கட்டத்திற்கு சென்று விட்டார். டாக்டர் கைவிட்டு விட்டார்.

இது போன்ற நேரங்களில் கீழ் காணும் முறையில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து மனமுருகி துஆ செய்யுங்கள். அல்லாஹ் குணமளிப்பதை நேரில் காண்பீர்கள்.

ஃபஜ்ரு தொழுகையின் முன் ஸுன்னத் மற்றும் ஃபர்ளு தொழுகைக்கு இடைப்பட்ட நேரத்தில்

☀️ 11 தடவைகள் ஸலவாத்

☀️ ஸூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து ஸூராவை) பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம் உடன் சேர்த்து

இப்படி

.........بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீ மில்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்

கடைசி வரை 41 தடவைகள்

☀️ 11 தடவைகள் ஸலவாத்

ஓதி தண்ணீரில் ஊதி குடிக்க கொடுங்கள் அத்துடன் பூரண குணம் அடைய துஆ செய்யுங்கள்.

இதை தொடர்ந்து 40 நாட்கள் செய்ய வேண்டும்.

இதை ஒருவருக்கு ஓதச் சொல்லி அவர் அதை ஓதி எல்லோரும் வியக்கும் வகையில் அவரது முற்றிலும் இழந்து விட்ட கண் பார்வை மீண்டு வந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

குழந்தை பாக்கியம் கிடைக்க .. கருத்தரிக்க.. திருக்குர்ஆன் மருத்துவம்

 குழந்தைச் செல்வம் கிடைக்க

தினமும் இஷா தொழுகைக்கு பிறகு முன் பின் மூன்று தடவை ஸலவாத்துடன் கீழ் காணும் திருக்குர்ஆனின் ஆயத்தை 300 தடவைகள் ஓதி துஆ செய்து வாருங்கள்.

 எத்தனை ஆண்டுகள் ஆகி இருப்பினும் இன்ஷாஅல்லாஹ் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குழந்தை பிறக்கும் வரை தொடர்ந்து இந்த அமலை செய்ய வேண்டும்.

وَلِلَّـهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا يَخْلُقُ مَا يَشَاءُ وَاللَّـهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

வலில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ழி வமா பைனஹுமா யக்லுகு மா யஷா வல்லாஹு அலா குல்லி ஷையின் கதீர். (300 தடவை)


சுகப் பிரசவம் இலகுவாக திருக்குர்ஆன் மருத்துவம்

சுகப் பிரசவம் இலகுவாக வேண்டும் என்று விரும்பாத பெண்கள் இல்லை.

ஆனால் டாக்டர்கள் பல்வேறு காரணங்களை கூறி அறுவை சி‌கி‌ச்சை செ‌ய்து விடுகிறார்கள்.

சுகப் பிரசவம் இலகுவாக கீழ் காணும் திருக்குர்ஆனின் ஆயத்தை ஓதி வாருங்கள்.

பிரசவத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பிருந்து குழந்தை பிறக்கும் வரை தொடர்ந்து இந்த ஆயத்தை கர்ப்பிணி பெண்களுக்கு ஓதச் சொல்லுங்கள்.


ثُمَّ السبيل يَسَّرَهُ

ஸும்மஸ் ஸபீல யஸ்ஸரஹ்

ஆண் பெண் தவறான தொடர்புகளை முறிக்க - திருக்குர்ஆன் மருத்துவம்

 
கணவன் அல்லது மனைவிக்கு தவறான தொடர்பு ஏற்பட்டு விட்டால் அல்லது ஆண் பெண் பிள்ளைகள் தவறான தொடர்பில் சிக்கிக் கொண்டால் 

ஏதாவது ஒரு ஃபர்ளு தொழுகைக்கு பிறகு கீழ் காணும் அமலை 11 நாட்கள் செய்யுங்கள். 

முதல் நாள் எந்த தொழுகைக்கு பிறகு செய்வீர்களோ 11 நாட்களும் அதே தொழுகைக்கு பிறகு செய்ய வேண்டும் 

🔻 தொழுகையில் ஓதப்படும் ஸலவாத் 11 தடவை
🔻 கீழ் காணும் ஆயத் 141 தடவைகள்

*قُل لَّا يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ  فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

குல்  லா   யஸ்தவில் கபீஸு   வத்தய்யிபு  வ   லவ்  அஃஜபக கஸ்ரதுல்   கபீஸி
ஃபத்தகுல்லாஹ  யா  உலில்  அல்பாபி   லஅல்லகும்   துஃப்லிஹூன்

🔻 தொழுகையில் ஓதப்படும் ஸலவாத் 11 தடவை

ஓதி இனிப்பு சேர்க்காத உணவுப் பொருளில் ஊதி முடிந்தால் இருவருக்கும் அல்லது இருவரில் யாருக்கு கொடுக்க முடியுமோ அவருக்கு கொடுங்கள். 

இதயம் சார்ந்த நோய்களுக்கு - திருக்குர்ஆன் மருத்துவம்

இதயம் சார்ந்த நோய்களுக்கு
மிக அற்புதமான துஆ


ஒவ்வொரு ஃபர்ளு தொழுகைக்கு பிறகும்

ஸலவாத் 3 தடவை

يَا   قَوِيُّ   الْقَادِرُ   الْمُقْتَدِرُ   يَا   قَوِيُّ

யா    கவிய்யுல்    காதிருல் முக்ததிரு    யா    கவிய்யு - 7 தடவை

 ஸலவாத் 3 தடவை

ஓதி வலது கையில் ஊதி இருதயத்தின் மீது தடவிக் கொள்ளவும். 

பிள்ளைகளின் கல்வித் திறன் மேம்பட - திருக்குர்ஆன் மருத்துவம்


ஃபஜ்ரு தொழுகைக்கு பிறகு 
🔺 ஸலவாத் 11 தடவை

🔺  وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ  وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا
வ  அல்லமக   மாலம் தகுன்   தஃலம்   வ   கான    ஃபஜ்லுல்லாஹி அலைக   அழீமா  - 121 தடவைகள்
🔺 ஸலவாத் 11 தடவை

ஓதி தண்ணீரில் ஊதி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இதை தொடர்ந்து 40 நாட்கள் வரை ஓத வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் கல்வித் திறன் மேம்படும்.

பெண் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமைய - திருக்குர்ஆன் மருத்துவம்

தினமும் இஷா தொழுகைக்கு பிறகு
இரண்டு ரகஅத் தொழுது கீழ் காணும் முறையில் துஆ செய்யுங்கள். 

  • ஸலவாத் 11 தடவை

أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ  أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ  قَلِيلًا مَّا تَذَكَّرُونَ

  •      அம்மய்  யூஜீபுல் முழ்தர்ர   இதா தஆஹு  வ   யக்ஷிஃபுஸ்   ஸூஅ வ யஜ்அலுகும்   குலஃபாஅல்   அர்ழி  அஇலாஹும்   மஅல்லா   கலீலம்   மா   தஜக்கரூன் - 100 தடவை
  • ஸலவாத் 11 தடவை
ஓதி நல்ல வரன் அமைய அழுது துஆ செய்யுங்கள். 
இதை 40 நாட்கள் நாள் தவறாமல் தொடர்ந்து செய்ய வேண்டும். 

மது மற்றும் போதை பழக்கத்திலிருந்து விடுபட


மது குடித்தல், போதை பொருட்களை பயன் படுத்துதல் போன்ற வற்றிலிருந்து விடுபட 

தினமும் ஏதாவது ஒரு ஃபர்ளு தொழுகைக்கு பிறகு 
👉🏿ஸலவாத்   7 தடவை 

وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ

வ அஹ்தியக இலா ரப்பிக ஃபதக் ஷா - 101 தடவை 
👉🏿  ஸலவாத் 7 தடவை 

ஓதி தண்ணீரில் ஊதி சம்பந்தப்பட்ட நபருக்கு குடிக்க கொடுங்கள். 
இதை தொடர்ந்து 41 நாட்களுக்கு செய்ய வேண்டும். 

கர்ப்பப்பை கட்டி குணமாக திருக்குர்ஆன் மருத்துவம்


 கருப்பை கட்டி (Uterine Fibroids) ஃபைப்ராய்டு கட்டிகள் அல்லது கர்ப்பப்பை திசு நார்க்கட்டிகள் என்பது இன்றைய உலகில் பெண்கள் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.

🪸 உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு 35 வயதை தாண்டுகையில் கர்ப்பப்பை கட்டி உருவாகிறது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
🪸  கர்ப்பப்பை கட்டி உருவாகி வருகிறது என்பதின் அறிகுறிகள்.

▪️மாதவிடாய் காலத்தில் மிக அதிகப்படியான ரத்தப் போக்கு
▪️மாதவிலக்கு காலம் அதிகரிப்பது. 
▪️மிகவும் தீவிரமான வயிற்று வலி
▪️அடிக்கடி சிறுநீர் கழித்தல்
▪️சிறுநீர் கழிக்கும்போது மிகுந்த அழுத்தம் ஏற்படுவதை உணர்தல், 
▪️சிறுநீர் கழிக்க சிரமம் அடைதல்
▪️மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறுகள்
▪️தொடை, வயிறு, அடிவயிறு மற்றும் பின்பகுதியில் வலி
போன்றவை கர்ப்பப்பை கட்டியின் அறிகுறிகள் என அறியப்படுகிறன.

🪸 கர்ப்பப்பை கட்டி கரைய:

 நம்பிக்கையுடன் கீழ்காணும் அமல்களைச் செய்து வந்தால், இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக கர்ப்பப்பை கட்டி கரைந்து முற்றிலும் குணமாகி நோயாளி ஆரோக்கியம் பெறுவார். தேவைப்பட்டால் அமல் ஆரம்பிப்பதற்கு முன்பும் அமல் முடித்த பிறகும் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.

1️⃣ திங்கள்கிழமை அன்று ஒரு வாரத்திற்கு குடிக்க தேவையான தண்ணீரில்
▪️👉 ஸலவாத் 11 தடவைகள்

▪️👈  أَلَا یَعۡلَمُ مَنۡ خَلَقَ وَهُوَ ٱللَّطِیفُ ٱلۡخَبِیرُ 
 அலா யஃலமு மன் கலக். வஹுவல் லதீஃபுல் கபீர்.
( அல்குர்ஆன் 67 : 14) 2022 தடவைகள்

▪️👉 ஸலவாத் 11 தடவைகள்

ஓதி ஊதி வைத்துக் கொள்ளுங்கள்!

நாட்டு மருந்து கடைகளில் வேம்பாளம் பட்டை கிடைக்கும் அதை வாங்கி பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலை மாலை இரு வேளை 1/4  டீ ஸ்பூன் அளவு எடுத்து ஓதிய தண்ணீருடன் சாப்பிட்டு வாருங்கள்! 40 நாட்களில் நல்ல மாற்றம் தெரியும்.

🪸 இந்த பொடியை 40 நாட்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். கர்ப்பிணி  பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த பொடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

▪️இந்த பொடியை சாப்பிடாமல் ஓதிய தண்ணீரை மட்டுமே குடிக்க விரும்புவர் அப்படி செய்யலாம்.

▪️அடுத்த திங்கள்கிழமை மீண்டும் ஓதி ஒரு வாரம் வரை பயன்படுத்துங்கள்!

2️⃣ ஒவ்வொரு ஃபர்ளு தொழுகைக்குப் பிறகும்  தொப்புளின் மீது ஆட்காட்டி விரலை வைத்து, ஒரே மூச்சில்
▪️👉 1 தடவை ஸலவாத்
*▪️👈 اَلْمَلِکُ اَلْقُدُّوْسُ اَلسَّلَامُ*
▪️👉 அல் மலிகுல் குத்தூஸுஸ் ஸலாம்   -   11 தடவைகள் 
▪️👉 1 தடவை ஸலவாத்
ஓதி வாருங்கள்! இன்ஷா கட்டிகள் கரைந்து விடும்.

தொழில் செழிக்க திருக்குர்ஆன் மருத்துவம்

தினமும் நாள் தவறாமல் சுபுஹு தொழுகைக்கு பிறகு கீழ் காணும் திருக்குர்ஆனின் ஆயத்தை 70 தடவை ஓதி வாருங்கள். 

  • இன்ஷாஅல்லாஹ் தொழில் செழிக்கும். 
  • வியாபாரத்தில் பரகத் ஏற்படும். 
  • பொருளாதாரம் பெருகும். 
اللَّهُ لَطِيفٌ بِعِبَادِهِ يَرْزُقُ مَنْ يَشَاءُ وَهُوَ الْقَوِيُّ الْعَزِيزُ

அல்லாஹு லதீஃபும் பி இபாதிஹீ யர்ஜுகு மய் யஷா வஹுவல் கவிய்யுல் அஜீஜ்  (அல்குர்ஆன் 42:19) 

குறிப்பு :
தொழிலில் உண்மை, நம்பிக்கை, நாணயம், நேர்மை, அளவை நிறுவையில் நீதம், ஆகியவற்றுடன் மார்க்கம் விதித்திருக்கும் சட்டங்களை கடைபிடிக்க வேண்டியதும் அவசியமாகும்.
தொழில் செழிக்க இவைகளே முதன்மையான காரணங்கள். இவற்றை ஒதிக்கி விட்டு துஆக்கள் செய்வதால் மட்டுமே தொழிலில் வளர்ச்சி ஏற்பட்டு விடாது