மவ்லானா எஸ்.எஸ். அஹ்மது பாகவி ஹழ்ரத் கிப்லா அவர்களின் நோன்புப் பெருநாள் உரை (28/07/2014)
பெருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
28 ஜூலை, 2014
07 ஆகஸ்ட், 2013
பெருநாள் தர்மம் (ஈதுப் பெருநாளின் ஈகை)
சதக்கத்துல் ஃபித்ரு:
பெருநாள் தொழுகைக்காக
மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய
தர்மத்தைக் குறிக்கும். ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை
உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும்.
28 அக்டோபர், 2012
பெருநாள் கொண்டாட்டமா? பெரும் திண்டாட்டமா?
பொதுவாக நோன்புப் பெருநாளாகட்டும்.. ஹஜ்ஜுப் பெருநாளாகட்டும்.. இஸ்லாமியப் பெருநாட்களில் என்னவெல்லாம் இருக்கும்?
வணக்கம் இருக்கும்! எல்லோருக்கும் மத்தியில் ஒரு இணக்கம் இருக்கும்!!
ஏழைகளை ஆதரிக்கிற ஏற்றமான பண்பு இருக்கும்.
11 அக்டோபர், 2012
துல்ஹஜ், குர்பானி
இந்த வாரம் ஜும் ஆ உரையின் அம்சங்கள் :
- துல்ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்பும்
- அவற்றில் ஆற்றவேண்டிய அமலும்
- குர்பானியின் சிறப்பு
- அதன் சட்டங்கள்
- அதில் அடங்கியுள்ள ஆத்மார்த்தமான தத்துவங்கள்,
- குர்பானியின் வரலாறு
இவற்றை உள்ளடக்கி இரு உரைகள் தரப்பட்டுள்ளன. தங்களின் மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
08 நவம்பர், 2011
Eid al- alha ஹஜ்ஜுப் பெருநாள்
தியாகத் திருநாள்http://tawp.in/r/1grd
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியாகத் திருநாள் (Eid al-adha, அரபு: عيد الأضحى ஈத் அல்-அதா) அல்லது பக்ரித் பண்டிகை, உலக
அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைவனின்
தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக,
ஒவ்வோர் ஆண்டும் அராபிய மாதம் துல்கச்சு (Dul Haji) 10-ம் நாள்
இது கொண்டாடப்படுகின்றது.
அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைவனின்
தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக,
ஒவ்வோர் ஆண்டும் அராபிய மாதம் துல்கச்சு (Dul Haji) 10-ம் நாள்
இது கொண்டாடப்படுகின்றது.
இந்த பண்டிகையையொட்டி இசுலாமியர்கள் மெக்கா நகரில் உள்ள
புனித காபாவை நோக்கி ஃஅச்சு (Hajj) எனப்படும் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர்
. இது இவர்களின் அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமை ஆகும்[1].
இதன் பேரில் இந்த பண்டிகை ஃஅச்சுப் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது.
பெரும்பாலும் உலகம் முலுவதும் இந்த பண்டிகை தியாகப் பெருநாள்
என பொருள்படும் அரபிய பதமான ஈத் அல்-அதா என்றே அழைக்கப்பட்டாளும்
, தமிழ் நாட்டில் ஆட்டை பலியிடுவதை அடிப்படையாக கொண்டு
பக்ரித் (பக்ரு-ஆடு + ஈத்-பெருனாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது.
புனித காபாவை நோக்கி ஃஅச்சு (Hajj) எனப்படும் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர்
. இது இவர்களின் அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமை ஆகும்[1].
இதன் பேரில் இந்த பண்டிகை ஃஅச்சுப் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது.
பெரும்பாலும் உலகம் முலுவதும் இந்த பண்டிகை தியாகப் பெருநாள்
என பொருள்படும் அரபிய பதமான ஈத் அல்-அதா என்றே அழைக்கப்பட்டாளும்
, தமிழ் நாட்டில் ஆட்டை பலியிடுவதை அடிப்படையாக கொண்டு
பக்ரித் (பக்ரு-ஆடு + ஈத்-பெருனாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது.
-----------------------------------------------------------------------------------------------------------------

ஹஜ்ஜுப் பெருநாள் பயானில் ...
இன்றைய ஹஜ்ஜுப் பெருநாளில் ஆதமுடைய மகன் செய்யக்கூடிய அமல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தது இரத்தத்தை ஓட்டுவதுதான் (குர்பானிதான்!)
- நபி (ஸல்).
ஏன்? அல்லாஹ்வுக்கு இறைச்சித் துண்டு என்றால் மிகவும் பிடிக்கும் என்பதாலா?''அவற்றின் இறைச்சித்துண்டுகளோ இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்கள் இதயத்திலிருந்து எழும் இறையச்சமே அவனை அடையும்.'' --அல்குர்ஆன்
நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உருவங்களையோ தோற்றங்களையோ கவனிப்பதில்லை; உங்கள் உள்ளங்களையும் செயல்களையும்தான் பார்க்கிறான்.- ஹதீஸ்
எந்த எண்ணத்தில் குர்பானி கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
நாலு பேர் புகழவேண்டும் என்பதற்காகவா?
ஏழு நாளைக்கு எடுத்து வைத்து தின்று தீர்க்கவேண்டும் என்பதற்காகவா?
குர்பானி இறைச்சியை மூன்று பங்கு வைக்கவேண்டும் என்பதும் அதில் ஒரு பங்கை தான் உண்ணலாம் என்பதும் ஒரு வழிமுறைதான். அதே நேரம் உறவினரும் ஏழைகளும் அதிகமாக இருந்தால் தன் பங்கைக் கூட எடுத்துக் கொடுப்பதுதான் ஏற்றமாகும்.
சுவாமி சுகபோகானந்தா எழுதுகிறார்;
''முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையின்போது அதிகம் சதைப் பிடிப்புள்ள இறைச்சித்துண்டை ஏழைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பது அவர்களிடம் எழுதப்படாத சட்டம்.''
இறைச்சி வழங்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்?
இறைச்சி இல்லாவிட்டால் என்ன..மகிழ்ச்சி வழங்கலாமே !
''இன்சொல் கூறுவதும் தர்மமே''. -- நபி (ஸல்)
நபிகளார் நவின்றார்கள்:
''உங்களுக்குள் சலாமைப் பரப்புங்கள்( சாந்தியைப் பரப்புங்கள்)''
பிராந்தியை பரப்புகிறோமே நியாயமா?
சாந்தியைப் பரப்புனா சமாதானம்;
பிராந்தியைப் பரப்புனா சண்டை ; இதுதேவையா?
ஒரு பெருநாள் அன்று பெருமானார் (ஸல்) உணர்வூட்டும் உபதேசம் ஒன்று செய்தார்கள் :
''பெண்களே தான தர்மங்களை தாராளமாகச் செய்யுங்கள். உங்களை நரகத்தில் நான் அதிகமாகக் கண்டேன்.''
இதன் பிறகு பிலால் ரலி துண்டை விரித்துக் கொண்டு பெண்களிடம் சென்றார்கள். சுப்ஹானல்லாஹ்!
பெண்கள் தங்கள் கழுத்துகளிலும் கைகளிலும் கிடந்த பொன் நகைகளை கழற்றி தானம் செய்தார்கள். இது உண்மையான வரலாறு.
நாம் பொன் நகையைத் தருவது இருக்கட்டும்.முதலில் புன்னகையாவது தருகிறோமா?
உன் சகோதரனைப் பார்த்து புன்சிரிப்பதும் தர்மமே! (அதற்கும் நன்மை உண்டு) –- நபி (ஸல்)
எனவே இந் நன்னாளில் ஒருவருக்கொருவர் முகத்தைக் காட்டுவோம் ;
மூஞ்சியை அல்ல!
முகம் என்றால் என்ன? மூஞ்சி என்றால் என்ன?
திருவள்ளுவர் அழகாகச் சொல்வார்:
''முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி- அகத்தானாம்இன்சொலினதே அறம்.''
புன்சிரித்து இன்சொல் கூறுவதும் தர்மமே! என்கிறார்.
புன்சிரிப்பது முகம் ; சிடுசிடுன்னு இருப்பது மூஞ்சி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
இதுவரை அடியேனின் பார்வையில் பட்ட தளங்கள்.! இன்னும் இருந்தால் அதை கருத்துரையில் தெரிவித்தால் அவசியம் சேர்த்துக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ். ...
-
கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்.. நம் கன்மனியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள். மாதவ தூதர் முஹமது நபியின் மகளாக வந்து ப...
-
1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் ? அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் ப...


