Fajr Bayan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Fajr Bayan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 ஏப்ரல், 2026

கவனத்துடன் காது கொடுத்துக் கேட்பது - நல்ல முன்மாதிரி

أ- نماذِجُ مِن الإنصاتِ عندَ النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم

مِن خُلقِ النَّبيِّ عليه الصَّلاةُ والسَّلامُ أن يُنصِتَ للمُتكلِّمِ، وسيرتُه المُبارَكةُ ملأى بأمثلةِ ذلك، ومنه

1- أنصَت النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم لأمِّ المُؤمِنينَ عائِشةَ رضِي اللهُ عنها تُحدِّثُه خبرًا طويلًا فيه ذِكرُ بعضِ أمورِ الجاهليَّةِ وأحوالِهم، حتى إذا فرغَت طيَّب قَلبَها بقولِه عليه الصَّلاةُ والسَّلامُ: ((كنْتُ لكِ كأبي زَرعٍ لأمِّ زَرعٍ)) 

2- واستمَع النَّبيُّ عليه الصَّلاةُ والسَّلامُ إلى تميمٍ الدَّاريِّ يُحدِّثُه عن الجسَّاسةِ، ثُمَّ جمَع النَّاسَ، فقال: ((أتدرونَ لِمَ جمعْتُكم؟ قالوا: اللهُ ورسولُه أعلَمُ، قال: إنِّي واللهِ ما جمعْتُكم لرغبةٍ ولا لرهبةٍ، ولكن جمعْتُكم لأنَّ تميمًا الدَّاريَّ كان رجُلًا نصرانيًّا، فجاء، فبايَع وأسلَم، وحدَّثني حديثًا وافَق الذي كنْتُ أحدِّثُكم عن مسيحِ الدَّجَّالِ، حدَّثني أنَّه...)) .

3- ولم يكنْ يخُصُّ أهلَ الإيمانِ بإصغائِه، بل عمَّ إنصاتُه عليه الصَّلاةُ والسَّلامُ جميعَ النَّاسِ؛ العَدوَّ منهم والصَّديقَ، فكان المُنافِقونَ يُؤذونَه عليه الصَّلاةُ والسَّلامُ، ويقولونَ ما لا ينبغي، فيقولُ بعضُهم: لا تفعَلوا؛ فإنَّا نخافُ أن يبلغَه ما تقولونَ، فيقعَ بنا، فقال بعضُهم: بل نقولُ ما شِئْنا، ثُمَّ نأتيه فنُنكِرُ ما قُلْنا، ونحلِفُ فيُصدِّقُنا بما نقولُ؛ فإنَّما مُحمَّدٌ أُذُنٌ، أي: أُذُنٌ سامِعةٌ، يكثُرُ استعمالُه لها في الإصغاءِ بها، فيسمعُ كُلَّ ما يُقالُ له ويُصدِّقُه، قال تعالى: وَمِنْهُمُ الَّذِينَ يُؤْذُونَ النَّبِيَّ وَيَقُولُونَ هُوَ أُذُنٌ قُلْ أُذُنُ خَيْرٍ لَكُمْ [التوبة: 61] .

بل كان يُنصِتُ للمُشرِكين؛ فقد أرسَلَت قُرَيشٌ عُتبةَ بنَ ربيعةَ -وهو رجُلٌ رَزينٌ هادِئٌ-، فذهَب إلى رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم يقولُ : يا بنَ أخي، إنَّك منَّا حيثُ قد علِمْتَ مِن المكانِ في النَّسبِ، وقد أتَيتَ قومَك بأمرٍ عظيمٍ، فرقَّت به جماعتُهم؛ فاسمَع منِّي أعرِضْ عليك أمورًا لعلَّك تقبلُ بعضَها: إن كنْتَ إنَّما تُريدُ بهذا الأمرِ مالًا جمَعْنا لك مِن أموالِنا حتَّى تكونَ أكثَرَنا مالًا، وإن كنْتَ تُريدُ شرفًا سوَّدْناك علينا فلا نقطَعُ أمرًا دونَك، وإن كنْتَ تُريدُ مُلكًا ملَّكْناك علينا، وإن كان هذا الذي يأتيك رَئيًّا تراه لا تستطيعُ ردَّه عن نَفسِك طلبْنا لك الطِّبَّ، وبذلْنا فيه أموالَنا حتَّى تبرَأَ، فلمَّا فرَغ من قولِه تلا رسولُ اللهِ عليه الصَّلاةُ والسَّلامُ صَدرَ سورةِ فُصِّلَتْ: حم * تَنْزِيلٌ مِنَ الرَّحْمَنِ الرَّحِيمِ * كِتَابٌ فُصِّلَتْ آَيَاتُهُ قُرْآَنًا عَرَبِيًّا لِقَوْمٍ يَعْلَمُونَ * بَشِيرًا وَنَذِيرًا فَأَعْرَضَ أَكْثَرُهُمْ فَهُمْ لَا يَسْمَعُونَ * وَقَالُوا قُلُوبُنَا فِي أَكِنَّةٍ مِمَّا تَدْعُونَا إِلَيْهِ وَفِي آَذَانِنَا وَقْرٌ وَمِنْ بَيْنِنَا وَبَيْنِكَ حِجَابٌ فَاعْمَلْ إِنَّنَا عَامِلُونَ * قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَاسْتَقِيمُوا إِلَيْهِ وَاسْتَغْفِرُوهُ وَوَيْلٌ لِلْمُشْرِكِينَ * الَّذِينَ لَا يُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ بِالْآَخِرَةِ هُمْ كَافِرُونَ [فصلت: 1 - 7] .

நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் காணப்பட்ட கவனமாகக் கேட்பதற்கான எடுத்துக்காட்டுகள்

நபிகள் நாயகம் ﷺ அவர்களின் உயர்ந்த பண்புகளில் ஒன்று, பேசுகிறவரை முழுமையாகக் கவனித்து கேட்பது. அவர்களின் புனித வாழ்க்கை வரலாறு இதற்கான பல உதாரணங்களால் நிரம்பியுள்ளது. அவற்றில் சில:

1. நம்பிக்கையாளர்களின் தாய் ஆயிஷா (ரலி) அவர்கள், ஜாஹிலிய்யா காலத்தின் சில நிகழ்வுகள் மற்றும் மக்களின் நிலைகள் குறித்து நீண்ட செய்தியை நபி ﷺ அவர்களிடம் கூறினார்கள். அவர்கள்  முழுமையாகக் கேட்டார்கள்.
அதாவது :
  • 11 பெண்கள்: ஒருமுறை 11 பெண்கள் ஒன்று கூடி, தங்கள் கணவன்மார்களைப் பற்றிய உண்மைகளை எதையும் மறைக்காமல் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதாக உறுதி பூண்டனர்.
  • ஒவ்வொருவரும் தங்கள் கணவரைப் பற்றிய செய்திகள் குணங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்கள். அதில் 11 வது ஜோடியின் செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் உகந்ததாக இருந்தது. 
  • உம்மு ஸர்வின் புகழ்: உம்மு ஸர்வு. அவர் தனது முதல் கணவர் அபூ ஸர்வு தன்னை எவ்வளவு கண்ணியமாக நடத்தினார், எவ்வளவு தாராளமாக வசதிகளைச் செய்து கொடுத்தார், அவர் மீது தான் வைத்திருந்த அளவுக்கடந்த அன்பு போன்றவற்றை மிக விரிவாகவும் கவிதை நயத்தோடும் வர்ணித்தார்.
  • இதையெல்லாம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் சொல்லிக் காட்டினார்கள். அந்த முழுக்கதையும் நபி அவர்கள் பொறுமையாகக் கேட்டு உள்வாங்கினார்கள்.
  • நபி (ஸல்) அவர்களின் பதில்: 
    "உம்மு ஸர்உக்கு அபூ ஸர்வு எப்படி (அன்பாக) இருந்தாரோ, அதுபோலவே நானும் உனக்கு இருக்கிறேன்" என்று கூறினார்கள்.
  • முக்கிய வேறுபாடு: அதே சமயம் ஒரு சிறிய வித்தியாசத்தையும் நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். கதையில் வரும் அபூ ஸர்வு இறுதியில் உம்மு ஸர்வை விவாகரத்து செய்து விடுவார். ஆனால் நபி (ஸல்) அவர்கள், "நான் உன்னை ஒருபோதும் பிரியமாட்டேன் (விவாகரத்து செய்யமாட்டேன்)" என்று கூறி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை மகிழ்வித்தார்கள். 

2. நபி ﷺ அவர்கள் தமீம் அத்-தாரி (ரலி) அவர்களிடமிருந்து ஜஸ்ஸாஸா பற்றிய செய்தியை கவனமாகக் கேட்டார்கள். பின்னர் மக்களைச் சேர்த்து கூறினார்கள்:

“நான் உங்களை ஏன் கூடியிருக்கச் செய்தேன் என்று அறியுகிறீர்களா?”
அவர்கள் கூறினர்: “அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்றாக அறிவார்கள்.”
அவர் கூறினார்கள்:

“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஆசையாலோ பயத்தாலோ நான் உங்களை கூடியிருக்கச் செய்யவில்லை. ஆனால் தமீம் அத்-தாரி முன்பு கிறிஸ்துவராக இருந்தவர். அவர் வந்து இஸ்லாத்தை ஏற்றார். அவர் எனக்கு மஸீஹுத் தஜ்ஜால் குறித்து நான் உங்களுக்குச் சொல்வதற்கு ஒத்த ஒரு செய்தியைச் சொன்னார்...”
அந்த தோழர் 
  • தான் கடல் பயணம் போனது,
  •  புயல் வந்தது, 
  • தீவில் ஒதுங்கியது, 
  • அங்கே  ஒற்றர் என்கிற மிருகத்தை பார்த்தது, 
  • அதன் பின்னர் தஜ்ஜாலைப் பார்த்தது, 
  • அவன் சொன்ன வார்த்தைகள் என நீண்ட நிகழ்வுகளை சொல்ல சொல்ல நபியவர்கள் பொறுமையாக் காதில் வாங்கினார்கள். 
உள்ளே  நுழையும் போது கிறிஸ்தவராக நுழைந்தார். தற்போது நபியவர்களின் கரம் பிடித்து இஸ்லாமை தழுவினார். 

3. நபி ﷺ அவர்கள் நம்பிக்கையாளர்களுக்கே மட்டும் அல்லாமல், எல்லா மக்களுக்கும்—நண்பராயினும் பகைவராயினும்—கவனமாகக் கேட்பவராக இருந்தார்கள்.

முனாஃபிக்கள் அவர்களைத் துன்புறுத்தி தகாத வார்த்தைகள் பேசுவார்கள். அவர்களில் சிலர் மற்றவர்களிடம்:
“இவ்வாறு பேசாதீர்கள்; இது அவருக்கு சென்றால் நமக்குத் தீங்கு நேரும்” என்பார்கள்.

மற்ற சிலர்:
“நாம் விரும்பியது பேசிவிட்டு, பிறகு அவரிடம் சென்று மறுத்து சத்தியம் செய்வோம்; அவர் நம்மை நம்பிவிடுவார். முஹம்மது ஒரு ‘காது’ மாதிரி — கேட்பவர்.” என்று கூறுவார்கள்.

அதற்கு அல்லாஹ் கூறினான்:

“நபியைத் துன்புறுத்துகிறவர்களில் சிலர்: ‘அவர் ஒரு காது’ என்று கூறுகிறார்கள். சொல்லுங்கள்: ‘அவர் உங்களுக்குச் சிறந்த காது.’”
(ஸூரத் தவ்பா 9:61)

அதாவது, அவர் அனைவரையும் கேட்பார்; ஆனால் அது நன்மைக்காக.

மேலும், நபி ﷺ அவர்கள் முஷ்ரிக்குகளையும் கவனமாகக் கேட்டார்கள். குரைஷ் மக்கள் உத்பா இப்னு ரபீஅா என்பவரை அனுப்பினர். அவர் அமைதியான, மதிப்புள்ள மனிதர். அவர் நபி ﷺ அவர்களிடம் வந்து கூறினார்:

“என் சகோதரனின் மகனே! நீ எங்கள் சமூகத்தில் உயர்ந்த வம்சத்தைச் சேர்ந்தவன். ஆனால் நீ உன் மக்களிடம் பெரிய விஷயத்தை கொண்டு வந்துள்ளாய்; இதனால் அவர்கள் பிரிந்துள்ளனர். எனவே, நான் சில விஷயங்களை முன்வைக்கிறேன்; அவற்றில் சிலவற்றையாவது நீ ஏற்றுக் கொள்ளலாம்.

இவ்விஷயத்தால் நீ செல்வம் விரும்பினால், எங்கள் செல்வத்திலிருந்து உனக்கு சேகரித்து தருவோம்; நீ எங்களில் மிகச் செல்வந்தனாகிவிடுவாய்.
மரியாதை விரும்பினால், உன்னை எங்கள் தலைவராக்குவோம்.
ஆட்சி விரும்பினால், உன்னை அரசனாக்குவோம்.
உனக்கு ஏதோ ஆவி அல்லது நோய் வந்திருப்பதாக இருந்தால், உனக்காக வைத்தியம் தேடுவோம்; செலவெல்லாம் செய்வோம்.”

அவர் பேச்சை முடித்தபின், நபி ﷺ அவர்கள் ஸூரத் ஃபுஸ்ஸிலத் தொடக்க வசனங்களை ஓதினார்கள்:

ஹா மீம். அர்ரஹ்மான் அர்ரஹீமிடமிருந்து இறக்கப்பட்டதாகும். வசனங்கள் தெளிவுபடுத்தப்பட்ட அரபு குர்ஆன்...
(ஸூரத் ஃபுஸ்ஸிலத் 41:1–7)

இவ்வாறு, நபி ﷺ அவர்கள் பேசுகிறவரை இடைமறியாமல் கேட்டுவிட்டு, ஞானத்துடனும் மரியாதையுடனும் பதிலளித்தார்கள்.


ج- نماذِجُ مِن الإنصاتِ عندَ السَّلفِ رضِي اللهُ عنهم

1- قال مُعاذُ بنُ سَعدٍ الأعوَرُ: (كنْتُ جالسًا عندَ عطاءِ بنِ أبي رَباحٍ، فحدَّث بحديثٍ، فعرَض رجُلٌ مِن القومِ في حديثِه، فغضِب وقال: ما هذه الأخلاقُ؟ وما هذه الطَّبائعُ؟ إنِّي لأسمعُ الحديثَ مِن الرَّجلِ وأنا أعلَمُ منه به، فأُريه أنِّي لا أحسِنُ شيئًا منه) .
وفي رِوايةِ ابنِ جُرَيجٍ عن عطاءٍ قال: (إنَّ الرَّجلَ ليُحدِّثُني بالحديثِ، فأنصِتُ له، كأنِّي لم أسمعْه قطُّ، وقد سمعْتُه قَبلَ أن يُولَدَ!) .
2- قال عبدُ اللهِ بنُ صالِحٍ العِجليُّ: (كان رجُلٌ مِن ولدِ عبدِ اللهِ بنِ مسعودٍ يجلِسُ في مجلِسِ ابنِ السَّمَّاكِ، فكان يُطيلُ السُّكوتَ، فقال له ابنُ السَّمَّاكِ ذاتَ يومٍ: يا فتى، ألا تخوضُ فيما يخوضُ فيه القومُ مِن الحديثِ؟ فقال: إنَّما قعدْتُ لأسمعَ وأنصِتَ لأفهَمَ، وما كان مِن الحديثِ لغَيرِ اللهِ فعاقِبتُه النَّدمُ، فقال: خرجْتَ واللهِ مِن مَعدِنٍ) .
3-قال يحيى بنُ سعيدٍ: (سمعْتُ أبا مُعاوِيةَ يُحدِّثُ عن الأعمَشِ، عن إسماعيلَ بنِ أبي خالِدٍ، والأعمَشُ مُنصِتٌ له، يستمِعُ منه) .

الدرر السنية - تطبيق الأخلاق والسلوك والآداب

முன்னோர் (ஸலஃப்) கள்  கவனமாகக் கேட்பதற்கான எடுத்துக்காட்டுகள்

1. முஆத் இப்னு ஸஅத் அல்-அஅ்வர் கூறினார்:
“நான் அதா இப்னு அபீ ரபாஹ் அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அவர் ஒரு ஹதீஸைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் அவருடைய பேச்சுக்குள் இடைமறித்தார். அதனால் அவர் கோபமடைந்து கூறினார்:
‘இது என்ன ஒழுக்கம்? இது என்ன இயல்பு? ஒருவர் ஒரு ஹதீஸைச் சொல்வதை நான் அவரைவிட நன்றாக அறிந்திருந்தாலும், நான் அதில் எதையும் அறியாதவன் போல அவருக்குக் காட்டுவேன்.’”

இப்னு ஜுரைஜ் அறிவிப்பில் அதா அவர்கள் கூறியது:
“ஒருவர் எனக்கு ஒரு ஹதீஸைச் சொல்வார். நான் அதை முன்பு ஒருபோதும் கேள்விப்படாதவன் போல அமைதியாகக் கேட்பேன்; ஆனால் அதை அவர் பிறக்குமுன்பே நான் கேட்டிருக்கிறேன்!”

2. அப்துல்லாஹ் இப்னு ஸாலிஹ் அல்-இஜ்லி கூறினார்:
“அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களின் சந்ததியிலிருந்து ஒருவர், இப்னு அஸ்-ஸம்மாக் அவர்களின் கூடத்தில் அமர்ந்திருப்பார். அவர் அதிகமாக மௌனமாக இருப்பார். ஒருநாள் இப்னு அஸ்-ஸம்மாக் அவரிடம் கூறினார்:
‘இளைஞனே! மக்கள் பேசிக் கொண்டிருப்பதைப் போல நீயும் ஏன் பேசவில்லை?’
அவர் பதிலளித்தார்:
‘நான் இங்கு வந்தது கேட்டு, அமைதியாக இருந்து புரிந்து கொள்ளத்தான். அல்லாஹ்வுக்காக அல்லாத பேச்சின் முடிவு வருத்தம்தான்.’
அதற்கு அவர் கூறினார்:
‘நிச்சயமாக நீ உயர்ந்த வம்சத்தில் இருந்து வந்தவன்!’”

3. யஹ்யா இப்னு ஸயீத் கூறினார்:
“அபூ முஆவியா அவர்கள் அல்-அஅ்மஷ் அவர்களிடமிருந்து அறிவிப்பதைக் கேட்டேன். அப்போது அல்-அஅ்மஷ் அவர்கள் தாமே அமைதியாக இருந்து அவரைக் கவனமாகக் கேட்டு கொண்டிருந்தார்கள்.”

மூலம்: துரர் அஸ்-ஸுன்னிய்யா – ஒழுக்கம், நடத்தை மற்றும் மரியாதை பயன்பாடு.

15 ஏப்ரல், 2026

அமானிதம் குறித்த அற்புத சம்பவங்கள்!



نماذِجُ في الأمانةِ من الأُمَمِ الماضيةِ

- عن أبي هُرَيرةَ رَضِيَ اللهُ عنه قال: قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم: ((اشترى رجلٌ مِن رجُلٍ عَقَارًا له، فوجَد الرَّجُلُ الذي اشترى العَقَارَ في عَقَارِه جَرَّةً فيها ذَهَبٌ، فقال له الذي اشتَرى العَقَارَ: خُذْ ذهَبَك مِنِّي؛ إنَّما اشتريتُ منك الأرضَ، ولم أبْتَعْ منك الذَّهَبَ! فقال الذي شَرى الأرضَ: إنَّما بِعتُك الأرضَ وما فيها! فتَحاكما إلى رجُلٍ، فقال الذي تَحاكَما إليه: ألَكُما وَلَدٌ؟ فقال أحدُهما: لي غلامٌ، وقال الآخَرُ: لي جاريةٌ، قال: أنْكِحوا الغُلامَ الجاريةَ، وأنْفِقوا على أنفُسِكما منه، وتَصدَّقا   .

1. நிலத்தில் கிடைத்த தங்கம்: யாருக்குச் சொந்தம்?

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஒருவர் மற்றவரிடமிருந்து ஒரு நிலத்தை வாங்கினார். வாங்கியவர் அந்த நிலத்தில் தங்கக் காசுகள் நிறைந்த ஒரு ஜாடியைக் கண்டார். அவர் நிலத்தை விற்றவரிடம் சென்று, 'உன்னுடைய தங்கத்தை எடுத்துக் கொள். நான் உன்னிடமிருந்து நிலத்தைத்தான் வாங்கினேன், தங்கத்தை அல்ல!' என்றார். ஆனால் நிலத்தை விற்றவரோ, 'நான் அந்த நிலத்தையும் அதில் உள்ளவை அனைத்தையுமே உனக்கு விற்றுவிட்டேன்' என்றார்.

இருவரும் ஒரு நீதிபதியிடம் சென்றனர். அந்த நீதிபதி, 'உங்கள் இருவருக்கும் பிள்ளைகள் உண்டா?' என்று கேட்டார். ஒருவருக்கு ஒரு மகனும், மற்றவருக்கு ஒரு மகளும் இருந்தனர். நீதிபதி, 'உங்கள் இருவரின் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்து, அந்தப் பணத்தை அவர்களுக்குச் செலவிடுங்கள், தர்மமும் செய்யுங்கள்' என்று தீர்ப்பளித்தார்."

படிப்பினை: இந்த இருவரும் உலகப் பொருட்களின் மீது பேராசை கொள்ளாமல், தங்களுக்கு உரிமையில்லாத பொருளை 'அமானிதம்' (அடைக்கலம்) என்று கருதி விலகிய நேர்மை வியக்கத்தக்கது.
- وعنه أيضًا، عن النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم: ((أنَّه ذَكرَ رَجُلًا من بني إسرائيلَ، سَأل بَعضَ بني إسرائيلَ أن يُسلِفَه ألْفَ دينارٍ، فقال: ائتِني بالشُّهداءِ أُشهِدْهم، فقال: كفى بالله شَهيدًا! قال: فأْتِني بالكفيلِ، قال: كفى باللهِ كفيلًا! قال: صَدَقْتَ، فدَفعَها إليه إلى أجلٍ مُسَمًّى، فخَرجَ في البَحرِ فقَضى حاجَتَه، ثُمَّ التمَسَ مركبًا يركبُها يَقدَمُ عليه للأجلِ الذي أجَّلَه، فلم يَجِد مركبًا، فأخذَ خَشَبةً فنَقَرَها، فأدخَلَ فيها ألْفَ دينارٍ وصَحيفةً منه إلى صاحِبِه، ثُمَّ زَجَّجَ  مَوضِعَها، ثُمَّ أتى بها إلى البَحرِ، فقال: اللهُمَّ إنَّك تَعلمُ أنِّي كُنتُ تَسلَّفتُ فلانًا ألفَ دينارٍ، فسَألَني كفيلًا، فقُلتُ: كفى باللهِ كفيلًا، فرَضِيَ بك، وسألَني شهيدًا فقُلتُ: كفى بالله شَهيدًا، فرَضِيَ بك، وأنِّي جَهَدْتُ  أن أجِدَ مركبًا أبعَثُ إليه الذي له، فلمْ أقدِرْ، وإنِّي أستَودِعُكَها، فرمى بها في البَحرِ حَتى ولَجَت  فيه، ثُمَّ انصَرَف وهو في ذلك يلتَمِسُ مركَبًا يخرُجُ إلى بَلَدِه، فخَرجَ الرَّجُلُ الذي كانَ أسلَفَه يَنظُرُ لعَلَّ مركبًا قد جاءَ بمالِه، فإذا بالخَشَبةِ التي فيها المالُ، فأخذَها لأهلِه حَطَبًا، فلمَّا نَشَرها وجَدَ المالَ والصَّحيفةَ! ثُمَّ قدِمَ الذي كانَ أسلَفَه فأتى بالألفِ دينارٍ، فقال: واللهِ ما زِلْتُ جاهدًا في طَلَبِ مركبٍ لآتِيَك بمالِك فما وجَدْتُ مَركَبًا قبلَ الذي أتيتُ فيه، قال: هَل كُنتَ بَعَثْتَ إليَّ بشيءٍ؟ قال: أخبِرُك أنِّي لم أجِدْ مركبًا قَبلَ الذي جِئْتُ فيه، قال: فإنَّ اللهَ قد أدَّى عَنك الذي بَعَثْتَ في الخَشَبةِ! فانصَرِفْ بالألفِ الدِّينارِ راشِدًا

2. மரக்கட்டையில் வந்த ஆயிரம் தீனாரும், இறைவனும் சாட்சியும்

பனு இஸ்ரவேல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர், மற்றொருவரிடம் ஆயிரம் தீனார் கடன் கேட்டார். கடன் கொடுப்பவர் 'சாட்சிகளைக் கொண்டு வா' என்றார். அதற்கு அவர், 'சாட்சிக்கு அல்லாஹ் போதுமானவன்' என்றார். பிறகு அவர் 'ஜாமீன்தாரை (பிணையாளியை) கொண்டு வா' என்றார். அதற்கும் அவர், 'அல்லாஹ்வே ஜாமீன்தாராகப் போதுமானவன்' என்றார். கொடுத்தவர் அதை ஏற்று கடனை வழங்கினார்.

கடனைத் திருப்பித் தர வேண்டிய காலம் வந்தபோது, கடன்பட்டவர் கடலில் பயணிக்க ஒரு கப்பலைத் தேடினார். ஆனால் அவருக்கு எந்தக் கப்பலும் கிடைக்கவில்லை. உடனே அவர் ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைத் துளையிட்டு அதற்குள் ஆயிரம் தீனாரையும் ஒரு கடிதத்தையும் வைத்தார். அதை மூடிவிட்டு கடலில் வீசினார்: 'யா அல்லாஹ்! நீயே இதற்கு சாட்சி, நீயே ஜாமீன். இதை என் நண்பனிடம் சேர்த்துவிடு' என்று பிரார்த்தித்தார்.

மறுபுறம், கடன் கொடுத்தவர் கப்பல் வருகிறதா என்று கடற்கரையில் காத்திருந்தார். அவருக்கு ஒரு மரக்கட்டை கிடைத்தது. அதை விறகுக்காக வீட்டுக்கு எடுத்துச் சென்று பிளந்து பார்த்தபோது, உள்ளே பணமும் கடிதமும் இருந்தன! பின்னர் கடன்பட்டவர் நேரில் வந்து மீண்டும் ஆயிரம் தீனாரைக் கொடுத்தார். அப்போது கொடுத்தவர், 'அல்லாஹ் நீ மரக்கட்டையில் அனுப்பிய பணத்தை என்னிடம் சேர்த்துவிட்டான், உனது நேர்மைக்காக அல்லாஹ் உனக்கு உதவி செய்துவிட்டான்' என்று கூறி அந்தப் பணத்தைத் திருப்பி அளித்தார்.

படிப்பினை:

  • இறைநம்பிக்கை: அல்லாஹ்வை சாட்சியாகவும் ஜாமீனாகவும் ஏற்றுக் கொண்டால் அவன் நிச்சயம் உதவி செய்வான்.
  • கடனைத் திரும்பச் செலுத்துதல்: அமானிதத்தை ஒப்படைப்பதில் கடன்பட்டவர் காட்டிய தீவிர முயற்சி.
  • கொடுத்தவரின் நேர்மை: ஏற்கனவே பணம் கிடைத்துவிட்டது என்பதை மறைக்காமல், அந்த மனிதரிடம் உண்மையைச் சொன்ன அந்த நேர்மை மகத்தானது.

சுருக்கம்:

இந்த இரண்டு நிகழ்வுகளும் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், அமானிதத்தை நிறைவேற்றத் துடிப்பவர்களுக்கு அல்லாஹ்வே வழியமைத்துக் கொடுப்பான். நேர்மையாக நடப்பவர்களின் செல்வத்தை அல்லாஹ் இவ்வுலகிலும் பாதுகாப்பான், மறுமையிலும் நற்கூலி வழங்குவான்.

நபிமார்கள் வாழ்வினிலே அமானிதம்

 


நபிமார்களின் பண்பு: அமானிதம் பாதுகாக்கிற நம்பிக்கை.

எல்லா நபிமார்களிடத்திலும் இருந்த பண்பு **'அமானத்'** என்பது. அமானிதத்தைப் பாதுகாக்கின்ற அந்த நேர்மை, நியாயம். எல்லா நபிமார்களும் தன்னுடைய கூட்டத்திடம் பிரச்சாரம் செய்கிற பொழுது, அவர்கள் மறக்காமல் சொன்ன விஷயம் 'இன்னி ரசூலுன் அமீன்' (Inni Rasoolun Ameen) என்று சொன்னார்கள். 

நூஹ் நபி சொன்னார்கள், ஹூது அலைஹிஸ்ஸலாம் சொன்னார்கள், அதேபோல் ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் சொன்னார்கள், மூஸா நபி சொன்னார்கள்.

கிட்டத்தட்ட *சூரத்துஷ் ஷுஅரா* என்கிற அந்த அத்தியாயத்திலே எல்லா நபிமார்களைக் குறித்து வருகிறது. அதிலே நபிமார்கள் தங்களுடைய மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யும்போது முதல்ல சொன்ன விஷயம்: *"என்னை நம்புங்கப்பா முதல்ல, ஏன்னா இன்னி ரசூலுன் அமீன். நான் ரசூல் மாத்திரமல்ல, தூதர் மாத்திரமல்ல, அமீன் - நம்பிக்கைக்குரியவன். "* அப்படின்னு சொன்னாங்க. 

அந்த நம்பிக்கைக்கு உதாரணமாக உலகத்தில் வாழ்ந்ததனால் அவர்கள் அப்படிச் சொன்னார்கள் என்று நாம் பார்க்கிறோம்.

  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையிலும் சின்ன வயசிலிருந்தே அவர்களுக்குப்  பெயர் அமீன், சாதிக்.

 சாதிக்: உண்மையானவர்.

 அமீன்: நம்பிக்கைக்குரியவர், அமானிதத்தைப் பாதுகாப்பார், ஏமாற்றமாட்டார், துரோகம் செய்யமாட்டார், பொய் சொல்லமாட்டார்.

மூஸா (அலை) அவர்களின் வரலாறு

 மூஸா அலைஹிஸ்ஸலாம் குறித்து வருகிறது; அவர்கள் மத்யன் என்கிற நகரத்தை நோக்கிப் போகும்போது, அந்த நடுக்காட்டிலே நடந்த சம்பவத்தை அல்லாஹ் சொல்கிறான். 

 இரண்டு பெண்கள் மாத்திரம் தங்களுடைய ஆடுகளை வைத்துக்கொண்டு, அந்த ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிற காட்சியை அல்லாஹ் சொல்கிறான்.

வந்த ஆண்கள் எல்லாம் அங்கிருந்த கிணற்றிலே தண்ணீரை அள்ளி அள்ளித் தன்னுடைய ஆடுகளுக்கு அவர்கள் புகட்டிவிட்டுச் சென்றுவிட்டார்கள். போகும்போது அவர்கள்  தனக்குக் கிடைத்த அந்தத் தண்ணீர் வேறு யாருக்குமே கிடைக்கக்கூடாது என்கிற கெட்ட எண்ணத்தில், அந்தப் பாறையை  எடுத்து மறுபடியும் கிணற்றை மூடிவிட்டுச் சென்றார்கள்.

இந்தப் பெண்கள் பாருங்க, ஆண்கள் தண்ணீர் புகட்டிக்கிட்டு இருக்காங்களே அப்படின்னு சொல்லி, இந்த இரண்டு பெண்களும் ஓரமா ஒதுங்கி நிக்கிறாங்க வெட்கப்பட்டு. ஆனால் இந்தப்பாவிகள் அந்தக்கல்லை மூடிட்டுப் போயிட்டாங்க. இதை யார் பார்க்குறா? ஓரமா நின்று மூஸா அலைஹிஸ்ஸலாம் பார்க்கிறாங்க. இந்தப் அப்பாவிப் பெண்களுக்கு நடந்த கொடுமையைப் பார்த்தவுடனே, அவங்க மனசுல இருந்த அந்த வீரம், அவங்களை  போராட வைக்குது.

விறுவிறுன்னு போனாங்க,  ஒற்றை ஆளாக அந்தப் பாறாங்கல்லை அகற்றினாங்க. ஒரு ஆள் தனியா அந்தப் பாறாங்கல் மூடியை அகற்றி, தண்ணி இறைச்சு இறைச்சு ஊத்துறாங்க, எல்லா ஆடுகளுக்கும் தண்ணீர் கொடுத்தாங்க. கொடுத்துட்டுத்தான் ஓஞ்சாங்க. இது சாதாரணமா நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு விஷயம் அது. ஒரு மூணு பேர் சேர்ந்தால்தான் அந்தக்கல்லை அகற்ற முடியும்ங்கிற பாறாங்கல். தனி ஒற்றை நபராக அந்தப் பாறாங்கல்லை அகற்றியதையும் அந்தப் பெண்கள் பார்த்தார்கள். எல்லா ஆடுகளுக்கும் ஒரே ஆளா இருந்து தண்ணியை இறைச்சு இறைச்சு கொடுத்த அந்த வீரத்தையும் பார்த்தாங்க.

சுஐப் (அலை) அவர்களிடம் பெண்கள் கூறியது

பார்த்துட்டு அந்த இரண்டு பெண்களும் நன்றிக்கடனாக என்ன பண்ணுறாங்கன்னா, போய் தன்னுடைய தந்தையிடம் சொன்னாங்க.  "வாப்பா, இப்படி மற்ற ஆண்கள் எல்லாம் எங்களை ஏமாற்றிய பொழுது, எங்களுக்குக் கொடுமைகளை இழைத்த பொழுது, ஒரு தனி ஆண்மையுள்ள ஒரு நபர், யாரோ ஒரு வெளியூர்வாசி மாதிரித் தெரியுது, அவர் வந்துதான் எங்களுக்கு உதவினார். ஏதாவது ஒரு நன்றிக்கடனா நம்ம திருப்பிச் செய்யணும் வாப்பா" அப்படின்னு அந்தப் பெண் சொல்லுது. சொன்ன உடனே, "சரி அழைச்சுட்டு வாம்மா, போய் கூட்டிட்டு வா, அவருக்கு நம்ம தேவையான உபகாரம் செய்யலாம், உதவி செய்யலாம்"* அப்படின்னு சுஐப் அலைஹிஸ்ஸலாம் சொன்னாங்க.

இந்தப் பெண் வந்துச்சு, வந்தப்ப என்ன நடந்ததுங்கிறதைக் கூட அல்லாஹ் சொல்றான். வந்து வெட்கப்பட்டுக்கிட்டே கூப்பிடுது. "எங்க வாப்பா உங்களைக் கூப்பிடுறாங்க, உங்களுக்குச் சன்மானம் கொடுக்கணும்னு விரும்புறாங்க, தயவுசெய்து நீங்க வாங்க"* அப்படின்னு சொல்லும்போது, மூஸா அலைஹிஸ்ஸலாம் அதற்குக்கட்டுப்பட்டு போறாங்க. ஏன்னா மூஸா நபிக்குச் சொல்லப்பட்டது, அழைப்பதும் ஒரு நபிதான், சுஐப் அலைஹிஸ்ஸலாம் தான். அங்க போனா உங்களுக்கு நல்ல விடியல் கிடைக்கும், ஒரு மாறுதல் கிடைக்கும் அப்படின்னு சொல்லிச் சொல்லப்படுது. அதனால மூஸா நபி போனாங்க.

இந்தப் பெண் வந்து கூட்டிட்டுப் போய் தந்தை கிட்ட விட்டுட்டு, "வாப்பா, இவருக்கு நல்ல சன்மானம் கொடுங்க. ஏன்னா இன்ன கைர மனிஸ்தஃஜர்தல் கவிய்யுல் அமீன் அப்படின்னு சொல்லுது"*. அதாவது இவர் யாருன்னு சொன்னா:

 1. ஒன்று 'கவிய்யு' - பலசாலி, வீரர்.

 2. இன்னொன்று இவர் 'அமீனாக' இருக்கிறார் - நம்பிக்கைக்குரியவர்.

ஏன் அந்தப் பெண் அப்படிச் சொல்லுச்சு?

 வீரர்:பல பேர் சேர்ந்தால்தான் அசைக்க முடியும்ங்கிற கல்லை அவங்க அசைச்சாங்க, எல்லா ஆடுகளுக்கும் தண்ணீர் புகட்டுனாங்க, அதனால வீரர்.

 அமீன் (நாணயம்):  நடுக்காட்டுல தன்னந்தனியா ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மட்டும்தான் போயிட்டு இருக்காங்க. வீட்டை நோக்கிப் போகும்போது மூஸா நபி என்ன சொல்றாங்க, *"தயவுசெய்து எனக்கு முன்னாடி நடக்க வேணாம், கொஞ்சம் பின்னாடி நடக்குறியா? பின்னாடி நடந்து வந்துகிட்டே வழி சொல்லிக்கிட்டே வா, நான் முன்னாடி போறேன்"* அப்படிங்கறாங்க. ஏன் அப்படிச் சொன்னாங்க? ஒரு இளம்பெண் முன்னாடி போனா, மனசுல அந்த உருவத்தைப் பார்த்து ஒரு சபலம் வந்துவிடுமோ? (நபிமார்களுக்குச் சபலம் வருவதற்கு வாய்ப்பே இல்லை, தவறு செய்வதற்கும் வாய்ப்பே இல்லை, அதான் நபிமார்கள்). ஆனாலும் கூட, ஒரு நேர்மையான ஆண் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணம் மூஸா அலைஹிஸ்ஸலாம். "நீ தயவுசெய்து கொஞ்சம் பின்னாடியே வாம்மா, ஏன்னா என் பார்வை உன் மீது பாய்கிறது, நீ பின்னாடியே வா" அப்படின்னு சொல்லிப் பின்னாடி வரச்சொன்னாங்க.

இது அந்தப் பெண்ணுடைய மனசுல போய் உட்காருது. "இவ்வளவு நேர்மையா இருக்காரே! வாய்ப்புகள் எல்லாம் இருந்தும் கூட, ஏறெடுத்தும் பார்க்காத ஒரு கட்டிளம் காளையாக இருக்கிறாரே" என்பது கூட அந்தப் பெண்ணுக்கு மனசுல ஒரு நல்ல விருப்பத்தை உண்டு பண்ணியது. அதனால சொன்னாங்க, "இவருக்கு நல்ல சன்மானம் கொடுங்க"

அப்ப சுஐப் அலைஹிஸ்ஸலாம் என்ன சன்மானம் கொடுத்தாங்க  "எட்டு ஆண்டுகள் இங்கே வேலை உனக்கு உண்டு. வேலை மாத்திரமல்ல, அதற்குப் பிறகு சன்மானமாக என்னுடைய மகளையே உனக்கு நான் மணம் முடித்துத் தருகிறேன்"* அப்படின்னு மணம் முடித்து வைச்சாங்க அப்படிங்கிறதெல்லாம் குர்ஆனுடைய தொடர்ச்சியான வரலாறு.

எல்லா நபிமார்களிடத்திலும் இருந்த ஒரு நல்ல பண்பு  'அமானிதம்', 'அமானத்'. தவறு செய்ய வாய்ப்பு இருந்தாலும் செய்ய மாட்டார்கள். அமானிதத்தைப் பாதுகாப்பார்கள், உதவி செய்வார்கள், மற்றவர்களுக்கு நன்மையை மட்டும்தான் நாடுவார்களே தவிர, ஒருபோதும் துரோகத்தையோ, ஏமாற்றுதலையோ, மோசடியையோ அவர்கள் செய்யமாட்டார்கள் என்பதுதான் நபிமார்களுடைய வாழ்க்கையிலிருந்து கிடைக்கிற நல்ல செய்தி. அதைப் பின்பற்றி நடக்கக்கூடிய வாய்ப்பை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக. 

أ- الأمانةُ عِندَ الأنبياءِ والمُرسَلينَ

إنَّ الأمانةَ إحدى الصِّفاتِ الواجِبِ توافُرُها في كُلِّ رسولٍ بَعَثه اللهُ تعالى، وقد قال نبيُّ اللهِ نوحٌ عليه السَّلامُ لقَومِه: 

إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ [الشعراء: 107]، 

وقالها نبيُّ اللهِ هودٌ عليه السَّلامُ في الآيةِ [125]، 

ونبيُّ اللهِ صالحٌ عليه السَّلامُ في الآيةِ [143]، 

ونبيُّ اللهِ لُوطٌ عليه السَّلامُ في الآيةِ [162]، 

ونبيُّ اللهِ شُعَيبٌ عليه السَّلامُ في الآيةِ [178] وقالها نبيُّ اللهِ موسى عليه السَّلامُ كما في سورةِ الدُّخانِ الآيةِ [18]. 

وفي القرآنِ حكايةُ قِصَّةِ موسى عليه السَّلامُ حينَ سقى لابنَتَيِ الرَّجُلِ الصَّالحِ؛ قال اللهُ تعالى: وَلَمَّا تَوَجَّهَ تِلْقَاءَ مَدْيَنَ قَالَ عَسَى رَبِّي أَنْ يَهْدِيَنِي سَوَاءَ السَّبِيلِ * وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِنَ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِنْ دُونِهِمُ امْرَأَتَيْنِ تَذُودَانِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لَا نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّعَاءُ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ


 * فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ * فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ قَالَتْ إِنَّ أَبِي يَدْعُوكَ لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَا فَلَمَّا جَاءَهُ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ قَالَ لَا تَخَفْ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ * قَالَتْ إِحْدَاهُمَا يَا أَبَتِ اسْتَأْجِرْهُ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ [القصص: 22 - 26]،

 أي: إنَّ خيرَ من تستأجِرُه القويُّ على عمَلِه، الأمينُ الذي لا يخونُ ما ائتُمِن عليه، قال ابنُ الجوزيِّ: (وإنَّما سَمَّتْه قويًّا؛ لرَفعِه الحَجَرَ على رأسِ البِئرِ. وقيل: لأنَّه استقى بدَلوٍ لا يُقِلُّها إلَّا العَدَدُ الكثيرُ من الرِّجالِ، وسمَّتْه أمينًا؛ لأنَّه أمَرَها أن تمشيَ خَلْفَه) .

 وقيل: الأمانةُ والقُوَّةُ أخِذَتا مِن سَقْيِه؛ فأمَّا القُوَّةُ فعُرِفَت مِن نَزعِه الدَّلْوَ، وأمَّا الأمانةُ فلكونِه يسقي سقيًا كاملًا، فيَدَعُ الغَنَمَ حتَّى تَرْوى، ولأنَّه لم يأخُذْ شيئًا منها . 

وعن عبدِ الرَّحمنِ بنِ عَبدِ رَبِّ الكعبةِ قال: (دخَلْتُ المسجِدَ فإذا عبدُ اللهِ بنُ عَمرِو بنِ العاصِ جالِسٌ في ظِلِّ الكعبةِ، والنَّاسُ مجتَمِعونَ عليه، فأتيتُهم فجَلَسْتُ إليه، 


فقال: كنَّا مع رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم في سَفَرٍ، فنزَلْنا منزِلًا؛ فمنَّا من يُصلِحُ خباءَه، ومنَّا من ينتَضِلُ ، ومنَّا من هو في جَشَرِه ، إذ نادى منادي رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم: الصَّلاةَ جامعةً، فاجتمَعْنا إلى رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم،

 فقال: إنَّه لم يكُنْ نبيٌّ قبلي إلَّا كان حَقًّا عليه أن يَدُلَّ أمَّتَه على خيرِ ما يعلَمُه لهم، ويُنذِرَهم شَرَّ ما يعلَمُه لهم،

 وإنَّ أمَّتَكم هذه جُعِل عافيَتُها في أوَّلِها، وسيُصيبُ آخِرَها بلاءٌ وأمورٌ تُنكِرونَها، وتجيءُ فِتنةٌ فيُرَقِّقُ بعضُها بعضًا ، وتجيءُ الفتنةُ فيقولُ المؤمِنُ: هذه مُهلِكَتي! ثمَّ تنكَشِفُ، وتجيءُ الفتنةُ فيقولُ المؤمِنُ: هذه هذه! فمَن أحَبَّ أن يُزحزَحَ عن النَّارِ، ويُدخَلَ الجنَّةَ، فلْتَأتِه منيَّتُه وهو يؤمِنُ باللهِ واليومِ الآخِرِ، 

ولْيَأتِ إلى النَّاسِ الذي يحِبُّ أن يُؤتى إليه،

ومن بايَعَ إمامًا فأعطاه صَفقةَ يَدِه، وثَمَرةَ قَلْبِه، فلْيُطِعْه إن استطاع، فإن جاء آخَرُ ينازِعُه فاضرِبوا عُنُقَ الآخَرَ، فدَنَوتُ منه) ؛ ففي هذا الحديثِ بَيَّنَ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم أنَّ الأنبياءَ قَبلَه قد أدَّوا أمانةَ التَّبليغِ لأُمَمِهم، وأنَّ كُلَّ نبيٍّ دَلَّ أمَّتَه على خيرِ ما يعلَمُه لهم، وأنذَرَهم شرَّ ما يعلَمُه لهم، ثمَّ أدى نبيُّنا صلَّى اللهُ عليه وسلَّم هذه الأمانةَ أيضًا، فبلَّغَنا ما هو خيرٌ لنا، وحذَّرَنا ما هو شرٌّ لنا، وبيَّن أنَّ هذه الأمَّةَ عافيتُها في أوَّلِها؛ لأنَّهم على الكتابِ والسُّنَّةِ، ثمَّ عَلَّمَنا أنَّ من أراد أن ينجوَ ويُزحزَحَ عن النَّارِ، ويُدخَلَ الجنَّةَ، فليستَمِرَّ على الإيمانِ حتَّى تأتيَه منيَّتُه وهو يؤمِنُ باللهِ واليومِ الآخِرِ، وأن يعامِلَ النَّاسَ بما يحِبُّ أن يعامِلوه به، وأن يُتِمَّ عَهْدَه للإمامِ الذي بايعَه وعاهَده .