07 மார்ச், 2019

ரஜப் மாத சிந்தனைகள்


நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் ரஜபு மாதம் வந்து விட்டால் இப்படி பிரார்த்திப்பார்கள் யா அல்லாஹ் எங்களுக்கு ரஜபிலும் ஷஃபானிலும் அபிவிருத்தி நல்குவாயாக ரமளானை அடையச் செய்வாயாக

நிச்சயமாக சுவனத்தில் ஒரு நதி உண்டு அதற்கு ரஜபு என்று பெயர் அந்த நதி பாலைவிட வெண்மையானது தேனைவிட மதுரமானது யார் ரஜப் மாதத்தில் ஒரு நாளாவது நோன்பு வைக்கிறாரோ அவருக்கு அந்த நதியில் இருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்

யார் ரஜப் மாத இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு வைக்கிறாரோ சொர்க்கத்தின் பழங்களிலிருந்து அல்லாஹ் அவருக்கு சுவைக்கச் செய்வோம் சுவனத்தின் பச்சை பட்டாடைகளையும் அவருக்கு உடுத்துவான்.

23 பிப்ரவரி, 2019

ரஹ்மத்- இறையருள்

அல்லாஹ்வுடைய கருணை ஒரு வினாடி இல்லையென்றால் இந்த உலகம் சுக்கு நூறாகிவிடும் இந்த உலகமும் சின்னாபின்னமாகிவிடும் .
அல்லாஹ்வுடைய ரஹ்மத் இந்த உலகத்தில் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் சூழ்ந்திருக்க வேண்டும் பொழிந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் இந்த உலகம் நிலைத்திருக்கும்
நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் ரமளானுடைய முதல் பத்தை ரஹ்மத்துடைய பகுதியாக வர்ணித்தார்கள்.
ரஹ்மத் என்றால் என்ன?

19 பிப்ரவரி, 2019

மக்தப் மதரசாக்களை நிலைப்படுத்துவோம்

சமுதாயத்தின் ஒழுக்கமும் முன்னேற்றமும் மக்தப் மதரஸாக்களிலிருந்து தான் உருவாகிறது.
பெற்றோர்களை மதிக்கும் பிள்ளைகளாக.. அவர்களுக்கு பணிவிடை செய்யும் பிள்ளைகளாக...  அனைவராலும் போற்றப்படும் பிள்ளைகளாக... அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்ற பிள்ளைகளாக உங்கள் பிள்ளைகள் உருவாக மதரசாக்களே அடிப்படை.