திக்ரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திக்ரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 செப்டம்பர், 2025

குறைந்த வார்த்தைகள் ! நிறைவான வெகுமதிகள்

 

مَن قَرَأَ بالآيَتَيْنِ [يعني : مَن قَرَأَ بالآيَتَيْنِ مِن آخِرِ سُورَةِ البَقَرَةِ في لَيْلَةٍ كَفَتَاهُ]

الراويأبو مسعود المحدثالبخاري المصدرصحيح البخاري
الصفحة أو الرقم : 5008 التخريجأخرجه مسلم (807) مطولاً باختلاف يسير

யார் சூரத்துல் பகராவின் கடைசி இரண்டு வசனங்களை இரவில் ஓதுகிறாரோ, அவருக்கு அவையே  போதுமானதாக இருக்கும்]

 

مَن قال: سُبْحانَ اللَّهِ وبِحَمْدِهِ، في يَومٍ مِائَةَ مَرَّةٍ؛ حُطَّتْ خَطاياهُ وإنْ كانَتْ مِثْلَ زَبَدِ البَحْرِ.

الراويأبو هريرة المحدثالبخاري المصدرصحيح البخاري
الصفحة أو الرقم : 6405 التخريجأخرجه البخاري (6405) واللفظ له، ومسلم (2691) مطولاً

 

"சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி" என்று ஒரு நாளைக்கு நூறு முறை கூறுபவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும், அவை கடல் நுரை போல இருந்தாலும் கூட.

 

 إذا مرَرتم برياضِ الجنَّةِ فارتَعوا قلتُ يا رسولَ اللهِ وما رياضُ الجنَّةِ قال المساجدُ قلتُ وما الرَّتْعُ يا رسولَ اللهِ قال سبحانَ اللهِ والحمدُ للهِ ولا إلهَ إلا اللهُ واللهُ أكبرُ

 

الراويأبو هريرة المحدثابن العربي المصدرعارضة الأحوذي
الصفحة أو الرقم : 7/59 التخريجأخرجه الترمذي (3509)، والبزار (9311)

 

நீங்கள் சொர்க்கத்தின் பூங்காக்களைக் கடந்து சென்றால், அவற்றில் மேய்ந்து கொள்ளுங்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே, சொர்க்கத்தின் பூங்காக்கள் எவை?” என்று கேட்டேன்.  பள்ளிவாசல்கள்” என்று கூறினார்கள். நான், “மேய்ச்சல் என்றால் என்ன” என்று கேட்டேன்.

“சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்” என்று கூறுவதாகும். என்றார்கள்.

25 அக்டோபர், 2021

அல்லாஹ்வின் நினைவை விட்டும் கணப்பொழுதும் நீங்குவதா?

 

وفي الرسالة القشيرية عن بعضهم أنه دخل غيضة فوجد رجلاً يذكر الله تعالى وعنده سبع عظيم فقال ما هذا قال سألت الله أن يسلط علي كلباً من كلابه إذا غفلت عن ذكره

ஒரு இறை நேசர் ஒரு தோட்டத்தில் நுழைந்தார். அங்கே ஒரு வணக்கசாலி அல்லாஹ்வை விடாமல் திக்ரு செய்துகொண்டே இருந்தார்.

ஆனால் அவருக்கு அருகில் ஒரு பிரமாண்டமான வன விலங்கு ஒன்று இருக்கிறது.

 

 இது என்ன என்று இவர் கேட்டார். அவர் சொன்னார் : "நான் அல்லாஹ்வை அனுதினமும் தியானித்து வருகிறேன். சிறிது நேரம் அவனுடைய நினைவை விட்டு நான் மறந்துவிட்டால் கூட அல்லாஹ்வுடைய விலங்குகளில் ஒரு விலங்கை என்மீது சாட்டுமாறு அவனிடத்தில் கேட்டிருக்கிறேன் அதுதான் இது.

 

حكاية: قال بعض الصالحين رأيت صياداً بالهند كلما صاد سمكة دفعها إلى ابنة له فترسلها في الماء وهو لا يعلم فلما فرغ جاء فلم يجد شيئاً فسألها عن ذلك قالت سمعتك تقول عن النبي صلى الله عليه وسلم لا تقع سمكة في شبكة إلا إذا غفل عن ذكر الله فكرهت أن تأكل شيئاً غفل عن ذكر الله وقيل أنها كانت السمكة تسبح في يدها فقالت البنت ما دفعت إلي سمكة إلا وسمعتها تقول سبحان الله فقطع الشبكة وتاب عن الصيد

 

 

ஒரு இறை நேசரின் வாக்குமூலம் இது:

 

இந்தியாவில் ஒரு  நான் மீனவரைப்பார்த்தேன். அவர் மீன் பிடித்து தன் மகளுக்கு அருகில் போடுகிறார். ஆனால் அவள் அதை கூடையில் சேகரிப்பதற்குப் பதிலாக கடலிலே மறுபடியும் தூக்கி தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தாள்.

 இதை அவர் கவனிக்கவில்லை மீன் பிடித்து முடிந்ததும் திரும்பிப்பார்த்துமீன் எல்லாம் எங்கே என்று கேட்டார் 

அதற்கு அவள் சொன்னாள் : எந்த ஒரு மீன் வலையில் அகப்பட்டாலும் அந்த வினாடியில் அல்லாஹ்வுடைய திக்ரை விட்டு அது மறந்து இருக்கும்பொழுது தான் வலையில் அல்லது தூண்டிலில் அகப்படுகிறது  என்று ஏந்தல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நீங்கள் தானே எனக்கு ஹதீஸ் அறிவித்தீர்கள்? அல்லாஹ்வுடைய திக்ரை விட்டும்- நினைவை விட்டும்- மறந்திருந்த நிலையில் பிடிபட்ட ஒரு மீனை நான் சாப்பிடுவதா அதனால்தான் மறுபடியும் அதை கடலிலேயே விட்டேன் என்று கூறினாள்.

இது அல்லாஹ் மீது இருக்கிற பிரியத்தின் உச்சகட்டம்.

 மற்றபடி மீன் சாப்பிடுவது மார்க்கத்தில் ஒன்றும் தடையில்லை.

 

 ஆனால் சிலர் அல்லாஹ் மீது இருக்கிற அளவிலா அன்பின் காரணமாக பக்தியின் உச்சத்தில் இப்படி செய்வார்கள் அது நமக்கு பொதுவான சட்டம் இல்லை.

 

உதாரணமாக ஒரு தோழர் மதினாவிற்கு வந்தார்.

 மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை கண்டார்.

 அதற்குப் பிறகு இப்படி பிரார்த்தித்தார். " அல்லாஹ்வே அண்ணல் நபி அவர்களை கண்ட இந்த கண்ணால் இனி வேறெதையும் காணக்கூடாது எனவே என் கண்களை குருடாக்கி விடு !"  

 

அந்த வினாடியே அவரது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை வரலாற்றில் பார்க்கிறோம்.

 

15 அக்டோபர், 2013

மன ஓர்மையும் மகத்தான வெற்றியும்

மன ஓர்மை இருந்தால் வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் மகத்தான வெற்றி பெறலாம்.
வாழ்வின் இறுதிவரை இமாலய வெற்றி கிடைக்கும் .
அப்படி வெற்றி பெற்ற மாமனிதர்களின் வரலாற்றுத் துணுக்குகள்...
மகாத்மா காந்தியின் மன ஓர்மை ...
இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி புத்தகத்தில் காட்டிய மன ஓர்மை...
யூசுப் நபி யின் அழகிய வரலாற்றின் சிறு துணுக்கு..
மரண நேரத்தில் கூட வேதனை இன்றி எளிமையாக உயிர் பிரிய என்ன வழி?
இன்னும் இத்தியாதி.....
கேட்க ..பதிவிறக்கம் செய்ய...


21 மே, 2013

என்னை நீங்கள் நினையுங்கள்; உங்களை நான் நினைக்கிறேன்

மலடி கூட மன்றாடிக் கேட்டால் மழலைச் செல்வம் உண்டு:
மூஸா அலை அவர்களிடம் ஒரு பெண் வந்து குழந்தைக்காக துஆ செய்யும்படி வேண்டினாள். நபி துஆ செய்தார்கள் அல்லாஹ் கூறினான் : அவள் ஒரு மலடி என்று நான் ஏற்கனவே எழுதிவிட்டேன் என்றான். ஒரு ஆண்டு கழிந்து மீண்டும் வந்து துஆ செய்யும்படி வேண்டினாள் . மீண்டும் அதே பதில் இறைவனிடம்.
அடுத்த ஆண்டு அதே பெண் கையில் குழந்தையோடு வந்தபோது இது யாருடைய குழந்தை என்று கேட்டார்கள். என்னுடையதுதான் என்றாள்.