உலக அழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலக அழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
24 ஏப்ரல், 2013
20 டிசம்பர், 2012
அறிஞர்களின் மறைவும் அகிலத்தின் அழிவும்
நாடறிந்த பேச்சாளர், ஆன்மீகம், அரசியல் சகல துறைகளிலும் முதிர்ச்சி பெற்ற ஞானி,காயல்பட்டணம் மஹ்லரா அரபிக்கல்லூரி முதல்வர் கடையநல்லூர் S.S.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள் இன்று 20.12.121 இரவு 2.00 மணியளவில் சென்னை வேளச்சேரி விஜயா மருத்துவமனையில் மரணமடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
சமீப காலமாகவே அறிவிற் சிறந்த ஆன்றோர்கள் மூத்த உலமாக்கள் பலரும் அடுத்தடுத்து இறையடி சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். பண்பட்ட அறிஞர்கள் பலரும் மறைந்துகொண்டே இருப்பது ஆழ்ந்த துயரை உண்டாக்கி இருக்கிறது۔
அது குறித்து ஒரு கட்டுரை:
19 டிசம்பர், 2012
எரிமலை எப்படி பொறுக்கும்?
உலக அழிவு எப்போது?
அதைத் தெரிந்துகொள்வதில்தான் மக்களுக்கு எவ்வளவு ஆர்வம்?
இன்று இணையமே திணறித் திக்குமுக்காடிப்போயிருக்கும் அளவிற்கு மக்களால் அதிகம் தேடப்படுவது இது குறித்துதான்.
சமீபகாலமாக மக்கள் உலக அழிவு குறித்து அதிர்ச்சியிலும் அதை அறிந்துகொள்வதில் ஆர்வத்திலும் ஆழ்ந்துபோயிருப்பதற்கு என்ன காரணம்?
02 நவம்பர், 2012
ஆது சமுதாயமும் அமெரிக்க அபாயமும்
சாண்டி புயல்-ஆண்டிப் பயல்
சாண்டி புயல், அமெரிக்காவின் கடற்கரையோர நகரங்களை நிலைகுலையச் செய்துள்ளது. 13 அடி உயரத்துக்கு மேல் எழும்பிய அலைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றால்,
28 ஆகஸ்ட், 2012
தொடர் நிலநடுக்கங்கள்,சோதனைகள்
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்:
உலக அழிவுக்கு நெருக்கமாக தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படும். சோதனைகள் பெருகும்.
لا تـقـوم السـاعـة حـتـى يـقـيـض العـلم و تـكـثـر الزلزال و تكثر الفتن و يظهر الهرج و المرج و تكثر فيكم الاهـواء و يـخـرب العـامـر و يـعـمـر الخـراب و يـكـون خـسـف بـالمـشرق و خسف بالمغرب و خسف بجزيرة العرب و تطلع الشـمـس مـن مـغـربـهـا و تـخـرج الدابـة و يـظـهـر الدجـال و يـنـتـشـر يـاءجـوج و مـاءجـوج و ينزل عيسى بن مريم فهناك تاءتى ريح من جهة اليمن الين من الحرير فلا تدع احدا فيه مثقال ذرة من الاءيمان الا قبضته و انـه لا يـقـوم السـاعـة الا عـلى الاشـرار ثـم تـاتى نار من قبل عدن تسوق ساير من علا الارض تحشرهم .
கலிபோர்னியாவில் 100 சிறு நிலநடுக்கங்கள்: அதிர்ச்சியில் மக்கள்
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தென் கிழக்கு
பகுதியில் அடுத்தடுத்து 100 சிறு நிலநடுக்கங்கள்
ஏற்பட்டதால், மக்கள் அதிர்ச்சியில்
உறைந்துள்ளனர்.
கலிபோர்னியாவின் தென்
கிழக்கு பகுதியில் எல் சென்ட்ரோ என்ற இடத்தின் வடக்கு பகுதியில், உள்ளூர் நேரப்படி கடந்த 26ஆம் திகதி காலை 10.02 மணிக்கு முதல் நில நடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவில்
3.9 என பதிவானது.
இதன்பின் தொடர்ந்து
100க்கும் மேற்பட்ட சிறு நில
அதிர்வுகள் ஏற்பட்டன. இதில் 30 நில அதிர்வுகள் ரிக்டர்
அளவில் குறைந்தபட்சம் 3.5 என்ற அளவில் பதிவாகின.
மிக அதிகபட்சமாக பராவெலி
நகரின் வடமேற்கு பகுதியில் மையம் கொண்டிருந்த நிலநிலக்கம் ரிக்டர் அளவில் 5.5 என பதிவானது.
இந்த தொடர் நில அதிர்வுகளால்
மக்கள் பெரிதும் பீதியடைந்தனர். நடமாடும் வீடுகளில் வசித்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
உணவகங்கள், கடைகளில் அடுக்கி
வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கீழே விழுந்து சேதம் அடைந்தன.
ஜப்பானில் பயங்கர சூறாவளி
( திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2012, )
ஜப்பானில் பயங்கர சூறாவளி புயல் வீசுவதால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் சூறாவளி புயல் மையம் கொண்டுள்ளது.
ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் சூறாவளி புயல் மையம் கொண்டுள்ளது.
- மணிக்கு 252 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசுவதால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
- ஒகினாவா தலைநகர் நாகாவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- மேம்பாலத்தில் ரயில் மற்றும் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மின்கம்பங்கள் சாய்ந்து ஒயர்கள் துண்டிக்கப்பட்டதால், இந்த நகரம் இருளில் மூழ்கியுள்ளது.
- சூறாவளி காற்றுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் முதியவர் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இதுவரை நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
காற்றின் வேகம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் நாகா நகரில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கடலில் 13 மீற்றர் உயரத்துக்கு அலைகள் எழும்பி ஆர்ப்பரிக்கின்றன. இதனால் கப்பல்கள் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
28 ஏப்ரல், 2012
ஆண்கள் குறைகிறார்களா?
அண்ணல் நபி (சல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்த அழிவு நாளின் அடையாளங்களில் ஒன்று:
إن من أشراط الساعة أن يرفع العلم، ويكثر الجهل، ويكثر الزنى، ويكثر شرب الخمر، ويقل الرجال، ويكثر النساء، حتى يكون لخمسين امرأة القيم الواحد
கடைசி காலத்தில் ஐம்பது பெண்களுக்கு ஒரு தரமான ஆண் என்ற விகிதத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்என்பது.
இதை நையாண்டி செய்து பல இணைய தளங்களில் கேள்விக் கனைகளை தொடுத்திருந்தார்கள்.
1.இதுவரைக்கும் இந்த முன்னறிவிப்பு உண்மையாகவில்லையே.. அப்படியென்றால் எப்பொழுதான் வரும்?
2.அப்படி ஏற்படுவதாக இருந்தால் இரண்டாவது உலகப் போரின்போதே ஏற்பட்டிருக்கவேண்டுமே. ஏனெனில் அதில் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பலியாகினர். அதில் பெரும்பாலும் பலியானது ஆண்கள்தான். அப்பொழுது இந்த 50/1 என்ற விகிதாச்சாரம் ஏற்படவில்லையே?
ஏதோ ஒரு சில நாடுகளில் மட்டும் ஒரு சின்ன மாற்றம் நிகழ்ந்தது. உதாரணமாக அல்மானியா. 6 மில்லியன் அல்மானியர்கள் கொல்லப்பட்டதால் அங்கே மட்டும் 1/3 என்ற விகிதாச்சாரத்தில் ஆண்களின் எண்ணிக்கை இருந்தது.
3. அதுமட்டுமல்ல .தற்பொழுது சீனா போன்ற நாடுகளில் தீவிர கருத்தடை சட்டத்தால் ஒரே ஒரு ஆண் குழந்தையுடன் அவர்கள் கருத்தடை செய்து கொள்வதால் அங்கே ஆண்களின் விகிதாச்சாரமே அதிகமாகியிருக்கிறது.
4.இனி மூன்றாவது உலகப் போர் வந்து பயங்கர அழிவு ஏற்பட்டாலும் அப்பொழுதுகூட ஆண் பெண் வித்தியாசமில்லாமல் அனைவரும்தான் அழிவார்கள். காரணம் அணுகுண்டுகளுக்கு ஆண் பெண் வித்தியாசம் பார்க்கத் தெரியாது. அப்படியிருக்க எப்படி இந்த முன்னறிவிப்பு சாத்தியாமாகும்?
இப்படி அடுக்கடுக்கான கேள்விகள்.. விமர்சனங்கள்.
அவற்றுக்கு நம் அறிஞர்களும் தக்க பதில் தந்துகொண்டுதான் இருந்தார்கள்.
Dr.ஜாகிர் நாயிக் அவர்களின் பதில்:
உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது.
- அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் – பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது நாம் அறிந்த செய்தி.
- அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும்.
- ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும்.
- ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும்.
- உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் எத்தனை கோடி பெண்கள் ஆண்களைவிட அதிகம் என்பதை அறிந்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே.
- அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்களை விட 7.8 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர்.
நமது பதில்:
நபியவர்களின் அந்த அறிவிப்பு
1. ஆண்கள் குறைவதையும் குறிக்கும்
2. ஆண் தன்மை குறைவதையும் குறிக்கலாம்.
நபியவர்களின் வார்த்தையை நன்கு கவனிக்கவேண்டும்.
حتى يكون لخمسين امرأة القيم الواحد
50 பெண்களுக்கு 1 தரமான ஆண்மை நிறந்த ஆண் என்ற விகிதாச்சாரம் ஏற்படும்.இதை உண்மைப் படுத்தும் விதத்தில் இப்பொழுது ஒரு அதிர்ச்சியான ஆய்வறிக்கை ஒன்று இணையங்களில் வெளியாகியுள்ளது. அது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பை அப்படியே உண்மைப் படுத்துவதாக உள்ளது. நையாண்டி செய்த அதிமேதாவிகளின் அகல வாயை அடக்கி ஒடுக்கவதாக அமைந்துள்ளது.
பல வெப்சைட்டுகளிலும் வெளியாகியுள்ள அந்த அதிர்ச்சியான தகவல் என்ன?
இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதையும் இது கட்டுப்படுத்தப்பட வில்லையானால் 50 ஆண்டுகளில் போதிய விந்தணுக்கள் உள்ள மனிதர்களே இருப்பதே கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விந்தணு குறைபாட்டுக்கு காற்று மாசுபடுதல், ஜங்க் உணவுகள், சுற்றுப்புற மாசு, உடல் பருமன், ஸ்டரஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி புகைத்தல், குடித்தல், உடல் பருமனோடு நாம் உபயோகப்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலம் வெளியாகும் ஈஸ்ட்ரோஜனை ஒத்த வேதியியல் பொருட்கள் மூலமும் விந்தணுக்கள் குறைகின்றன என்கிறது.
இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் பார்கவா, சராசரியாக ஓராண்டுக்கு 2% ஆண்களுக்கு போதுமான விந்தணு குறைந்து கொண்டே வருகிறது என்றும் இப்படியே போனால் 50 ஆண்டுகளில் போதுமான விந்தணு கொண்ட ஆண்களை பார்ப்பதே அபூர்வம் என்கிறார். மேற்கத்திய நாடுகளில் விந்தணு வீழ்ச்சி 90களிலேயே உணரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ள பார்கவா ஹைதரபாத்தை சேர்ந்த தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண் விகிதம் குறையும் என்பதை இன்னொரு கண்ணோட்டத்தில் பார்ப்போம்:
ஒரு பெண், கருத்தரிக்கும் போது அது ஆண் குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ ஆகுவதற்கு அவளுடைய கனவனின் உயிரணுவே காரணம்: மனைவி காரணமல்ல என்பது தற்கால அறிவியல் ஆராய்ச்சியின் முடிவு.
பெண்ணின் சினை முட்டையில்X X உயிரணுக்கள் உள்ளன. ஆணின் இந்திரியத்தில் Y Xஅணுக்கள் உள்ளன.
X குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் X குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-X என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் முலம் பெண் குழந்தையாக உருவாகின்றது. (X-X என்ற குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் பெண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக் கொண்டது)
X குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் Y குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-Y என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் முலம் ஆண் குழந்தையாக உருவாகின்றது. (X-Y என்ற குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் ஆண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக் கொண்டது)
இதை இப்படியும் புந்துக் கொள்ளலாம்:
- பெண்ணின் சினை முட்டையுடன் - கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் X குரோமோசோம் உடைய உயிரணு சேர்ந்தால் பெண் குழந்தையாக உருவாகிறது.
- பெண்ணின் சினை முட்டையுடன் - கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் Y குரோமோசோம் உடைய உயிரணு சேர்ந்தால் ஆண் குழந்தையாக உருவாகிறது.
இந்த அறிவியல் கண்டுபிடிப்பை 1400 ஆண்டுகளுக்கு முன்பே அல்குர்ஆன் கூறிவிட்டது
"இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் - (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு" (அல் குர்ஆன் 53:45-46)
ஆக, ஆண்குழந்தையை முடிவு செய்யும் Y உயிரணுக்கள் ஆணிடமே உள்ளன.
அந்த விந்தணுக்கள் இன்னும் சில வருடங்களில் கணிசமாக குறையும் என்று ஆய்வுகள் கூறுவதால் ஆண்குழந்தை பிறப்பும் கணிசமாக குறைவதற்கான வாய்ப்புள்ளது.
விந்தணுக்கள் பழைய படி மனிதனிடத்தில் வளமாய் இருக்க வேண்டுமெனில் மனிதன் இயற்கையான வாழ்வுக்கு திரும்ப வேண்டும்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதைப்போல மண்ணில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்குவதாக கூறியுள்ளார். மண் மலடானால், மனிதர்களும் மலடாவார்கள் என்று கூறி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
என்ன பிரச்சாரம் செய்தாலும் உபதேசங்களை வெறுக்கும் மக்கள் அதிகமாகும் இந்த காலத்தில் இந்த பிரச்சாரங்கள் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரப் போவதில்லை. மது, சூதாட்டம் விபச்சாரம். லஞ்ச லாவண்யம் இவற்றை எதிர்த்தும் பிரச்சாரம் நடக்கத்தான் செய்கிறது. அதனால் இவை குறைந்தாவிட்டதா என்ன? எனவே முழுஆண்மையுள்ளவர்கள் குறைந்து பெண்கள் அதிகமாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அல்லாஹ்வே அறிந்தவன்.
சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! அல்லது கீழ்காணும் தளங்களில் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே!
01 ஜனவரி, 2012
அழிவு நாளின் அடையாளங்கள்
أَنْ تَلِدَ الْأَمَةُ رَبَّتَهَا، وَأَنْ تَرَى الْحُفَاةَ الْعُرَاةَ الْعَالَةَ أَصْحَابَ الشَّاءِ يَتَطَاوَلُونَ فِي الْبُنْيَانِ
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பது. அதாவது தாய் மகளின் தயவில் வாழும் அவல நிலை ஏற்படுவதுநூல்: புகாரி 4777, 50
பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது,
ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி
வாழ்வார்கள் ( புகாரி)
குடிசைகள் கோபுரமாகும்
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَطَاوَلَ النَّاسُ بِالْبُنْيَانِ
இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர்.
இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டார்கள்.
நூல் : புகாரி 7121விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்
مِنْ أَشْرَاطِ السَّاعَةِ، أَنْ يَقِلَّ الْعِلْمُ، وَيَظْهَرَ الْجَهْلُ، وَيَظْهَرَ الزِّنَا،
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் (புகாரி 80, 81, 5577, 6808, 5231)
கொலைகள் பெருகுதல்
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْكَذِبُ، وَيَتَقَارَبَ الْأَسْوَاقُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَيَكْثُرَ الْهَرْجُ "، قِيلَ: وَمَا الْهَرْجُ؟ قَالَ: " الْقَتْلُ "
கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் (புகாரி 85, 1036, 6037, 7061)
தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
فَإِذَا ضُيِّعَتِ الْأَمَانَةُ فَانْتَظِرِ السَّاعَةَ، قَالَ: كَيْفَ إِضَاعَتُهَا؟ قَالَ: إِذَا وُسِّدَ الْأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرِ السَّاعَةَ "
அமானிதம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபிகள்
நாயகம் அவர்கள் கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர்
கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு
காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று
விடையளித்தார்கள்.
நூல் : புகாரி 59, 6496
பாலை வனம் சோலை வனமாகும்
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضَ، حَتَّى يُهِمَّ رَبَّ الْمَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ، وَحَتَّى يَعْرِضَهُ، فَيَقُولَ الَّذِي يَعْرِضُهُ عَلَيْهِ لَا أَرَبَ لِي
செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும்
கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது
நூல் : முஸ்லிம் 1681
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَقَارَبَ الزَّمَانُ فَتَكُونُ السَّنَةُ كَالشَّهْرِ، وَالشَّهْرُ كَالْجُمُعَةِ، وَتَكُونُ الْجُمُعَةُ كَالْيَوْمِ، وَيَكُونُ الْيَوْمُ كَالسَّاعَةِ، وَتَكُونُ السَّاعَةُ كَالضَّرَمَةِ بِالنَّارِ
காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று)ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒருவிநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.நூல் : திர்மிதீ 2254)
நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ وَتَكْثُرَ الزَّلَازِلُ۔۔۔
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَرَوْا عَشْرَ آيَاتٍ: طُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، وَيَأْجُوجَ وَمَأْجُوجَ، وَالدَّابَّةَ، وَثَلَاثَةَ خُسُوفٍ: خَسْفٍ بِالْمَشْرِقِ، وَخَسْفٌ بِالْمَغْرِبِ، وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ، وَنَارٌ تَخْرُجُ مِنْ قَعْرِ عَدَنَ تَسُوقُ النَّاسَ أَوْ تَحْشُرُ النَّاسَ، فَتَبِيتُ مَعَهُمْ حَيْثُ بَاتُوا، وَتَقِيلُ مَعَهُمْ حَيْثُ قَالُوا
பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ
( நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,12079, 12925, 13509.)
நெருக்கமான கடை வீதிகள்
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْكَذِبُ، وَيَتَقَارَبَ الْأَسْوَاقُ
கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்நூல்: அஹ்மத் 10306
பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
وَتَكْثُرَ النِّسَاءُ، وَيَقِلَّ الرِّجَالُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ
பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின்அடையாளமாகும்
நூல்: புகாரி 81, 5231, 5577, 6808
ஆடை அணிந்தும் நிர்வாணம்
رب كاسيات عاريات
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல்தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.
நூல் : முஸ்லிம் 3971, 5098
உயிரற்ற பொருட்கள் பேசுவது
وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُكَلِّمَ السِّبَاعُ الْإِنْسَ، وَيُكَلِّمَ الرَّجُلَ عَذَبَةُ سَوْطِهِ، وَشِرَاكُ نَعْلِهِ، وَيُخْبِرَهُ فَخِذُهُ بِمَا أَحْدَثَ أَهْلُهُ بَعْدَهُ
விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு
வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது
நூல்: அஹ்மத் 11365
பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ قَوْمٌ يَأْكُلُونَ بِأَلْسِنَتِهِمْ، كَمَا يَأْكُلُ الْبَقَرُ بِأَلْسِنَتِهَا
தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும்வரை யுக முடிவு நாள் ஏற்படாது .நூல்: அஹ்மத் 1511
சாவதற்கு ஆசைப்படுதல்
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ بِقَبْرِ الرَّجُلِ، فَيَقُولَ: يَا لَيْتَنِي مَكَانَهُ،
இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது (புகாரி 7115, 7121)
இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْبَعِثَ دَجَّالُونَ كَذَّابُونَ قَرِيبٌ مِنْ ثَلَاثِينَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ
ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது ( புகாரி 3609, 7121)முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்
'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள்
பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால்
நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது
யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான்
குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள்.( புகாரி 3456)
யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا الْيَهُودَ حَتَّى، يَقُولَ: الْحَجَرُ وَرَاءَهُ الْيَهُودِيُّ يَا مُسْلِمُ هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ
யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த
யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன்
ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும் .( புகாரி 2926)
கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்' ( புகாரி 5179)
யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்
காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி. (புகாரி 7119)
கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ رَجُلٌ مِنْ قَحْطَانَ يَسُوقُ النَّاسَ بِعَصَاهُ "
(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால்
மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது
(புகாரி 3517, 7117)
செல்வம் பெருகும்
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضَ، حَتَّى يُهِمَّ رَبَّ الْمَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ، وَحَتَّى يَعْرِضَهُ، فَيَقُولَ الَّذِي يَعْرِضُهُ عَلَيْهِ لَا أَرَبَ لِي
செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது (۔புகாரி 1036, 1412, 7121)
ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்
கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று
எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான். ( புகாரி 1424)
மாபெரும் யுத்தம்
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَقْتَتِلَ فِئَتَانِ دَعْوَاهُمَا وَاحِدَةٌ
இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள். ( புகாரி 3609, 7121, 6936)
பைத்துல் முகத்தஸ் வெற்றி
யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!
1. எனது மரணம்
2. பைத்துல் முகத்தஸ் வெற்றி
3. கொத்து கொத்தாக மரணம்
4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்
திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு
5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்
6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.
அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12ஆயிரம் பேர் இருப்பார்கள். புகாரி 3176
மதீனா தூய்மையடைதல்
துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்
தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது
(நூல் : முஸ்லிம் 2451)
அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை
யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்
இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும (முஸ்லிம் 3546)
மாபெரும் பத்து அடையாளங்கள்
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி

4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது
நூல்: முஸ்லிம் 5162.
அல்லாஹ் நம் அனைவரையும் இந்த சோதனைகளிலிருந்து பாதுகாப்பானாக. ஆமீன்!
----------------------
இது தொடர்பான பிற பதிவுகள்
30 டிசம்பர், 2011
2012ல் உலகம் அழியப்போகிறதா?
டிசம்பர் 21, 2012
ஏங்க…..உங்களுக்கு தெரியுமா டிசம்பர் 21, 2012 அன்னிக்கு உலகம் அழியப்போகுதாமே? அப்படின்னு உங்ககிட்ட யாராவது சொன்னா…..அடக்கொடுமையே அப்படியா? ஐய்யையோ….நான் இன்னும் ஒன்னுமே அனுபவிக்கலியே ! அப்படின்னு பொலம்புர கூட்டத்துல ஒருத்தரா இருப்பீங்களா இல்ல, ஆஹா….ஆரம்பிச்சிட்டாய்ங்கடா திரும்பவும்! ஏண்டா நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா? அதான் 2000-துல ஒருமுற இப்படியெல்லாம் பிட்டப்போட்டு படுத்திட்டீங்களேடா….அது போதாதா? அப்படின்னு கடுப்பாகிற கூட்டத்துல ஒருத்தரா இருப்பீங்களா? நீங்க எந்தக் கூட்டத்துல ஒருத்தரா இருந்தாலும் சரி, 2012-ல உலகம் அழியப்போகுதுன்னு ரொம்ப நாளா ஒரு பிட்டு, இன்டர்னெட்டுள சுத்திகிட்டு இருக்குங்கோவ்!
இது ஒரு புரளி….புரளி….புரளி மட்டுமே! அப்படின்னு நான் சொல்லலீங்க! இந்த புறளியப்படிச்சுட்டு/பார்த்துட்டு உலக மக்கள்ல பல பேரு நாசாவைச் சேர்ந்த, உலகின் தலைசிறந்த விண்வெளி ஆய்வாளர் டேவிட் மோரிசனுக்கு மின்னஞ்சல் மழையா பொழிஞ்சாங்களாம்! அந்த மின்னஞ்சல் மழையில் தொப்பலா நனஞ்சி?! இம்ச தாங்காம இந்த புறளியில என்னதான் இருக்குன்னு கண்டுபிடிக்க ஒரு ஆய்வையே மேற்கொண்டதாகச் சொல்றாரு மோரிசன்.அந்த ஆய்வின் மூலம்தான் அது வெறும் புரளின்னு கண்டுபிடிச்சிருக்கார் அவர்!
சரி, அப்படி என்னதான் அந்த புரளின்னு கொஞ்சம் வெளக்கமாப் பார்போம் வாங்க. அதாவது, சமீபத்துல திடீர்னு இணையதளத்துல ஒரு புரளி கெளம்புச்சி. அது என்னன்னா, மாயன் நாள்காட்டி அப்படின்னு ஒரு நாள்காட்டி இருக்காம்.அந்த நாள்காட்டி இப்பொ நாம் பயன்படுத்துற “க்ரிகோரியன் காலண்டர்” மாதிரி இல்லையாம்.அது கிட்டத்தட்ட மூனு நாள்காட்டி ஒன்னா சேர்ந்த நாள்காட்டியாம் (சொல்லப்போனா இன்னும் நெறைய பிட்ட போடராங்கோ….!).இந்த மாயன் காலண்டர்லதான் டிசம்பர் 21, 2012 அன்னிக்கு உலகம் அழியப்போகுதுன்னு போட்டிருக்காம்.அதாவது, ஒரு பெரிய விண்வெளிக்கல் தாக்கி நம்ம பூமி சுக்கு நூறா ஒடஞ்சி தூள் தூளாகப் போகுதாம்!?நன்றி: http://padmahari.wordpress.com
மாயன் காலண்டர் யென்பது என்ன? மாயர்கள் உருவாக்கியது மாயன் காலண்டர். கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தென் அமெரிக்காவில் வாழ்ந்த மக்கள். கட்டிடக்கலை, வானசாஸ்திரத்தில் வல்லவர்கள். கணித சூத்திரங்களில் கைதேர்ந்தவர்கள்.மாய மந்திரங்களில் மன்னர்கள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு: மாயன் காலண்டர்.
நுட்பமான கணிதவியல் பரிணாமங்களைக் கொண்டு துல்லியமாக வகுக்கப்பட்டுள்ளதாக நம்பப் படுகிறது.ஆனால், அந்த காலண்டர் கி.மு.3113-ல் தொடங்கி கி.பி. 2012-ல் முடிகிறது. இதுதான் இப்போது ஒரு பெரும் புயலை எழுப்பியுள்ளது. கணிதக்கலையில் கைதேர்ந்த திறமைவாய்ந்த மாயர்கள் 2012 வுடன் ஏன் காலண்டரை முடித்தார்கள்? அப்படியானால் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது: 2012 உலகம் அழியப்போகிறது என்று. இப்படி ஒரு கதையை சிலர் ஜோடித்திருக்கிறார்கள்.இப்படித்தான் பீதியைக் கிளப்பி, எல்லோருக்கும் பேதியை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இண்டர்நெட் சைட்களில்.
உண்மை என்ன?
மாயன் எழுதிய காலண் டரின் தொடர்ச்சி கிடைக்காமற்போயிருக்கலாம். அல்லது காலண்டரின் தொடர்ச்சியை ஆரம்பிக் கும்முன் மாயன்மறைந்திருக்கலாம். யுத்தம் போன்ற காரணங்களால் காலண்டரைத் தொடர்ந்துகணிப்பதில் இடையூறை சந்தித்தி ருக்கலாம்.
சிலர் பைபிளில் ஆதரம் இருப்பதாக கூறுகிறார்கள் உன்மையில் பைபிளில் 2012 ஐப் பற்றி இல்லவே இல்லை
பைபிளில் என்னதான் உள்ளது?
''பூமியில் மிகப்பெரும் போர் நடக்கும். அந்தப் போரின் முடிவில், கடவுள் பூமிக்கு வந்து ஆயிரம் ஆண்டு பூமியை ஆள்வார், அதற்குப் பிறகு இறந்த அனைவரும் மறு உயிர் பெற்று நல்லவர்கள் சொர்க்கத்திற்கும் கெட்டவர்கள் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள்''. இதுதாங்க!
யார், எப்போது சொன்னது?
பைபிள் புத்தகங்களில் கடைசியாக உள்ளது 'திருவெளிப்பாடு (அ) வெளிப்படுத்தல்' (Revelation). இதை எழுதியவராகச் சொல்லப்படுபவர் 'ஜான்'. காலம், கி.பி.1 அல்லது 2 ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எப்படி 'நாஸ்ட்ராடமஸ்' என்பவர் பல முன்னறிவுப்புகளை சொல்லிவிட்டுச் சென்றதாகக் கூறுகிறார்களோ, அதேபோல் உலகத்தின் இறுதிநாட்களைப் பற்றி 'கடவுள் தனக்கு சொன்னதாக' இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கூறிக்கொள்கிறார். இதில் 17 - ம் அதிகாரத்தில் மேற்கண்ட இறுதிப் போர் நடப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இதற்கு முந்தைய அதிகாரங்களில் பல சம்பவங்கள் நடக்கும் என்றும் முன்னறிவித்திருக்கிறார் ஜான்.
முந்தைய 16 அதிகாரங்களில் சொல்லப்பட்ட விசயங்கள் நடந்தால் மட்டுமே 17-ம் அதிகாரத்தில் வரும் விசயத்தையும் நாம் நடக்கும் என்று நம்ப முடியும். முதல் பதினாறு அதிகாரத்தில், ஏழு முத்திரைகளுள்ள சுருளேடு, புதிய இஸ்ரேல், ஏழு எக்காளம், அரக்கப்பாம்பும் இரு விலங்குகளும், நாடுகள் ஒன்றுதிரட்டப்படுதல்.... இப்படி பல விசயங்கள் நடக்கும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நடந்துவிட்டனவா? அல்லது நடந்துகொண்டிருக்கின்றனவா? என்று கேட்டால், அதற்குச் சரியான பதில் இல்லை.
1843 ஏப்ரல் 3
இது மாதிரியான பீதி 1843 லேயே கிளம்பிவிட்டது. கிளப்பியவர் ஒரு பாதிரியார். பெயர் வில்லியம் மில்லர்.
அவர் என்ன சொன்னார்?
1843 ஏப்ரல் 3-ஆம் தேதி உலகம் அழியப் போகிறது இது என் துல்லியமான கணிப்பு என்றார். அதை நம்புவது போல அந்த வருடம் ஒரு வால்நட்சத்திரமும் தெரிந்தது. இதை நம்பி பலர் இருக்கிற சொத்தையெல்லாம் விற்று பணமாக்கி ஜாலி பண்ணினார்கள்.பிறகு குறிப்பிட்ட தேதியில் இங்கிலாந்தின் மலைக் குன்றுகளில் ஏறி உலக அழிவை எதிர்நோக்கி நின்றிருந்தார்கள். இன்னும் சிலர் உலக அழிவைக் காணப் பயந்தும் பின்னர் சொர்க்கத்தில் இடம் இல்லாமல் போய்விடும் என்று எண்ணியும் முன்கூட்டியே தற்கொலை செய்துகொண்டனர். ஆனால் அவர் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை
இப்படித்தான் 1999ஆம் ஆண்டு முடிந்ததுமே உலகம் அழிந்துவிடும் என்று பலரும் டுமீல் விட்டுத் திரிந்தார்கள்.' நாஸ்ட்ரடாமஸ்' கணித்திருக்கிறார், அவரின் கணிப்பு பொய்யானதில்லை என்று அடித்துப் பேசினார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் பாகுபாடின்றி நடுநடுங்கி செத்தது உலகம். உலகம் தான் அழியப் போகிறதே என்ற எண்ணத்தில் பல்வேறு சமூகக் குற்றங்கள் நடந்தது. நம்மூர் கிராமப்புறங்களில் கூட இந்த பீதியைப் பயன்படுத்தி தென்னந்தோப்புகளிலும், கம்மாய்க்கரைகளிலும் பல பாலியல் குற்றங்கள் நடந்ததாக பத்திரிகைகளில் வாசித்திருக்கிறோம். 1999 முடிந்து எத்தனையோ வருடங்கள் கடந்துவிட்டது. நாமெல்லாம் செத்தா போய் விட்டோம்?
2126 ஆகஸ்டு 14
இன்னொரு கருத்து நிலவுகிறது: கி.பி.2126 ஆகஸ்டு 14-ந் தேதி உலகம் அழியப் போகிறது
இந்த கருத்தை சொல்லி இருப்பவர் சர்வதேச வானியல் ஆராய்ச்சி சங்கத்தின் நிபுணர் பிரையன் மார்ஸ்டென் என்பவர்.
அவர் கூறுவதென்ன?
ஒவ்வொரு ஆண்டும் 'ஸ்விப்டட்டில்' எனும் வால்நட்சத்திரம் பூமியைக் கடந்து செல்கிறது. வழக்கமான தனது பாதையில் சென்று கொண்டிருக்கும் இது 2126 ல் பூமிக்கு நேர்கோட்டில் வந்து பூமியில் பலமாக மோதும் அதனால் அணுகுண்டு வெடிப்பதைவிட பயங்கரமான பாதிப்புகள் ஏற்படும். பூமியில் பல மைல்களுக்கு பள்ளம் உண்டாகும். எரிமலைகள் வெடிக்கும். கடல் கொந்தளிக்கும் ஆறுகள் திசை மாறும். ஒட்டுமொத்தத்தில் உலகம் அழியும்.
இதில் நமது கருத்து என்ன?
நீங்கள் குறிப்பிடும் அந்த தேதியில் வால் நட்சத்திரம் மோதுவதோ பயங்கர நாசம் ஏற்படுவதோ நடந்தாலும் நடக்கலாம்.அதற்காக ஒட்டுமொத்த அழிவும் அப்போதுதான் என்பதை நிச்சயமாக சொல்ல முடியாது.
ஏனெனில் இன்ன தேதியில்தான் என்று அறுதியிட்டு உறுதியாக யாரும் கூறமுடியாது; கூரவும் கூடாது
- 5 விஷயங்களைப் பற்றி அல்லாஹ் ஒருவனே அறிவான்
مَفَاتِحُ الْغَيْبِ خَمْسٌ: إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ، وَيُنْزِلُ الْغَيْثَ، وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ، وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
- அழிவு நாள் எப்போது? என்று ஏந்தல் நபியிடம் வினவப்பட்டபோது அதன் அடையாளங்களைப் பற்றியே சொன்னார்கள்:
சிறு அடையாளங்கள்
إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ، وَيَثْبُتَ الْجَهْلُ، وَيُشْرَبَ الْخَمْرُ، وَيَظْهَرَ الزِّني
منْ أَشْرَاطِ السَّاعَةِ، أَنْ يَقِلَّ الْعِلْمُ، وَيَظْهَرَ الْجَهْلُ، وَيَظْهَرَ الزِّنَا، وَتَكْثُرَ النِّسَاءُ، وَيَقِلَّ الرِّجَالُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ "
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ وَتَكْثُرَ الزَّلَازِلُ وَيَتَقَارَبَ الزَّمَانُ وَتَظْهَرَ الْفِتَنُ وَيَكْثُرَ الْهَرْجُ وَهُوَ الْقَتْلُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضُ "
அறிவு ஞானம் குறைந்துவிடும்; அறியாமை பரவிவிடும்; விபச்சாரம் பெருகும்; ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகமாவர் இறுதியில் 50 பெண்களுக்கு 1 ஆண் என்ற விகிதம் நிலவும்.
பூகம்பம் அதிகமாகும் நேரம் சுருங்கும்; குழப்பங்கள் பெருகும் கொலை அதிகமாகும்
குடி கும்மாளம் தாராளமாகும் பயங்கர தீமைகள் கூட பட்டவர்த்தனமாக பகிரங்கமாக நடக்கும்
இது போன்ற ஏரளமான சிறு அடையாளங்களைப் பட்டியலிட்டார்கள் இவை அனைத்தும் தற்போது தாரளமாக நடக்கிறது.
பெரிய அடையாளங்கள்
بَلَغَ عَبْدَ اللَّهِ بْنَ سَلَامٍ مَقْدَمُ رَسُولِ اللَّهِ الْمَدِينَةَ فَأَتَاهُ، فَقَالَ: إِنِّي سَائِلُكَ عَنْ ثَلَاثٍ لَا يَعْلَمُهُنَّ إِلَّا نَبِيٌّ، قَالَ: مَا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ وَمَا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ وَمِنْ أَيِّ شَيْءٍ يَنْزِعُ الْوَلَدُ إِلَى أَبِيهِ وَمِنْ أَيِّ شَيْءٍ يَنْزِعُ إِلَى أَخْوَالِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ : " خَبَّرَنِي بِهِنَّ آنِفًا جِبْرِيلُ قَالَ فَقَالَ عَبْدُ اللَّهِ ذَاكَ عَدُوُّ الْيَهُودِ مِنَ الْمَلَائِكَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ : أَمَّا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ فَنَارٌ تَحْشُرُ النَّاسَ مِنَ الْمَشْرِقِ إِلَى الْمَغْرِبِ وَأَمَّا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ فَزِيَادَةُ كَبِدِ حُوتٍ وَأَمَّا الشَّبَهُ فِي الْوَلَدِ، فَإِنَّ الرَّجُلَ إِذَا غَشِيَ الْمَرْأَةَ فَسَبَقَهَا مَاؤُهُ كَانَ الشَّبَهُ لَهُ وَإِذَا سَبَقَ مَاؤُهَا كَانَ الشَّبَهُ لَهَا، قَالَ: أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ، "
அப்துல்லாஹ் இப்னு சலாம் ஆரம்பத்தில் ஒரு யூதப் பண்டிதர். நபியவர்கள் மதினா வந்திருக்கிரார்கள் எனக் கேள்விப் பட்ட அவர் உடனே விரைந்து வந்து நபியிடம் ''உங்களிடம் 3 வினாக்கள் வைப்பேன் அவைகளுக்கு நபியால்தான் விடை தர முடியும்
1.அழிவு நாளின் அடையாளங்களில் முதலாவது எது?
2.சொர்க்கத்தில் கொடுக்கப்படும் முதல் உணவு எது?
சில குழந்தை தாயின் உருவத் தோற்றத்தையும் சில குழந்தை தந்தையின் உருவத் தோற்றத்தையும் பெறுவது எவ்வாறு?
நபியவர்கள் பதில் தந்தார்கள்:
அழிவு நாளின் அடையாளங்களில் முதலாவது பயங்கரமான பெருந்தீ. அந்த தீ பரவி மக்களை கிழக்கிலிருந்து மேற்கு வரை துரத்தி ஒன்று சேர்க்கும்
இது போன்று இன்னும் சில அடையாளங்களையும் வேறு ஹதீசில் கூறியுள்ளார்கள்.
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا، فَإِذَا رَآهَا النَّاسُ آمَنَ مَنْ عَلَيْهَا، فَذَاكَ حِينَ لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا، لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ "
- இமாம் மஹ்தி (அலை) வருகை
- தஜ்ஜாலின் வருகை மற்றும் குழப்பம்
- அவனை அழிக்க இறைத் தூதர் ஈசா (அலை) வருகை அவர்களின் 40 ஆண்டு ஆட்சி
- யஃஜூஜ் மஃஜூஜ் யென்ற அதிசய மனிதர்கள் வருகை
- ஒரு மலைக் குன்றிலிருந்து அதிசய மிருகம் வெளிப்பட்டு மனிதர்களிடம் உரையாடுதல்
- மேற்கு திசையில் சூரியன் உதயமாகுதல்
இவை அனைத்தும் நடந்த பிறகுதான் உலகம் அழியும்
தற்பொழுது 2012-ல் உலகம் நிச்சயமாகஅழியாது என்பதில்தைரியமாக இருங்கள். ஆனால் வாழும் வரை இந்த பூமியைச் சரியான முறையில்வைத்திருக்க நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும். பூமியின் ஆயுளைக்குறைக்கும் வேலையைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் மரம்நடுவதும், இயற்கையைப் பேணுவதும், சச்சரவின்றி தியானம் செய்வதும், பகைமறப்பதும், தண்ணீரை அளவாகப் பயன் படுத்துவதும் அவசியமாகும்.
---------=---------------------------------------
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
இதுவரை அடியேனின் பார்வையில் பட்ட தளங்கள்.! இன்னும் இருந்தால் அதை கருத்துரையில் தெரிவித்தால் அவசியம் சேர்த்துக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ். ...
-
கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்.. நம் கன்மனியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள். மாதவ தூதர் முஹமது நபியின் மகளாக வந்து ப...
-
1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் ? அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் ப...


