அமெரிக்காவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்காவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 செப்டம்பர், 2012

ஆர்பாட்டத்தால் அதிர்ந்தது முகவை!

ramanathapuram
முஸ்லிம்களின் ஒற்றுமை தொடர்கிறது! முகவை அனைத்து ஜமாஅத் ஆர்பாட்டதால் அதிர்ந்தது !

2012 செப். 25 அன்று இராமநாதபுரம் நகரில் தமுமுக, எஸ்.டி.பி.ஐ, ஐ.என்.டி.ஜே , சுன்னத் ஜமாத்தார்கள் , அனைத்து உலமா பெருமக்கள், அனைத்து ஊர் ஜமாத்தினர்கள். இதர இஸ்லாமிய இயக்கங்கள், சங்கங்கள் ஆகியோர் இனைந்த இராமநாதபுரம் மாவட்ட அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் சார்பாக
இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான உன்னத நபி முகம்மது (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்தவர்களையும்
அதை கண்டிக்க மறுக்கும் அமெரிக்கர்களையும்
அந்த திரப்படத்தை வெளியிட்டுள்ள அனைத்து வலைத்தளங்களையும்
தடை செயய மறுக்கம் மத்திய அரசை கண்டித்தும் ஒரு மாபெரும் கண்டன பேரணியும் கண்டன பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

  • இராமநாதபுரம் நகர் கொல்லம்பட்டரை தெருவில் உள்ள இராமநாதபுரத்தின் மிக பழமையானதும் , முதல் பள்ளியுமான கொல்லம் பட்டறை பள்ளியில் இருந்து துவங்கிய இந்த பேரணிக்கு 
  • ஆலிம் கிராஅத் ஓத 
  • அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளரும் கொல்லம்பட்டறை தெரு ஜமாத் நிர்வாகியுமான ஜனாப் முத்தலிப் அவர்கள் துவக்கி வைத்தார்கள். 
  • பேரணியை வழி நடத்தும் விதமாக அனைத்து இயக்கத்தவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்த்தர்கள் , மாவட்டத்தின் அனைத்து ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள், அனைத்து இயக்க நிர்வாகிகள் வீர முழக்கமெழுப்பி கண்டன கோசங்களை உணர்ச்சி பொங்க ஒங்கி ஒலித்து வந்தார்கள். 

 மாவட்டமெங்கிலும் இருந்து இசுலாமிய வீர இளைஞர்கள் ஆர்ப்பரித்து வரலாறு காணாத வகையில் ஆயிரக்கணக்கில் கண்டன பதாகைகளை கையில் ஏந்தி சின்க்கடை வீதியெங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து அன்னல் நபியை இழிவு படுத்தியதை கண்டித்தும் மாநபியின் வீர வேங்கைகள் கோசம் எழுப்பி பேரணியாக தெருவெங்கும் நடந்து வந்தது இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கும் காணத சரித்திர சம்பவம்.

  • இன்று தங்கள் கண்டனங்களை பதிவு செய்யும் வகையில் இராமநாதபுரத்தில் உள்ள அனைத்து இசுலாமிய வியாபார நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. 
  • பொங்கி எழுந்த வீர இசுலாமியர்களின் ஆர்பரிப்பில் இராமநாதபுரம் தினறியது. 
  • தப்புக்கணக்கு போட்டு வாகனங்களில் வந்து முஸ்லிம்களை பீதியடைய செய்யலாம் என்று திறலாக குவிக்கப்பட்டிருந்த காவல்துறை எம் மாவட்ட இசுலாமிய வீரவேங்கைகளின் ஆக்ரோசத்தில் பின்வாங்கியது. 

முகவை மாநகர சரித்திரத்தில் திரன்டிராத கூட்டமிது. காவல்துறையும் உளவுத்துறை உட்பட ஏனைய அனைத்து மக்களும் திரன்டிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் ஓழுக்கமான கூடலை பார்த்து ஆச்சர்யத்தில் வியந்தனர்.
நமது உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுப் படுத்திய அமெரிக்க கயவர்களை கண்டித்து நடந்த இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்த்தில் பங்கெடுத்து அன்னல் நபிகளுக்கெதிரான அநீதிக்கு கண்டன் தெறிவித்தவர்களாக சரித்திரத்தில் தங்களை இம்மக்கள் பதிவு செய்து கொண்டனர்.

25 செப்டம்பர், 2012

அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலம்



அமெரிக்காவில் வெளியான Innocence of Muslim திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் குலாம் அகமது பிலோர்ஸ், இஸ்லாமை அவமதித்து வரும் எந்த செய்தியையும் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி, திரைப்படத்தை தயாரித்தரின் தலைக்கு 1 லட்சம் அமெரிக்க டொலர் பரிசு அறிவித்தார்.

இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அந்நாட்டு வெளிவிவகாரத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், தலைவர்கள் பொறுப்புடன் இருந்து வன்முறைக்கு எதிராக பேசுவது, நடந்து கொள்ளவது மிக முக்கியம்.

வன்முறையை தூண்டும் விதத்தில் பொறுப்பற்ற முறையில் அவர் பேசியிருப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

வன்முறையைத் தூண்டும் விதத்தில் திரைப்படம் எடுக்கலாமாம்; அவனைத் தண்டிக்க துப்பில்லாத அமெரிக்காவிற்கு நியாயம் பேச என்ன தகுதி இருக்கிறது? 
அமெரிக்காவைச் சேர்ந்த அந்த அயோக்கியன் சாம் பாசைல் தயாரித்த திரைப்படத்தால் முஸ்லிம் உலகமே கொந்தளிப் போய் இருக்கிறது. உலகம் முழுதும் ஆர்ப்பாட்டங்களும் அறவழிப் போராட்டங்களும் நடைபெற்றுவருகிறது. இத்தனைக்குப் பிறகும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் நான் இதைவிட இன்னும் பெரிய படம் எடுத்து வெளியிடுவேன் என கொக்கரிக்கும் திமிர் பிடித்த அந்த அயோக்கியனை கண்டிக்கவோ தண்டிக்கவோ செய்யாத அமெரிக்கா நியாயமான முறையில் தன் உணர்வுகளைப் பதிவு செய்யும் முஸ்லிம்களை கண்டிக்கிறது என்றால் என்ன பொருள்? அமெரிக்கா தரும் ஊட்டத்தால்தான் இதுபோன்ற அயோக்கியத் தனங்கள் நடைபெறுகிறது என்று தெளிவாக புரியவில்லையா?
ஆனால் அமெரிக்கா சில தினங்களுக்கு முன் பாக்கிஸ்தான் டிவிகளில் என்ன கூறியது? ''அந்த திரைப்படத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' 
அப்படியானால் அந்த திரைப்படம் எடுத்த அயோக்கியனின் தலைக்கு விலை நிர்ணயிக்கப்படும்போது அமெரிக்காவுக்கு ஏன் தாங்கமுடியவில்லை? 


நைஜீரியா இஸ்லாமியர் போராட்டம்

இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: நைஜீரியாவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்


அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் நாடான நைஜீரியாவின் கடுனா நகரில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் வசிக்கும் நாடான நைஜீரியாவில் நடத்தப்பட்ட இப்போராட்டம் எவ்வித வன்முறைகளும் இல்லாமல் அமைதியாக நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் அமெரிக்க கொடியை எரித்தும், தெருக்களில் இழுத்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அமெரிக்க கொடியுடன் இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் கொடிகளையும் போராட்டத்தில் ஈடுபட்டோர் இழிவுபடுத்தினர். மேலும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படங்களும் போராட்டத்தின்போது எரிக்கப்பட்டன. முன்னதாக, இதே காரணத்துக்காக நைஜீரியாவின் கனோ மற்றும் சரியா நகர்களில் ஏற்கனவே நடத்தப்பட்ட போராட்டங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
  நன்றி:  www.maalaimalar.com

சென்னை 25-09-2012 (செவ்வாய்க்கிழமை

இலங்கையில் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம்


அமெரிக்க பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டியும், முஸ்லிம்களுக்கு எதிரான திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கையில் நேற்று பேரணி நடத்தப்பட்டது.
கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி இந்த பேரணி நடத்தப்பட்டது. 

20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றனர். அமெரிக்க தூதரகத்துக்கு வெகு அருகில் அதிபர் ராஜபக்சே அலுவலகம் இருப்பதால் போராட்டக்காரர்களை தூதரகம் அருகே போலீசார் அனுமதிக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூதரகம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், பிரச்னைக்குரிய படத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.