நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் ரஜபு மாதம் வந்து விட்டால் இப்படி பிரார்த்திப்பார்கள் யா அல்லாஹ் எங்களுக்கு ரஜபிலும் ஷஃபானிலும் அபிவிருத்தி நல்குவாயாக ரமளானை அடையச் செய்வாயாக
நிச்சயமாக சுவனத்தில் ஒரு நதி உண்டு அதற்கு ரஜபு என்று பெயர் அந்த நதி பாலைவிட வெண்மையானது தேனைவிட மதுரமானது யார் ரஜப் மாதத்தில் ஒரு நாளாவது நோன்பு வைக்கிறாரோ அவருக்கு அந்த நதியில் இருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்
யார் ரஜப் மாத இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு வைக்கிறாரோ சொர்க்கத்தின் பழங்களிலிருந்து அல்லாஹ் அவருக்கு சுவைக்கச் செய்வோம் சுவனத்தின் பச்சை பட்டாடைகளையும் அவருக்கு உடுத்துவான்.