12 ஆகஸ்ட், 2013

திருக்குர்ஆன் வினாடி வினா 1-40



1)   திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது  என்ன கூற வேண்டும்?
         அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் (16:98) மற்றும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்றும் (96:1) கூற வேண்டும்.

2)   திருக்குர்ஆன் யாரிடமிருந்து இறங்கியது?
         அல்லாஹ்விடமிருந்து இறங்கியது

3)   திருக்குர்ஆன் யார் மூலம்  இறங்கியது?
       ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) மூலம் இறங்கியது.

4)   திருக்குர்ஆன்  யாருக்கு இறங்கியது?
         ஹழ்ரத்முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது

5)   திருக்குர்ஆன் எந்த இடத்தில் இறங்கியது?
        ஹிரா  என்னும் மலைக் குகையில் இறங்கியது

6)   திருக்குர்ஆன் எந்த மொழியில் இறங்கியது?
        அரபி மொழியில் இறங்கியது.

7)   திருக்குர்ஆனில் முதன்முதலாக இறங்கிய வசனம் எது?
         இக்ரஹ் என்னும் வசனம் ஆகும்.

8)   திருக்குர்ஆன் எதற்காக வேண்டி இறங்கியது?
       மனித, ஜின் வர்க்கத்திற்கு நேர்வழி காட்டுவதற்காகஇறங்கியது.

9)   திருக்குர்ஆனின் திருப்பணி என்ன?
         நன்மையை ஏவுவதும், தீமையை தடுப்பதும் ஆகும்.

10) திருக்குர்ஆனில் அல்லாஹ் என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வருகிறது?.
         2698 இடங்களில்

11) திருக்குர்ஆனில் 'ரப்பு' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வருகிறது?
         151 இடங்களில்

12) திருக்குர்ஆனில்  'ரப்புல் ஆலமீன்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில்  வருகிறது?
         42 இடங்களில

13) திருக்குர்ஆனில் உள்ள பெரிய சூரா எது?
         சூரா அல்பகரா

 14) திருக்குர்ஆனில் உள்ள சிறிய சூரா எது?
         சூரத்துல் கவ்ஸர்

15) திருக்குர்ஆனில் உள்ள நீண்ட வார்த்தை  எது?
        ஃபஅஸ்கைனாகுமூஹூ, வல்யஸ்தக்லி ஃபன்னஹூம்     
          11எழுத்துக்களை கொண்டவை.

16) திருக்குர்ஆனில் (சூரா ஆரம்பமின்றி) உள்ள சிறிய வசனம் எது?
    அல்முத்தஸ்ஸிர் அத்தியாயத்தில் உள்ள 'சும்ம நழர' என்றவசனம்

17) திருக்குர்ஆனில் தான, தர்மம் பற்றி எத்தனை இடங்களில் வருகிறது?
         150 இடங்களில்

18) சில சூராக்களில் ஆரம்பத்தில் (அலிஃப், லாம், மீம்) போன்று துவங்கும் எழுத்துகளுக்கு என்ன பெயர் கூறப்படும்?
         ஹூருஃபே முகத்த ஆத் என்று கூறப்படும்.

19) ஹூருஃ பே முகத்த ஆத் எழுத்துக்கள் எத்தனை?
         14 எழுத்துக்கள்

20) ஜூஸ்வு  2 என்றால் என்ன?
         பாகம் என்று பொருள்

21) திருக்குர்ஆனில் எத்தனை பாகங்கள் உள்ளன?
         30பாகங்கள்  உள்ளன.

22) சூரா என்றால் என்ன?
         அத்தியாயம் என்று பெயர்

23) திருக்குர்ஆனில் எத்தனை சூராக்கள் உள்ளன?
         114 சூராக்கள் உள்ளன.

24) ஆயத் என்றால் என்ன?
        திருக்குர்ஆனின் வசனம் என்று பெயர்

25) திருக்குர்ஆனில் எத்தனை ஆயத்துக்கள் உள்ளன?
         ஆயிஷா (ரலி) அவர்களின் கணக்குப்படி 6666

26) திருக்குர்ஆன் வசனத்திற்கு மட்டும் ஏன் ஆயத் என்று பெயர் வந்தது?
         இறைவேதமாகிய திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும்  அத்தாட்சியாக விளங்குவதால்
  
27) திருக்குர்ஆனில் உள்ள பெரிய வசனம் எது?
    சூறத்துல் பகராவில் உள்ள கடன் பற்றிய 282வது வசனம் (யா   அய்யுஹல்லதீன ஆமனூஇதா ததாயன்ந்ததும்;....)

28) திருக்குர்ஆனில் ஐன் (ருகூவு) என்றால் என்ன?
    தொழுகையில் ஒருரக் அத்தில் ஒதுவதற்கு ஏதுவாக உள்ள ஒரு பகுதி

29) ருகூவு என்று ஏன் பெயர் வந்தது?
    பெரும்பாலும் தொழுகையில் அதுவரை ஓதிய பிறகு  ருகூவிற்கு குனிவதால்

30) திருக்குர்ஆனில் அரபி எழுத்துக்கள் 29ம் வரும் வசனங்கள் எத்தனை?
    சும்ம அன்ஸல்னா மேலும் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் இரண்டு வசனங்கள் மட்டுமே

31) திருக்குர்ஆனில் புள்ளியிட்ட எழுத்து  இல்லாத வசனம் எது?
    சூரா இக்லாஸின் 'அல்லாஹூஸ்ஸமது' என்ற வசனமாகும்.

32) திருக்குர்ஆனில் 'சுப்ஹான ரப்பிக ரப்பில் இஸ்ஸத்தி அம்மா யஸி ஃபூன்' என்ற வசனம் எங்கு வருகிறது?
 ஸாஃப்பாத் என்ற அத்தியாயத்தின் கடைசியில் வருகிறது.

33) திருக்குர்ஆனில் எத்தனை சூராக்களின் ஆரம்பத்தில் ஹாமீம் என்று வருகிறது?
7 சூராக்களில் வருகிறது

34) திருக்குர்ஆனில் கூறப்படும் இறையச்சத்தை அடிப்படையாகக்           
     கொண்டு கட்டப்பட்ட பள்ளிவாசல் எது?
      மதினாவிற்கு அருகில் உள்ள மஸ்ஜிதே குபா ஆகும்.

35) திருக்குர்ஆனில் ஆயத்துல் குர்ஸி எந்த ஜூஸ்வில் உள்ளது?
     3ம் ஜூஸ் உவின்  ஆரம்பத்தில் வருகிறது.

36) திருக்குர்ஆனில் யாஸூன் சூரா ஜூஸ்உவில் ஆரம்பிக்கிறது?
      22ம் ஜூஸ்வின்; இறுதியில்

37) திருக்குர்ஆனில் உள்ள மொத்த ஸஜ்தாக்கள் எத்தனை?
       14 ஆகும்.

38) திருக்குர்ஆனில் உள்ள நீண்ட அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர் எது?
 துல் ஜலாலி வல் இக்ராம்
  
39) திருக்குர்ஆனில் உள்ள சூராக்கள் அனைத்திலும் ஒரே எண்ணிக்கையில் ஆயத்துக்கள் உள்ளனவா?
    இல்லை

40) திருக்குர்ஆனில் எத்தனை மாதங்களின் பெயர் உள்ளது?
    ஒரே ஒரு மாதத்தின் பெயர் தான் உள்ளது

   (தொடரும்..)

4 கருத்துகள்:

  1. அல்லாஹ்வின் உயந்த பெயர்கள் வரக்கூடிய மூன்று சூராக்கள் என நபியவர்கள் எதை குறிப்பிட்டார்கள்???

    பதிலளிநீக்கு
  2. இஸ்முல்லாஹில் அஃலம்என்றால் என்ன?
    மூன்று சூராக்ஙளை தரவும்

    பதிலளிநீக்கு
  3. அல்லாஹ் என்ற சொல் வராத சூரா எது?

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா25 மே, 2024 அன்று 7:37 PM

    அல்குர்ஆனில் முதல் மனிதனை பற்றி எத்தனையாம் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...