இல்லறம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இல்லறம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 ஆகஸ்ட், 2013

இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது உறவினர்களே!- பட்டிமன்றம்



நடுவரவர்களே!
ஒரு காலம் இருந்தது. அந்த காலத்திலே மனிதன் இலைகளையும், தழைகளையும் உண்டு வந்தான். ஆனால் காலத்தினுடைய சூழல்ச்சியின் காரணமாக பல அருசுவையான உணவுகளை உண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அதுபோன்று ஒரு காலம் இருந்தது மனிதன் இலைகளையும், தழைகளையும் ஆடைகளாக அணிந்து வாழ்ந்து கொண்டு இருந்தான். பிறகு ஒரு காலம், இப்ப இருக்கிறது. நாகரீக உடையிலே உடையணிந்து அழகாக காட்சி தரக்கூடிய நிலையிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது மனைவியே!- பட்டிமன்றம்



கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரித்தான  நடுவரவர்களே! இங்கு இருக்கிற மக்களிடம் கேட்டாலே எல்லோரும் சொல்லி விடுவார்கள்..

இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது யாரென்று கேட்டு பாருங்க எல்லேரும் சொல்கிற பதில் 
மனைவியே!
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். மனைவி மாறு செய்வாள் என்று சொல்கிறார்கள். நரகத்திலே அதிகமான பெண்களை கண்டேன். எதற்காக  என்று கேட்கிற போது பெருமானார் சொன்னார்கள்.
தக்ஸூர்னல் லஃன வதக்ஃபுரினல் அஷீர
கணவனுக்கு மாறு செய்கிற காரணத்தினாலும், அதிகம் சாபமிடுவதினாலும் நரகத்திலே கண்டேன். இந்த நிலை எல்லா குடும்பத்திலேயும் இருக்கிறது என்ற முதல் குற்றச்சாட்டை இம்மன்றத்திலே நான் பதிவு செய்கிறேன்.
எதைச் சொன்னாலும் மாற்றிப் பேசுவது, மாறாக  நடப்பது, நான் இப்படித்தான் செய்வேன் என்று சொல்வது 
வரலாற்றிலே கூட ஒரு கதை சொல்வார்களே!

இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது கணவனே!.


இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது ............கணவனே!.
என்ற ஆய்வுக்காக அழைக்கப்பட்டு உள்ளேன்.

மனைவியின் புறத்திலே எத்தனை குறைபாடுகள் இருந்தாலும், எத்தனை குற்றச்சாட்டுகள் மனைவியின் புறத்திலே இருந்தாலும் கூட அந்த குற்றங்கள் உருவாக காரணம் யார்? எத்தனை குற்றச்சாட்டு வேண்டுமானாலும் சாட்டலாம். ஆனால் அந்த குற்றங்கள் உருவாக அடிப்படை அசல் காரணம் கணவன் தான்.


16 ஜூன், 2013

இல்லற வாழ்க்கையில் வள்ளுவரும் வாசுகியும்

இல்லறம்
உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அவரது மனைவி வாசுகி தான்.

அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று வினவியதற்கு ''அன்னம்  புறத்து சிதறினால் அதை எடுத்து சுத்தம் செய்து உண்ணவேண்டும். அது விசாலமான இரணத்தை தரும்'' என்றார். 
வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவருக்கும், வள்ளுவருக்கும் துறவறம் பெரிதா, இல்லறம் பெரிதா என்ற பேச்சு எழுந்தது. வள்ளுவர் இல்லறத்தின் பக்கம் நின்றார். அவர்கள் சாப்பிட ஆரம்பித்தனர். வாசுகி அவர்களுக்கு பழைய சாதம் பரிமாறினார். பின், கிணற்றுக்கு தண்ணீர் எடுக்கச் சென்று விட்டார். வள்ளுவர் அவளை திடீரென அழைத்தார். "கிணற்றடியில் நிற்கிறேன், ஏதாச்சும் வேணுமினா போட்டுச் சாப்பிடுங்க' என்று கத்தவில்லை. அப்படியே கயிறை விட்டார். குடம் கிணற்றுக்குள் விழவில்லை. அப்படியே நின்றது. உள்ளே வந்த அம்மையாரிடம், ""இந்த சோறு சுடுகிறது,'' என்றார். அம்மையார் பதிலேதும் பேசாமல், விசிற ஆரம்பித்து விட்டார். பழைய சோறு எங்காவது சுடுமா? இருப்பினும், வாசுகி கணவரைக் கேள்வி ஏதும் கேட்காமல் பணிவிடை செய்தார். துறவி ஆச்சரியப் பட்டார். வள்ளுவர் நெசவுத்தொழில் செய்பவர். தறியின் ஓடத்தை பட்டப்பகல் வேளையில் கீழே போட்டு விட்டு, ""வாசுகி, ஓடம் கீழே விழுந்து விட்டது. விளக்கை எடுத்து வா,'' என்றார். பகலென்றும் பாராமல், கேள்வி கேளாமல் அம்மையார் விளக்கை எடுத்து வந்தார். கணவனின் சொல் கேட்கிற மனைவி மட்டும் கிடைத்து விட்டால், துறவறத்தை விட இல்லறமே மிகச்சிறந்தது என்றாராம் அந்த பெரியவர்.

இத்தகைய அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். ''நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு'' என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தப் புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,
அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு
என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!


05 டிசம்பர், 2012

மூன்று மாத இத்தா ஏன்? - ஒரு அறிவியல் விளக்கம்



யூத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்.

‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.

மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்

‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.

ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்-கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே, டி.என்.ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும். ‘ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும்” என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு. அதையே குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத விஞ்ஞானி ஆடிப்போனார்; குர்ஆனை ஏற்றார்.

இது தொடர்பாக, எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்:

அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார்.
தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான். அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார் அவர் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.

ராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.

இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு. குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்.
- மௌலவி அ.முஹம்மது கான் பாகவி
நன்றி - சமரசம்

சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே!

24 ஏப்ரல், 2012

வரதட்சணைக்கு பெரிதும் காரணம் ஆண்களே-1


ஆடும் மலர்களிலும் அலைபாயும் கடல்களிலும் கூவுகின்ற குயில் குரல்களிலும் ஓங்கி ஒலித்திடும் வல்லவனாம் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். செங்கதிரும் தன்மதியும் சேர்த்துக் கையில் தந்திடினும் எம் கொள்கை விடமாட்டேன் என்றுரைத்த ஏந்தல் நபியின் மீதும் நபிவழி நடந்திட்ட நற்றவத் தோழர்கள் மீதும் நாதாக்கள் மீதும் நம்மவர்கள் மீதும் அல்லாஹ்வின் அருளும் அன்பும் என்றென்றும் உண்டாவதாக


பெரியோர்களே! தாய்மார்களே! எங்களை எதிர்த்து பேசவந்திருக்கும் எதிர் அணியினரே! நியாயத்திற்கு கட்டுப்பட்டு தீர்ப்பு வழங்க காத்திருக்கும் கருப்பா இருந்தாலும் வெள்ள மனசுகொண்ட அருமையான நடுவர் அவர்களே!


சமுதாயத்தை வாட்டி வதைக்கும் வரதட்சணைக் கொடுமைக்கு பெரிதும் காரணம் ஆண்களே என்று ஆதாரத்துடன் வாதாட வந்திருக்கிறேன்.


அருமையானவர்களே! அருள் மறையிலே அல்லாஹ் அழகாக சொல்கிறான்
 'அர்ரிஜாலு கவ்வாமூன அலன்னிசாயி ''
ஆண்கள் பெண்களின் பொருப்புதாரிகள் பெண்களின் நிர்வாகிகள் என்று அல்லாஹ் கூறியிருக்க அதை இந்த ஆண்வர்க்கம் மறந்துவிட்டு பெண்ணினத்தை சுரண்டி சுரண்டி சமுதாயத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்புள்ள நடுவர் அவர்களே இந்த ஆண்களின் அக்கிரமத்தைப் பற்றி ஒரு கவிஞன் இப்படி சொன்னான்
''ஒரு பெண்ணிடம் கைக்கூலி வாங்கின்ற கோழைகள்ஏன்தான் பிறந்தார்களோ?ஒரு தன்மானம் இல்லாத பிள்ளையைப் பெற்றோர்கள் ஏன் தான் பெற்றார்களோ?
அல்லாஹ்வின் சாபத்தைப் பெறுவதற்கா? இல்லை ஆயிரம் கன்னிகள் அழுவதற்கா?
என்று இந்த ஆண்களின் அக்கிரமத்தை சுட்டிக் காட்டியிருக்கிறான்.


ஆணவம் பிடித்து அலையும் இந்த ஆண்மக்களால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இழிவுகளும் அவமானங்களும் சோதனைகளும் வேதனைகளும் கொஞ்சமா நெஞ்சமா?
அப்பப்பா! அப்பப்பா! நினைத்தாலே நெஞ்சம் உருகுகிறது; கண்கள் கலங்குகிறது


தமிழகத்தில் பிரபலமான ஒரு ஊரில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த பாவப்பட்ட பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வந்தார்கள். சீவிமுடித்து சிங்காரித்து அழகுப் பதுமையாய் வந்து நின்றாள் அந்த மணப்பெண். ஆனால் வெக்கங்கெட்ட மாப்பிள்ளை வீட்டார் நகையும் தொகையும் எவ்வளவு தருவீர்கள் என்றுதான் கேட்டார்கள். 50 பவுனும் 50 ஆயிரமும் கண்டிப்பாய் வேண்டுமென்று கண்டிஷன் வைத்தார்கள். அவ்வளவு எங்களால் முடியாது என்று பெண்வீட்டார் சொன்னதுமே வைத்திருந்த பலகாரங்களை தின்று தீர்த்த அந்த பண்டாரங்கள் இடத்தைக் காலிசெய்துவிட்டு போய்விட்டார்கள். 


அடுத்த மாதம் இன்னொரு மாப்பிள்ளை வீட்டார் என்னும் கொள்ளைக் கூட்டம் வந்து பேரம் பேசிவிட்டு சென்றது. ஒருமுறையல்ல இருமுறையல்ல.. பலமுறை மாப்பிள்ளை வீட்டாருக்கு முகத்தைக் காட்டி காட்டி வெறுத்துப்போன அந்த ஏழைப்பெண் ''அட என்னடா வாழ்க்கை.. வந்தவனெல்லாம் வக்கனையாய் தின்றுவிட்டு வாழவைப்பதற்கு காசு கேட்கிறானே' என்று மனம் நொந்து தூக்குக் கயிறு மாட்டி உயிரை விடுகிறாள். 


இந்த கோர நிகழ்வை அறிந்த பெற்றொர்கள் துக்கம் தாளமுடியாமல் கதறி கதறி அழுகின்றனர். ஆசைஆசையாய் தாலாட்டி சீராட்டி வளர்த்தெடுத்த தன் மகள் பருவ வயதில் தாலிக் கயிறு ஏறுவதற்கு பதிலாக தூக்குக் கயிறு ஏறிக் கிடக்குதே என்று ஏங்கி ஏங்கி ஒரு கட்டத்தில் அவர்களும் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
அச்சச்சோ.. அச்சச்சோ.. என்ன கொடுமை என்ன கொடுமை ஒரு குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக நாசமாக்கிய மகாப் பாவிகள் இந்த மாப்பிள்ளை வீட்டார்.
இந்த லட்சணத்தில் இந்த மானங்கெட்ட மாப்பிள்ளைகள் பெண்களை எதிர்த்து பேசவந்திட்டாங்க  


நடுவர் அவர்களே இந்த மூன்று அரைவேக்காடு ஆண்கள் .. இவங்க முழிக்கிற முழியைப் பாருங்க. திருவிழாவுல காணாமப் போன ஆடுமாதிரி... 
மே.. மே..மே..
அடப்பாவிகளா.. அடப்பாவிகளா.. இந்த பெண்களெல்லாம் எவ்வளவு பெரிய தியாகி தெரியுமா? பத்துமாதம் சுமந்துபெற்றெடுத்த தாயைப் பிரிந்து பாசத்தைக் கொட்டி வளர்த்த தந்தையைப் பிரிந்து அண்ணனைப் பிரிந்து தம்பியைப் பிரிந்து அக்காவை விட்டு த்ங்கையை விட்டு ஊரை விட்டு உறவை விட்டு கட்டிய கணவனே பெரிது என்று உன் காலடியில் கிடக்கிறாளே உன் அன்பு மனைவி உன் வாழ்க்கைத் துணைவி அவளைக் காப்பாற்றவேண்டியுள்ள ஆண்களே பெண்ணிடம் வரதட்சணையைப் பிச்சையாகக் கேட்டு வாங்கி பெண்ணினத்தை நாசத்தின் படுகுழியில் தள்ளி சமுதாயத்தின் மானத்தைக் காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்களே இது நியாயம்தானா? பாவப்பட்ட பெண்களின் வயித்தெரிச்சல் உங்களை சும்மா விடுமா?


அருமையானவர்களே! அல்லாஹ் தன் திருமறையிலே சொல்லிக் காட்டுகிறான்:
''திருமணம் முடிக்கும் ஆண்களே மணப்பெண்ணுக்கு மனமுவந்து மஹர்த் தொகையை அள்ளிக் கொடுங்கள்'' என்று அல்லாஹ் சொல்லியிருக்க،
கன்னிப் பெண்ணைக் கரம்பிடிக்க காசு கேட்பது என்னங்கய்யா நியாயம்? கரும்பு தின்ன கூலி கேட்கலாமா? 

  • காசு கொடுத்தால் கழுதைக்கும் தாலி கட்டும் கண்றாவிகள் ஆண்கள்.
  •  பணம் பணம் என்று உச்சரித்து பெண்வீட்டாரை நச்சரித்து பணம் தராவிட்டால் கல்யாணமே நடக்காது என்று எச்சரித்து பெண்களை நாசமாக்கியவர்கள் ஆண்கள்
  • தன்மானத்தை இழந்து தரங்கெட்டு நடப்பவர்கள் ஆண்கள் 
  • கல்யாணச் சந்தையிலே ஆடுமாடுகளைப் போல் விலைபோகக்கூடியவர்கள் ஆண்கள் 
  • எல்லாவற்றுக்கும் மேலாக மறுமையை மறந்து திருமணத்தை தீமையாக்கிக் கொண்டிருப்பவர்கள் ஆண்கள்

ஆகவே. வாட்டி வதைக்கும் வரதட்சணைக் கொடுமைக்கு பெரிதும் காரணம் ஆண்களே! ஆண்களே!! என்று உறுதிபடக் கூறி உரைக்குத் திரையிடுகிறேன். நன்றி வஸ்ஸலாம்.

13 டிசம்பர், 2011

இல்லற வாழ்வில் இனிமை காண...


குடும்ப உறவு என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட புனிதமிக்க உறவாகும். அதில் சில சந்தர்ப்பங்களில் சலசலப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருந்தாலும், அதன் மூலம் இறைவன் உறவின் வலிமையை மேலும் பலப்படுத்தி விடுகின்றான். ஆனால் நம்மில் சிலர் குடும்ப உறவில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்னைகளை பெரிதுபடுத்தி பல்லாண்டுகள் நீடித்து அப்புனித உறவை ஒரே நாளில் சிதைத்து விடுகின்றார்கள். அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.
ஒரு ஆண் தனது ஆண்மையை இழந்து விட்டாலும் பெண் அவனுடன் சகிப்புத்தன்மையோடும், பொறுமையோடும் வாழ முடிவு செய்கிறாள். அதேசமயம் யார் மீது குறை என்பது நிரூபிக்கப்படாத நிலையில் இருந்தால் பெண்ணின் மீதே பழி சுமத்தி ஆண்கள் தம்மை குறையற்றவர்களாக காட்டிக் கொள்ள முனைகிறார்கள்.
மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியரிடத்தில் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என்று ஆராயும் போது அவர்கள் சமுதாய அரங்கில் மிகப் பெரிய அந்தஸ்துள்ளவர்களாக இருந்த போதும் வீட்டுக்கு வந்து விட்டால் மிகச் சிறந்த கணவராக மாறி விடுவார்கள். சமையல் உட்பட அனைத்திலும் மனைவியர்களுக்கு உதவி புரிவார்கள்.

ஆண்களைப் பார்த்து அல்லாஹ்வும் பின்வருமாறு கூறுகிறான் :

அப் பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்த போதிலும் (பொறுமையோடிருப்பீர்களாக. ஏனெனில்) ஒரு பொருளை நீங்கள் வெறுக்கக் கூடும். (ஆனால்) அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருப்பான் (அல்குர்ஆன் 4:19)

பெண் ஆணின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான். அதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :
பெண்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருங்கள். ஏனெனில் அவர்கள் விலா எலும்பினால் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரேசமயத்தில் அதை நேராக்க முயன்றால் உடைந்து விடும். அப்படியே விட்டு விட்டால் வளைந்த வடிவத்திலேயே இருக்கும். (நூல்: புகாரீ)
தன்னுடைய மனைவியிடத்தில் காணப்படும் வெறுப்புக்குரிய விஷயத்தை எவ்விதம் கையாள்வது என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது,
ஒரு முஃமின் தன்னுடைய மனைவியிடத்தில் ஏதேனும் ஒரு குணம் பிடிக்கவில்லையென்றால் அவள் மீது கோபப்பட மாட்டான். மாறாக மற்றொரு புறத்தைக் கொண்டு திருப்தியடைந்து கொள்வான். (நூல்: முஸ்லிம்)
ஒரு ஆணுக்கு தன் மனைவியின் மீது குற்றம் கூற உரிமை இருப்பது போலவே பெண்ணுக்கும் இருக்கிறது. நபித்தோழியர்களான பெண்கள் அச்செயலையும் இஸ்லாமிய அடிப்படையில் எப்படி அணுகி இருக்கின்றார்கள் என்பதை பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.

அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
”நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருக்கும் போது ஒரு பெண்மணி வருகை தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தன் கணவரைப் பற்றி மூன்று புகார் கூறினார்.
  • என் கணவர் ஸஃப்வான் நான் தொழுதால் அடிக்கிறார்.
  • நோன்பு வைத்தால் விட்டு விடச் சொல்கிறார்.
  • சூரியன் உதயமாகும் பஜ்ர் தொழுவதில்லை.
இந்த புகாரைக் கூறும் போது ஸஃப்வானும் அந்த சபையில் இருந்தார்.
‘என்ன ஸஃப்வானே! உன் மனைவி கூறுவது உண்மைதானா?’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட போது அவர் ஆம் எனக் கூறிவிட்டு, அதற்குரிய காரணத்தைச் சொல்லத் தொடங்கினார்.
முதல் புகாருக்குரிய காரணம், அப்பெண்மணி இரவு நேரங்களில் தொழ ஆரம்பித்தால் முதல் இரண்டு ரக்அத்திலோ அல்லது முதல் ரக்அத்திலோ பெரிய இரண்டு சூhவை ஓதுகிறார். (தொழுது முடித்து விட்டு படுக்கைக்கு வருவதற்கு மிகத் தாமதமாகிறது என்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவு நேரங்களில் ஒரு அத்தியாயத்தையோ அல்லது இரண்டு சிறிய அத்தியாயங்களையோ ஓதுமாறு அப்பெண்மணிக்கு கட்டளையிட்டார்கள்.
இரண்டாவது புகாருக்கு அப்பெண்மணி தொடர்ந்து நோன்பு வைக்கிறார். நானோ வாலிபனாக இருக்கிறேன். எனக்கு பொறுமை இழந்து விடுகிறது என்று அவர் கூறிய போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கணவன் அனுமதியின்றி நஃபிலான நோன்புகளை மனைவி நோற்கக் கூடாது என்று கட்டளையிட்டார்கள்.
மூன்றாவது புகாருக்குரிய காரணமான ஸஃப்வான் பின்வருமாறு கூறினார். நான் பெரிய குடும்பத்துக்காரன் என்பதை நீங்களே அறிவீர்கள். இரவில் அதிகநேரம் விவசாயத்திற்கு நீர் பாய்ச்சுவதால் அதிகாலை எழுந்து நிற்க முடிவதில்லை என்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃப்வானே! எப்பொழுது விழிக்கிறாயோ (உடன்) தொழுது கொள் என்றார்கள்.” (நூல்: இப்னுமாஜா) அதேசமயம் அதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது என்று வேறு பல நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.
மனைவிக்குரிய கடமைகள் :
ஹக்கீம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் தந்தையின் வாயிலாக அறிவிக்கிறார்கள். ”யாரசூலுல்லாஹ்! எங்களது மனைவியர்களுக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை என்ன?” என்று கேட்டேன். (அப்போது) ஐந்து விஷயத்தைப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
1) நீ சாப்பிடுவதை அவளுக்கும் சாப்பிடக் கொடு.
2) நீ உடுத்துவதைப் போன்று அவளுக்கும் உடுத்தக் கொடு.
3) அவள் முகத்தில் அடிக்காதே.
4) அருவெறுப்பான் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதே.
5) வீட்டிலேயே தவிர வேறெங்கும் அவளைத் தனிமைப்படுத்தாதே. (நூல்: இப்னுமாஜா)
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : உங்களில் யாரும் தன் மனைவியை அடிமையை அடிப்பதைப் போன்று (கசையால்) அடித்து விட வேண்டாம். ஏனெனில் பகலின் இறுதியில் அவளோடு அவர் சேர்ந்து விடுவார். (நூல்: புகாரீ)

  • அவ்வாறே தன் மனைவியின் தேவையையும், ஆசையையும், அவளது கண்களைப் பார்த்தே நிறைவேற்றுபவனே சிறந்த குடும்பத் தலைவனாக கருதப்படுகிறான்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பயணத்தில் இருந்தேன். அப்போது எனக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் ஓட்டப் பந்தயம் நடந்தது. அதில் நான் வெற்றி பெற்று விட்டேன். (சில காலம் கழிந்து) நான் சதைப் பிடிப்பாக இருந்த போது மறுபடியும் போட்டி நடந்தது. அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெற்றி பெற்றார்கள். போட்டிக்குப் பின்பு இந்த வெற்றி முந்தைய வெற்றிக்குச் சமமாகி விட்டது என்றார்கள். (நூல்: அபூதாவூது)

மேலும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள் : நான் என் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அனைவரும் ஓடி விட்டார்கள். அதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைவரையும் திரும்ப அழைத்து வந்து என்னுடன் விளையாடச் சொன்னார்கள். (நூல்: புகாரீ)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் விளையாட்டின் மீது கொண்டிருந்த ஆர்வமிகுதியால் பள்ளி வளாகத்தில் அபஸ்ஸாவின் வீரர்கள் செய்த போர்ப் பயிற்சியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அனுமதியோடு ஜன்னல் வழியாகப் பார்த்தார்கள். (நூல்: புகாரீ)

ஹுனைன் அல்லது தபூக் போருக்குப் போய் வரும் போது ஓரிடத்தில் தங்க நேரிட்டது. அச்சமயம் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறக்கை முளைத்த குதிரை வைத்து விளையாடினார்கள். (அபூதாவூத்)
இவ்விதமாக மனைவியர்களின் மனநிலைக்கும் வயதிற்கும் ஏற்ற சிறந்த கணவராக தம்மை உருவகித்தது போல வேறு எந்த உலகத் தலைவரும் வாழ்ந்ததாக வரலாறில்லை. அத்தகுதியால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் பின்வரும் பிரகடனத்தை அறிவிக்கின்றார்கள்.
உங்கள் குடும்பத்திற்கு யார் சிறந்தவரோ அவர் தான் உங்களில் சிறந்தவர். நான் என் குடும்பத்திற்கு சிறந்தவராக இருக்கிறேன். (நூல்: இப்னுமாஜா)

  • கணவன் மனைவி இருவருக்குமிடையில் மனம் விட்டுப் பேசாமல் இறுக்கமாக இருப்பதனால் தான் சிறிய பிரச்னைகள் பூதகரமாகி விடுகிறது.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடத்தில் கூறினார்கள் : நீ என் மீது கோபமாக இருக்கிறாயா? அல்லது சாந்தமாக இருக்கிறாயா? என்று எனக்குத் தெரியும். அப்போது நான், அதை எப்படி தெரிந்து கொள்வீர்கள்? என்று நான் கேட்ட போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : நீ என்மீது சாந்தமாக இருந்தால், முஹம்மதுடைய இறைவன் மீது சத்தியமாக என்று (பேச்சுவார்த்தையில்) கூறுவாய். என்மீது கோபமாக இருந்தால் இப்ராஹீமுடைய இறைவன் மீது சத்தியமாக என்று கூறுவாய். அப்போது நான் கூறினேன், ஆம் யாரசூலுல்லாஹ். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை பெயரைத் தவிர வெறொன்றையும் (கோபத்தின் போதும்) நான் துறக்கவில்லை. (நூல்: புகாரீ)
கணவனுக்குரிய கடமை :
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : பெண்களில் சிறந்தவர் யார்? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

  • அவளைப் பார்த்தால் கணவன் சந்தோஷமடைய வேண்டும்.
  • ஏதாவது வேலை செய்யச் சொன்னால் உடனே நிறைவேற்றுவாள்.
  • தன் உடலால் மோசடி செய்ய மாட்டாள்.
  • கணவன் வெறுக்கும் விதமாக பொருட்களை வீண் விரையம் செய்ய மாட்டாள். (நூல்: நஸஈ)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்சாரித் தோழர்களுடனும், முஹாஜிர்களுடனும் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒரு கோவேறுக் கழுதை வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸஜ்தா செய்தது. அப்போது தோழர்கள் கேட்டார்கள், யாரசூல்லாஹ், மிருகங்கள், மரங்கள் கூட உங்களுக்கு ஸஜ்தா செய்கிறது. அவற்றை விட நாங்கள் தானே உங்களுக்கு ஸஜ்தா செய்யத் தகுதி உடையவர்கள் என்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வையே வணங்குங்கள். உங்கள் தோழரான என்னைக் கண்ணியப்படுத்துங்கள். உலகில் மனிதருள் யாருக்காவது ஸஜ்தா செய்ய நான் அனுமதிப்பதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு ஏவியிருப்பேன் என்றார். (நூல்: அஹ்மது)
சிரம் தாழ்த்துவது என்பது தான் பணிவின் உச்சகட்ட செயலாகும். அதையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனைவியை கணவனுக்கு செய்ய ஏவியிருப்பேன் என்று கூறியிருப்பதன் மூலம் அதிகபட்சமான பணிவு காட்டுமாறு மனைவியருக்கு கட்டளையிடுகிறார்கள். அதற்காக மனைவியர்களை அடிமைப்படுத்துவது என்பது அர்த்தமாகாது. மனைவியை கணவன் மதிப்பதும், கணவனுக்கு மனைவி பணிவதும் தான் குடும்ப உறவின் மகத்தான புனிதமாகும். அதற்கொப்ப நம் குடும்ப வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக..!
நன்றி: ஏ1ரியலிஸம்.காம்

இது தொடர்பான பதிவுகள்: