23 ஜூலை, 2014

மனிதநேயம் வாழ்கிறது - இரண்டாம் சுற்று

                   - உஸ்தாத் காதிர் மீரான் மஸ்லஹி
இங்கு எனக்கு முன்னால் பேசிய உஸ்தாத் ஷாபி அவர்கள் மனிதநேயம் வீழ்ந்துவிட்டது என்றும் அநியாங்கள் மலிந்து விட்டது என்றும் மிகுந்த வேதனையோடு கூறினார். இந்த வேதனை படும் பண்பு மனிதநேயமுள்ளவருக்கு தான் இருக்குமே தவிர இல்லாதவருக்கு இருக்காது.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பார்கள்.
அது போல மனிதநேயம் வாழ்கிறது என்பதற்கு ஆதாரம் என்று சொல்வதைவிட ஒவ்வொருவரிடமும் கேட்டுபாருங்க உங்க வாழ்க்கையில மறக்கமுடியாத மனிதர் யார்னு கேட்டுபாருங்க அப்போ தன் வாழ்க்கையில கஷ்டப்பட்ட நேரத்தில் உதவிய மனிதநேயமிக்க நண்பர்களை உறவினர்களை அறிமுகமில்லாத நபர்களை பற்றி மிகுந்த நன்றி உணர்வோடு பேசுவதை நாம் கேட்க முடியும்.
ஒரு நேரத்ல நா என் வாழ்க்கையில் படாத கஷ்டமே இல்லை அந்த நேரத்தில் என் நண்பன் மட்டும் இல்லன்னா என் மாமா மட்டும் இல்லன்னா அவர் மட்டும் இவர் மட்டும் இல்லன்னா இன்னிக்கு என்ன நீங்க பாத்திருக்க முடியாது. நான் இந்த நிலமைக்கு வந்திருக்க மாட்டேன். என்று மிகுந்த நன்றி கலந்த பேச்சி பேசுவதை நீங்க யாரிடம் வேண்டுமானாலும் கேட்க முடியும்.

ஹியூமன் அனிமல்ஸ் என்று சொல்லப்படும் பெத்த தாய் தகப்பன முதியோர் இல்லத்தில் விடும் குழந்தைகளை தான் நாம் பார்க்கிறோம். ஆனால் அப்படி கைவிடப்பட்ட பெற்றோர்களை தன் பெற்றோராக பார்க்க கூடிய அந்த ஆதரவாளர்களை நாம் சிந்திப்பதில்லை.

இன்றும் கடுமையான வேலைகளுக்கிடையில் பொது சேவை செய்யகூடியவர்கள், ரோட்டரி, லயன்ஸ் கிளப், என்று மக்களுக்கு பல வழிகளில் தொண்டு புரிபவர்கள் பதவிகளில் இல்லாவிட்டாலும் உலகெங்கிலும் பரவி இருக்கிறார்கள்.

ரோட்டில் விபத்தின் போது கீழே கிடக்கும் நபரை தூக்கி அவரின் குடும்பத்தினர்க்கு தகவல் தெரிவிப்பவர்ரகள் மனித நேயமற்றவர்கள்னு சொல்லமுடியுமா....

ஆங்காங்கே நடக்க கூடிய கலப்பட மருந்துக்களுக்கு மத்தியில் இலவசமாக ஏழை மக்களுக்கு சிகிட்சையும் ஒரிஜினல் மருந்தையும் கொடுப்பவர்களை மனிதநேயமற்றவர்கள்னு சொல்ல முடியுமா...
இந்த நவீன உலகில் மட்டுமல்ல உலக இறுதி நாள் வரை பேசக்கூடிய குர்ஆனில்
  واقيموا الصلوة وآتو الزكوة
 நீங்கள் தொழுகையை நிறைவேற்றுங்கள், ஜக்காத்தையும் கொடுங்கள். அத்தியாயம். 2. வசனம் 43.
இங்கு அல்லாஹ் தொழுகையை மட்டும் சொல்லவில்லை மனிதநேய கடமையான ஜக்காத்தையும் ஏழைகளுக்கு கொடுக்க சொல்கிறான்

மனித நேயம் வீழ்ந்து விட்டது என்று சொல்பவர்கள் ஒரு நிமிடம் அமைதியாக சிந்தித்து பார்க்க வேண்டும் தன் மரணத்திற்கு பிறகு தன்னை அடக்கம் செய்வதற்கு கொண்டு செல்லுகின்ற போது நம்மை தூக்கி கொண்டு செல்பவர்களில் நமது நண்பர்களும் இருப்பார்கள், உறவினர்களும் இருப்பார்கள், முன்பின் அறிமுகமில்லாத பலரும் நான் கொஞ்ச தூரம் தூக்குகிறேன்.... நான் கொஞ்ச தூரம் தூக்குகிறேன் என்பதாக பலரும் நம்மை தூக்க முன் வருவார்களே அவர்களை ஒரு நிமிடம் நினைத்த பிறகு மனிதநேயம் வீழ்ந்து விட்டதா என்று கேளுங்கள். தன்னையும் அறியாமல் அவர்கள் சொல்வார்கள் மனிதநேயம் வாழ்கிறது என்று சொல்லுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாமிய கீதங்கள்

 இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF  தொகுப்பு : ஆலிமா சாஜிதா பின்த் இஸ்மாயீல் இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF :  Download