நாவடக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவடக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 ஜூன், 2013

இல்லற வாழ்க்கையில் வள்ளுவரும் வாசுகியும்

இல்லறம்
உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அவரது மனைவி வாசுகி தான்.

அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று வினவியதற்கு ''அன்னம்  புறத்து சிதறினால் அதை எடுத்து சுத்தம் செய்து உண்ணவேண்டும். அது விசாலமான இரணத்தை தரும்'' என்றார். 
வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவருக்கும், வள்ளுவருக்கும் துறவறம் பெரிதா, இல்லறம் பெரிதா என்ற பேச்சு எழுந்தது. வள்ளுவர் இல்லறத்தின் பக்கம் நின்றார். அவர்கள் சாப்பிட ஆரம்பித்தனர். வாசுகி அவர்களுக்கு பழைய சாதம் பரிமாறினார். பின், கிணற்றுக்கு தண்ணீர் எடுக்கச் சென்று விட்டார். வள்ளுவர் அவளை திடீரென அழைத்தார். "கிணற்றடியில் நிற்கிறேன், ஏதாச்சும் வேணுமினா போட்டுச் சாப்பிடுங்க' என்று கத்தவில்லை. அப்படியே கயிறை விட்டார். குடம் கிணற்றுக்குள் விழவில்லை. அப்படியே நின்றது. உள்ளே வந்த அம்மையாரிடம், ""இந்த சோறு சுடுகிறது,'' என்றார். அம்மையார் பதிலேதும் பேசாமல், விசிற ஆரம்பித்து விட்டார். பழைய சோறு எங்காவது சுடுமா? இருப்பினும், வாசுகி கணவரைக் கேள்வி ஏதும் கேட்காமல் பணிவிடை செய்தார். துறவி ஆச்சரியப் பட்டார். வள்ளுவர் நெசவுத்தொழில் செய்பவர். தறியின் ஓடத்தை பட்டப்பகல் வேளையில் கீழே போட்டு விட்டு, ""வாசுகி, ஓடம் கீழே விழுந்து விட்டது. விளக்கை எடுத்து வா,'' என்றார். பகலென்றும் பாராமல், கேள்வி கேளாமல் அம்மையார் விளக்கை எடுத்து வந்தார். கணவனின் சொல் கேட்கிற மனைவி மட்டும் கிடைத்து விட்டால், துறவறத்தை விட இல்லறமே மிகச்சிறந்தது என்றாராம் அந்த பெரியவர்.

இத்தகைய அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். ''நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு'' என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தப் புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,
அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு
என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!


23 டிசம்பர், 2011

ரகசியத்தை உளரவேண்டாம்


முல்லாவின் புகழ் நாளுக்கு நாள் பெருகி வந்த காலகட்டம் அது.


இதன் காரணமாக அவருக்குப் பல சீடர்கள் சேர்ந்தனர். முல்லாவின் புகழ் மக்களிடையே அதிகரித்ததும் மன்னர் செவியிலும் முல்லாவின் புகழ் பற்றிய செய்தி  விழுந்தது. உடனே மன்னர் முல்லாவை அழைத்து அவருக்கு உரிய பதவியைக் கொடுத்தார்.

ஒரு நாள் முல்லாவின் நண்பர் ஒருவர், ''முல்லா! தங்களிடம் நீண்ட நாட்களாக ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்று  நினைத்திருந்தேன்,” என்றார்.


''அப்படியா! அது என்ன விஷயம்?” என்று கேட்டார் முல்லா.

“ஒன்றுமில்லை முல்லா! உங்களை எல்லாரும் அறிஞர்  என்றும், தத்துவஞானி  என்றும் புகழ்கின்றனர். அரசர் உம்மை மதித்து உங்களுக்கு உயரிய பதவி அளித்துள்ளார். எப்படி இந்த அளவுக்கு தாங்கள் உயர்வு பெற்றீர்கள்?  இதன் ரகசியத்தை என்னிடம் கூறுவீர்களா?” என்று கேட்டார்.

”உம்மிடம சொல்வதற்கு எந்தத் தடையும் இல்லை.ஆனால்,இந்த ரகசியத்தைக் கூறினால்நீங்கள் ஊர் முழுவதும் தண்டோரா போட்டு விடுவீர்கள்!” என்றார் முல்லா.

”அப்படியெல்லாம் செய்யமாட்டேன்,” என்றார் முல்லாவின் நண்பர்.

”கண்டிப்பாக ஒருவரிடமும் இதைக் கூறமாட்டீர்களே?”

”சத்தியமாகக் கூறமாட்டேன். இதனால் எவ்வளவு லாபம் கிடைப்பதாக இருந்தாலும்,நீங்கள் சொல்லும் ரகசியத்தை ஒருவரிடமும் கூறமாட்டேன்’’

 “”எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் யாரிடமாவது, நான் சொன்னதைக் கூறிவிட்டால்…?”
திரும்பவும் கேட்டார் முல்லா.

”கண்டிப்பாக ஒருவரிடமும் நீங்கள் சொன்ன ரகசியத்தைக் கூறமாட்டேன்.
கோடி பொன் கொட்டிக் கொடுத்தாலும் இந்த ரகசியத்தை வெளிப்படுத்த மாட்டேன்,”என்றார் முல்லாவின் நண்பர்.

”நண்பரே! நானும் உங்களைப் போலத்தான்.
ஒரு ரகசியத்தைக் காப்பாற்றுவதில் நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்ளோ, அப்படித்தான் நானும். கோடி கோடியாகப் பொருள் கொடுத்தாலும் என்னிடம் உள்ள ரகசியத்தை வேறு ஒருவருக்குஎந்த சந்தர்ப்பத்திலும் கண்டிப்பாக கூறமாட்டேன்,” என்றார் முல்லா.

16 டிசம்பர், 2011

புறம் இஸ்லாத்தில் ஹராம்


மனிதர்கள் கூட்டமாக கூடி விட்டாலே அங்கு யாரையாவது குறை கூறி விடுகின்றனர்.. இப்படி அடுத்தவரைக் குறை கூறி பேசுவதை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது.
சிலர் நாங்கள் உண்மையைத்தானே கூறுகிறோம், இதில் தவறென்ன இருக்கிறது? என்று கேட்கலாம். ஒருவரிடத்தில் இருக்கும் தவறைக் கூறுவதே புறமாகும். ஒருவரிடத்தில் தவறிருக்கக் கண்டால் அந்த தவறை உரியவரிடம் நேரடியாகக் கூறி அவரது தவறை நீக்க முயல வேண்டுமே தவிர ஊர் முழுக்கப் பறைசாற்றக் கூடாது.

புறம் என்றால் என்ன?
ஒரு
 முறை நபி (ஸல்) அவர்கள் புறம் பேசுவது என்றால் என்ன? என தோழர்களிடம் வினவினார்கள். அதற்கு தோழர்கள் அல்லாஹ்வும் அவனது திருத்தூதருமே இதனை நன்கறிந்தவர்கள் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (புறம் பேசுவது என்பது) நீர் உம் சகோதரரைப் பற்றி அவர் வெறுப்பதைக் கூறுவதாகும் என பகர்ந்தார்கள். நான் கூறும் விஷயம் என் சகோதரரிடம் இருந்தால்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் நீர் கூறும் விஷயம் அவரிடம் இருந்தால் நீர் அவரைப் பற்றி புறம் பேசிவிட்டீர். நீர் கூறும் விஷயம் அவரிடம் இல்லையென்றால் நிச்சயமாக நீர் அவரைப்பற்றி அவதூறு கூறிவிட்டீர் எனப் பகர்ந்தார்கள். (நூல்: முஸ்லிம்)


புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

  • புறம் பேசுவது சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து அல்லது பேசப்படுகின்ற நபரைப் பொறுத்து தாக்கங்கள் அதிகமாக இருக்கும்.  ஒருவன் கணவன் மனைவியரைப் பற்றி ஒவ்வொருவரிடமும் மாறி மாறி புறம் பேசுகின்ற போது அக்குடும்பத்திற்கு பிரச்சனைகளைஏற்படுத்துகிறான்; அல்லது அக்குடும்பத்தைப் பிரித்து விடும் அளவிற்கு அவன் ஆளாகின்றான். இதனால் அந்த குடும்பமே குட்டிச்சுவராகும் அளவிற்கு சென்றுவிடும். இது ஒரு சாதாரண மனிதனைப் பற்றி புறம் பேசுவதைவிட ஆபத்தானதாகும்.
புறம் பேசுவது  இறந்த சகோதரரின் மாமிசத்தைப் புசிப்பதைப் போல
 ‘மேலும் உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்’. (49:12)
  • புறம் பேசுபவரின் வார்த்தையைக் கடலில் போட்டால் இதனுடைய கடுமையான சொல்லின் காரணத்தால் கடல் நீரின் தன்மையே மாறிவிடும்:

ஆயிஷா(ரலி) கூறுகிறார்கள்:நான் நபி (ஸல்) அவர்களிடம், சஃபிய்யா (ரலி) அவர்களுடைய இன்னன்ன விஷயங்கள் உங்களுக்குப் போதுமானதாகும் என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீ கூறிய அந்த வார்த்தையை கடல் நீரில் கலந்தால் (அதனுடைய தன்மையையே) மாற்றி விடும் என்றார்கள். (அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்)

  • புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் தமது கரங்களாலேயே  கடுமையான வேதனை செய்யப்படுவார்கள்:
மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தை கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினால் ஆன நகங்கள் இருந்தன. அவற்றின மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் (தாமே) காயப்படுத்திக் கொண்டிருந்தனர். ‘’ஜிப்ரீலே இவர்கள் யார்?’’
‘’இவர்கள் மனிதர்களின் மாமிசத்தை சாப்பிட்டவர்கள் (அதாவது புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் பங்கம் விளைவித்தவர்கள் என விளக்கமளித்தார்கள். ( அஹ்மத், அபூதாவூத்)
  • மறுமையில் மிகப்பெரும் நஷ்டவாளியாக நேரிடும்!
புறம் பேசுவது  இவ்வுலகில் தீய காரியங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ அதே போன்று மறுமையில் நாம் நன்மைகள் பல செய்திருந்தாலும் ஒரு நன்மைக்கூட பயனளிக்காத நஷ்டவாளியாக்கிவிடுகிறது.
நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதிவாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

இந்த நபிமொழி மறுமையில் புறம் பேசியவனுக்கு கொடுக்கப்படும் கூலியை தெளிவாகவே கூறுகின்றது. ஒருவன் இவ்வுலகில் எவ்வளவு தான் நற்காரியங்கள் செய்தாலும் அவனது புறம் பேசுதலுக்கு மறுமையில் ஒன்றுமே ஈடாகாது.