23 ஜூலை, 2014

நடுவர் தொகுப்புரை-1

அடேங்கப்பா..அஞ்சு நிமிஷத்துல சும்மா அட்டகாசமா அடுக்கிட்டுப் போயிருக்காரு.
மலேசியா விமானம் “mh370” மாயமாய் மறைந்தபோது மதவேறுபாடின்றி எல்லா மக்களும் பிரார்த்தித்தோமே.. இது மனிதநேயம் இல்லையா?.. கேட்டாரு. உண்மைதான். ஏன்னா இன்னைக்கு சிலபேர் எப்படி இருக்காங்க தெரியுமா?
ஒரு ஊருல ஒரு பண்ணையார் ஹெலிகாப்டர் வாங்கினார். அந்த ஊரு மக்கள்லாம் அந்த ஹெலிகாப்டரில் ஏறிப் பயணிக்க ஆசைப்பட்டாங்க.
ஒரு ஆளுக்கு இவ்வளவுன்னு காசு வாங்கிட்டு ஏத்திக்கிட்டார். அந்த ஊருல உள்ள ஒரு கிழவிக்கும் ஹெலிகாப்டர்ல ஏற ஆசை. தன் மகனிடம் கெஞ்சினாள். ம்.. இந்த வயசுலயும் கிழவிக்கு ஆசையைப் பாரு என்று முனங்கிக்கொண்டே அவன் போய் பண்ணையார்ட்ட சொன்னான். சார். என்னிடம் காசு இல்லை. ஆனாலும் எங்க ஊட்டுக் கிழவிக்கு இதுல ஒருதடவையாவது பயணிக்கனும்னு ஆசை. நீங்கதான் சார் எப்படியாவது மனசு வைக்கணும் அப்படின்னான். பண்ணையார் பார்த்தாரு. சரி இலவசமா ஏத்திக்கிறேன். ஆனா ஒரு கண்டிஷன். நான் ஹெலிகாப்டரை வேகமா ஓட்டியே பழகிட்டேன். நான் தாறுமாறா ஓட்டுனாலும் யாரும் பயப்படக்கூடாது. கத்தக் கூடாது. அப்படிக் கத்துனால் 100 டாலர் அபராதம். அப்படினார். சரின்னு ஏத்துகிட்டு தாயும் மகனும் ஹெலிகாப்டரில் ஏறிக்கிட்டாங்க. பண்ணையார் தாறுமாறா ஓட்டுனார். அந்தரத்துல குட்டிக்கரணம்லாம் அடிச்சார். பிறகு பத்திரமாக தரை இறக்கினார். சொன்னார்: பரவாயில்லையே.. நீங்க பயந்து கத்தலையே.. வெரிகுட் அப்படினார். அதுக்கு அவன் சொன்னானாம்: அடப்போங்க சார். நீங்க அந்தரத்துல பல்டி அடிக்கும்போதே எங்க அம்மா கீழே விழுந்துட்டாங்க. சத்தம் போட்டா அபராதம் கட்டனுமே.. அதான் அமைதியா இருந்துட்டேன் என்றானாம்.
100 டாலரை விட பெத்த தாயின் உயிரை ரொம்ப மலிவா மதிக்கிற ஒரு சில மனிதர்கள் மேலைநாடுகளில் இருக்கும்போது நம்ம மலேசியத் திருநாட்டில் அந்த விமானமும் பயணிகளும் பத்திரமாய்த் திரும்பவேண்டும் என மனமுருகி வேண்டினோமே.. இது மனிதநேயமில்லையா.. கேட்டாரு.

அட அதெல்லாம் மலை ஏறிப் போச்சுங்க. மனிதநேயமாவது.. மண்ணாங்கட்டியாவது.. என்று மறுத்துப் பேச வருகிறார் நம்ம ஷரீஅத் சங்கநாதம் ஷாஃபி வாஹிதி அவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாமிய கீதங்கள்

 இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF  தொகுப்பு : ஆலிமா சாஜிதா பின்த் இஸ்மாயீல் இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF :  Download