மீலாது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீலாது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 ஜனவரி, 2014

உத்தம நபி (ஸல்) உதயம்


  • முன் வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட்ட முத்தான நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்.
  • அவர்களின் வருகை குறித்து முன்னறிவிப்பு செய்யாத எந்த நபியும் இல்லை. எந்த வேதமும் இல்லை.
  • அவர்களை அவர்களின் அருமைத் தோழர்கள் வர்ணித்த விதத்தை ஹதீஸ்களில் படித்தால் மெய்சிலிர்த்துப் போகிறோம்.

18 ஜனவரி, 2014

ஊனிலும் உணர்விலும் கலந்த உத்தம நபி (ஸல்)


மவ்லானா அல்ஹாஜ் எஸ்.எஸ். அஹ்மது பாகவி ஹழ்ரத் கிப்லா அவர்களின் ஜூம்ஆ உரை 17-01-2014 (மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா)

ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் எளிமை

மவ்லானா எஸ். எஸ். அஹ்மது பாகவி ஹழ்ரத் கிப்லா ஜும்ஆ உரை 
      (10-01-2014)

15 ஜனவரி, 2013

அகிலம் கண்ட அதிசய பேரொளி


''அரபுப் பாலைவனத்தில் அரிய மாணிக்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது;
அதன் ஒளி அகிலமனைத்தையும் ஆட்கொண்டுள்ளது ''
என்றான் ஆங்கிலக் கவிஞன்.
ஆம் உண்மைதான். ஆதம் அலைஹிஸ் சலாம் மண்ணிற்கும் தண்ணீருக்குமிடையில் இருக்கும்போதே ஒளியாக பிரகாசித்த பெருமானாரின் ஜோதி, பிறப்பின்போதும் காட்சி வழங்கி, வாழ்க்கையில் பல கட்டங்களில் பலருக்கும் பயன் தந்தது. அந்த வரலாற்றை தொடர் கட்டுரையாக காண்போம்.

15 மே, 2012

நபிவழியில் நம் நடைமுறை


சுன்னத்
உலகில் எத்தனையோ புரட்சியாளர்கள் சீர்திருத்தவாதிகள் தோன்றியுள்ளனர் மறைந்துள்ளனர். அவர்களில் யாரும் தன் மரணத் தருவாயில் இப்படிச் சொன்னதில்லை: எனக்குப் பின்னால் என் வாழ்வை விட்டுச் செல்கிறேன் அதை அப்படியே பின்பற்றுங்கள் வெற்றி பெறலாம். இப்படி சொல்லும் அளவுக்கு யாருடைய வாழ்வும் முழுத் தகுதிள்ளதாக அமையவில்லை. ஆனால் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தன் இறுதி காலத்தில் இப்படி கூறினார்கள்: நான் இரண்டை உங்களிடம் விட்டுச் செல்கிறேன் ஒன்று அல்லாஹ்வின் திருமறை மற்றொன்று எனது வழிமுறை இவற்றை யார் பின்பற்றி நடக்கிறாரோ அவர் வழிதவறமாட்டார்.

23 மார்ச், 2012

ஆதி ஏகன் தூதரே





ஆதி ஏகன் தூதரே
ஜோதியாம் நபி தாஹாவே
நானும் காண, நாளும் காண
ஆசையாய் அழைக்கின்றேனே!

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹ்!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்!

இருள் படிந்த இதயம் யாவும்
உங்கள் வரவால் ஒளிர்ந்ததே
அன்பே அருளே அழகே அமுதே
அஹ்மது யா நபி ஸலாம்-2       (ஆதி)

14 பிப்ரவரி, 2012

பிறந்தவர்களில் சிறந்தவர்



மனித முயற்சியில் ஆகாதது ஒன்றுமில்லை என்பார்கள். டாக்டராக இஞ்சீனியராக ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆகலாம். ஏன் சந்திரனில்கூட கால்தடம் பதிக்கலாம். ஆனால் மனித முயற்சியால் முடியாத ஒன்று உள்ளதென்றால் அது நபியாகுவது. ஏனெனில் நபிமார்களை அல்லாஹ் தேர்ந்தெடுக்கிறான். 124000 நபிமார்களைத் தேர்ந்தெடுத்து அதில் சிறந்த உயர்ந்த நபியாக உத்தமத் திருநபியை உலகிற்குத் தந்திருக்கிறான்.

எல்லா நபிமார்களையும் பிறந்ததற்கு பிறகு புகழ்ந்துப் போற்றுகின்ற அல்லாஹ் முத்தான முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை மட்டும் பிறப்பதற்கு முன்பே போற்றியிருக்கிறான்.

08 பிப்ரவரி, 2012

வேந்தர் நபி பற்றி வேத அறிஞர்களின் சான்று-தொடர்-2


மன்னர் ஹிராக்ளியஸ் ஆட்சி காலத்தில் வாழ்ந்த மற்றொரு வேதப் பண்டிதர் அஸ்கஃப். நபியின் அழைப்புமடல் அரசவையில் வாசிக்கப்பட்டு உரையாடல் நடந்தபோது அவர் அங்கிருந்தார். அவர் சொன்ன வார்த்தை:

01 பிப்ரவரி, 2012

வேந்தர் நபி பற்றி வேத அறிஞர்களின் சான்று


 {الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءهُمْ وَإِنَّ فَرِيقاً مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ} [ سورة البقرة الآية :146]، تدل على أن أهل الكتاب من اليهود والنصارى يعرفون محمداً - صلى الله عليه وسلم -كما يعرفون أبناءهم

அப்துல்லாஹ் இப்னு சலாமின் வாக்குமூலம்:
அப்துல்லாஹ் இப்னு சலாம். யூதப் பண்டிதர். வேத ஞானங்களைக் கரைத்துக் குடித்தவர். நபி மதினாவுக்கு வந்தபோது உடனே இஸ்லாத்தை தழுவினார். அதன் பிறகு சுவனத்தைக் கொண்டு சுபச் செய்தியும் சொல்லப்பட்டார். உமர்(ரலி) அவர்கள் ஒருமுறை கேட்டார்கள். வேதக்காரர்களாகிய நீங்கள் உங்கள் மகனை அறிவதைப் போல இந்த நபியை நன்கு அறிவீர்களா? என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்: '' ம்ம்.. அதைவிட அதிகமாகவே அறிவோம்.

23 ஜனவரி, 2012

அறிஞர்களின் பார்வையில் அண்ணல் நபி (ஸல்)


உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ்   சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே.

                   -M.H.Hart, 'The 100! A ranking of the most influential persons in history' New York, 1978)


உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் "முகம்மத்" உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முகம்மத் போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார். வெற்றியின் போது அவர் காட்டிய பொறுமை, பணிவு,சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகபற்றற்று வாழ்ந்து வந்த நிலை,அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள்,இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள் அவரது மரணம், மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிட வில்லை. மாறாக,சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன.

 

             - அல்போன்சு டி லாமார்ட்டின் - Historie de la Turquie, Paris, 1854, Vol II,pp 276-277)

மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல்கொண்டேன். (அதை படித்தறியும் போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத்தந்தது வாள் பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணி காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல.

                                      - மகாத்மா காந்தி - (Young India)

சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது முயற்ச்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த- ஒரு பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ

   

                        - Thomas_Carlyle, Heroes_and_Hero_Worship

அவர்கள் எந்த நபித்துவ அந்தஸ்த்து தமக்குரியது என்று முதன் முதலாக வாதிடத் தொடங்கினார்களோ அதே அந்தஸ்த்தைதான் தமது ஆயுட்காலத்தின் இறுதியிலும் அவர் உரிமை கொண்டாடினார். முகம்மதை உண்மையான இறை த்தூதர் என்கிற அவரது வாதத்தை ஏற்றிட ஒவ்வரு வரும் சம்மதிப்பார்கள் என்று தைரியமாக நான் நம்புகிறேன்.

 

 போஸ்வெர்த் ஸ்மித், Benjamin_Bosworth_Smith