28 ஆகஸ்ட், 2016
17 ஆகஸ்ட், 2016
தொழுகை நிறைவேறும் நேரம்
தொழுகை
நிறைவேறும் நேரம் அது
துயரம் விடை
கூறும் நேரம்
நம் பாவம்
அனைத்திங்கு நீங்கும்
அது வாழ்வின்
பரிகாரம் ஆகும்
(தொழுகை நிறைவேறும் நேரம்)
இறைவன் அருள்
சேர்க்கும் தொழுகை
அதை இழந்தால்
மன்னிப்பே இல்லை-2
அதை உண்மை உணர்வோடு
தொழுதால்
நம் உள்ளம் உவப்போடு
திகழும்
ஒரு நாளில்
ஐவேளை மிகையோ
உயிர்க் கடமை
முடிக்காது முறையோ
தொழுகை
நிறைவேறும் நேரம் அது
துயரம் விடை
கூறும் நேரம்
நாளும் ஐவேளை
தொழுகை
அதை நாடித்
தவறாது செய்கை
நம் வாழ்வின்
உயிர்க் கொள்கையானால்
அது வழங்கும்
பேரின்பப் பொருளை
அதில் மகிழ்வு
நிறைந்தொடிப் பெருகும்
நம் மனதும்
பண்போடு திகழும்
தொழுகை
நிறைவேறும் நேரம் அது
துயரம் விடை
கூறும் நேரம்
பாலை நிலம் தந்த
கோமான்
நல் பாங்காய் வளம்
தந்த சீமான்
உயர் பாதை சீர்
செய்த பூமான்
அவர் வாங்கித்
தந்தாரே ஈமான்
நபி வாழ்வில் வழிகாட்டப்
பெற்ற
நல்ல இறையின்
வரமாகும் தொழுகை
தொழுகை
நிறைவேறும் நேரம் அது
துயரம் விடை
கூறும் நேரம்
நம் பாவம்
அனைத்திங்கும் நீங்கும்
அது வாழ்வின்
பரிகாரம் ஆகும்
தொழுகை
நிறைவேறும் நேரம் அது
துயரம் விடை
கூறும் நேரம்
10 ஆகஸ்ட், 2016
மதீனத் தோட்ட மாளிகையில்... MADHINA THOATTA MAALIGHAIYIL..
மதீனத் தோட்ட மாளிகையில்..
பாடல் வரிகளுடன் ஒரு காணொளி
29 மார்ச், 2016
பலவீனமே பலம்
ஜப்பானில்
பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய
கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே
ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான் ? பல
மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி
அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக்
கொண்டார்.
பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான்
“குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான்.
“இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்” என்றார் குரு. குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது ? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது !
முதல் போட்டி. சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது. எல்லோரும் ஆச்சரியப் படும் விதமாக பையன் வெற்றி பெற்றான். இரண்டாவது போட்டி. அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான். அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.
கடைசிப் போட்டி. எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான். பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள். “வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்” என்கிறார் குரு. இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான்.
பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான். பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள், போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான்
“குருவே. நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன் ? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே “ என்றான்
புன்னகைத்தபடியே குரு சொன்னார் “உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய். இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே ! உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது !”
குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான்.

21 பிப்ரவரி, 2016
அகக்கண் திறக்க...
متى يطالع القلب عالم الملكوت؟
ولا تظنن أن هذه الطاقة تنفتح بالنوم والموت فقط، بل تنفتح باليقظة لمن أخلص الجهاد والرياضة، وتخلص من يد الشهوة والغضب والأخلاق القبيحة والأعمال الرديئة.
فإذا جلس في مكان خال، وعطل طريق الحواس، وفتح عين الباطن وسمعه، وجعل القلب في مناسبة عالم الملكوت، وقال دائما:) الله - الله - الله (بقلبه، دون لسانه، إلى أن يصير لا خير معه من نفسه، ولا من العالم، ويبقى لا يرى شيئا إلا الله سبحانه وتعالى انفتحت تلك الطاقة، وأبصر في اليقظة الذي يبصره في النوم؛ فتظهر له أرواح الملائكة، والأنبياء، والصور الحسنة الجملية، وانكشف له ملكوت السماوات والأرض، ورأى ما لا يمكن شرحه ولا وصفه، كما قال النبي صلى الله عليه وسلم:) زويت لي الأرض، فرأيت مشارقها ومغربها (وقال الله عز وجل: (وَكَذلِكَ نُري إِبراهيمَ مَلَكوتَ السَماواتِ وَالأَرض) . لأن علوم الأنبياء عليهم السلام كلها كانت من هذا الطريق، لا من طريق الحواس
وهذه الطريق لا تفهم إلا بالتجربة، وإن لم تحصلبالذوق لم تحصل بالتعليم. والواجب التصديق بها حتى لا تحرم شعاع سعادتهم، وهو من عجائب القلب. ومن لم يبصر لم يصدق، كما قال سبحانه وتعالى: (بَل كَذَّبوا بِما لَم يُحيطوا بِعِلمِهِ وَلَمّا يَأتِهِم تَأويلُهُ) ،
மனித உள்ளம் வான லோகம் வரை தன் அகப்பார்வையை செலுத்த முடியுமா?
தனிமையாக ஒரு இடத்தில் அமர்ந்து ஐம்புலன்களையும் அடக்கி ஒடுக்கி நிசப்தமாக மன ஓர்மையுடன் தன் மனசை வானலோகத்தை நோக்கி செலுத்தி தொடர்ந்து இப்படி சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் :
"அல்லாஹ், அல்லாஹ்" என்று- நாவால் அல்ல- மனசால் கூறிக் கொண்டே இருக்க வேண்டும் அந்நேரம் அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் நினைக்காமல் சொல்லிக் கொண்டே இருந்தால் ............
- மனம் ஒடுங்கி திடீரென அகப்பார்வை திறக்கும்.
- மனிதன் பொதுவாக தூக்கத்தில் பார்க்கிற அரிய காட்சிகளை எல்லாம் விழிப்பிலேயே பார்க்கத் தொடங்குவான்
- வானவர்களின் உயிர்கள் தென்பட ஆரம்பிக்கும்.
- அழகிய காட்சிகள் தெரியும்.
- ஏழு வானங்களின் ஏழு பூமிகளின் ஆட்சிகளும் காட்சிகளும் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.
- அந்நேரம் அவன் பார்க்கிற காட்சிகளை விபரிக்க முடியாது. வர்ணிக்க முடியாத பல காட்சிகள் தென்படும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறவில்லையா?
இந்த பூமி எனக்கு சுருட்டிக் காண்பிக்கப்பட்டது,அதன் கிழக்கிலிருந்து மேற்கு வரை அனைத்தையும் பார்த்தேன்.
மேலும் அல்லாஹ் கூறுகிறான் பாருங்கள்
(وَكَذلِكَ نُري إِبراهيمَ مَلَكوتَ السَماواتِ وَالأَرض
"ஏழு வானங்களின் ஏழு பூமிகளின் ஆட்சிகளையும் நாம் இப்ராஹீமுக்கு காண்பித்தோம் "
இந்த மாதிரி காட்சிகள் எல்லாம் புறக்கண்ணால் பார்த்தவை அல்ல. அகக்கண்ணால் பார்த்தவை.
இதை ஓரளவு தான் சொல்லிப் புரிய வைக்க முடியும். மற்றபடி இது அனுபவித்து உணர வேண்டிய இன்பம்.
இப்படி ஒரு அனுபவம் உள்ளது என்பதை நாம் நம்புவது அவசியம்.
இமாம் கஸ்ஸாலி ( ரஹ் ), இஹ்யா உலூமித்தீன்
10 பிப்ரவரி, 2016
29 ஜனவரி, 2016
SADHAK MASLAHI SONGS - சதக் மஸ்லஹி பாடல்கள்
மதீனத் தோட்ட மாளிகையில்..
MADHINA THOATTA MAALIGHAIYIL..
வள்ளல் இமாம் பூசிரியின் வாழ்ந்த கதை சொல்லவா?
VALLAL IMAM BUSIRIYIN VAALNTHA KATHAI..
தந்தை ஒருவரைப் பார்த்ததுமில்லை..
THANTHAI ORUVARAI..
புகழ் பாட வந்தோம் நாம் புவி மீதிலே..
PUGAZH PAADA VANTHOM..
அல்லாஹ்வின் தூதே..அருள் தீபமே..
ALLAHVIN THOOTHE..ARUL THEEBAME..
NENJAME NINAIKKAIYILE..
25 ஜனவரி, 2016
மதீனத் தோட்ட மாளிகையில்..
மதீனத் தோட்ட மாளிகையில் மண்மடியில் மைந்தரைப் போல்
தூய நபி தூங்குகிறார் தாலேலோ
அவர் தோய்ந்து போன மார்க்கம் தனை தோள் கொடுத்து தூக்கிய பின்
ஓய்வெடுத்து தூங்குகிறார் ஆரீரோ ! -
( மதீனத் தோட்ட மாளிகையில்)
செம்பவளக் கருத்தெடுத்து செந்தேனில் குழைத்தெடுத்து
நெஞ்சங்களில் சிந்திச் சென்றார் தாலேலோ - 2
அந்த மகிழ்ச்சியிலே அவர் உறங்க மயக்கத்திலே நாம் உறங்க
மண்ணகமே உறங்குதம்மா தாலேலோ
மண்ணகமே உறங்குதம்மா தாலேலோ
( மதீனத் தோட்ட மாளிகையில்)
ஞானக் கடல் மீதில் அவர் நாளும் அவர் மூழ்கியதில்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டோம் தாலேலோ -2
அவர் மௌன நிலை கூட ஒரு ஞான நிலை போலிருக்கும்
யார் அவரைத் தூங்க விட்டார் தாலேலோ
யார் அவரைத் தூங்க விட்டார் தாலேலோ
( மதீனத் தோட்ட மாளிகையில்)
மன்னரவர் தூங்கிவிட்டால் மண்ணகமே தூங்கிவிடும்
வின்னவரே துயிலெழுப்ப வாரீரோ -2
அவர் பொன் அழகை ரசிப்பதற்கும் மோட்ச நிலை பெறுவதற்கும்
தோழர்களே தோழியரே வாரீரோ
தோழர்களே தோழியரே வாரீரோ
( மதீனத் தோட்ட மாளிகையில்)
22 ஜனவரி, 2016
15 ஜனவரி, 2016
04 ஜனவரி, 2016
குகையிலிருந்து மீண்ட மூவர்!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் (சென்ற காலத்தில்) இருந்தவர்களில் மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, (திடீரென) மழை பிடித்தது. எனவே, அவர்கள்
ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். உடனே, அந்தக் குகை (வாசலை
மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை மூடி) அவர்களை அடைத்தது. அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நம்மை (நம்முடைய) வாய்மையான செயல் தான் காப்பாற்ற
முடியும். எனவே, நம்மில் ஒவ்வொருவரும், தான் வாய்மையுடன் நடந்ததாக நம்புகிற விஷயத்தைக் கொண்டு (அல்லாஹ்விடம்) பிரார்த்திக்கட்டும்"
என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.
நன்றி மறவாதீர்!
தொழுநோயாளி, குருடர், வழுக்கைத் தலையர் ஆகியோர்
தொடர்பான நிகழ்ச்சி.
இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர்.
பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர்.
அல்லாஹ்
அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
இதுவரை அடியேனின் பார்வையில் பட்ட தளங்கள்.! இன்னும் இருந்தால் அதை கருத்துரையில் தெரிவித்தால் அவசியம் சேர்த்துக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ். ...
-
1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் ? அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் ப...
-
ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள் ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவ...