26 செப்டம்பர், 2025

ஸலவாத்து சிறப்புகள் - ஆதாரங்கள் - அனுபவங்கள்



فضائل الصلاة على النبي ﷺ - بالأدلة والتجارب

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மீது  ஸலவாத்து கூறுவதின் சிறப்புகள் -

ஆதாரங்கள் மற்றும் அனுபவ நிகழ்வுகள்.

1- புனித குர்ஆனிலிருந்து

சர்வவல்லமையுள்ள அல்லாஹ் கூறுகிறான்:

“நிச்சயமாக, அல்லாஹ்வும் அவனது வானவர்களாகிய அமரர்களும்  நபி (ஸல்) அவர்கள் மீது  ஸலவாத்து பொழிகின்றனர்.   விசுவாசிகளே நீங்களும் அவர் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறுங்கள், (அல்-அஹ்ஸாப்: 56)

ஹதீஸ்களில்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் என் மீது ஒரு முறை  ஸலவாத்து மொழிகிறாரோ, அல்லாஹ் அவர் மீது பத்து மடங்கு அருள்புரிகிறான் . அவரிடமிருந்து பத்து பாவங்களை அழித்து, அவரது அந்தஸ்தில் பத்து பதவிகளை உயர்த்துவான்.” (அல்-நஸாயி 1297)


"உயிர்த்தெழுதல் நாளில் உங்களில் எனக்கு மிக நெருக்கமானவர் என் மீது அதிக சலவாத்து உரைப்பவர் ஆவார்." (திர்மிதி 484)


உபை இப்னு கஅப் ( ரலி) அவர்கள், நாயகமே உங்கள் மீது ஸலவாத்து ஓதுவதில் என் நேரம் முழுவதையும் அர்ப்பணிக்கட்டுமா? என்று என்று ஆர்வத்துடன் கேட்ட பொழுது,

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீ அவ்வாறு செய்தால்  உங்கள் கவலைகள் தீர்க்கப்படும், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்." (திர்மிதி  2457)


2- மேதைகளின் அறிக்கைகள், வாக்குமூலங்கள் :

இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி (அல்லாஹ் அவர் மீது கருணை காட்டட்டும்) அவர்கள் கூறினார்கள்:

"  எனது தேவைகளை நிறைவேற்றுகிற ஒரு மந்திர திறவுகோலாக நபியின் மீது ஸலவாத்து சொல்லுவதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.” 

“எனக்கு எந்த ஒரு நெருக்கடி பிரச்சினை என்றாலும் ஸலவாத்து சொல்வதை வழக்கமாக்கினேன் என்றால் உடனடி தீர்வு கிடைக்காமல் இருந்ததில்லை.”

இமாம் அஷ்-ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் கவிதைகள்

இவ்வுலகில் எனக்கு ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால், நான் உடனே செல்வது ஸலவாத்து தான். 

3- சமகால அனுபவங்கள் (உண்மை நிகழ்வுகள்)

சிரியாவிலிருந்து ஒரு மூதாட்டியின் வாக்குமூலம்: 

85 வயதுடைய நல்லொழுக்கமுள்ள ஒரு பாட்டி. அந்த பாட்டியிடம் ஒரு சகோதரி பேட்டி எடுத்தாள்:

நீங்கள் 85 வயதை அடைந்த பிறகும் உங்களிடம் சில அதிசயங்களை பார்க்கிறோம்.

நீங்கள் கண்ணாடி அணியாமலே குர்ஆனை சரளமாக ஓதுகிறீர்கள். மற்றவரின் உதவி இல்லாமலேயே உங்கள் அனைத்து தேவைகளையும் நீங்களாகவே பூர்த்தி செய்கிறீர்கள். உங்கள் முகத்தில் ஒரு ஆச்சரியமான பிரகாசம் தென்படுகிறது இதன் ரகசியம் என்ன?

அவள் பதிலளித்தாள்:

நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது இந்த வார்த்தைகளை வைத்து ஸலவாத்து அதிகம் அதிகம் ஓதுகிறேன்: 

“இறைவனே,  நீ திருப்தி படுகிற அளவுக்கு, வானங்கள் பூமி நிறைய, உன் தூதர் முஹம்மது நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத்தும் சாந்தியும் நிரப்புவாயாக!”

நான் அதை பல முறை மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.

நான் ஒவ்வொரு நாளும் சூரா யாசீன், சூரா அல்-பகரா மற்றும் சூரா அத்-துகான் ஆகியவற்றை ஓதி வருகிறேன்.

அதன் அபிவிருத்தி தான் நீங்கள் பார்க்கிற அதிசயம் என்றாள் அந்த மூதாட்டி.

2- கடனில் மூழ்கிய ஒரு நபர்:

நபி (ஸல்) அவர்கள் மீது தினமும் 1,000 ஸலவாத்துகளை தவறாமல்  சமர்ப்பணம் செய்தார். ஆச்சரியமான முறையில் அவரது கடன்களெல்லாம் தீருகிற அளவுக்கு இறைவன் அவருக்கு வசதி அளித்தான். 

(சில இஸ்லாமிய பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.)

3- விமானப் பயணி:

விமானம் பழுதடைந்தபோது, மற்ற பயணிகள் எல்லாம் பதற்றத்தில் கத்திக் கதறிக் கொண்டிருந்த பொழுது இந்த பயணி மாத்திரம் பதட்டம் இல்லாமல் அமைதியாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அதிகமான சலவாத்துகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். 

சிறிது நேரத்தில் பழுது தானாகவே சரியாகி பத்திரமாக தர இறங்கியது. 

4- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்:

மருத்துவ சிகிச்சைகள் பெரிய பலனைத் தராமல் மருத்துவர்கள் கைவிட்ட பொழுது வர் நம்பிக்கை இழக்காமல், மனவலிமையுடன் நபி (ஸல்) அவர்கள் மீது தினமும் 1,000  ஸலவாத்துகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார், ஆச்சரியமான முறையில் அவரது நிலை மேம்பட்டது. அதன் பிறகு டெஸ்ட் செய்து பார்த்த பொழுது இயல்பு நிலை திரும்பி இருந்தது. 

(நவீன தஃவா ஏடுகளில் வந்த உண்மை தகவல்)

6- மினாவில் தொலைந்து போன யாத்ரீகர் ஒருவர் லட்சக்கணக்கான கூட்டத்திற்கு மத்தியில் தன் கூட்டத்தை தேடி அலைந்தார். உடனே ஸலவாத்தை கையில் எடுத்தார். தொடர்ந்து ஓதிக் கொண்டே இருந்தார் திடீரென யாரோ ஒருத்தர் வந்து அவரை அழைத்துச் சென்று அவருடைய கூட்டத்தாருடன் சேர்த்து விட்டு மறைந்து விட்டார். 

6- வேலை தேடுபவர்: அவர் நபி (ஸல்) அவர்களிடம் தினமும் 100  ஸலவாத்து ஓதுவதை வழக்கமாக கொண்டார் அவர் எதிர்பார்த்த நல்ல வேலை வாய்ப்பு கிடைத்த அனுபவத்தை அவர் சொல்லுகிறார்.

சுருக்கமாக

ஸலவாத்து ஓதினால்,

  • பாவங்கள் மன்னிக்கப்படும்
  • கவலைகள் நீங்கும்
  • கஷ்டங்கள் மாறும்
  • அந்தஸ்து உயரும்
  • அல்லாஹ்வுடைய பிரத்திகமான அருள் அவருக்கு கிடைக்கும் என்கிற கருத்து குர்ஆன் வசனங்களிலும் ஹதீஸ் நபி மொழிகளிலும் ஆதாரத்துடன் கிடைக்கின்றன. 

நடப்பு நிகழ்வுகளும் அனுபவபூர்வமான உண்மைகளும் அரபு பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் ஆயிரக்கணக்கில் கொட்டி கிடக்கின்றன. அதில் ஒரு சில நிகழ்வுகளை மாத்திரம் இங்கு மொழிபெயர்த்து சொல்லப்பட்டிருக்கிறது.

மேற்கூறிய குறிப்புகள் அனைத்திற்குமான அரபு மூலம்

١- الأدلة من القرآن الكريم والحديث الشريف

قال الله تعالى:
﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾ (الأحزاب: 56)

ومن الأحاديث:
قال النبي ﷺ: «من صلّى عليّ صلاةً واحدة صلّى الله عليه بها عشرًا، وحطّ عنه عشر خطيئات، ورفع له عشر درجات» (رواه النسائي 1297).

«إنَّ أقربَكم منِّي يومَ القيامةِ أكثَرُكم عليَّ صلاةً»

(رواه الترمذي، رقم 484

: أبي بن كعب
وقال ﷺ: «إذًا تُكفى همّك ويُغفر لك ذنبك» (رواه الترمذي 2457).

٢- أقوال العلماء

قال الإمام جلال الدين السيوطي رحمه الله في بعض رسائله:

«جرَّبتُ الصلاة على النبي ﷺ فوجدتُها مفتاحًا لقضاء الحوائج، وما لازمتُها في أمرٍ إلا ورأيتُ الفرجَ عاجلًا


شعر الإمام الشافعي رحمه الله

قال الإمام محمد بن إدريس الشافعي رحمه الله في أبيات مشهورة:


إذا ضاقتْ بي الدنيا وما رحُبتْ

ناديتُ: يا سيِّدي يا خيرَ مَبعوثِ

فصلِّ يا ربِّ على المختارِ ما بَلَغَتْ

حَياتيَ الروحُ أو أبقى بتنفيسِ

٣- تجارب معاصرة (قصص واقعية)


قصة في فضل الصلاة على النبي صلى الله عليه وسلم من سوريا 

١- أخت فاضلة عمرها 85 عام 

سألتها أحد الأخوات ما هو سر هذا النور في وجهك ، وأنك بلغتي من العمر ما بلغتي 

وأنت تقرأين القرآن بدون الحاجة إلى نظارات وتقضي حوائجك دون حاجة أحد 

فأجابتها وقالت :

أني أصلي على رسول الله صلى الله عليه وسلم بهذه الصيغة :

(اللهم صل وسلم على نبينا محمد ملء السموات والأرض حتى يرضى الله)

وأكثر منها بأعداد كبيرة ، وأقرأ سورة يس   كل يوم ، وسورة البقرة والدخان 

هذه بركات الصلاة على حبيبنا محمد صلى الله عليه وسلم فأكثروا من الصلاة عليه 



٢- رجل غارق في الديون: بعد المداومة على 1000 صلاة على النبي ﷺ يوميًا، فتح الله له أبواب الرزق حتى سدد دينه. (ذكر في بعض المجلات الإسلامية).

٣-  مسافر في طائرة: عندما تعطلت الطائرة أخذ يكثر من الصلاة على النبي ﷺ حتى هبطت بسلام. (قصص مروية في خطب ودروس معاصرة).

٤ - امرأة مريضة بالسرطان: لازمت 1,000 صلاة على النبي ﷺ يوميًا، ثم تحسنت حالتها وظهرت نتائج الفحوصات سليمة. (مذكور في نشرات دعوية حديثة).

٥ - حاج تائه في منى: قرأ الصلاة على النبي ﷺ حتى دلّه رجل غريب على مكان حملته، فلما التفت لم يجده. (قصة منتشرة بين الحجاج، نُشرت في مجلات دعوية).

٦ - باحث عن عمل: واظب على 100 صلاة على النبي ﷺ يوميًا، فجاءه عرض عمل لم يكن في حسبانه. (قصص منتشرة في كتب الرقائق المعاصرة).


21 செப்டம்பர், 2025

வாதம் அடித்த பாதம் கூட உயிர்த்தெழுந்த உண்மை நிகழ்வு

 


📝 ஷைக் முஹம்மது ஹஸ்ஸான் அவர்கள் விவரித்த ஒரு வியப்பான நிகழ்வு. அவர் கூறுகிறார்:

 நான் மக்காவில் ஒரு சொற்பொழிவாற்றத் தொடங்கினேன். நான் பேசுவதற்கு முன்பு, ஒரு மனிதர் என்னிடம், "ஷைக் முஹம்மது, நீங்கள் உறையாற்றும் முன்பு சிறிது என் வார்த்தைகளை கொஞ்சம் கேளுங்கள்" என்றார்.

நான் அவரிடம், "உள்ளே வாருங்கள் வாருங்கள் தந்தையே! அமருங்கள். உங்கள் நிகழ்வு என்ன கூறுங்கள்" என்றேன். அவர் என் அருகில் அமர்ந்தார்.

அவர் ஒரு செல்வந்தர். நிறைய செழிப்பும் செல்வாக்கும் நிறைந்த வணிகர், ஆனால் அவர் வாதத்தால் முற்றிலும் முடங்கிப்போயிருந்தார். 

அவர் கூறுகிறார், "நான் லண்டனுக்குச் சென்றேன், உயர்ந்த சிகிச்சை செய்தேன். பலனில்லை. நான் பிரான்சுக்குச் சென்றேன், ஆனால் இறைவன் எனக்கு ஒரு சிகிச்சையைத் தரவில்லை. நான் அமெரிக்காவுக்குச் சென்றேன், அங்கும் பெரிய அளவில் செலவு செய்தும் சிகிச்சை பலன் தரவில்லை.."

"ஒரு நாள், நான் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தபோது, மக்காவின் புனித இறையில்லத்திலிருந்து தொழுகையும் பிரார்த்தனையும் ஒளிபரப்புவதைக் கண்டேன். நான் அதைக் கவனித்துக் கொண்டிருந்தபோது என்னையும் அறியாமல் உணர்ச்சிகள் பொங்கி அழுதேன், பின்னர் என் பிள்ளைகளிடம் , "மக்களே! நான் ராஜாவின் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறேன்" என்று சொன்னேன். அவர்கள், "ராஜா யார், தந்தையே?" என்றனர்.

 "நான் உம்ராவுக்குச் செல்ல விரும்புகிறேன்" என்றேன்.

"என்ன உம்ராவா? முற்றிலும் முடங்கிப் போயிருக்கிற உங்களால் நடக்க இயலுமா ?"

நான், "என் பணத்தில் எனக்காக ஒரு தனி விமானத்தை வாடகைக்கு எடுததாவது உம்ராவிற்கு செல்வேன்..." என்றேன்.

பிள்ளைகள் தனி விமானம் ஏற்பாடு செய்து அழைத்து சென்றனர்.

அங்கிருந்து காரிலும் பின்னர் சக்கர நாற்காலியிலும் தூக்கி தூக்கி வைத்து கஃபாவின் அருகே கொண்டு சென்றனர்.

புனித கஃபாவின் அருகில் உணர்ச்சி பொங்க நாதழுதழுக்க நான் இந்த வார்த்தைகளால் மட்டுமே பிரார்த்தனை செய்தேன்

والله ما انا طالع من بيتك إلا على رجليه أو على المقابر"

 

"இறைவன் மீது ஆணையாக, நான் இந்த இல்லத்திலிருந்து ஒன்று என் கால்களால் நடந்து செல்ல வேண்டும் இல்லையெனில் கப்ருக்கு செல்லவேண்டும்” என்று திரும்ப திரும்ப ஒருமணி நேரம் சொல்லிக் கொண்டு இருந்திருப்பேன் . அப்படியே என்னையும் அறியாமல் நாற்காலியிலேயே அயர்ந்து தூங்கிவிட்டேன். திடீரென ஒரு அசரீரி போல எனக்கு கேட்டது

قم إمش .. قم إمش .. قم إمش...

 'எழுந்திரு, நட... எழுந்திரு, நட' என்று சொல்வதைக் கேட்டேன். அது மூன்றாவது முறையாக, "எழுந்திரு, நட..." என்று கூறியது. 

“எழுந்திரு…” 

நான் எழுந்தேன்.

“நட..” நடந்தேன்.

சில அடிகளுக்குப் பிறகு, நான் உணர்ந்தேன். நாம் முடங்கிப் போயல்லவா இருந்தோம். இப்போது எப்படி? ! 

அதனால் நான் கத்தினேன், “இறைவா நீ என்னைக் கைவிடவில்லை.

 والله ما خيبت من لجأ إليك 

உன்னிடம் அடைக்கலம் தேடுபவரை நீ கைவிட மாட்டாய்!

ادعوني استجب لكم " مجيب لكل عباد.

ولم يشترط ان تكون طائع او عاصي

استجاب لابليس عندما دعا قال " ربي فانظرني"

قال" انك من المنظرين" افلا يستجيب لك انت؟!

 

ஆம்!! "என்னை அழையுங்கள் , நான் உங்களுக்குப் பதிலளிப்பேன்" என்று உன் திருமறையில் நீ கூறுகிறாய்.

"என் இறைவனே, எனக்கு அவகாசம் வழங்கு" என்று ஷைத்தான் அழைத்தபோது கூட அவனுக்கும் செவிசாய்த்து

"நீ அவகாசம் வழங்கப்படுபவர்களில் ஒருவன்" என்று அவர் கூறினாய்.

சபிக்கப்பட்ட அவனுக்கே நீ செவிசாய்த்தாயே.. எங்களுக்கும் பதிலளிக்க மாட்டாயா? நிச்சயம் எங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுவாய்.

" ان الله حيي كريم يستحي ان يرفع العبد اليه يديه فيردهما صفرا خائبتين "

நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக, அல்லாஹ் தாராள மனப்பான்மை கொண்டவன். ஒரு அடியான் தன் கைகளை தன்னிடம் உயர்த்தினால், அவற்றை வெறுமையாகவும் ஏமாற்றமாகவும் திருப்பி அனுப்ப அவன் மிகவும் வெட்கப்படுகிறான்" என்று கூறினார்கள்.

குர்ஆன் வசனம் ஒன்று :

"أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ"

"அல்லது துன்பப்படுபவர் தன்னை அழைக்கும்போது அவருக்கு பதிலளித்து தீமையை நீக்குபவர் யார்?"

 “அதனாலே யா ஷைக்.. என் வாழ்வில் நடந்த இந்த அதிசய நிகழ்வை எல்லோருக்கும் சொல்லுங்கள். 

மக்கள் நிராசை அடையாமல் விரக்தி அடையாமல் தொடர்ந்து வேண்டுகோள் வைத்தால் இறைவன் நிச்சயம் நிறைவேற்றுவான் என்று மக்களுக்கு அறிவியுங்கள்! 



16 செப்டம்பர், 2025

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..?

     - சதக் மஸ்லஹி.

நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் என்று சில பேருக்கு நினைப்பு. அவ்வாறு நடக்கவில்லை என்றால் வாழ்க்கையை வெறுத்து விரக்தி அடைந்து விடுகிறார்கள். 

ஒரே புலம்பல். கடந்த காலத்தின் கவலையிலேயே தோய்ந்து விடாமல் எதிர்காலத்தின் பயத்திலேயே இருந்து விடாமல் நிகழ்காலத்தில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். 

குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் நல்லோர்களின் வரலாறு இவற்றிலிருந்து பாடம் பெறலாம். 

📖 குர்ஆன்

 وَعَسَىٰ أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ ۖ وَعَسَىٰ أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ 
"நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள் அது உங்களுக்கு நல்லதாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீமையாக இருக்கலாம். அல்லாஹ் அறிவான், நீங்கள் அறிவதில்லை."
— (சூரா அல்-பகரா 2:216)


இந்த வசனம் நமது விருப்பம் உடனடியாக நிறைவேறாமல் போனாலும் அதில் மறைவான நன்மைகள் இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.

🤲 ஹதீஸ்

 قال رسول الله ﷺ:
"عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ لَهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ؛ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ، فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ، فَكَانَ خَيْرًا لَهُ"
— (ஸஹீஹ் முஸ்லிம் 2999)

"ஒரு முஃமினின் விஷயம் ஆச்சரியமானது! அவனது எந்த நிலையிலும் அவனுக்கு நன்மை உண்டு. இது வேறு எவருக்கும் இல்லை. அவனுக்கு நல்லது நடந்தால் நன்றி செலுத்துவான், அது அவனுக்கு நன்மையாகும். அவனுக்கு துன்பம் வந்தால் பொறுமை காட்டுவான், அதுவும் அவனுக்கு நன்மையாகும்."

👉 அதாவது, நமது விருப்பங்கள் உடனடியாக நிறைவேறாமல் போவது, இறுதியில் நம் நலனுக்கே அமையக்கூடியது என்பதைக் குர்ஆனும் ஹதீஸும் வலியுறுத்துகின்றன.

ஒரு மனிதனுக்கு பெரிய கவலை! இந்த உலகத்தில் எதுவுமே நாம் நினைக்கிற மாதிரி நடக்க மாட்டேங்குது என்று.
இதன் காரணமாகவே அவனுக்கு மன அமைதி இல்லை. இந்த உலக வாழ்க்கை நமக்கு தேவையில்லை என்று கூட நினைக்க ஆரம்பித்து விட்டான்.

இந்த நிலையில் ஒருநாள் எதையாவது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை வந்தது.  வில்வித்தை கற்றுக் கொள்ளலாமா என யோசித்து ஒரு குருவை தேடிச் சென்றான். அவரும் அவன் தனக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் கற்றுக் கொடுத்தார். இனிமேல் இதையெல்லாம் தொடர்ந்து பயிற்சி செய் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

இவன் வந்தான். ஒரு மரத்தில் வட்டமாக கோடு போட்டுக்கொண்டு அதன் மத்தியிலே ஒரு புள்ளியை வைத்தான். தூரத்தில் நின்று கொண்டு அம்பை விட்டான் அது சற்று விலகியே போய் குத்தியது. மறுபடியும் முயன்றான்.
என்ன முயன்றும் அந்த மத்தியை தொட முடியவில்லை. 

அவன் மனம் உடைந்து போனான். "நம்ம ஜாதகமே இப்படித்தான் எதுவுமே நாம நினைக்கிற மாதிரி நடக்கிறது இல்லை என்று சோர்ந்து போய் ஒரு மண்டபத்தில் உட்கார்ந்தான். 

அப்போது ஒரு பெரியவர் அந்த பக்கமாக வந்தார். 
"என்ன தம்பி கவலையாக இருக்கிறாய்?"
"மன அமைதி இல்லை"
"என்ன காரணம்"
" நான்  நினைக்கிறது எதுவும் நடப்பதும் இல்லை; ஒரு அம்பு கூட என் பேச்சை கேட்பதில்லை."

"சரி! என்னோடு வா!" என்று அவனை அடுத்த ஊருக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே பல மரங்களில் வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. அவற்றின் நடு மத்தியில் கரும்புள்ளி அந்த புள்ளிகளில் மிகச் சரியாக அம்புகள் குத்திக் கொண்டு இருக்கின்றன. எல்லாம் மரங்களிலும் எல்லா அம்புகளும் சரியாக குறித்த வராமல் பாய்ந்திருந்தன. 

இவனுக்கு பெரிய ஆச்சரியம். "எப்படி இது! யார் இந்த மனிதன்? மிகவும் கெட்டிக்காரனாக இருப்பான் போலிருக்கிறது ஒரு மரத்தில் கூட அவன் வைத்த குறி தப்பவில்லை.
 அவனை பார்க்க வேண்டுமே!"

"அதற்கு தானே உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம். அவன் ஒரு கிறுக்கன்!
தான் நினைக்கிறபடியே இந்த உலகில் எல்லாம் நடக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்."

"அப்படியானால் வாழ்வின் ரகசியம் என்ன என்பதை அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் வாருங்கள் போகலாம்!" 

"யப்பா! வில்வித்தையில் நீ ரொம்பவும் கெட்டிக்காரனா?

"அதெல்லாம் கிடையாது! எனக்கும் வில்வித்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! 

"அப்புறம் எப்படி குறி தவறாமல்?" 

அவன் சிரித்துக் கொண்டே சொன்னான் : "அது ஒன்னும் பெரிய காரியமில்லை முதல்ல மரத்தின் மீது அம்பு விடுவேன். அதுக்கப்புறம் கிட்ட போய் அதை சுற்றி ஒரு வட்டம் வரைந்து விடுவேன். அவ்வளவுதான்."

அவன் பித்தனாக இருந்தாலும் ஒரு உண்மையை சொல்லி இருக்கிறான் 
நம்மால் ஆன முயற்சிகளை செய்ய வேண்டும் இறைவனிடத்திலும் பிரார்த்தனை புரிய வேண்டும் அதையும் மீறி நாம் நினைப்பது நடக்காவிட்டால் அதில் ஏதோ நன்மை உண்டு எனப் புரிந்து மன அமைதி கொள்ள வேண்டும் நமக்கு இழந்ததை விட சிறந்ததை இறைவன் நிச்சயம் தருவான் என்ற வாழ்க்கை தத்துவம். 
"பிடித்தது கிடைக்காவிட்டால் 
கிடைத்ததை பிரியப்பட வேண்டும்"


அல்லாஹ்விடத்தில் அழுது புலம்பினோம் அழுத்தமாய் வேண்டுதல் செய்தோம் ஆனாலும் நடக்கவில்லை எனில் பொறுமை காக்க வேண்டும். 
ஒரு தந்தை தன் சிறு குழந்தையை அழைத்துக் கொண்டு சந்தைக்கு செல்கிறார் சந்தையில் ஏராளமான பண்டங்கள் ஆங்காங்கே இருக்கின்றன கண்ணுக்கு அழகான கவர்ச்சியான இனிப்பு தேன் பாகு வழிகின்ற தின்பண்டங்கள் ஆனாலும் அது திறந்து கிடக்கிறது கண்ட கண்ட ஈக்கள் மொய்க்கின்றன. 

அதன் கவர்ச்சியில் மயங்கி குழந்தை அது தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறது. ஆனாலும் தந்தை அதை தவிர்த்து விட்டு கொஞ்சம் தள்ளிப் போகிறார் ஒவ்வொரு பண்டமாக கேட்கிறது அதையெல்லாம் தவிர்த்து விட்டு வேறொரு சிறந்த பண்டத்தை வாங்கி தருகிறார் அது மூடி பாதுகாப்பாக இருக்கிறது 

ஆனால் குழந்தைக்கு அது பிடிக்கவில்லை. காரணம் சீனிப்பாகு அதில் வழியவில்லை. கண்ணுக்கு அழகான கலராக இல்லை. 
ஆனால் தந்தைக்கு புரிகிறது: இந்த குழந்தைக்கு ஏற்ற பண்டம் எது என்று. 
அதுபோலத்தான் ஆயிரம் தாயை விட அதிக அன்புள்ளவன் அல்லாஹ். 
ஒரு அடியானுக்கு எது நல்லது? எது பொல்லாதது? என்று அவனுக்கு தெரியும் எனவே அடியான் கேட்கிறான் என்பதற்காக பொல்லாததை அவன் தர மாட்டான் நல்லதைத்தான் தேர்ந்தெடுத்து தருவான் அதற்கு சில நாட்கள் ஆகலாம் அதுவரை அடியான் பொறுத்திருக்க வேண்டும்.

13 செப்டம்பர், 2025

நேபாளம் ஆடம்பர ஆட்சியாளர்கள் Vs இஸ்லாமிய கலீபாக்கள்

 


இன்று நேபாளத்தில் அதிரடியாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.


மாணவர்களின் திடீர் புரட்சியால் கிளர்ச்சி ஏற்பட்டு ஜனாதிபதி தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் அமைச்சர்கள் பதவிகளை இழந்து இருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் வீட்டை விட்டு துரத்தப்பட்டு இருக்கிறார்கள். 

இந்த கிளர்ச்சியின் பின்னணியில் நிறைய காரணங்கள் இருக்கின்றன அதற்குள் நாம் செல்லவில்லை. 

ஆனால் எல்லோரும் சொல்லுகிற பொதுவான ஒரு காரணம் அதுவும் இருக்கிறது. அது என்ன ?

ஆட்சியாளர்களும் அவர்களது குடும்பங்களும் ஆடம்பரமாக வாழ்ந்த நிகழ்வு.

 மக்களில் நிறைய பேர் வேலையின்மை, பசி பட்டினி, பொருளாதார சீரழிவு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது ஆட்சியாளர்களும் அவரது குடும்பத்தினர்களும் ஆடம்பரமாக வாழுகிற காட்சிகள் இணையத்தில் நிறைய பரப்பப்பட்டன.

 அதனால் மக்கள் வெகுண்டு எழுந்து இப்படி ஒரு கிளர்ச்சியை உண்டாக்கி இருக்கிரார்கள் என்று பொதுவான காரணம் சொல்லப்படுகிறது.

(இந்த போராட்டத்தை வேறு சில தீய சக்திகள் தவறாகவும் பயன்படுத்தின என்பது வேறு விஷயம்.)

ஆனால் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஜனாதிபதிகள் குறிப்பாக கலீபாக்கள் குடிமக்களின் உரிமைகளையும் கடமைகளையும் எவ்வளவு தூரம் மதித்து நடந்தார்கள் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள்.

ஏழைகளின் குடிசைகளுக்கே சென்று தினசரி பணிவிடை செய்தார்கள் என்று பார்க்கிறோம்.

இதோ உதாரணத்திற்கு சில நிகழ்வுகள்: 


«ومن كان في حاجة أخيه كان الله في حاجته»


١- أبو بكر الصديق رضي الله عنه

: كان عند أطراف المدينة عجوز عمياء ليس لها أحد، فكان أبو بكر يذهب كل صباح قبل أن ينشغل بالخلافة، 

فيكنس بيتها housekeeping، 

ويعجن عجينها، 

ويهيئ طعامها cooking .

فلما رآه عمر رضي الله عنه قال:

"لقد أتعبتَ مَن بعدك يا أبا بكر."


١- அபூபக்கர் சித்தீக் (ரலி):

மதீனாவின் எல்லையில், யாருமற்ற ஒரு பார்வையற்ற வயதான பெண்மணி இருந்தார். அபூபக்கர் (ரலி) அவர்கள் கலீஃபாவின் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்பு, ஒவ்வொரு காலையிலும் அவரிடம் செல்வார்கள்.

 * அவரது வீட்டை சுத்தம் செய்வார்கள் (housekeeping),

 * அவருக்காக மாவு பிசைந்து கொடுப்பார்கள்,

 * அவருக்காக உணவு தயாரித்துக் கொடுப்பார்கள் (cooking).

இதனை உமர் (ரலி) அவர்கள் பார்த்தபோது, "அபூபக்கரே! உங்களுக்குப் பின் வருபவர்களுக்கு (இந்த நற்செயல்களில்) நீங்கள் பெரும் சுமையை ஏற்படுத்திவிட்டீர்கள்" என்று கூறினார்கள்.

அதாவது ஜனாதிபதி என்பவர் இந்த அளவுக்கு இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்கிற ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியதன் மூலம் உங்களுக்கு பின்னால் வரும் ஜனாதிபதிகளுக்கு ஒரு சிரமத்தை ஏற்படுத்தி விட்டீர்கள். இது பெரிய தியாகம் தான்" என்ற கருத்துப்பட சொன்னார்கள்.


٤- عمر بن الخطاب رضي الله عنه


كان يتفقد الناس ليلًا. فدخل على بيتٍ فيه امرأة وأولادها يبكون من الجوع، والقدر على النار فيها ماء فقط!

فبكى عمر، وذهب مسرعًا إلى بيت المال، وحمل كيس الدقيق على ظهره، فقال له خادمه: "دعني أحمله عنك."

فقال عمر: "أتحمل عني وزري يوم القيامة؟!"

ثم جلس يطبخ لهم حتى شبعوا.


 - உமர் இப்னுல் கத்தாப் (ரலி):

அவர்கள் ஜனாதிபதியாக இருந்த பொழுது இரவில் மக்களைப் பார்வையிடச் செல்வார். ஒரு வீட்டிற்குள் நுழைந்தபோது, அங்கே ஒரு பெண்ணும் அவளுடைய பிள்ளைகளும் பசியால் அழுதுகொண்டிருந்தனர். அடுப்பில் இருந்த பாத்திரத்தில் தண்ணீரைத் தவிர வேறு எதுவும் இல்லை!

இதைக் கண்டு உமர் (ரலி) அழுதார்கள். விரைவாக பைத்துல்மாலுக்கு (அரச கருவூலம்) சென்று, மாவு மூட்டையைத் தன் முதுகில் சுமந்து வந்தார்கள். அவருடைய வேலையாள், "நான் உங்களிடமிருந்து இதைச் சுமந்து கொள்கிறேன்" என்றார்.

அதற்கு உமர் (ரலி), "மறுமை நாளில் என் சுமையை நீர் சுமப்பீரா?!" என்று கேட்டார்கள்.

பிறகு, அவர்கள் வயிறு நிரம்பும் வரை அவர்களுக்காக அமர்ந்து சமைத்துக் கொடுத்தார்கள்.


«ومن كان في حاجة أخيه كان الله في حاجته»

«யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோ, அல்லாஹ் அவருடைய தேவையை நிறைவேற்றுவான்»


عبد الله بن عمر رضي الله عنهما

كان ابن عمر إذا أحبَّ شيئًا من طعامه أو شرابه قال:

"اذهبوا به إلى فلان؛ فإنه يحب هذا."

وكان يقول: "إني لأسمع حاجتي عند أخي فأبادره قبل أن يسألني."

فكان يقضي حاجة الناس حتى من غير أن يطلبوا


அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)


இப்னு உமர் (ரலி) அவர்களுக்குத் தங்களின் உணவு அல்லது பானத்தில் ஏதேனும் ஒன்று மிகவும் பிடித்திருந்தால், "இதை இன்னாரிடம் கொண்டு செல்லுங்கள்; ஏனெனில் அவர் இதை விரும்புகிறார்" என்று கூறுவார்கள்.

மேலும், "என் சகோதரரிடம் ஒரு தேவை இருப்பதை நான் அறிந்தால், அவர் என்னிடம் கேட்பதற்கு முன்பே நான் அதை நிறைவேற்ற விரைந்து செல்வேன்" என்றும் கூறுவார்கள்.


இவ்வாறு, மக்கள் கேட்காமலேயே அவர்களின் தேவைகளை அவர் நிறைவேற்றி வந்தார்.


عثمان بن عفان رضي الله عنه

في عام الرمادة حين اشتد القحط في المدينة، جاءت قافلة كبيرة لعثمان رضي الله عنه، فقال له التجار: نشتري منك وتعطينا أرباحًا كثيرة.

فقال: "كم تربحونني؟"

قالوا: عشرة في المئة.

قال: "قد زادني."

قالوا: نعطيك مئتين في المئة.

قال: "قد زادني."

قالوا: لا نعلم أحدًا يزيدك!

قال: "الله أعطاني بكل درهم عشرة. أشهد أن هذه القافلة صدقة على فقراء المسلمين."

فكان يقضي حاجة آلاف من المسلمين


உஸ்மான் (ரலி):

மதீனாவில் கடும் பஞ்சம் நிலவியது. அப்போது உஸ்மான் (ரலி) அவர்களுக்கு ஒரு பெரிய வணிகக் கூட்டம் (قافلة) வந்தது. 

வியாபாரிகள் அவரிடம், "நாங்கள் உங்களிடமிருந்து இதை வாங்கிக்கொள்கிறோம், எங்களுக்கு அதிக லாபம் தாருங்கள்" என்றனர்.

அதற்கு அவர், "எனக்கு எவ்வளவு லாபம் தருவீர்கள்?" என்று கேட்டார்.

அவர்கள், "பத்து சதவீதம்" என்றனர்.

அவர், "எனக்கு இதைவிட அதிகமாகக் கிடைத்துள்ளது" என்றார்.

அவர்கள், "நாங்கள் உங்களுக்கு இருநூறு சதவீதம் தருகிறோம்" என்றனர்.

அவர், "எனக்கு இதைவிட அதிகமாகக் கிடைத்துள்ளது" என்றார்.

அவர்கள், "உங்களுக்கு இதைவிட அதிகமாகத் தருபவர் எவரும் இருப்பதாக நாங்கள் அறியவில்லை!" என்றனர்.

அதற்கு அவர், "அல்லாஹ் ஒவ்வொரு திர்ஹத்திற்கும் எனக்குப் பத்து மடங்கு தருவதாக வாக்களித்துள்ளான். இந்த வணிகக் கூட்டம் முஸ்லிம்களில் உள்ள ஏழைகளுக்கு தர்மம் (ஸதகா) என நான் சாட்சி கூறுகிறேன்" என்றார்.

இவ்வாறு, ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் தேவையை அவர் நிறைவேற்றினார்.


📌 இவை நபித்தோழர்களின் வாழ்வில் நடந்த மாபெரும் நிகழ்வுகள். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எவ்வாறு விரைந்து செயல்பட்டார்கள் என்பதை இது காட்டுகிறது. 

அதனால்தான் அண்ணல் காந்தியடிகள் சொன்னார் 

"இந்தியாவில் ஜனாதிபதி உமர் அவர்களின் ஆட்சியைப் போல வந்தால் இந்தியா சுபிட்சம் அடையும்."

இந்தியா நேபாளம் மாத்திரமல்ல உலகத்தின் நாடுகளில் எல்லாம் இஸ்லாமிய கலீபாக்களின் நேர்மையான ஆட்சியைப் போல வந்தால் எளிமையான ஆட்சியாளர்கள்; செழிப்பான குடிமக்கள் நிம்மதியான பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை



11 செப்டம்பர், 2025

பொய்யின் துர்வாடையை உணர்வதில் வானவர்களும் ரோபாட்டுகளும்

 


📌 جاء في مسند الإمام أحمد (حديث رقم 6914) عن عبد الله بن عمر رضي الله عنهما أن النبي ﷺ قال:
«إِذَا كَذَبَ الْعَبْدُ تَبَاعَدَ عَنْهُ الْمَلَكُ مِيلًا مِنْ نَتْنِ مَا جَاءَ بِهِ»
"ஒரு அடியான் பொய் சொன்னால், அவன் சொன்ன பொய்யின் துர்நாற்றத்தால் வானவர் அவனிடமிருந்து ஒரு மைல் தூரம் விலகிச் சென்றுவிடுவார்."

✔️ قال الألباني رحمه الله: إسناده حسن (السلسلة الصحيحة 439).
🔹 المعنى: أن الكذب له رائحة خبيثة غير محسوسة عند البشر، لكن الملائكة – الذين يحبون الطيب ويكرهون الخبث – يتأذون منها، فيبتعد المَلَك عن الكاذب بعدًا كبيرًا (قدّره النبي ﷺ بالميل).

அருமையான கேள்வி
 வானவர்கள் பொய்யின் “வாசனையை” உணர்கிறார்கள் என்ற ஹதீஸின் கருத்தை — இன்று அறிவியல், தொழில்நுட்பத்தில் “ரோபோட்டுகள் உணர முடிகிறதா?”
🔹 இப்போதைய நிலை:
ரோபோட்டுகளும் AI சிஸ்டங்களும் “வாசனை” அல்லது “மனதின் பொய்/உண்மை” நேரடியாக உணர முடியாது.
ஆனால் lie detection technologies (பொய் கண்டறியும் கருவிகள்) சில அளவில் இருக்கின்றன.
Polygraph (lie detector test): இதயம் துடிப்பு, மூச்சு, வியர்வை போன்றவற்றை அளந்து பொய் சொல்கிறாரா என்று கணிக்கிறது.
AI voice analysis: ஒருவரின் குரலில் ஏற்படும் நுண்ணிய மாற்றங்களை வைத்து பொய்/உண்மை மதிப்பீடு செய்ய முயல்கிறது.
Facial recognition AI: முகத்தில் ஏற்படும் மிகச் சிறிய “micro-expressions” மூலம் மனநிலையை ஊகிக்கிறது.
🔹 இது வானவர்களின் உணர்வுக்கு இணையானதா?
இல்லை.
வானவர்கள் உணரும் “பொய்யின் துர்நாற்றம்” என்பது மனதார, ஆன்மீக ரீதியாக உணரப்படும் ஒன்று — இது மனித அறிவியலால் முழுமையாக அறிய முடியாதது.
ரோபோட்டுகள் செய்யும் விஷயம் வெறும் உடல் மற்றும் தரவு அடிப்படையிலான கண்காணிப்பு மட்டும்.

👉 சுருக்கமாக:
ரோபோட்டுகள் மனிதர்களின் உடல், குரல், முகத்தில் வரும் மாற்றங்களை வைத்து பொய் சொல்ல வாய்ப்பு இருக்கிறதா என்று ஊகிக்க முடியும். ஆனால் வானவர்களைப் போல “வாசனையால்” அல்லது ஆன்மீகமாக உணர முடியாது.
சரி 👍 இப்போது புதிய AI ஆராய்ச்சிகள் (2023–2025 காலத்தில்) பொய் கண்டறிதல் தொடர்பான சில உதாரணங்கள்:

1. AI Voice Analysis

ஆராய்ச்சியாளர்கள் குரல் (voice tone, pitch, hesitation, micro-pauses) அலசும் AI models உருவாக்கியுள்ளனர்.

எடுத்துக்காட்டு: 2023-ல் சில ஸ்டார்ட்அப்புகள் “AI lie detection in call centers” பயன்படுத்த முயன்றன.


குறைபாடு: எல்லா மொழிகளிலும், எல்லா மனிதர்களிலும் சரியாக வேலை செய்யாது.


2. Facial Micro-expression Recognition


மனிதன் பொய் சொன்னால் கண்கள், வாயின் மூலை, புருவம் ஆகிய இடங்களில் “1/25 வினாடி” மட்டுமே நீடிக்கும் micro-expressions தெரியும்.

AI கேமரா மூலம் இதை பிடிக்கிறது.

இதை airport security screening-ல் பயன்படுத்த முயற்சிகள் நடந்தன.


3. Polygraph + AI Integration


பாரம்பரிய பொய் கண்டுபிடிக்கும் கருவி (heart rate, blood pressure, sweating) + AI analysis சேர்த்து முடிவை அதிக துல்லியமாக்க முயற்சிக்கிறார்கள்.


2024-ல் சில ஆராய்ச்சிகள் polygraph accuracy ~80% என்று சொல்கின்றன (ஆனால் 100% இல்லை).


4. Brain Scanning (fMRI + AI)


Functional MRI மூலம் மூளையில் பொய் சொல்கிறபோது செயல்படும் பகுதிகளை (prefrontal cortex, anterior cingulate) AI கண்டறிகிறது.

ஆனால் இது மிகவும் விலையுயர்ந்தது, clinical use மட்டுமே.


5. Behavioural Biometrics + AI


தட்டச்சு வேகம் (keystroke dynamics), கண்கள் அசைவுகள் (eye tracking), உடல் postures—all tracked with AI.

Online exams, digital interviews-ல் இதை சில நிறுவனங்கள் சோதித்துள்ளன.


📌 முக்கியமாக:

AI இப்போதும் 100% உறுதி அளிக்க முடியாது. சிலர் calm training, acting, psychological techniques மூலம் AI-யையும் ஏமாற்றலாம்.

வானவர்களின் உணர்வு போல் ஆன்மீக ரீதியில் முழு உண்மை கண்டுபிடிக்கும் திறன் AI-க்கு கிடையாது.


மொத்தத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிவேகத்தில் வளர்ந்தாலும் இறைவனின் இயற்கை படைப்பை வானவரை முந்த முடியாது


ஆனால் நபிமார்கள் என்கிற தீர்க்கதரிசிகள் மற்றும் இறை நேசர்கள் அவர்களுக்குள்ள ஆற்றல் தனி. 

ஒரு குழந்தை இரண்டு பெண்களில் யாருக்கு சொந்தம் யார் உண்மை சொல்கிறார்? பொய் சொல்கிறார் என்பதை சுலைமான் நபி கண்டுபிடித்த அற்புத டெக்னிக் 

இது நபிமார்களுக்கு இறைவன் வழங்கிய அற்புத அறிவு 


இதுபோன்று நிறைய நபிமார்கள் உண்மையை பொய் இரண்டையும் தனது நுண்ணறிவால் கண்டுபிடித்திரக்கிறார்கள்

ஏராளமான சம்பவங்கள் அதற்கு உண்டு. 

ஆனால் இங்கே ஏ ஐ டெக்னாலஜியை விட இந்த ஆன்மீக அறிவு (அது வானவரின் அறிவாக இருக்கலாம் அல்லது இறை நேசர்கள் இறைத்தூதர்களின் அறிவாக இருக்கலாம்) எவ்வளவு மேம்பட்டது என்பதனை மட்டுமே பதிவு செய்திருக்கிறேன்.



20 ஜூன், 2025

இஸ்லாம் வலியுறுத்திய இயற்கை வளம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இஸ்லாம் இயற்கையையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மிகவும் வலியுறுத்தும் ஒரு மார்க்கமாகும்.

திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் (ஹதீஸ்களிலும்) இது குறித்து ஏராளமான போதனைகள் காணப்படுகின்றன. 

மனிதன் இந்தப் பூமியில் அல்லாஹ்வின் பிரதிநிதியாக (கலீஃபா) நியமிக்கப்பட்டவன் என்றும், இந்தப் படைப்புகளைப் பாதுகாக்கும் பொறுப்பு அவனுக்கு உண்டு என்றும் இஸ்லாம் போதிக்கிறது.

சுற்றுச்சூழல் பராமரிப்பு பற்றிய ஹதீஸ்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பல அரிய போதனைகளை வழங்கியுள்ளனர். அவற்றில் சில:
 சுத்தம் ஈமானில் பாதி:
   "சுத்தம் இறைநம்பிக்கையில் பாதியாகும்" (முஸ்லிம்).

 இந்த ஹதீஸ் உடல், உடை, இடம் என அனைத்திலும் தூய்மையை பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. சுற்றுச்சூழல் தூய்மையாக இருப்பது ஒரு முஸ்லிமின் ஈமானுடன் தொடர்புடைய கடமையாக இஸ்லாம் பார்க்கிறது.
   
 மரம் நடுதலின் மகத்துவம்:

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
   "ما من مسلم يغرس غرساً، أو يزرع زرعاً، فيأكل منه طير أو إنسان أو بهيمة، إلا كان له به صدقة."

 "ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டாலோ அல்லது விதை விதைத்து விவசாயம் செய்தாலோ, அதிலிருந்து ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது பிராணியோ உண்டால், அது அவனுக்கு ஒரு தர்மமாக அமைந்துவிடும்." 

(ஆதாரம்: சஹீஹ் புகாரி 2320, சஹீஹ் முஸ்லிம் 1553)

   > இந்த ஹதீஸ் மரம் நடுதலின் பெரும் நன்மையை வலியுறுத்துகிறது. இது சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்வதுடன், மறுமையில் நன்மையையும் பெற்றுத் தரும் ஒரு சலுகையாக இஸ்லாம் பார்க்கிறது.
   
  உலகம் அழியும் நிலையிலும் மரம் நடுதல்:

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
   "إن قامت الساعة وبيد أحدكم فسيلة، فإن استطاع ألا تقوم حتى يغرسها فليفعل."
   
"ஒருவர் கரத்தில் உலக முடிவு நாள் வந்துவிட்ட போதும் ஒரு ஈத்த மரக்கன்று இருந்து, அதை நடுவதற்கு அவருக்குச் சக்தி இருந்தால், உலக முடிவு நாள் வரும் முன்னால் அதை அவர் நட்டுவிடட்டும்!"
   (ஆதாரம்: அஹ்மத் 12902, அதப் அல்-முஃப்ரத் 479.

இப்படியும் ஒரு அறிவிப்பு உண்டு:
 அடுத்த நொடியில் உலகம் அழியும் என்றிருந்தாலும் ஒரு ஈத்த மரக்கன்று என் கரத்தில் இருந்தால் நான் அதை நட்டு விடுவேன்."

   > இந்த ஹதீஸ் எதிர்கால சந்ததியினருக்காகவும், சுற்றுச்சூழலுக்காகவும் நாம் தொடர்ந்து நற்செயல்களைச் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
   
 நீர் நிலைகளைப் பாதுகாத்தல்:
   நபி (ஸல்) அவர்கள் நிலையான நீரில் சிறுநீர் கழிப்பதையும், நீர்நிலைகளுக்கு அருகில் மலம் கழிப்பதையும், நீர் நிலைகளை அசுத்தப்படுத்துவதையும் வன்மையாகக் கண்டித்தார்கள். மேலும், தண்ணீரை மிக மிகச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் போதித்தார்கள்.

 சஅத் (ரலி) அவர்கள் உளூச் செய்யும்போது (அதிகமாகத்) தண்ணீரை உபயோகித்துக் கொண்டிருந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "சஅத்! என்ன வீண்விரயம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரலி), "உளூவிலும் வீண்விரயமா?" என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், "ஆம்! ஓடும் நதியில் இருந்தாலும் சரியே!" என்று கூறினார்கள்." (அஹ்மத்)

இது நீர் வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், வீண்விரயத்தைத் தவிர்ப்பதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.

வனவிலங்குகளைப் பாதுகாத்தல்:
   நபி (ஸல்) அவர்கள் விலங்குகள் மீதும் கருணை காட்ட வலியுறுத்தினார்கள். விலங்குகளைத் தேவையில்லாமல் துன்புறுத்துவதையும், வேட்டையாடுவதையும் தடுத்தார்கள்.

"ஹிமா" மற்றும் "ஹரம்" பகுதிகள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதினாவுக்குத் தெற்கே ஒரு "ஹிமா" (பாதுகாக்கப்பட்ட பகுதி) ஏற்படுத்தி, நான்கு மைல் சுற்றளவில் வேட்டையாடுவதையும், பன்னிரண்டு மைல் சுற்றளவில் மரங்கள் அல்லது தாவரங்களை அழிப்பதையும் தடை செய்தார்கள். 
இது இன்றைய வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் கருத்துக்கு ஒத்ததாகும்.

இஸ்லாமிய வரலாற்றில் சுற்றுச்சூழல் பராமரிப்பு:
இஸ்லாமிய வரலாறு முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான நடைமுறை எடுத்துக்காட்டுகள் காணப்படுகின்றன:

 பயன்பாடு மற்றும் பாதுகாப்பு

முஸ்லிம் ஆட்சியாளர்கள் நீர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர். நீர்ப்பாசன அமைப்புகள், கால்வாய்கள் மற்றும் கிணறுகள் அமைத்து, அவற்றை முறையாகப் பராமரித்தனர். நீர் ஆதாரங்களை அனைவருக்கும் பொதுவானதாகக் கருதினர்.

 நகரத் திட்டமிடல்
பண்டைய இஸ்லாமிய நகரங்களில் பசுமையான பகுதிகள், தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. நகரங்கள் இயற்கையுடன் இணைந்து வாழும் வகையில் வடிவமைக்கப்பட்டன.

 "வக்ஃப்" (தர்ம ஸ்தாபனங்கள்): 
இஸ்லாமிய சட்டத்தில் "வக்ஃப்" என்பது நிலம், நீர் ஆதாரங்கள் அல்லது வேறு எந்தச் சொத்தையும் சமூக நலனுக்காக தர்மமாக வழங்குவதாகும். 
பல வக்ஃப்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், பொதுவான வளங்களை நிர்வகிப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டன.
 உதாரணமாக, நீர் கிணறுகள், தோட்டங்கள், மற்றும் வனப்பகுதிகள் வக்ஃப்களாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன.

 விவசாய மேம்பாடு: இஸ்லாமிய நாகரிகம் விவசாய முறைகளை மேம்படுத்துவதிலும், மண்வளத்தைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தியது. சுழற்சி முறை விவசாயம், உரமிடுதல் போன்ற முறைகள் பின்பற்றப்பட்டன.

 பொது சுகாதார விழிப்புணர்வு

இஸ்லாமிய போதனைகள் தூய்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதால், பொது சுகாதாரத்தில் கவனம் செலுத்தப்பட்டது. கழிவு மேலாண்மை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தினர்.
மொத்தத்தில், இஸ்லாம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு மார்க்கக் கடமையாகவும், மனிதனின் பொறுப்பாகவும் கருதுகிறது. இயற்கை வளங்களை நேர்மையாகவும், பொறுப்புடனும் பயன்படுத்துவதையும், அவற்றை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதையும் இது வலியுறுத்துகிறது.

இஸ்லாமிய வரலாற்று உதாரணங்கள்: 

இஸ்லாமிய வரலாற்றில் சுற்றுச்சூழல் பராமரிப்புக்கு பல சிறந்த எடுத்துக்காட்டுகள் உள்ளன. சில முக்கிய உதாரணங்கள் இங்கே:

1. உமர் (ரலி) அவர்களின் 'ஹிமா' கொள்கை மற்றும் நீர் மேலாண்மை:
 'ஹிமா' (பாதுகாக்கப்பட்ட பகுதிகள்): இரண்டாம் கலீஃபாவான உமர் இப்னு அல்-கத்தாப் (ரலி) அவர்கள், குறிப்பிட்ட மேய்ச்சல் நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளை 'ஹிமா' என்று அறிவித்து, அங்கு மேய்ச்சல் அல்லது மரங்களை வெட்டுவதைத் தடை செய்தார். இது வளங்குன்றா நிர்வாகத்தின் ஆரம்பகால வடிவங்களில் ஒன்றாகும்.
 உதாரணமாக, மக்காவிற்கு அருகிலுள்ள 'சராஃப்' என்ற பகுதி 'ஹிமா'வாக அறிவிக்கப்பட்டு, அங்கு மேய்ச்சல் விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி, தாவரங்கள் பாதுகாக்கப்பட்டன. இதன் மூலம் அப்பகுதியின் சுற்றுச்சூழல் சமநிலையை அவர் உறுதி செய்தார்.
 
நீர் மேலாண்மை: 
உமர் (ரலி) அவர்கள் நீர் விநியோகத்தை மேம்படுத்துவதிலும், நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவர் பல கிணறுகளையும், கால்வாய்களையும் வெட்டி, அவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கிடைக்கச் செய்தார். மதீனா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் மேலாண்மை அமைப்புகளை மேம்படுத்தினார்.

2. உமையா மற்றும் அப்பாஸிய ஆட்சியில் நீர் மற்றும் விவசாய மேம்பாடு:

 ஆற்றங்கர நாகரிகங்கள்: இஸ்லாமியப் பேரரசுகள் யூப்ரடிஸ் மற்றும் டைகிரிஸ் நதிகளுக்கு அருகிலும், நைல் நதிப் படுகையிலும் வளர்ந்தன. இந்த நாகரிகங்கள் நீர்ப்பாசன நுட்பங்களை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தன. பண்டைய ரோமானிய மற்றும் சசானியன் நீர்ப்பாசன அமைப்புகளைப் புதுப்பித்து, அவற்றை மேலும் விரிவுபடுத்தினர்.

 அப்பாஸியர் காலத்து விவசாயப் புரட்சி: அப்பாஸியர்கள் (கி.பி. 8-13 ஆம் நூற்றாண்டுகள்)
 விவசாயத்தில் பெரும் புரட்சியைக் கொண்டு வந்தனர். அவர்கள் புதிய பயிர் வகைகளை (எ.கா., கரும்பு, சிட்ரஸ் பழங்கள், பருத்தி) அறிமுகப்படுத்தினர், நீர்ப்பாசன முறைகளை மேம்படுத்தினர், புதிய விவசாய நுட்பங்களை (எ.கா., பயிர் சுழற்சி, இயற்கை உரம்) உருவாக்கினர். இது நிலத்தின் உற்பத்தித்திறனை அதிகரித்ததுடன், மண்ணின் ஆரோக்கியத்தையும் பாதுகாத்தது.

கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள்:
 இஸ்லாமியப் பொறியாளர்கள் விரிவான கால்வாய் அமைப்புகளையும், நீர்த்தேக்கங்களையும் கட்டினர். இவை விவசாயத்திற்கு மட்டுமல்லாமல், குடிநீர் விநியோகத்திற்கும், நகரங்களின் தூய்மைக்கும் உதவின. உதாரணமாக, எகிப்தில் நைல் நதியிலிருந்து பல கால்வாய்கள் வெட்டப்பட்டு, விவசாய நிலங்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டது.

3. எகிப்தின் ஃபாத்திமிக் கலீஃபாக்களின் பறவைகள் சரணாலயங்கள்:
 
ஃபாத்திமிக் வம்சத்தின் ஆட்சியாளர்கள் (கி.பி. 10-12 ஆம் நூற்றாண்டுகள்) சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். உதாரணமாக, அவர்கள் எகிப்தில் உள்ள நைல் நதி டெல்டாவில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளைப் பறவைகள் சரணாலயங்களாக அறிவித்து, அங்கு வேட்டையாடுவதையும், பறவைகளுக்கு தீங்கு விளைவிப்பதையும் தடை செய்தனர். இது வனவிலங்கு பாதுகாப்பின் ஆரம்பகால வடிவங்களில் ஒன்றாகும்.

4. அண்டலூசியாவில் (ஸ்பெயின்) தோட்டங்கள் மற்றும் நீர் மேலாண்மை:

ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி (கி.பி. 8-15 ஆம் நூற்றாண்டுகள்) சுற்றுச்சூழல் மேலாண்மையின் ஒரு பொற்காலமாகக் கருதப்பட்டது. கிரெனடா, செவில்லா மற்றும் கார்டோபா போன்ற நகரங்கள் அழகிய தோட்டங்களுடனும், புதுமையான நீர் மேலாண்மை அமைப்புகளுடனும் விளங்கின.

 அல்ஹம்ப்ரா தோட்டங்கள்:
கிரெனடாவில் உள்ள அல்ஹம்ப்ரா அரண்மனை மற்றும் அதன் தோட்டங்கள் (ஜன்னத்துல் ஆரிஃப் - "கட்டிடக் கலைஞரின் தோட்டம்") இஸ்லாமிய தோற்றக்கலையின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இங்கு நீர், தாவரங்கள் மற்றும் கட்டிடக்கலை ஆகியவை இணைந்து ஒரு குளிர்ச்சியான, அழகிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சூழலை உருவாக்கின. இங்கு சிக்கலான நீர் கால்வாய்கள், நீரூற்றுகள் மற்றும் குளங்கள் மூலம் நீர் விநியோகம் செய்யப்பட்டது.

5. சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு:

  எகிப்தையும் சிரியாவையும் ஆண்ட ஸலாஹுத்தீன் அய்யூபி (சலாடின்) தனது ஆட்சியின் போது பொது சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழல் தூய்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். அவர் நைல் நதி படுகையில் கழிவு மேலாண்மை முறைகளை மேம்படுத்தினார்.

6. 'வக்ஃப்' (தர்ம ஸ்தாபனங்கள்) மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு:

இஸ்லாமிய வரலாற்றில், ஏராளமான மக்கள் தங்களின் சொத்துக்களை (நிலம், கிணறுகள், தோட்டங்கள், காடுகள்) 'வக்ஃப்' ஆக (தர்ம ஸ்தாபனங்களாக) வழங்கினர். இந்த வக்ஃப்கள் பொது நலனுக்காக நிர்வகிக்கப்பட்டன. பல வக்ஃப்கள் நீர் ஆதாரங்களைப் பராமரிக்கவும், பசுமையான பகுதிகளைப் பாதுகாக்கவும், மரங்களை வளர்க்கவும் பயன்படுத்தப்பட்டன. இது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய அணுகுமுறையாகும்.
இந்த எடுத்துக்காட்டுகள், இஸ்லாமிய நாகரிகம் வெறும் ஆன்மீக வழிகாட்டுதலை மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மேலாண்மை, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக நிலைநிறுத்துதல் ஆகியவற்றிலும் நடைமுறை ரீதியான மற்றும் முன்னோக்கிய சிந்தனையைக் கொண்டிருந்தது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

19 ஜனவரி, 2025

இஸ்லாமிய கீதங்கள்

 இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF 

தொகுப்பு :

ஆலிமா சாஜிதா பின்த் இஸ்மாயீல்

இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF : Download