01 மார்ச், 2014

அற்புதத் திருமறை அல்குர்ஆன் (வீடியோ)

மவ்லானா அல்ஹாஜ் எஸ்.எஸ்.அஹ்மது பாகவி ஹழ்ரத் கிப்லா
(தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா.)
அவர்களின் ஜும்ஆ உரை (28-02-2014) வீடியோ


22 பிப்ரவரி, 2014

கண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே

 قدم محمد عليه الصلاة والسلام



கண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே
 திங்கள் இரசூலே உங்கள் அன்பை மனம் நாடுதே
கண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே

மக்க நகர் மண்ணாய்ப் பிறந்தேனா நானும் 
மஹ்மூதர் பாதம் தொடர்ந்தேனா நானும்-2
 என்றுலகில் காண்பேன் எங்கள் நபி நாதர்
 இனிதான தோற்றம் கண்டாலே ஏற்றம்-2

                                                                 (கண்கள் இரண்டும்)

மதினாவிலே ஓர் மரமாகினேனா
 மாநபிக்குத் தென்றல் காற்றும் தந்தேனா-2
அவர் கையில் ஏந்தும் வாளாகினேனா
 அன்னல் நபி அன்புக்கு ஆளாகினேனா-2

                                                                (கண்கள் இரண்டும்)

கஃபாவிலே ஓர் கல்லாகினேனா
 காப்பவனின் வீட்டில் உள்ளாகினேனா-2
 கடும்பசி தாங்கி கருணை நபி வயிற்றில் 
கட்டிய கல்லில் இடமாகினேனா-2

                                                          (கண்கள் இரண்டும்)

ஒட்டகமாய் உலகில் பிறந்தேனா நானும்
 உத்தம நபியை சுமந்தேனா நானும்
 பேரித்தங்கனியாய் கனிந்தேனா நானும்
பெருமானின் உமிழ் நீரில் கலந்தேனும் நானும்

                                                     (கண்கள் இரண்டும்)



20 பிப்ரவரி, 2014

பழைய பதிவுகளைப் பார்வையிடுவது எப்படி?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரிய சகோதரர்கள் பலரும் அடிக்கடி கருத்துரையிலும் மின்னஞ்சலிலும் முன்வைக்கிற முக்கிய கேள்வி:
இந்த வலைப்பதிவில் பழைய பதிவுகளைப் பார்வையிடுவது எப்படி?
கடந்த கால ஜும்ஆ உரைகளைத்  தேடுவது எவ்வாறு?
 இதற்கு சுலபமான வழி இதுதான்:

14 பிப்ரவரி, 2014

அர்த்தமுள்ள காதலும் ஆகாத அனாச்சாரங்களும்(காதலர் தினக் கண்டன உரை)



இந்த உரை ..

  • காதலர் தினத்தின் கண்றாவிகளைக்  கண்டிக்கிறது.
  • அர்த்தமுள்ள காதல் எது ? என அடையாளம் காட்டுகிறது.
  • காமத்துடன் நின்றுவிடாமல் , காமம் காதலாகி, காதல் பக்தியாகிற பக்குவத்தைப்  பறை சாற்றுகிறது.



வீடியோ :