24 ஜூன், 2012

நடுங்குகிறது ஈரக்குலை

அழைப்பு பணி
இறை மறுப்பாளர்
இறப்பெய்தினாலும்
இதயத்தில்
இரக்கம் பிறக்கிறது.
இதுவரை அவருக்கு
இஸ்லாமை
இயம்பாமல்
இருந்துவிட்டோமே
என்று.


காஃபிர் ஒருவர்
காலமானாலும்
கவலை வருகிறது
கலிமாவை அவருக்கு
கற்றுத் தராமல்
காலத்தை கடத்திவிட்டோமே
என்று.


நாளை மறுமையில்
நம்மை அவர்
நாயனிடம்
பிடித்துக் கொடுத்துவிட்டால்
நாமென்ன செய்வோம் என
நடுங்குகிறது ஈரக்குலை.



சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! அல்லது கீழ்காணும் தளங்களில் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே!

22 ஜூன், 2012

மஸ்ஜிதின் மாண்பு


பள்ளியின் கண்ணியம் குறைந்து வரும் இக்காலத்தில் அதன் சிறப்பு, அதன் கண்ணியம் குறித்து  ulama.in  இந்த வாரம் வெளியுட்டுள்ள கட்டுரை மிக முக்கியமானது. தேவையானது.
அது குறித்த மேலதிக தகவல்களை இந்த வாரம் அடியேன் வெளியிடலாம் என்று முடிவு செய்து சில தகவல்களை பதிவிட்டிருக்கிறேன்.

20 ஜூன், 2012

பதிவைப் படிங்க..பரிசைப் பிடிங்க-1


அன்பு நெஞ்சங்களே!
இனி அடிக்கடி இந்த தளத்தில் பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்படும் (பரிசு இல்லையா? என்று கேக்கப்படாது) பரிசும்தான் வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ். 


இப்ப..
முதல் போட்டி அறிவிப்பு.!


கேள்வி இதுதான்:
உலகில் கருவிலிருந்து பிறக்காத உயிரினம் எத்தனை? அவை யாவை?


பதில்களை கருத்துரையில் (comment) தெரிவியுங்கள். தகுந்த பதில்களிக்கு தக்க பரிசுகள் உண்டு.


பரிசு என்னவா இருக்கும்? 
அதையும் காட்டிவிடுகிறேனே..
இதோ...
முதல் பரிசு இந்த கார்


இரண்டாவது பரிசு பல்சர் பைக்

மூன்றாவது பரிசு நம்ம அண்ணாமலை சைக்கிள்

ஏதோ.. எங்க தகுதிக்கு இதாங்க கொடுக்கமுடியும்
இப்ப நம்ம கம்பெனி ரொம்ப நஷ்டத்துல ஓடிட்டு இருக்கு அதனால இப்போதைக்கு இதுதான் தரமுடியும். எடுத்துக்குங்க. எங்க போய் எடுக்கிறது? அட அதாங்க. நம்ம கூகிள்- ல image search பண்ணி எடுத்துக்குங்க .

19 ஜூன், 2012

ஒப்பிலான் மாணவர்கள் சாதனை



நேற்று (16-06-2012) சனி காலையிலிருந்து இரவு வரை பரமக்குடியில் நடைபெற்ற முகவை மாவட்ட அளவிலான மக்தப் மதரஸாக்களுக்கான மார்க்க அறிவுப் போட்டிகளில் ஒப்பிலான் மன்பவுல் ஹஸனாத் மதரஸா மாபெரும் வெற்றி பெற்றது. மாஷா அல்லாஹ்.


மொத்தம் 42 மதரஸாக்களிலிருந்து 121 மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்தினர். பல்வேறு போட்டிகள். 

அதில் பட்டிமன்றப் போட்டியில் 3 பட்டிமன்றங்கள் பங்கேற்றன. ஒப்பிலான் மாணவர்கள் நடத்திய பட்டிமன்றம் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் முதல் தரத்தையும் பெற்று சிறப்பு பரிசை வென்றது. அல்ஹம்து லில்லாஹ்.
மண்ணின் பெருமை காத்த மாணவர்கள்
வீடியோவிற்கு அனுமதி வழங்கப்படாததால் அதைப் பதிவு செய்யமுடியவில்லை என்ற வருத்தம் ஒருபக்கம் இருந்தாலும் தலைமை நடுவர் மவ்லானா O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்களின் திருவாயால் கிடைத்த பாராட்டும் துஆவும் வாழ்வில் மறக்கமுடியாதவை.  ''இந்த பட்டிமன்றத்தில் உரையாற்றிய மாணவச் செல்வங்களின் உரையைக் கேட்டால் அவர்களின் பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்கள்'' என்று திரும்ப திரும்ப ஹழ்ரத் அவர்கள் கூறிய அந்த வாழ்த்து மரணப் படுக்கையிலும் நம்மால் மறக்க முடியாது. அல்ஹம்து லில்லாஹ். 


பாகவி ஹழ்ரத் அவர்களின் பாராட்டு
நமது முயற்சிக்கு இறைவன் வழங்கிய அங்கீகாரம் என்பதால் உடனே நம் மாணவர்கள் இரண்டு ரக்அத் தொழுது இறைவனுக்கு நன்றி செலுத்தினர். 


மாவட்ட அளவில் ஒரு அழுத்தமான முத்திரையை நம் மாணவர்கள் பதித்ததற்காக அவர்களுக்கு இந்த வலை தளம் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் அவர்கள் சாதனை படைக்க மனமுவந்து வாழ்த்துகிறது. 


சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! 

13 ஜூன், 2012

வின்னேற்றப் பயணம் -1

வின்னேற்றப் பயணம்



மிஃராஜ் என்பது பூமான் நபியின் பூத உடலுடன் எழுவானையும் கடந்து சென்று அல்லாஹ்வை தரிசித்துவிட்டு வந்த அற்புத பயனமாகும். சிலர் கூறுவதுபோன்று வெறும் கனவல்ல. 

 
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير   [الإسراء:1].
இந்த வசனத்தில் உள்ள  بعبده என்ற வார்த்தை உடல் உயிர் இரண்டையும் உள்ளடக்கியது.


ஈஸா நபியை உடலுடன் உயர்த்தியவன் நம் நபியையும் அவ்வாறு செய்திருக்கமுடியாதா?

10 ஜூன், 2012

இரும்பையும் இறக்கினோம்



பூமியில் காணப்படும் இரும்புகள் அனைத்தும் பூமியில் தாமாகவே உருவாகவில்லை! மாறாக வானத்தில் வேறு எங்கிருந்தோ பூமியை நோக்கி வந்தது என்பது தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையாகும்.

ஆனால் இந்தப் பேருண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அனைத்துலகங்களைப் படைத்த அந்த இறைவன் உலக மாந்தர்களுக்கெல்லாம் நேர்வழிகாட்டிட அவன் இறக்கியருளிய அவனுடைய சத்தியத் திருவேதத்திலே இதைக் குறித்து குறிப்பிட்டு மக்கள் சித்தித்து தெளிபெறுமாறு அறிவுறுத்துகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: -

“நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் இறக்கினோம். அதில் கடும் அபாயம் இருக்கிறது; எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்து) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்” (அல்குர்ஆன்: 57:25)
 


சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! 

03 ஜூன், 2012

சுகாதார விழிப்புணர்வு பேரணி



sadhak maslahi



தகவல்: சதக் மஸ்லஹி
படங்கள்: முஹம்மது மதாஸ் 

நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் டெங்கு போன்ற தொற்றுநோய்கள் சமீபத்தில் நம் ஒப்பிலானிலும் ஒரு சில குழந்தைகளைத் தொட்டதைத் தொடர்ந்து ஒப்பிலான் ஊராட்சி சார்பாகவும் ஜமாத் சார்பாகவும் சில துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனஜும்ஆ மேடைகளில் இது பற்றி அதிகம் பேசப்பட்டது.
கிணறுகளிலும் பாதையோரங்களிலும் மருந்து தெளிக்கப்பட்டதுதெருக்களில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளபட்டது.
சுத்தம் சுகாதார விழிப்புணர்வு பேரணி:
இன்று (02-06-2012 சனிமாலை 4 மணி அளவில் சுத்தம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
  • பள்ளிவாசலிலிருந்து புறப்பட்ட இந்த பேரணியில் ஜமாஅத்தார்கள், மதரஸா மாணவ மாணவியர், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
islamic valibar sangam
  • ஊராட்சி மன்றத் தலைவர்ஜமாஅத்தின் உதவித் தலைவர்பொருளாளர் உள்ளிட்ட பெருமக்கள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்,
  • சுகாதார விழிப்புணர்வு பற்றிய முழக்கங்களை கோஷமிட்டுக்கொண்டே பேரணி புறப்பட்டுச் சென்றது 
  • சுகாதார விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கரங்களில் ஏந்தியவர்களாக வந்த பேரணியை ஒப்பிலான் இஸ்லாமிய வாலிப சங்கத்தினர் குளிர்பானம் கொடுத்து வரவேற்றனர்.
  
    islamic valibar sangam
    வழிநெடுகிலும் வாலிபர் சங்கத்தின் வரவேற்பு
  • அனைத்து தெருக்களிலும் உலா வந்த பேரணி இறுதியாக பள்ளியில் வந்து நிறைவுற்றது.

பேரணியில் முழங்கப்பட்ட டெங்குக்கு எதிரா பத்து கட்டளைகள்:
குடிநீரைக் காய்ச்சி
வடிகட்டி அருந்துவோம்!

oppilan madrasa
டெங்கு போன்ற காய்ச்சலை
எங்குமின்றி துரத்துவோம்

பெருகிக் கிடக்கும் கூளங்கள்
பேரழிவின் மூலங்கள்!

குவிந்து கிடக்கும் குப்பைகள்
கூட்டிப் பெருக்கித் தள்ளுங்கள்!

 மொய்க்கும் பண்டங்கள்
நோய் நொடியின் சொந்தங்கள்!

தெருக்களில் தேங்கும் கழிவு நீர்
கொசுக்கள் பெருகும் அழிவு நீர்!

குடியை ஒழிப்போம்!
செடியை வளர்ப்போம்!!

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்!
நாட்டுக்கு நலன் புரிவோம்!!

காய்கறிகள் உணவில் சேர்த்து
நோய் நொடியைத் துரத்துவோம்!

அளவோடு உண்டு
நலமோடு வாழ்வோம்!


சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! அல்லது கீழ்காணும் தளங்களில் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே!