26 அக்டோபர், 2011

துல்ஹஜ் முதல் பத்து நாட்கள்: சிறப்பும் செய்யவேண்டிய அமலும்

 குர்பானி


முத்தான முதல் பத்து நாட்கள்
அல்லாஹ் சத்தியம் பண்ணுகின்ற பத்து நாட்கள் ‘‘அதிகாலையின் மீதும் பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக” (பஜ்ர் - 01)
قال الله تعالي وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ وَالْوَتْرِ (3)عن جابر رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : {والفجر وليال عشر}عشر الأضحية والوتر يوم عرفة والشفع يوم النحر هذا حديث صحيح رواه الحاكم في المستدرك
روي ان الله اختار من السنة ثلاث عشرات:العشر الأخير من رمضان لما فيه من بركات ليلة القدر, وعشر الأضحي لما فيه من يوم التروية ويوم عرفة والأضاحي والتلبية والحج وأنواع المناسك, وعشر المحرم لما فيه من بركات يوم عاشوراء , قال الفقهاء رح لو قال رجل لله علي أن أصوم أفضل الأيام في سنتي هده بعد رمضان يجب عليه العشر الأول من دي الحجة 
  
துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்தநாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி(ஸல்அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரேஅல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்செய்வதை விடவுமாஎன நபித்தோழர்கள் கேட்டார்கள்அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும்அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள். ( புகாரி)

நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.  ( ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்
1- ஹஜ் உம்ரா:ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும் மேலும்ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்  புகாரி முஸ்லிம்
2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவதுபாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில்ஈடுபடுவது.
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر (ترمذي)

இந்த நாட்களில் ஒரு நாள் நோன்பு நோற்பது ஓராண்டு நோற்பதற்கு நிகராகும் .அதில் ஓர்இரவு வணங்குவது லைலத்துல் கத்ரு இரவில் வணங்குவதற்கு நிகராகும்அறிவிப்பு;அபூஹுரைரா (ரலி)
                                  -திர்மிதி.
இஃக்லாஸ் (மனத்தூய்மைஅதிகரித்தால் நன்மை இன்னும் அதிகமாகும்.
அனஸ்(ரலிகூறினார்கள்இந்த நாட்களில் ஒவ்வொரு நாளின் நோன்பும் ஆயிரம் நாட்களுக்குசமம்அரபா நாளின் நோன்பு பத்தாயிரம் நாட்களுக்கு சமம்.

3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காகஅந்த நாளுக்கு முந்திய வருடத்தின்பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் எனநான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள். (-முஸ்லிம்)
பி (ஸல்அவர்கள் கூறினார்கள்: ''சுவனத்தில் முத்து மாணிக்கம் மரகதம் பவளங்களால் ஆன ஒரு மாளிகை உண்டு''.
ஆயிஷா (ரலி): ''யா ரசூலல்லாஹ் அது யாருக்கு?''
நபி: ''அரஃபா நாளில் நோன்பு வைப்பவருக்கு!''
அரஃபா நாளில் நோன்பு வைத்தவருக்கு அன்று காலையில் அல்லாஹ் நன்மையின் வாசல்களில் 30ஐ திறக்கிறான்; தீமையின் வாசல்களில் 30ஐ அடைக்கிறான்.
உம்மு சலமா(ரலி) கூறுகிறார்கள்: ''அரஃபா நாள் நல்ல திருநாள்;
நன்மையும் அபிவிருத்தியும் நிறைந்த நாள்; அருளும் மன்னிப்பும் அமைந்த நாள்!''

இப்னு ஜாவிர்து(ரலி) கூறுகிறார்கள் : நானும் என் தோழரும் கல்வி தேடி பயணமாணோம். அரஃபா தினத்தின் மாலையில் லூத் நபி கூட்டத்தினர் அழிக்கப்பட்ட இடம் அடைந்தோம். யதார்த்தமாக அங்கு சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் புழுதி படிந்த முகத்துடன் ஒருவன் இருந்தான். தலையெல்லாம் மண்.
‘நீ யார்?’   அவன் மவுனமாக இருந்தான்.
‘நீ இப்லீஸா?'’  ‘'ஆமாம்!'’  ‘ஏன் இந்த கோலம்?’
''அரஃபா மக்களின் காட்சியைப் பார்த்துத்தான்! 50 ஆண்டுகளாக அவர்களை வழிகெடுத்து வைத்திருந்தேன். இன்;று அரஃபா தினம் அவர்களின் மீது அருள் இறங்கிவிட்டது பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன. இதை என்னால் சகிக்க முடியவில்லை.அதனால் என் தலைமீது நானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டேன்.
எனக்கு ஆறுதல் வேண்டுமல்லவா? ஆகவே இங்கு ஓடி வந்துவிட்டேன். இங்கு அழிக்கப்பட்ட இந்த மக்களை நினைத்து என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.''1         (நுஸ்ஹத்துல் மஜாலிஸ்)
4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதிபோன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது
துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்தநாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லைஆகவேலாஇலாஹா இல்லல்லாஹ் அல்லாஹஅக்பர் அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளைஅதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.   ( அஹ்மத்)
இப்னு உமர் (ரலி) ,அபூஹுரைரா (ரலிஆகிய இரு நபித்தோழர்களும்துல்ஹஜ் (மாதம் ஆரம்ப)பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும்கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.  (புகாரி)
பெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து பிறை 13ம்நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும் கூறுவது.
  • إِذَا دَخَلَتْ الْعَشْرُ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ فَلا يَمَسَّ مِنْ شَعَرِهِ وَبَشَرِهِ شَيْئًا".   ( رواه مسلم) 
குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ் 1 லிருந்து குர்பானி அறுக்கும்வரை தன் முடி நகம் களைய வேண்டாம் (முஸ்லிம்)
---------------------------------------------


 قال ابن جارود خرجت أنا وصاحب لي في طلب العلم فمررنا عشية عرفة على مدينة قوم لوط فقلت لصاجي ندخل هذه المدينة ونشكر الله على ما عافانا مما ابتلاهم به فبينما نحن نطوف اذ رأيت رجلا كوسجا أغبر الوجه فقلنا له من أنت فتغافل عنا فقلنا له لعلك إبليس قال نعم قلنا له من أين أقبلت قال هذا وجهي من عرفات كنت أشفيت صدري من قوم أذنبوامنذ خمسين سنة فنزلت الرحمة عليهم في هذا اليوم فجعلت التراب على رأسي أنظر هؤلاء المعذبين حتى يسكن غضبي..

6 கருத்துகள்:

  1. waaw!நிறைய தகவல்கள்!அரிய விஷயங்கள். தொடரட்டும் உங்கள் பணி..வாழ்த்துக்கள் ஸதக் மஸ்லஹி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே..
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி..

      நீக்கு
  2. Assalamu alaikum ungaluku eru ulahilum yallam valla allah kirupai seivanaha Aameen

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
      மவ்லானா தங்களின் துஆவின் பக்கம் எப்பவுமே இந்த
      ஏழை யாசகனாகவே இருக்கிறேன்

      நீக்கு
  3. Assalamu alaikum ungaluku eru ulahilum yallam valla allah kirupai seivanaha Aameen

    பதிலளிநீக்கு
  4. Jasakallah moulana thangalin sevai mulumaiyaaha ivvulagirku vendum allah thangalai qabool seyvanaha

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...