11 அக்டோபர், 2012

உயிர் கொடுத்து உயிர் காப்போம்

உள்ஹிய்யா
மனித வாழ்க்கையில் முக்கியமான மூன்று கட்டங்கள் உண்டு;
  • மழலை வாழ்க்கை
  • மணவாழ்க்கை
  • மறுமை வாழ்க்கை
இம் மூன்றிலும் மனிதன் ஆபத்துகள் சிரமங்கள் பெரும் துன்பங்கள் இன்றி நிம்மதியாக வாழ மார்க்கம் பல வழிமுறைகளை கற்றுத் தந்துள்ளது. அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் பாதையில் அறுத்துப் பலியிட்டு பங்கிடுதல்


1. மழலை வாழ்க்கை சிறக்க: அகீகா
 قال : رسول الله صلى الله عليه ( مع الغلام عقيقة , فأهريقوا عنه دما , وأميطوا عنه الأذى )
 أن رسول الله صلى الله عليه وسلم ( عق عن الحسن والحسين كبشاً وكبشاً ) رواه أبو داود وفي رواية الطبراني  عن انس ( كبشين ) 
 قال رسول الله صلى الله عليه وسلم ( كل غلام رهينة بعقيقة تذبح عنه يوم سابعه ويسمى فيه ويحلق رأسه ) رواه أبو داود والترمذي
அண்ணல் நபி ஸல் அவர்கள் ஹஸன் ஹுஸைன் இருவருக்காக அகீகா கொடுத்தார்கள். (அபூதாவூது, நஸயீ)  தப்ரானியின் அறிவிப்பில் இரண்டு இரண்டு ஆடுகள் கொடுத்தார்கள் என்று வந்துள்ளது.
 “ ஒவ்வொரு குழந்தையும் அதனுடைய அகீகாவைக் கொண்டு அடகு வைக்கப்பட்டுள்ளது. அதனுடைய எழாவது தினத்தில் அதற்காக அறுக்கப்படும், தலை முடி மலிக்ப்படும், அத்தினத்திலே பெயர் சூட்டப்படும் என நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்”    (அபூ தாவுத் 2839)

 ''யார் தன்னுடைய குழந்தைக்காக அறுத்துப் பலியிட விரும்புகின்றாறோ அவர் அறுத்துப் பலியிடட்டும், ஆண் குழந்தையாயின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாயின் ஒரு ஆடும் கொடுக்கட்டும்'' என நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்”
(ஆதாரம் : அபூ தாவுத் 2842, நஸாயீ 188, அஹ்மத்182,183;)

எப்போது அறுக்கப்படும் ?
 ووقتها : قال الإمام أحمد ( تذبح يوم السابع , فإن لم يفعل ففي أربعة عشر , فإن لم يفعل ففي إحدى وعشرين ) , لما رواه البيهقي في الشعب عن عائشة رضي الله عنها  
குழந்தை பிறந்த ஏழாவது நாளில் கொடுப்பது ஏற்றம். தவறினால் 14 வது, 21 வது நாளிலும் கொடுக்கலாம். .

இப்னு உமர் ரலி அவர்களின் குடும்பத்தில் யார் வந்து அகீகாவிற்காக ஆடு கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுத்து வந்தனர். தன் குழந்தைகளுக்காகவும் அகீகா கொடுத்து வந்தனர். (முஅத்தா)

தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பார்கள். அதுபோல அகீகா கொடுத்தால் குழந்தைக்கு பெரும் ஆபத்துகள் கடும் நோய்நொடிகள் ஏற்படாமல் அல்லாஹ் பாதுகாப்பான்.

 2. மண வாழ்க்கை சிறக்க: வலீமா


திருமணத்திற்குப் பின் மணமகன் வழங்கும் விருந்து வலீமா. இந்த விருந்து நபி  (ஸல்) கற்றுத் தந்த வழிமுறை. பெண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து கேட்டுப் பெறுவதும் மறைமுகமான வரதட்சணையாகும்.

நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை. மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை.

தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த சுன்னத் நிறைவேறிவிடும். என்றாலும் கூடுமானவரை ஒரு ஆடாகிலும் அறுத்து வலீமா வழங்குவது ஏற்புடையது.
நாயகம் (ஸல்) ஸைனப் (ரலி) அவர்களை மணந்தபோது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள். (புகாரி 5168, 5171, 7421)

لا خلاف بين أهل العلم في أن الوليمة سنة في العرس مشروعة ; لما روي { أن النبي صلى الله عليه وسلم أمر بها وفعلها . فقال لعبد الرحمن بن عوف ، حين قال : تزوجت : أولم ولو بشاة } . وقال أنس : { ما أولم رسول الله صلى الله عليه وسلم على امرأة من نسائه ما أولم على زينب ، جعل يبعثني فأدعو له الناس ، فأطعمهم خبزا ولحما حتى شبعوا . وقال أنس إن رسول الله صلى الله عليه وسلم اصطفى صفية لنفسه ، فخرج بها حتى بلغ ثنية الصهباء ، فبنى بها ، ثم صنع حيسا في نطع صغير ، ثم قال : ائذن لمن حولك . فكانت وليمة رسول الله صلى الله عليه وسلم على صفية متفق عليهن . 

இன்று பெரும்பாலான மக்கள் திருமண விருந்து என்ற பெயரில் மிகவும் ஆடம்பரமாக குடி கும்மாளத்துடன் நடத்துகின்றனர். இன்னொரு பக்கம் எளிமை என்ற பெயரிலும் நபிவழி என்று சொல்லிக்கொண்டும் வலிமா விருந்தை மட்டும் மிகவும் கஞ்சத்தனமான முறையில் ஒரு டீ பிஸ்கட்டுடன் முடித்துக்கொள்கிற பேர்வழிகளும் உண்டு.

  •  மாப்பிள்ளைக்கு பல ஆயிரம் ரூபாயில் கோர்ட்டு ஷூட்டு . 
  • பெண்ணும் தோழிகளும் உறவுகளும் அணிந்திருக்கும் பட்டு உயர் ரக பட்டு. 
  • ஆனால் வலீமா விருந்து மட்டும் டீ பிஸ்கட்டு. 

அதற்கு சான்றாக அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் திருமணத்தை சொல்லிக்காட்டுவது. 'பார்த்தீர்களா... அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே தெரியாமல் மிகவும் இரகசியமாக திருமணம் முடித்திருக்கிறார்கள் ஒரு விருந்து இல்லை தடபுடல் இல்லை'' என்று அடுக்கிக்கொண்டே போவது. இதுதான் இன்றைய நவீன மார்க்கவாதிகளின் பாணி.
ஆனால் அந்த அறிவிப்பின் இறுதியில் என்ன வருகிறது:   أولم ولو بشاة

தோழரே.. ஒரு ஆட்டையாவது அறுத்து விருந்து கொடுத்து விடுங்களேன் என்று நபியவர்கள் கூறினார்கள். இந்த இறுதிப் பகுதியை அவர்கள் பெரும்பாலும் சொல்வதில்லை.

3۔ மறுமை வாழ்க்கை சிறக்க: குர்பானி

குர்பானி என்பது இம்மையில் மட்டுமல்ல.. மறுமையிலும் மகத்தான பலனை நல்கக்கூடியது.
 " عظموا ضحاياكم فإنها على الصراط مطاياكم "
''உங்கள் குர்பானிப் பிராணியை நன்கு கொழுக்கவையுங்கள். அது மறுமையில் சிராத்துல் முஸ்தகீம் பாலத்தில் வாகனமாகும்''.


குர்பானி எனபது இன்று நேற்றல்ல.. தொன்றுதொட்டு நடைபெறும் ஒரு வழிமுறையாகும். ''எல்லா சமுதாய மக்களுக்கும் இதை வழிமுறையாக்கி இருந்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
"وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ" [الحج:34].

ஆனால் அந்த காலத்து குர்பானிக்கும் நம் குர்பானிக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒரு காலத்தில் குர்பானி என்பது ஏழைகளுக்கு எந்த பிரயோஜனமும் இன்றி வெறும் சடங்காக இருந்தது. ஆகாயத்தின் நெருப்புக்கு இரையாக மட்டும் இருந்தது. அதாவது இறைவனுக்காக பலி கொடுக்க நாடியவர் அதை எடுத்துகொண்டு போய் மலை உச்சியிலோ மைதானத்திலோ வைத்துவிடவேண்டும். வானத்திலிருந்து ஒரு நெருப்பு வந்து அதைக் கரித்து சாம்பலாக்கினால் அதை இறைவன் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். வானிலிருந்து நெருப்பு வரவில்லை என்றால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை۔
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வர்கள் காபீல் ஹாபீல் இருவருக்கும் இக்லிமா என்ற பெண்ணைத் திருமணம் செய்வதில் ஏற்பட்ட வழக்கில் இறைவனின் தீர்ப்பு இதுவாகத்தான் இருந்தது. இருவரும் தங்கள் பலி பொருளை மைதானத்தில் வைக்க ஹாபீலின் ஆடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. வானத்தின் நெருப்பு வந்து அதை மட்டும் கரித்தது. அதன்படி இக்லிமாவைத் திருமணம் புரியும் வாய்ப்பு ஹாபீலுக்கு கிடைத்தது.
ஆக, இந்த முறையிலான குர்பானியால் குர்பானி கொடுப்பவருக்கு மட்டுமே லாபம் கிடைத்து வந்தது. ஆனால் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மூலம் நடைமுறைக்கு வந்த குர்பானி முறையில், இறைச்சி ஏழைகளுக்கும் உறவுகளுக்கும் பங்கிடப்படுவதால் எல்லோருக்கும் பயன் கிடைக்கிறது.

குர்பானியின் தத்துவமே இதுதான்:

1- التقرب إلى الله تعالى بامتثال أوامره، ومنها إراقة الدم، ولهذا كان ذبح الأضحية أفضل من التصدق بثمنها –عند جميع العلماء- وكلما كانت الأضحية أغلى وأسمن وأتم كانت أفضل، ولهذا كان الصحابة –رضوان الله عليهم- يسمنون الأضاحي.
2- التربية على العبودية.
3- إعلان التوحيد وذكر اسم الله عز وجل عند ذبحها.
4- إطعام الفقراء والمحتاجين بالصدقة عليهم.
5- التوسعة على النفس والعيال بأكل اللحم الذي هو أعظم غذاء للبدن، وكان عمر بن الخطاب –رضي الله عنه- يسميه (شجرة العرب) 
6- شكر نعمة الله على الإنسان بالمال.


ன்னொரு பக்கம் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தண்ணீர் கிடைக்கவேண்டும் என்பதற்காக உயிர்ப்பலி கொடுக்கப்பட்ட நிகழ்வுகள் ஏராளம்.
இன்று தண்ணீருக்காக மாநிலங்கள் மோதிக்கொண்டிருக்கின்றன. மூன்றாவது உலகப் போர் வருமானால் அதன் பின்னணியில் தண்ணீர் பிரச்சினை பிரதானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அன்றும் தண்ணீருக்கான உரிமையில் இரு சாரார் போட்டி போட்டு அதில் வெற்றி கிடைத்ததற்கு நன்றிகடனாக பலி கொடுப்பதாக நேர்ச்சை செய்யப்பட்டது. மிருக பலி அல்ல.. நரபலி. ஆனால் அல்லாஹ் அதைத் தடுத்து குர்பானி கொடுக்க செய்தான்.
பனூ ஜுர்ஹூம் கிளையார் மக்காவைக் காலி செய்து விட்டுப் போகும்போது ஹஜ்ருல் அஸ்வத் உள்பட ஏராளமான பொருட்களை ஜம்ஜம் கிணற்றுக்குள் போட்டு மூடி சென்றுவிட்டார்கள். நீண்டநாள் வரை அந்த இடம் அடையாளம் தெரியாமல் இருந்தது. அதன்பின் அப்துல் முத்தலிபுக்குக் கனவில் ஜம்ஜம் கிணற்றின் இடம் காண்பிக்கப்பட்டு அதை தோண்டுமாறு உத்தரவிடப்பட்டது. அதை அவர் தோண்டி ஹஜ் பயணிகளுக்கு ஜம்ஜம் நீரை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
ஜம்ஜம் கிணறு தோண்டப்பட்ட போது குறைஷியர்கள் அப்துல் முத்தலிபிடம் வந்து அதில் தங்களுக்கும் பங்களிக்க வேண்டுமென வாதிட்டனர். அவர் இது எனக்கு மட்டுமே உரித்தானது என்று கூறி அதை ஏற்க மறுத்துவிட்டார். அவர்கள் விடாப்பிடியாக தங்களுக்குப் பங்களித்தே தீரவேண்டுமென வலியுறுத்தினர். இறுதியாக, ஷாமில் பெரிதும் மதிக்கப்பட்ட ஸஃது ஹுதைம் என்ற கோத்திரத்தைச் சேர்ந்த குறி கூறும் பெண்ணிடம் தீர்ப்பு கேட்கும் முடிவுடன் ஷாம் தேசத்திற்கு கிளம்பினர். செல்லும் வழியில் தண்ணீர் தீர்ந்துவிடவே அப்துல் முத்தலிபுக்கு மட்டும் அல்லாஹ் மழை மூலம் தண்ணீரை வழங்கினான். குறைஷியர்கள் மீது ஒரு துளியும் மழை பொழியவில்லை. இதைக் கண்ட குறைஷியர்கள் ஜம்ஜம் கிணற்றில் அப்துல் முத்தலிபுக்கு உள்ள தனிப்பட்ட உரிமையை ஒப்புக் கொண்டு திரும்பினர். இச்சந்தர்ப்பத்தில் ‘அல்லாஹ் தனக்கு பத்து ஆண் பிள்ளைகளை அளித்து அவர்கள் எனக்கு உதவும் வயதை அடைந்தால் அதில் ஒருவரை கஅபாவிற்கருகில் அல்லாஹ்விற்காக பலியிடுவதாக’ அப்துல் முத்தலிப் நேர்ச்சை செய்து கொண்டார். (இப்னு ஹிஷாம்)
மேலும் பார்க்க:  http://majdah.maktoob.com/vb/majdah59434/

அதுபோலவே அல்லாஹ் பத்து ஆண்மக்களை நல்கினான். அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு கஃபாவிற்கு சென்று பத்து பிள்ளைகளின் பெயர்களயும் எழுதி சீட்டுக் குலுக்கிப் பார்த்ததில் அப்துல்லாஹ் (நபியின் தந்தை) பெயரே வந்தது. அவரைப் பலி கொடுக்க மனமின்றி அவரது பெயரை ஒரு சீட்டிலும் 10 ஒட்டகம் என்று மற்றொரு சீட்டிலும் எழுதி குலுக்கிப் பார்த்ததில் மறுபடியும் அவரது பெயரே வந்தது. இப்படியாக பத்து பத்தாக கூட்டி நூறு ஒட்டகம் என்று எழுதியபோதுதான் 100 ஒட்டகம் என்று வந்தது. ஒட்டகங்களை பலியிட்டு அப்துல்லாஹ் அவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது.
சுவனத்து ஆட்டை பலியிட்டு இஸ்மாயீல்(அலை) அவர்கள் காப்பாற்றப்பட்டது போல.
அதைதான் நபி ஸல் இப்படிக் கூறினார்கள்:
''நான் அல்லாஹ்விற்காக அறுக்கப்படவிருந்த இருவரின் வாரிசாக இருக்கிறேன்.''


இன்னொரு வரலாறு:
 நைல் நதி தண்ணீர் இன்றி வரண்டுபோனபோது அம்மக்கள் ஒரு அழகான பெண்ணை அலங்கரித்து பலிகொடுத்தால் தண்ணீர் வரும் என்று அதற்கு தயாரான பொழுது உமர் ரலி அவர்களின் ஒரு துண்டுச் சீட்டு மூலம் தண்ணீர் ஓடியதால் நரபலி தடுத்து நிறுத்தப்பட்ட வரலாறு:

 لما افتتحت مصر أتى أهلها عمرو بن العاص - حين دخل بؤونة من أشهر العجم – فقالوا : أيها الأمير ، لنيلنا هذا سنة لا يجري إلا بها . قال: وما ذاك ؟ قالوا: إذا كانت اثنتي عشرة ليلة خلت من هذا الشهر عمدنا إلى جارية بكر من أبويها ، فأرضينا أبويها وجعلنا عليها من الحلي والثياب أفضل ما يكون، ثم ألقيناها في هذا النيل .
فقال لهم عمرو : إن هذا مما لا يكون في الإسلام ، إن الإسلام يهدم ما قبله .
قال : فأقاموا بؤونة وأبيب ومسرى والنيل لا يجري قليلا ولا كثيرا ، حتى هموا بالجلاء ، فكتب عمرو إلى عمر بن الخطاب بذلك ، فكتب إليه : إنك قد أصبت بالذي فعلت ، وإني قد بعثت إليك بطاقة داخل كتابي ، فألقها في النيل .
فلما قدم كتابه أخذ عمرو البطاقة فإذا فيها " من عبد الله عمر أمير المؤمنين إلى نيل أهل مصر : أما بعد ، فإن كنت إنما تجري من قبلك ومن أمرك فلا تجر فلا حاجة لنا فيك ، وإن كنت إنما تجري بأمر الله الواحد القهار ، وهو الذي يجريك فنسأل الله تعالى أن يجريك " 
قال : فألقى البطاقة في النيل ، فأصبحوا يوم السبت وقد أجرى الله النيل ستة عشر ذراعا في ليلة واحدة ، وقطع الله تلك السنة عن أهل مصر إلى اليوم " انتهى من "البداية والنهاية" (7 /114-115)
وهكذا رواه ابن عبد الحكم في "فتوح مصر" (ص165) واللالكائي في "شرح اعتقاد أهل السنة" (6/463) وابن عساكر في "تاريخ دمشق" (44 /336) وأبو الشيخ في "العظمة" (4/1424) من طريق ابن لهيعة به .

13 கருத்துகள்:

  1. மிக அருமையான பகிர்வு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி..
      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      என் மனமார்ந்த நன்றிகள் பல..

      நீக்கு
  2. பதில்கள்
    1. வாங்க தில்..
      உங்கள் வருகைக்கும்
      பாராட்டுக்கும்
      மிக்க நன்றி!
      உங்கள் விமர்சனமே
      எங்கள் ஊட்டச்சத்து!!

      நீக்கு
    2. அன்புள்ள தில்..
      உங்கள் வலைப்பதிவு (yousufiyya.blogspot.com)
      பார்வையிட்டேன்
      நல்ல முயற்சி..
      உங்கள் பதிவுகளை
      பகிர்வுகளையும்
      விரைவில்
      ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு
  3. அருமையான தகவல்கள்
    நல்லா இருக்கு.
    வாழ்த்துக்கள் !
    உங்கள் பதிவுகளைத் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. arumaiyana paadam engalai pondra maanavarhaleke.
    Innum padikum avalai thoonduhirathe alhamdulillah

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

நபிமார்களின் அறிவுக் கூர்மை

   இப்ராஹீம் அலை மற்றும் இஸ்மாயீல் அலை ஆகியோரின் அறிவுக் கூர்மை : قَالَ ابْن عَبَّاس لما شب إِسْمَاعِيل تزوج امْرَأَة من جرهم فجَاء إِبْرَاه...