متى يطالع القلب عالم الملكوت؟
ولا تظنن أن هذه الطاقة تنفتح بالنوم والموت فقط، بل تنفتح باليقظة لمن أخلص الجهاد والرياضة، وتخلص من يد الشهوة والغضب والأخلاق القبيحة والأعمال الرديئة.
فإذا جلس في مكان خال، وعطل طريق الحواس، وفتح عين الباطن وسمعه، وجعل القلب في مناسبة عالم الملكوت، وقال دائما:) الله - الله - الله (بقلبه، دون لسانه، إلى أن يصير لا خير معه من نفسه، ولا من العالم، ويبقى لا يرى شيئا إلا الله سبحانه وتعالى انفتحت تلك الطاقة، وأبصر في اليقظة الذي يبصره في النوم؛ فتظهر له أرواح الملائكة، والأنبياء، والصور الحسنة الجملية، وانكشف له ملكوت السماوات والأرض، ورأى ما لا يمكن شرحه ولا وصفه، كما قال النبي صلى الله عليه وسلم:) زويت لي الأرض، فرأيت مشارقها ومغربها (وقال الله عز وجل: (وَكَذلِكَ نُري إِبراهيمَ مَلَكوتَ السَماواتِ وَالأَرض) . لأن علوم الأنبياء عليهم السلام كلها كانت من هذا الطريق، لا من طريق الحواس
وهذه الطريق لا تفهم إلا بالتجربة، وإن لم تحصلبالذوق لم تحصل بالتعليم. والواجب التصديق بها حتى لا تحرم شعاع سعادتهم، وهو من عجائب القلب. ومن لم يبصر لم يصدق، كما قال سبحانه وتعالى: (بَل كَذَّبوا بِما لَم يُحيطوا بِعِلمِهِ وَلَمّا يَأتِهِم تَأويلُهُ) ،
மனித உள்ளம் வான லோகம் வரை தன் அகப்பார்வையை செலுத்த முடியுமா?
தனிமையாக ஒரு இடத்தில் அமர்ந்து ஐம்புலன்களையும் அடக்கி ஒடுக்கி நிசப்தமாக மன ஓர்மையுடன் தன் மனசை வானலோகத்தை நோக்கி செலுத்தி தொடர்ந்து இப்படி சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் :
"அல்லாஹ், அல்லாஹ்" என்று- நாவால் அல்ல- மனசால் கூறிக் கொண்டே இருக்க வேண்டும் அந்நேரம் அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் நினைக்காமல் சொல்லிக் கொண்டே இருந்தால் ............
- மனம் ஒடுங்கி திடீரென அகப்பார்வை திறக்கும்.
- மனிதன் பொதுவாக தூக்கத்தில் பார்க்கிற அரிய காட்சிகளை எல்லாம் விழிப்பிலேயே பார்க்கத் தொடங்குவான்
- வானவர்களின் உயிர்கள் தென்பட ஆரம்பிக்கும்.
- அழகிய காட்சிகள் தெரியும்.
- ஏழு வானங்களின் ஏழு பூமிகளின் ஆட்சிகளும் காட்சிகளும் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.
- அந்நேரம் அவன் பார்க்கிற காட்சிகளை விபரிக்க முடியாது. வர்ணிக்க முடியாத பல காட்சிகள் தென்படும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறவில்லையா?
இந்த பூமி எனக்கு சுருட்டிக் காண்பிக்கப்பட்டது,அதன் கிழக்கிலிருந்து மேற்கு வரை அனைத்தையும் பார்த்தேன்.
மேலும் அல்லாஹ் கூறுகிறான் பாருங்கள்
(وَكَذلِكَ نُري إِبراهيمَ مَلَكوتَ السَماواتِ وَالأَرض
"ஏழு வானங்களின் ஏழு பூமிகளின் ஆட்சிகளையும் நாம் இப்ராஹீமுக்கு காண்பித்தோம் "
இந்த மாதிரி காட்சிகள் எல்லாம் புறக்கண்ணால் பார்த்தவை அல்ல. அகக்கண்ணால் பார்த்தவை.
இதை ஓரளவு தான் சொல்லிப் புரிய வைக்க முடியும். மற்றபடி இது அனுபவித்து உணர வேண்டிய இன்பம்.
இப்படி ஒரு அனுபவம் உள்ளது என்பதை நாம் நம்புவது அவசியம்.
இமாம் கஸ்ஸாலி ( ரஹ் ), இஹ்யா உலூமித்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்