25 ஜனவரி, 2016

மதீனத் தோட்ட மாளிகையில்..





மதீனத் தோட்ட மாளிகையில் மண்மடியில் மைந்தரைப் போல்
தூய நபி தூங்குகிறார் தாலேலோ
அவர் தோய்ந்து போன மார்க்கம் தனை தோள் கொடுத்து தூக்கிய பின்
ஓய்வெடுத்து தூங்குகிறார் ஆரீரோ ! -
                    ( மதீனத் தோட்ட மாளிகையில்)

செம்பவளக் கருத்தெடுத்து செந்தேனில் குழைத்தெடுத்து
நெஞ்சங்களில் சிந்திச் சென்றார் தாலேலோ - 2
அந்த மகிழ்ச்சியிலே அவர் உறங்க மயக்கத்திலே நாம் உறங்க
மண்ணகமே உறங்குதம்மா தாலேலோ
மண்ணகமே உறங்குதம்மா தாலேலோ
                  ( மதீனத் தோட்ட மாளிகையில்)

ஞானக் கடல் மீதில் அவர்  நாளும் அவர் மூழ்கியதில்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டோம் தாலேலோ -2
அவர் மௌன நிலை கூட ஒரு ஞான நிலை போலிருக்கும்
யார் அவரைத் தூங்க விட்டார் தாலேலோ
யார் அவரைத் தூங்க விட்டார் தாலேலோ
              ( மதீனத் தோட்ட மாளிகையில்)

மன்னரவர் தூங்கிவிட்டால் மண்ணகமே தூங்கிவிடும்
வின்னவரே துயிலெழுப்ப வாரீரோ -2
அவர் பொன் அழகை ரசிப்பதற்கும் மோட்ச நிலை பெறுவதற்கும்
தோழர்களே தோழியரே வாரீரோ
தோழர்களே தோழியரே வாரீரோ
                      ( மதீனத் தோட்ட மாளிகையில்)

வள்ளல் இமாம் பூசிரியின் வாழ்ந்த கதை சொல்லவா?




வள்ளல் இமாம் பூசிரியின் வாழ்ந்த கதை சொல்லவா?
நாயகத்தை நேசம் கொண்ட நல்ல மனம் அல்லவா?

15 ஜனவரி, 2016

04 ஜனவரி, 2016

குகையிலிருந்து மீண்ட மூவர்!


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் (சென்ற காலத்தில்) இருந்தவர்களில் மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, (திடீரென) மழை பிடித்தது. எனவே, அவர்கள் ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். உடனே, அந்தக் குகை (வாசலை மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை மூடி) அவர்களை அடைத்தது. அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நம்மை (நம்முடைய) வாய்மையான செயல் தான் காப்பாற்ற முடியும். எனவே, நம்மில் ஒவ்வொருவரும், தான் வாய்மையுடன் நடந்ததாக நம்புகிற விஷயத்தைக் கொண்டு (அல்லாஹ்விடம்) பிரார்த்திக்கட்டும்" என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

நன்றி மறவாதீர்!




தொழுநோயாளி, குருடர், வழுக்கைத் தலையர் ஆகியோர் தொடர்பான நிகழ்ச்சி.
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். 

அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான்.

11 டிசம்பர், 2015

திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் வழியில் சுப்ஹான மவ்லித்

இன்று சிலர் ஸுப்ஹான மவ்லிது என்ற புத்தகத்தை வைத்துக் கொண்டு, ஸுப்ஹான மவ்லிது தவறு என்று விமர்சனம் செய்து கொண்டு உள்ளார்கள், உண்மையில் எவர்கள் அவ்வாறு வெளியிடுகிறார்களோ குர் ஆன், ஹதிஸ்களில் ஞானம் இல்லாமல் வெளியிட்டு உள்ளார்கள், இதிலும் விமர்சிபவர்கள் உண்மையான விளக்கத்தை தவறாக புரிந்து கொண்டு மற்றும் தெரிந்து கொண்டு மக்கள் இடையே தவறாக விமர்சனம் செய்து உள்ளார்கள், இன்சா அல்லாஹ் ஸுப்ஹான மவ்லித்தில் இடம் பெற்றிருக்கும் வார்த்தைகள் குர் ஆன், ஹதிஸ் மற்றும் ஆதரபூர்வமான நூல்களில் இருந்து தான் தொகுக்கப்பட்டுள்ளது தான் என புரிந்து கொள்வீர்கள்.