17 ஆகஸ்ட், 2013

நாயகம் (ஸல்)- சிறு குறிப்பு



பிறந்தஆண்டு கி.பி.570 ஏப்ரல் 22 ரபீயுல் அவ்வல் பிறை 12 திங்கள் கிழமை

மறைந்த ஆண்டு ஹிஜ்ரி 11 கி.பி.630 ஜூன் 9

முதல் திருமணத்தின் வயது 25

மொத்தம் மனைவிமார்கள் 11

ஆண் பிள்ளைகள்-3 காசிம் (ரலி), அப்துல்லாஹ் (ரலி), இபுறாஹீம் (ரலி)
பெண் பிள்ளைகள்-4 ஜைனப் (ரலி), உம்மு குல்ஸூம் (ரலி), ருகையா (ரலி) ஃபாத்திமா (ரலி)

மருமகன்கள் உஸ்மான் (ரலி), அலி (ரலி),
அபுல் ஆஸ் (ரலி)

கலந்து கொண்ட போர்கள் 19

மக்காவில் நபித்துவத்திற்குப் பின் தங்கியிருந்த ஆண்டுகள் 13
வயது 63

இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது கணவனே!.


இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது ............கணவனே!.
என்ற ஆய்வுக்காக அழைக்கப்பட்டு உள்ளேன்.

மனைவியின் புறத்திலே எத்தனை குறைபாடுகள் இருந்தாலும், எத்தனை குற்றச்சாட்டுகள் மனைவியின் புறத்திலே இருந்தாலும் கூட அந்த குற்றங்கள் உருவாக காரணம் யார்? எத்தனை குற்றச்சாட்டு வேண்டுமானாலும் சாட்டலாம். ஆனால் அந்த குற்றங்கள் உருவாக அடிப்படை அசல் காரணம் கணவன் தான்.


16 ஆகஸ்ட், 2013

நபிமார்கள்- ஒரு சிறு குறிப்பு



நோயின் மூலம் சோதிக்கப்பட்ட நபி
ஹழ்ரத் அய்யூப் (அலை)

முதன்முதலில் கவசங்கள் செய்த
நபி ஹழ்ரத் தாவூது (அலை)

நெருப்புக்குண்டத்திலிருந்து காப்பாற்றப்பட்ட நபி
ஹழ்ரத் இப்றாஹீம் (அலை)

சட்டையின் மூலம் கண்பார்வை பெற்ற நபி
ஹழ்ரத் யாகூப் (அலை)

முதன் முதலில் ரேசன் முறையை அறிமுகம் செய்த நபி
ஹழ்ரத் யூசுப் (அலை)

மீன் வயிற்றுக்குள் சென்று திரும்பிய நபி
ஹழ்ரத் யூனுஸ் (அலை)

காற்றின் மூலம் ஆகாயப் பயணம் செய்த நபி
ஹழ்ரத் சுலைமான் (அலை)

ரம்பத்தால் அறுக்கப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட நபி
ஹழ்ரத் ஜகரிய்யா (அலை)

உயிருடன் வானுலகம் உயர்த்தப்பட்ட நபி
ஹழ்ரத் ஈஸா (அலை)

நபி மார்களின் இறுதியான 
நபி ஹழ்ரத் முஹம்மது (ஸல்)

இல்லவே இல்லை!



1. சவூதி அரேபியாவில் நதிகளே இல்லை.
2. ஆப்கானிஸ்தானில் ரயில்களே இல்லை
3. ஆப்பிரிக்காவில் புலிகளே இல்லை.
4. அல்போனியாவில் மதங்களே இல்லை.
5. மண்ணுளி பாம்பிற்கு கண்களே இல்லை.
6. யானையின் துதிக்கையில் எலும்புகளே இல்லை.
7. யமுனை  நதி கடலில் கலப்பதே இல்லை.
8. முதலைக்கு நாக்கே இல்லை.
9. நண்டுக்கு தலையே இல்லை.
10. வெளவாலுக்கு பார்வையே இல்லை.
11. வண்ணத்துப் பூச்சிக்கு வாயே இல்லை.
12. நியுஸிலாந்தில் காகமே இல்லை.
13. உண்மை உழைப்பிற்கு தாழ்வே இல்லை.
14. முயற்சியின் பயணத்திற்கு முடிவே இல்லை.
15. கல்விக்கு முடிவே இல்லை.

12 ஆகஸ்ட், 2013

எல்லா நேரமும் அல்லாஹ்வை நினையுங்கள்



      பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1)எதையும் செய்ய ஆரம்பிக்கும் போது என்ன ஓத வேண்டும்?
    பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருநாமத்தால்)

2)எதையும் செய்ய நினைக்கும் போது என்ன ஓத வேண்டும்?
    இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்)

3)எதுவும் புகழப்படும் போது என்ன ஓத வேண்டும்?
   சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)

4)துன்பத்தில் உழலும் போது என்ன ஓத வேண்டும்?
    யா அல்லாஹ் (அல்லாஹ்வே)

5) எதையும் பாராட்டும் போது என்ன ஓத வேண்டும்?
மாஷா அல்லாஹ் (எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே)

6) யாருக்கும் நன்றி கூறும் போது என்ன ஓத வேண்டும்?
ஜஸாக்கல்லாஹூ (அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக)

7) தும்மும் போது என்ன ஓத வேண்டும்?
    அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)

8) பிறர் தும்மும் போது என்ன ஓத வேண்டும்?
    யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் அருள் பாலிப்பானாக)

9) தவறை எண்ணி வருந்தும்போது என்ன ஓத வேண்டும்?    
   அஸ்தஃகு பிருல்லாஹ் (அல்லாஹ் பிழை பொறுப்பானாக)

10) உறுதி மொழி எடுக்கும் போது என்ன ஓத வேண்டும்?
  வல்லாஹிபில்லாஹ் (அல்லாஹ் மீது ஆணையாக)

11) தருமம் செய்யும் போது என்ன ஓத வேண்டும்?
   fபீ ஸபீலில்லாஹ் (அல்லாஹ்வின் பாதையில்

12) யார் மீதும் அன்பு பாராட்டும் போது என்ன ஓத வேண்டும்?
  லி ஹூப்பில்லாஹ் (அல்லாஹ்வின் அன்பிற்காக)

13) யாரிடமிருந்தும் விடைபெறும் போது என்ன ஓத    வேண்டும்?
   fபீ அமானில்லாஹ்(அல்லாஹ்வின் அடைக்கலத்தில்)

14) பிரச்சனைகள் எழும் போது என்ன ஓத வேண்டும்?
தவக்கல்து அலல்லாஹ் (அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தேன்)

15) விரும்பியவை நடக்கும் போது என்ன ஓத வேண்டும்?
    fபதபாரகல்லாஹ் (அல்லாஹ் உயர்வானவன்)

16) விரும்பாதவை நடக்கும் போது என்ன ஓத வேண்டும்?
     நஊதுபில்லாஹ் (அல்லாஹ்விடம் காவல் தேடுகிறோம்)

17) திடுக்கிடும் செய்திகேள்வியுறும் போது என்ன ஓத வேண்டும்?
  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன் (அல்லாஹ்விடமிருந்து வந்தோம் மேலும் அவனிடமே திரும்பிவருபவர்களாக உள்ளோம்.

முதன்முதலாக..!



1.   முதன் முதலாக தோன்றிய மனிதர் யார்?
ஹழ்ரத் ஆதம்  அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்

2.   முதன் முதலாக பாங்கு சொன்ன நபித்தோழர் யார்?
ஹழ்ரத் பிலால்; ரலியல்லாஹு அன்ஹு அவர்களாகும்

3.   முதன் முதலாக தோன்றிய இறை இல்லம் எது?
புனித கஃபதுல்லாவாகும்

4.   முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்ற ஆண் யார்?
ஹழ்ரத் ஆபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களாகும்

5.   முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்ற பெண்மணி யார்?
ஹழ்ரத் கதீஜா ரலியல்லாஹூஅன்ஹா அவர்களாகும்

6.   முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்ற சிறுவர் யார்?
ஹழ்ரத் அலி ரலியல்லாஹீ அன்ஹீ ஆகும்.

7.   முதன்முதலாக இஸ்லாத்தை ஏற்ற அடிமை யார்?
ஹழ்ரத் ஸைத் ரலியல்லாஹூ அன்ஹூ ஆகும்.

8.   முதன் முதலாக இஸ்லாத்திலே ஷஹுதான பெண் யார்?
ஹழ்ரத் சுமையா ரலியல்லாஹு அன்ஹு அவர்களாகும்

9.   முதன் முதலாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்த பெண் யார்?
ஹழ்ரத் அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களாகும்.

10.  முதன் முதலாக காற்றடித்து சாய்ந்த மரம் எது?
நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் கப்பல் செய்ய பயன்படுத்திய மரமான அஷ்ஷாஜ் ஆகும்.
 
முதன் முதலாக வெண்ணிற நரைமுடி யாருக்கு ஏற்பட்டது?
ஹழ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்களுக்காகும்

 முதன் முதலாக  மறுமை நாளில் எழுப்படுப்பவர் யார்?
முஹம்மது நபி (ஸல்)

   முதன்முதலாக மறுமை நாளில் ஆடை அணிவிக்கப்படுபவர்  யார்?
ஹழ்ரத் இப்ராஹீம் (அலை)


   முதன் முதலாக நபி (ஸல்) அவர்களின் கரத்தால் கட்டப்பட்ட பள்ளி எது?
மஸ்ஜிதே குபா

   முதன் முதலாக நபி (ஸல்) அவர்களால் தொழ அவர்களால் வைக்கப்பட்ட ஜனாஸா எது?
ஹழ்ரத் ஆஸத் பின் ஜராரா (ரலி) அவர்களின் ஜனாஸாவாகும்.

முதன்முதலாக தீனுடைய கல்வியை கற்று கொடுப்பதற்காக ஆசிரியராக நபி (ஸல்) அவர்களால் நியமனம் செய்யப்பட்டு அனுப்பப்பட்ட ஸஹாபி யார்?
ஹழ்ரத் முஸ்அப் இப்னு உமைர் (ரலி)

முதன்முதலாக மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த பின் பிறந்த முதல் குழந்தை யார்?
ஹழ்ரத் அப்துல்லாஹ்(ரலி)
இவர்கள் ஹழ்ரத் ஜூபைர் (ரலி) ஹழ்ரத் அஸ்மா (ரலி) இந்த தம்பதிகளின் மகனாவார்.

முதன்முதலாக இஸ்லாத்திற்காக உயிர் துறந்த ஆண் தியாகி யார்?
ஹழ்ரத் அம்மார் பின் யாஸிர் (ரலி)

முதன் முதலாக இஸ்லாத்திற்காக  உயிர்துறந்த பெண் தியாகி யார்?
ஹழ்ரத் சுமைய்யா (ரலி)

முதன் முதலாக நபி(ஸல்) அவர்கள் மதீனா சென்ற பின் யார் வீட்டில் தங்கினார்கள்?
ஹழ்ரத் அபூ அய்யூபுல் அன்ஸாரி (ரலி)

முதன் முதலாக  தொழுகையை தொழுத பெண்மணி யார்?
அன்னை கதீஜா (ரலி) 

முதன் முதலாக கொலை செய்யப்பட்டவர் யார்?
ஹழ்ரத் ஆதம் (அலை) அவர்களின் மகனார் ஹாஃபிலாகும்.

முதன் முதலாக சுவனத்திலே நுழைபவர் யார்?
    ஹழரத் கண்மனி நாயகம் (ஸல்) அவர்களாகும்.

முதன் முதலாக முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்கு பின் மரணமான நபியின் சொந்தக்காரர் யார்?
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அன்பு மகளார் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களாகும் நபி (ஸல்) அவர்கள் இறந்த 6வது மாதத்திலே அன்னை ஃபாத்திமா (ரலி) இறந்தார்கள்

முதன் முதலாக மக்கா வெற்றி பெற்ற பின் நபிகளாரோடு மக்காவிலே நுழைந்த தோழர்கள் யார்? யார்?
உஸாமதிப்னு ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மானிப்னு தல்ஹா (ரலி) ஆகியோராகும்.

முதன் முதலாக சுவனவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு எது?
   மீனின் சினைப் பகுதியாகும்.

முதன் முதலாக கப்ரில் கேட்கப்படும் கேள்வி எது?
    தொழுகையைப்பற்றியாகும்.

முதன் முதலாக ஸம்ஸம் நீரை அருந்தியவர் யார்?
    ஆண்களில் ஹழ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்)
    பெண்களில் அன்னை ஹஜிரா (ரலி)

முதன் முதலாக மஸ்ஜிதுன் நபவியான மதினா பள்ளியிலே விளக்கேத்திய ஸஹாபி யார்?
     ஹழ்ரத் தமீமுத் தாரீ (ரலி) அவர்களாகும்.
-----------------------------------------------

திருக்குர்ஆன் வினாடி வினா 81-120

முந்தைய பதிவுகள்:
திருக்குர்ஆன் வினாடி வினா 1-40
திருக்குர்ஆன் வினாடி வினா 41-80


81) திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் எவை?
     1.தவ்ராத்,    2.ஸபூர்   3.இன்ஜீல் (ஆதாரம் : அபூதாவூத்)

82) திருக்குர்ஆனில் முதன் முதலில் முழுவதுமாக இறங்கிய சூரா எது?
     சூரா ஃபாத்திஹா

83) திருக்குர்ஆன் லவ்ஹூல் மஹ் ஃபூலில் இருந்து எங்கு இறங்கியது?.
    முதல் வானத்தில் பைத்துல் இஸ்ஸஹ் என்ற இடத்தில் இறங்கியது

84) திருக்குர்ஆன் முதல் (வஹீ) வசனம் எப்போது அருளப்பட்டது?
     கி.பி.610ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்

85) திருக்குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
   ரமலான் மாதத்தில் புனித லைலத்துல் கத்ர் என்னும் சங்கை மிகு இரவில் (ஆதாரம் 97.01)

86) திருக்குர்ஆனின் கடைசி சூரா எங்கு இறக்கப்பட்டது?
     மதீனாவில்

87) திருக்குர்ஆனில் மதீனாவில் இறங்கிய கடைசி சூரா எது?
     சூரா நஸ்ரு

88) திருக்குர்ஆனை அல்லாஹ் எப்படி பாதுகாக்கின்றான்?
     கல்வியாளர்கள் உள்ளத்தில் பாதுகாக்கின்றான்

89) திருக்குர்ஆன்  ஒன்று திரட்டப்பட்ட காரணம் என்ன?
     யமாமா என்ற போரில் ஏறத்தாழ 70 ஹாஃபிழ்கள் (குர்ஆனை  
     மனனம்  செய்தவர்கள்) ஷஹீதாக்கப்பட்டு வீரமரணம்   
      அடைந்ததால்   (ஆதாரம் :புகாரி)

90) திருக்குர்ஆனை ஒன்று திரட்டும் யோசனையை அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களிடம் தெரிவித்தவர் யார்?
   உமர் (ரலி)அவர்கள்               (ஆதாரம் :புகாரி)

91) திருக்குர்ஆன் முதன் முதலில் அச்சிடப்பட்டது எப்போது?
   ஹிஜ்ரி 1113 வது ஆண்டில்

92) திருக்குர்ஆன் எங்கு முதன் முதலில் அச்சிடப்பட்டது?
  ஜெர்மனில் ஹம்பர்க் நகரில்

93) திருக்குர்ஆன் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
  ஓதுதல், ஓதப்பட்டவை, ஓதப்பட வேண்டியது என்பதாகும்.

94) திருக்குர்ஆனில் பிஸ்மில்லாஹ் எழுதப்படாத சூரா எது?
   சூரா தவ்பா என்ற பராஅத் சூராவாகும்

95) திருக்குர்ஆன் ஒலி வடிவமாக இறங்கியதா? எழுத்து வடிவில் இறங்கியதா?
  ஒலி வடிவில் இறங்கியது

96) திருக்குர்ஆனை ஒன்று  சேர்த்தவர் என்ற சிறப்பு பெயருக்குரியவர் யார்? ஹளரத் உஸ்மான் ரலியல்லாஹூ அன்ஹூ

97) திருக்குர்ஆனில் 'ஷத்து' குறியீடுகளை அமைத்தவர் யார்?
   கலீல் இப்னு அஹ்மது அஸ்தீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்

98) திருக்குர்ஆனுக்கு 'ஸபர், ஜேர், பேஷ்' என்னும்  உயிர் குறியீடுகளை அமைத்தவர் யார்?
    ஹிஜ்ரி 43ல் இராக் ஆளுநராக  இருந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப்  என்பவராவார்.

99) திருக்குர்ஆனின்  சூராக்களை வரிசைப்படுத்தியது யார்?
    நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்

100) திருக்குர்ஆனின் ஞானம் பெற்ற உலமாக்களை  அதிகமாக உருவாக்கும் தமிழக மாவட்டம் எது?
    வேலூர் மாவட்டம் 

101) திருக்குர்ஆனின் ஞானம் பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் மாவட்டம் எது?
    திருநெல்வேலி மாவட்டம்
  
102) திருக்குர்ஆனை மனைம் செய்தவர்கள் ஹாபிழ்கள் தமிழகத்தில் அதிகஎண்ணிக்கையில் வாழும் ஊர் எது?
    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம்

103) திருக்குர்ஆன் முதன் முதலில் எந்த மொழியில் தர்ஜூமா செய்யப்பட்டது?
    சுர்யானீ மொழியில்

104) திருக்குர்ஆன் இரண்டாவதாக  எந்த மொழியில் எப்போது  தர்ஜமா செய்யப்பட்டது?
    பர்பரீ மொழியில், ஹிஜ்ரி 127ல்

105) திருக்குர்ஆன் மூன்றாவது தடவை எந்த மொழியில், எப்போது தர்ஜூமா செய்யப்பட்டது?
    பாரசீக மொழியில், ஹிஜ்ரி 255ல்

106) திருக்குர்ஆனை ஒதுவதால்  என்ன நன்மை?
    ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு (ஆதாரம் :திர்மிதீ)

107) திருக்குர்ஆனை ஒதக் கேட்பதால் என்ன நன்மை?
    ஒதுவது போன்றே நன்மை கிடைக்கும் (அல்ஹதீஸ்)

108) திருக்குர்ஆனை ஒளுவுடன்  ஓதினால் என்ன நன்மை கிடைக்கும்?
    ஒரு எழுத்துக்கு 25 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம் :இஹ்யா)

109) திருக்குர்ஆனை ஒருவர்  உட்கார்ந்து தொழுகும் போது ஓதினால் என்ன நன்மை கிடைக்கும்?
    உட்கார்ந்து தொழும் போது ஒரு எழுத்துக்கு 50,50 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம் :இஹ்யா)

110) திருக்குர்ஆனை நின்று தொழும் போது ஒதினால் என்ன நன்மை கிடைக்கும்?
    ஒரு எழுத்துக்கு  100 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம்:இஹ்யா)

111) திருக்குர்ஆனை பார்த்து ஒதுவது சிறந்ததா? பார்க்காமல் ஒதுவது  சிறந்ததா?
   பார்த்து ஒதுவதே சிறந்தது

112) திருக்குர்ஆனை திக்கி ஓதினாலும் நன்மைகள் கிடைக்குமா?
    ஆம் : இரு மடங்கு நன்மைகள் கிடைக்கும்
 (ஆதாரம் : புகாரி,  அபூதாவூது, முஸ்லிம், திர்மிதி) 

113) திருக்குர்ஆன் மறுமையில் பரிந்துரைக்குமா?
    ஆம் அதனை ஒதியவருக்கு கண்டிப்பாக பரிந்துரைக்கும்
         (ஆதாரம் : முஸ்லிம்)

114) சூரா ஃ பர்த்திஹா ஓதினால் என்ன நன்மை?
    திருக்குர்ஆனில் 3ல் 2 பகுதி  ஒதிய நன்மைகள் உண்டு.

115) சூரா யாசீன் ஓதினால் என்ன நன்மை?
    10 திருக்குர்ஆன் ஓதிய நன்மைகள் உண்டு (ஆதாரம்: திர்மிதி)

116) சூரா இக்லாஸ் ஓத்னால் என்ன நன்மை?
    திருக்குர்ஆனில் 3ல் 1பங்கு ஒதிய நன்மைகள் உண்டு.
         (ஆதாரம் :புகாரி , இப்னு கஸீர்)

117) திருக்குர்ஆனில் எந்த சூராவை ஒதினால் 4000 வசனங்கள் ஒதிய    
      நன்மை கிடைக்கும்?
          சூரா தகாசுர்

118) திருக்குர்ஆனில் தலைசிறந்த 'ஆயத்' எது?
    ஆயத்துல் குர்ஸீ

119) திருக்குர்ஆனில் 'இதயம்' எந்த அத்தியாயம்?
    யாஸீன் என்ற அத்தியாயம்

120) திருக்குர்ஆனில் மொத்தம்  எத்தனை  எழுத்துக்கள் உள்ளன?
    3,21,267 (3 லட்சத்து 21 ஆயிரத்து 267 எழுத்துக்கள் உள்ளன.)