முந்தைய பதிவுகள்:
திருக்குர்ஆன் வினாடி வினா 1-40
திருக்குர்ஆன் வினாடி வினா 41-80
திருக்குர்ஆன் வினாடி வினா 1-40
திருக்குர்ஆன் வினாடி வினா 41-80
81) திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் எவை?
1.தவ்ராத், 2.ஸபூர் 3.இன்ஜீல் (ஆதாரம் : அபூதாவூத்)
82) திருக்குர்ஆனில் முதன் முதலில் முழுவதுமாக இறங்கிய சூரா
எது?
சூரா ஃபாத்திஹா
83) திருக்குர்ஆன் லவ்ஹூல் மஹ் ஃபூலில் இருந்து எங்கு
இறங்கியது?.
முதல் வானத்தில் பைத்துல் இஸ்ஸஹ் என்ற
இடத்தில் இறங்கியது
84) திருக்குர்ஆன் முதல் (வஹீ) வசனம் எப்போது அருளப்பட்டது?
கி.பி.610ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
85) திருக்குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
ரமலான் மாதத்தில் புனித லைலத்துல் கத்ர்
என்னும் சங்கை மிகு இரவில் (ஆதாரம் 97.01)
86) திருக்குர்ஆனின் கடைசி சூரா எங்கு இறக்கப்பட்டது?
மதீனாவில்
87) திருக்குர்ஆனில் மதீனாவில் இறங்கிய கடைசி சூரா எது?
சூரா நஸ்ரு
88) திருக்குர்ஆனை அல்லாஹ் எப்படி பாதுகாக்கின்றான்?
கல்வியாளர்கள் உள்ளத்தில் பாதுகாக்கின்றான்
89) திருக்குர்ஆன்
ஒன்று திரட்டப்பட்ட காரணம் என்ன?
யமாமா என்ற போரில்
ஏறத்தாழ 70 ஹாஃபிழ்கள் (குர்ஆனை
மனனம் செய்தவர்கள்) ஷஹீதாக்கப்பட்டு வீரமரணம்
அடைந்ததால் (ஆதாரம் :புகாரி)
90) திருக்குர்ஆனை ஒன்று திரட்டும் யோசனையை அபூபக்கர் சித்தீக்
(ரலி) அவர்களிடம் தெரிவித்தவர் யார்?
உமர் (ரலி)அவர்கள் (ஆதாரம் :புகாரி)
91) திருக்குர்ஆன் முதன் முதலில் அச்சிடப்பட்டது எப்போது?
ஹிஜ்ரி 1113 வது ஆண்டில்
92) திருக்குர்ஆன் எங்கு முதன் முதலில் அச்சிடப்பட்டது?
ஜெர்மனில் ஹம்பர்க் நகரில்
93) திருக்குர்ஆன் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
ஓதுதல், ஓதப்பட்டவை, ஓதப்பட வேண்டியது என்பதாகும்.
94) திருக்குர்ஆனில் பிஸ்மில்லாஹ் எழுதப்படாத சூரா எது?
சூரா தவ்பா என்ற பராஅத் சூராவாகும்
95) திருக்குர்ஆன் ஒலி வடிவமாக இறங்கியதா? எழுத்து வடிவில் இறங்கியதா?
ஒலி வடிவில் இறங்கியது
96) திருக்குர்ஆனை ஒன்று
சேர்த்தவர் என்ற சிறப்பு பெயருக்குரியவர் யார்? ஹளரத் உஸ்மான் ரலியல்லாஹூ அன்ஹூ
97) திருக்குர்ஆனில் 'ஷத்து' குறியீடுகளை அமைத்தவர் யார்?
கலீல் இப்னு அஹ்மது அஸ்தீ ரஹ்மத்துல்லாஹி
அலைஹி அவர்கள்
98) திருக்குர்ஆனுக்கு 'ஸபர், ஜேர், பேஷ்' என்னும் உயிர்
குறியீடுகளை அமைத்தவர் யார்?
ஹிஜ்ரி 43ல் இராக் ஆளுநராக
இருந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப்
என்பவராவார்.
99) திருக்குர்ஆனின்
சூராக்களை வரிசைப்படுத்தியது யார்?
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
100) திருக்குர்ஆனின் ஞானம் பெற்ற உலமாக்களை அதிகமாக உருவாக்கும் தமிழக மாவட்டம் எது?
வேலூர் மாவட்டம்
101) திருக்குர்ஆனின் ஞானம் பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில்
வாழும் மாவட்டம் எது?
திருநெல்வேலி மாவட்டம்
102) திருக்குர்ஆனை மனைம் செய்தவர்கள் ஹாபிழ்கள் தமிழகத்தில்
அதிகஎண்ணிக்கையில் வாழும் ஊர் எது?
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம்
103) திருக்குர்ஆன் முதன் முதலில் எந்த மொழியில் தர்ஜூமா
செய்யப்பட்டது?
சுர்யானீ மொழியில்
104) திருக்குர்ஆன் இரண்டாவதாக
எந்த மொழியில் எப்போது தர்ஜமா
செய்யப்பட்டது?
பர்பரீ மொழியில், ஹிஜ்ரி 127ல்
105) திருக்குர்ஆன் மூன்றாவது தடவை எந்த மொழியில், எப்போது தர்ஜூமா செய்யப்பட்டது?
பாரசீக மொழியில், ஹிஜ்ரி 255ல்
106) திருக்குர்ஆனை ஒதுவதால்
என்ன நன்மை?
ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு (ஆதாரம் :திர்மிதீ)
107) திருக்குர்ஆனை ஒதக் கேட்பதால் என்ன நன்மை?
ஒதுவது போன்றே நன்மை கிடைக்கும் (அல்ஹதீஸ்)
108) திருக்குர்ஆனை ஒளுவுடன்
ஓதினால் என்ன நன்மை கிடைக்கும்?
ஒரு எழுத்துக்கு 25 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம் :இஹ்யா)
109) திருக்குர்ஆனை ஒருவர்
உட்கார்ந்து தொழுகும் போது ஓதினால் என்ன நன்மை கிடைக்கும்?
உட்கார்ந்து தொழும் போது ஒரு எழுத்துக்கு 50,50 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம் :இஹ்யா)
110) திருக்குர்ஆனை நின்று தொழும் போது ஒதினால் என்ன நன்மை
கிடைக்கும்?
ஒரு எழுத்துக்கு 100 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம்:இஹ்யா)
111) திருக்குர்ஆனை பார்த்து ஒதுவது சிறந்ததா? பார்க்காமல் ஒதுவது
சிறந்ததா?
பார்த்து ஒதுவதே சிறந்தது
112) திருக்குர்ஆனை திக்கி ஓதினாலும் நன்மைகள் கிடைக்குமா?
ஆம் : இரு மடங்கு நன்மைகள் கிடைக்கும்
(ஆதாரம் : புகாரி, அபூதாவூது, முஸ்லிம், திர்மிதி)
113) திருக்குர்ஆன் மறுமையில் பரிந்துரைக்குமா?
ஆம் அதனை ஒதியவருக்கு கண்டிப்பாக பரிந்துரைக்கும்
(ஆதாரம் :
முஸ்லிம்)
114) சூரா ஃ பர்த்திஹா ஓதினால் என்ன நன்மை?
திருக்குர்ஆனில் 3ல் 2 பகுதி ஒதிய
நன்மைகள் உண்டு.
115) சூரா யாசீன் ஓதினால் என்ன நன்மை?
10 திருக்குர்ஆன் ஓதிய நன்மைகள் உண்டு (ஆதாரம்: திர்மிதி)
116) சூரா இக்லாஸ் ஓத்னால் என்ன நன்மை?
திருக்குர்ஆனில் 3ல் 1பங்கு ஒதிய நன்மைகள் உண்டு.
(ஆதாரம் :புகாரி , இப்னு கஸீர்)
117) திருக்குர்ஆனில் எந்த சூராவை ஒதினால் 4000 வசனங்கள் ஒதிய
நன்மை கிடைக்கும்?
சூரா தகாசுர்
118) திருக்குர்ஆனில் தலைசிறந்த 'ஆயத்' எது?
ஆயத்துல் குர்ஸீ
119) திருக்குர்ஆனில் 'இதயம்' எந்த அத்தியாயம்?
யாஸீன் என்ற அத்தியாயம்
120) திருக்குர்ஆனில் மொத்தம்
எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
3,21,267 (3 லட்சத்து 21 ஆயிரத்து 267 எழுத்துக்கள் உள்ளன.)
Iravu thozugail enna 3 surakkalai othinargal
பதிலளிநீக்கு