11 செப்டம்பர், 2011

ஜமிலத்: கல்வியே


கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
கல்லாதவருக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு

இந்த செருப்பு வாங்கத்தான் உதவும் உங்க செல்வம்;
சிறப்பு வேணும்னா அதுக்கு கல்வி வேணும்..புரியுதா?

வானளாவக் கோட்டைக் கட்டியவர்களெல்லாம் இன்று
மண்ணுக்குள்ளே மாண்டு விட்டனர்.அவர்கள்
உரம் போட்டு வளர்த்த உடலெல்லாம் உக்கி மக்கி
ஊணாகி வீனாகிவிட்டன.
இதுதான் துன்யா! இதுதான் செல்வம்!

மற்ற செல்வம் அழியக்கூடியது;
கல்வி பெருகக் கூடியது.

'அதோ போராரே அவரு 5 வருஷத்துக்கு முன்னாடி10 லட்சம் வச்சிருந்தாரு எல்லாம் செலவாகி இப்பநம்மகிட்ட வந்து டீ குடிக்க 10 ரூபா இருக்கான்னு
கேக்கறாரு' என்று சொல்வதுண்டு.

ஆனால் இப்படிச் சொல்லக் கேட்டதுண்டா:
'அதோ போராரே அவரு 5 வருஷத்துக்கு முன்னாடிM,A பட்டதாரியா இருந்தாரு;எல்லாம் செலவாகி இப்பஎட்டாம் வகுப்புக்கு எறங்கி வந்துட்டாரு.
கல்வி எவ்வளவு செலவழித்தாலும் பெருகிக் கொண்டே இருக்கும்.
அதைத்தான் திருவள்ளுவர் அழகாக சொன்னார்:
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு
மாடல்ல மற்றயவை .
செல்வத்திற்கு உயர்வே கல்வியை வைத்துத்தான் .
ஃப்ராங்க்ளின் என்ற அறிஞன் சொன்னான்:
'' செல்வம் அது கல்விக்காக செலவழிக்கப் படுமானால் நல்ல பலனைத் தரும் ''
(இன்னும் பல தகவல்கள்.... வீடியோவைப் பார்க்க.! )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...