30 டிசம்பர், 2011

2012ல் உலகம் அழியப்போகிறதா?



 டிசம்பர் 21, 2012
 ஏங்க…..உங்களுக்கு தெரியுமா டிசம்பர் 21, 2012 அன்னிக்கு உலகம் அழியப்போகுதாமே? அப்படின்னு உங்ககிட்ட யாராவது சொன்னா…..அடக்கொடுமையே அப்படியா? ஐய்யையோ….நான் இன்னும் ஒன்னுமே அனுபவிக்கலியே ! அப்படின்னு பொலம்புர கூட்டத்துல ஒருத்தரா இருப்பீங்களா இல்ல, ஆஹா….ஆரம்பிச்சிட்டாய்ங்கடா திரும்பவும்! ஏண்டா நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா? அதான் 2000-துல ஒருமுற இப்படியெல்லாம் பிட்டப்போட்டு படுத்திட்டீங்களேடா….அது போதாதா? அப்படின்னு கடுப்பாகிற கூட்டத்துல ஒருத்தரா இருப்பீங்களா? நீங்க எந்தக் கூட்டத்துல ஒருத்தரா இருந்தாலும் சரி, 2012-ல உலகம் அழியப்போகுதுன்னு ரொம்ப நாளா ஒரு பிட்டு, இன்டர்னெட்டுள சுத்திகிட்டு இருக்குங்கோவ்!
 இது ஒரு புரளி….புரளி….புரளி மட்டுமே! அப்படின்னு நான் சொல்லலீங்க! இந்த புறளியப்படிச்சுட்டு/பார்த்துட்டு உலக மக்கள்ல பல பேரு நாசாவைச் சேர்ந்த, உலகின் தலைசிறந்த விண்வெளி ஆய்வாளர் டேவிட் மோரிசனுக்கு மின்னஞ்சல் மழையா பொழிஞ்சாங்களாம்! அந்த மின்னஞ்சல் மழையில் தொப்பலா நனஞ்சி?! இம்ச தாங்காம இந்த புறளியில என்னதான் இருக்குன்னு கண்டுபிடிக்க ஒரு ஆய்வையே மேற்கொண்டதாகச் சொல்றாரு மோரிசன்.அந்த ஆய்வின் மூலம்தான் அது வெறும் புரளின்னு கண்டுபிடிச்சிருக்கார் அவர்!
சரி, அப்படி என்னதான் அந்த புரளின்னு கொஞ்சம் வெளக்கமாப் பார்போம் வாங்க. அதாவது, சமீபத்துல திடீர்னு இணையதளத்துல ஒரு புரளி கெளம்புச்சி. அது என்னன்னா, மாயன் நாள்காட்டி அப்படின்னு ஒரு நாள்காட்டி இருக்காம்.அந்த நாள்காட்டி இப்பொ நாம் பயன்படுத்துற “க்ரிகோரியன் காலண்டர்” மாதிரி இல்லையாம்.அது கிட்டத்தட்ட மூனு நாள்காட்டி ஒன்னா சேர்ந்த நாள்காட்டியாம் (சொல்லப்போனா இன்னும் நெறைய பிட்ட போடராங்கோ….!).இந்த மாயன் காலண்டர்லதான் டிசம்பர் 21, 2012 அன்னிக்கு உலகம் அழியப்போகுதுன்னு போட்டிருக்காம்.அதாவது, ஒரு பெரிய விண்வெளிக்கல் தாக்கி நம்ம பூமி சுக்கு நூறா ஒடஞ்சி தூள் தூளாகப் போகுதாம்!?


நன்றி: http://padmahari.wordpress.com

மாயன் காலண்டர் யென்பது என்ன? மாயர்கள் உருவாக்கியது மாயன் காலண்டர். கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தென் அமெரிக்காவில் வாழ்ந்த மக்கள். கட்டிடக்கலை, வானசாஸ்திரத்தில் வல்லவர்கள். கணித சூத்திரங்களில் கைதேர்ந்தவர்கள்.மாய மந்திரங்களில் மன்னர்கள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு: மாயன் காலண்டர்.
நுட்பமான கணிதவியல் பரிணாமங்களைக் கொண்டு துல்லியமாக வகுக்கப்பட்டுள்ளதாக நம்பப் படுகிறது.ஆனால், அந்த காலண்டர் கி.மு.3113-ல் தொடங்கி கி.பி. 2012-ல் முடிகிறது. இதுதான் இப்போது ஒரு பெரும் புயலை எழுப்பியுள்ளது.  கணிதக்கலையில் கைதேர்ந்த திறமைவாய்ந்த மாயர்கள் 2012 வுடன் ஏன் காலண்டரை முடித்தார்கள்? அப்படியானால் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது: 2012 உலகம் அழியப்போகிறது என்று. இப்படி ஒரு கதையை சிலர் ஜோடித்திருக்கிறார்கள்.

 இப்படித்தான் பீதியைக் கிளப்பி, எல்லோருக்கும் பேதியை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இண்டர்நெட் சைட்களில்.
உண்மை என்ன?

மாயன் எழுதிய காலண் டரின் தொடர்ச்சி கிடைக்காமற்போயிருக்கலாம். அல்லது காலண்டரின் தொடர்ச்சியை ஆரம்பிக் கும்முன் மாயன்மறைந்திருக்கலாம். யுத்தம் போன்ற காரணங்களால் காலண்டரைத் தொடர்ந்துகணிப்பதில் இடையூறை சந்தித்தி ருக்கலாம்.



சிலர் பைபிளில் ஆதரம் இருப்பதாக கூறுகிறார்கள் உன்மையில் பைபிளில் 2012 ஐப் பற்றி இல்லவே இல்லை

பைபிளில் என்னதான் உள்ளது?
''பூமியில் மிகப்பெரும் போர் நடக்கும். அந்தப் போரின் முடிவில், கடவுள் பூமிக்கு வந்து ஆயிரம் ஆண்டு பூமியை ஆள்வார், அதற்குப் பிறகு இறந்த அனைவரும் மறு உயிர் பெற்று நல்லவர்கள் சொர்க்கத்திற்கும் கெட்டவர்கள் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள்''. இதுதாங்க!

யார், எப்போது சொன்னது?
பைபிள் புத்தகங்களில் கடைசியாக உள்ளது 'திருவெளிப்பாடு (அ) வெளிப்படுத்தல்' (Revelation). இதை எழுதியவராகச் சொல்லப்படுபவர் 'ஜான்'. காலம், கி.பி.1 அல்லது 2 ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எப்படி 'நாஸ்ட்ராடமஸ்' என்பவர் பல முன்னறிவுப்புகளை சொல்லிவிட்டுச் சென்றதாகக் கூறுகிறார்களோ, அதேபோல் உலகத்தின் இறுதிநாட்களைப் பற்றி 'கடவுள் தனக்கு சொன்னதாக' இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கூறிக்கொள்கிறார். இதில் 17 - ம் அதிகாரத்தில் மேற்கண்ட இறுதிப் போர் நடப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இதற்கு முந்தைய அதிகாரங்களில் பல சம்பவங்கள் நடக்கும் என்றும் முன்னறிவித்திருக்கிறார் ஜான்.
முந்தைய 16 அதிகாரங்களில் சொல்லப்பட்ட விசயங்கள் நடந்தால் மட்டுமே 17-ம் அதிகாரத்தில் வரும் விசயத்தையும் நாம் நடக்கும் என்று நம்ப முடியும். முதல் பதினாறு அதிகாரத்தில், ஏழு முத்திரைகளுள்ள சுருளேடு, புதிய இஸ்ரேல், ஏழு எக்காளம், அரக்கப்பாம்பும் இரு விலங்குகளும், நாடுகள் ஒன்றுதிரட்டப்படுதல்.... இப்படி பல விசயங்கள் நடக்கும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நடந்துவிட்டனவா? அல்லது நடந்துகொண்டிருக்கின்றனவா? என்று கேட்டால், அதற்குச் சரியான பதில் இல்லை. 


1843 ஏப்ரல் 3

இது மாதிரியான பீதி 1843 லேயே கிளம்பிவிட்டது. கிளப்பியவர் ஒரு பாதிரியார். பெயர் வில்லியம் மில்லர்.
அவர் என்ன சொன்னார்?
1843 ஏப்ரல் 3-ஆம் தேதி உலகம் அழியப் போகிறது இது என் துல்லியமான கணிப்பு என்றார். அதை நம்புவது போல அந்த வருடம் ஒரு வால்நட்சத்திரமும் தெரிந்தது. இதை நம்பி பலர் இருக்கிற சொத்தையெல்லாம் விற்று பணமாக்கி ஜாலி பண்ணினார்கள்.பிறகு குறிப்பிட்ட தேதியில் இங்கிலாந்தின் மலைக் குன்றுகளில் ஏறி உலக அழிவை எதிர்நோக்கி நின்றிருந்தார்கள். இன்னும் சிலர் உலக அழிவைக் காணப் பயந்தும் பின்னர் சொர்க்கத்தில் இடம் இல்லாமல் போய்விடும் என்று எண்ணியும் முன்கூட்டியே தற்கொலை செய்துகொண்டனர். ஆனால் அவர் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை

கி.பி.2000

இப்படித்தான் 1999ஆம் ஆண்டு முடிந்ததுமே உலகம் அழிந்துவிடும் என்று பலரும் டுமீல் விட்டுத் திரிந்தார்கள்.' நாஸ்ட்ரடாமஸ்' கணித்திருக்கிறார், அவரின் கணிப்பு பொய்யானதில்லை என்று அடித்துப் பேசினார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் பாகுபாடின்றி நடுநடுங்கி செத்தது உலகம். உலகம் தான் அழியப் போகிறதே என்ற எண்ணத்தில் பல்வேறு சமூகக் குற்றங்கள் நடந்தது. நம்மூர் கிராமப்புறங்களில் கூட இந்த பீதியைப் பயன்படுத்தி தென்னந்தோப்புகளிலும், கம்மாய்க்கரைகளிலும் பல பாலியல் குற்றங்கள் நடந்ததாக பத்திரிகைகளில் வாசித்திருக்கிறோம். 1999 முடிந்து எத்தனையோ வருடங்கள் கடந்துவிட்டது. நாமெல்லாம் செத்தா போய் விட்டோம்?

2126 ஆகஸ்டு 14

இன்னொரு கருத்து நிலவுகிறது: கி.பி.2126 ஆகஸ்டு 14-ந் தேதி உலகம் அழியப் போகிறது
இந்த கருத்தை சொல்லி இருப்பவர் சர்வதேச வானியல் ஆராய்ச்சி சங்கத்தின் நிபுணர் பிரையன் மார்ஸ்டென் என்பவர்.
அவர் கூறுவதென்ன?
ஒவ்வொரு ஆண்டும் 'ஸ்விப்டட்டில்' எனும் வால்நட்சத்திரம் பூமியைக் கடந்து செல்கிறது. வழக்கமான தனது பாதையில் சென்று கொண்டிருக்கும் இது 2126 ல் பூமிக்கு நேர்கோட்டில் வந்து பூமியில் பலமாக மோதும் அதனால் அணுகுண்டு வெடிப்பதைவிட பயங்கரமான பாதிப்புகள் ஏற்படும். பூமியில் பல மைல்களுக்கு பள்ளம் உண்டாகும். எரிமலைகள் வெடிக்கும். கடல் கொந்தளிக்கும் ஆறுகள் திசை மாறும். ஒட்டுமொத்தத்தில் உலகம் அழியும்.
இதில் நமது கருத்து என்ன?
நீங்கள் குறிப்பிடும் அந்த தேதியில் வால் நட்சத்திரம் மோதுவதோ பயங்கர நாசம் ஏற்படுவதோ நடந்தாலும் நடக்கலாம்.அதற்காக ஒட்டுமொத்த அழிவும் அப்போதுதான் என்பதை நிச்சயமாக சொல்ல முடியாது. 
ஏனெனில் இன்ன தேதியில்தான் என்று அறுதியிட்டு உறுதியாக யாரும் கூறமுடியாது; கூரவும் கூடாது 

  • 5 விஷயங்களைப் பற்றி அல்லாஹ் ஒருவனே அறிவான்

 مَفَاتِحُ الْغَيْبِ خَمْسٌ: إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ، وَيُنْزِلُ الْغَيْثَ، وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ، وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ 

  • அழிவு நாள் எப்போது? என்று ஏந்தல் நபியிடம் வினவப்பட்டபோது அதன் அடையாளங்களைப் பற்றியே சொன்னார்கள்:

சிறு அடையாளங்கள் 
إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ، وَيَثْبُتَ الْجَهْلُ، وَيُشْرَبَ الْخَمْرُ، وَيَظْهَرَ الزِّني 
منْ أَشْرَاطِ السَّاعَةِ، أَنْ يَقِلَّ الْعِلْمُ، وَيَظْهَرَ الْجَهْلُ، وَيَظْهَرَ الزِّنَا، وَتَكْثُرَ النِّسَاءُ، وَيَقِلَّ الرِّجَالُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ "
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ وَتَكْثُرَ الزَّلَازِلُ وَيَتَقَارَبَ الزَّمَانُ وَتَظْهَرَ الْفِتَنُ وَيَكْثُرَ الْهَرْجُ وَهُوَ الْقَتْلُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضُ "


அறிவு ஞானம் குறைந்துவிடும்; அறியாமை பரவிவிடும்; விபச்சாரம் பெருகும்; ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகமாவர் இறுதியில் 50 பெண்களுக்கு 1 ஆண் என்ற விகிதம் நிலவும். 
பூகம்பம் அதிகமாகும் நேரம் சுருங்கும்; குழப்பங்கள் பெருகும் கொலை அதிகமாகும்
குடி கும்மாளம் தாராளமாகும் பயங்கர தீமைகள் கூட பட்டவர்த்தனமாக பகிரங்கமாக நடக்கும்
இது போன்ற ஏரளமான சிறு அடையாளங்களைப் பட்டியலிட்டார்கள் இவை அனைத்தும் தற்போது தாரளமாக நடக்கிறது.
பெரிய அடையாளங்கள் 
 بَلَغَ عَبْدَ اللَّهِ بْنَ سَلَامٍ مَقْدَمُ رَسُولِ اللَّهِ الْمَدِينَةَ فَأَتَاهُ، فَقَالَ: إِنِّي سَائِلُكَ عَنْ ثَلَاثٍ لَا يَعْلَمُهُنَّ إِلَّا نَبِيٌّ، قَالَ: مَا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ وَمَا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ وَمِنْ أَيِّ  شَيْءٍ يَنْزِعُ الْوَلَدُ إِلَى أَبِيهِ وَمِنْ أَيِّ شَيْءٍ يَنْزِعُ إِلَى أَخْوَالِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ : " خَبَّرَنِي بِهِنَّ آنِفًا جِبْرِيلُ قَالَ فَقَالَ عَبْدُ اللَّهِ ذَاكَ عَدُوُّ الْيَهُودِ مِنَ الْمَلَائِكَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ : أَمَّا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ فَنَارٌ تَحْشُرُ النَّاسَ مِنَ الْمَشْرِقِ إِلَى الْمَغْرِبِ وَأَمَّا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ فَزِيَادَةُ كَبِدِ حُوتٍ وَأَمَّا الشَّبَهُ فِي الْوَلَدِ، فَإِنَّ الرَّجُلَ إِذَا غَشِيَ الْمَرْأَةَ فَسَبَقَهَا مَاؤُهُ كَانَ الشَّبَهُ لَهُ وَإِذَا سَبَقَ مَاؤُهَا كَانَ الشَّبَهُ لَهَا، قَالَ: أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ، "


அப்துல்லாஹ் இப்னு சலாம் ஆரம்பத்தில் ஒரு யூதப் பண்டிதர். நபியவர்கள் மதினா வந்திருக்கிரார்கள் எனக் கேள்விப் பட்ட அவர் உடனே விரைந்து வந்து நபியிடம் ''உங்களிடம் 3 வினாக்கள் வைப்பேன் அவைகளுக்கு நபியால்தான் விடை தர முடியும்
1.அழிவு நாளின் அடையாளங்களில் முதலாவது எது?
2.சொர்க்கத்தில் கொடுக்கப்படும் முதல் உணவு எது?
 சில குழந்தை தாயின் உருவத் தோற்றத்தையும் சில குழந்தை தந்தையின் உருவத் தோற்றத்தையும் பெறுவது எவ்வாறு?
நபியவர்கள் பதில் தந்தார்கள்: 
அழிவு நாளின் அடையாளங்களில் முதலாவது பயங்கரமான பெருந்தீ. அந்த தீ பரவி மக்களை கிழக்கிலிருந்து மேற்கு வரை துரத்தி ஒன்று சேர்க்கும்
இது போன்று இன்னும் சில அடையாளங்களையும் வேறு ஹதீசில் கூறியுள்ளார்கள்.  
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا، فَإِذَا رَآهَا النَّاسُ آمَنَ مَنْ عَلَيْهَا، فَذَاكَ حِينَ لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا، لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ "

  • இமாம் மஹ்தி (அலை) வருகை
  • தஜ்ஜாலின் வருகை மற்றும் குழப்பம்
  • அவனை அழிக்க இறைத் தூதர் ஈசா (அலை) வருகை அவர்களின் 40 ஆண்டு ஆட்சி 
  • யஃஜூஜ் மஃஜூஜ் யென்ற அதிசய மனிதர்கள் வருகை
  • ஒரு மலைக் குன்றிலிருந்து அதிசய மிருகம் வெளிப்பட்டு மனிதர்களிடம் உரையாடுதல்
  • மேற்கு திசையில் சூரியன் உதயமாகுதல்

இவை அனைத்தும் நடந்த பிறகுதான் உலகம் அழியும் 


 தற்பொழுது 2012-ல் உலகம் நிச்சயமாகஅழியாது என்பதில்தைரியமாக இருங்கள். ஆனால் வாழும் வரை இந்த பூமியைச் சரியான முறையில்வைத்திருக்க நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும். பூமியின் ஆயுளைக்குறைக்கும் வேலையைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் மரம்நடுவதும், இயற்கையைப் பேணுவதும், சச்சரவின்றி தியானம் செய்வதும், பகைமறப்பதும், தண்ணீரை அளவாகப் பயன் படுத்துவதும் அவசியமாகும்.
                                 ---------=---------------------------------------
இது தொடர்பான பிற பதிவுகள்:







3 கருத்துகள்:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...