25 செப்டம்பர், 2011

Nikkah song திருமணப் பாடல்


இரண்டு மனங்கள் இணைந்து நடக்கும் இனிய திருமணம்
எந்த நாளும் கமழ வேண்டும் வாழ்வில் நறுமணம்
பதினாறு செல்வம் பாக்கியம் பெற்று நீங்கள் வாழ்கவே
பாசத்தோடு வாழ்த்துகின்றோம் வாழ்க வாழ்கவே
                                                                            (இரண்டு)

ஆதம் நபியுடனே ஹவ்வாவும்
அருமை நபியுடனே ஹதீஜாவும்
வேதம் போற்றுகின்ற நபிமார்கள்
வெற்றியான வாழ்க்கை வாழ்ந்தது போல்
இரண்டு பேரும் இதயம் இணைந்து இன்பம் சூழவே
திரண்டு வந்து வாழ்த்துகிறோம் வாழ்க வாழ்கவே
                                                                            (இரண்டு)

மனைவியின் மகிமைதனை விளங்கிடுவோம்
மஹரை மனமுவந்து வழங்கிடுவோம்
நிகரில்லாத மணவாழ்க்கையிலே
தடையில்லாத இன்பம் அடைந்திடுவோம்
இரண்டு பேரும் இதயம் இணைந்து இன்பம் சூழவே
திரண்டு வந்து வாழ்த்துகிறோம் வாழ்க வாழ்கவே
                                                                            (இரண்டு)
Writted by sadhak maslahi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...