19 பிப்ரவரி, 2019

மக்தப் மதரசாக்களை நிலைப்படுத்துவோம்

சமுதாயத்தின் ஒழுக்கமும் முன்னேற்றமும் மக்தப் மதரஸாக்களிலிருந்து தான் உருவாகிறது.
பெற்றோர்களை மதிக்கும் பிள்ளைகளாக.. அவர்களுக்கு பணிவிடை செய்யும் பிள்ளைகளாக...  அனைவராலும் போற்றப்படும் பிள்ளைகளாக... அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்ற பிள்ளைகளாக உங்கள் பிள்ளைகள் உருவாக மதரசாக்களே அடிப்படை.

குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்களையும் மார்க்க விளக்கங்களையும் போதிப்பதில் மதரஸாவின் பங்கு மகத்தானது. முன்சென்ற தலைமுறையினருக்கு  மார்க்க ஞானங்களும் ஒழுக்க விழுமியங்களும் மதரசாக்களில் இருந்து தான் கிடைத்தது.
எதுவரை இந்த சமுதாயம் மதரசாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிள்ளைகளை அனுப்பியதோ அதுவரை இந்த சமுதாயம் சிறப்பாகவே இருந்தது மதரஸாக்களுக்கு செல்வதை விட்டுவிட்டதால் இன்றைய இளைஞர்கள் மார்க்கமே தெரியாமல் இருக்கிறார்கள். ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்ந்து வருகிறார்கள். சுதந்திரம் என்ற பெயரில் தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்கள். மறுமையை மறந்து அமல்களைத் துறந்து கடைசியில் நம் உயிரிலும் மேலான ஈமானையும் இழந்து விடுகிறார்கள். இவையெல்லாம் மதரசாக்களை விட்டு விட்டதால் ஏற்பட்ட இழப்புகள் தானே!
குழந்தை பிறந்தவுடன் காதில் பாங்கு சொல்லி இறை சிந்தனை ஊட்டப்படுகிறது. மரணித்தபின் ஜனாஸா தொழுகை நடத்தப்படுகிறது. மனிதனின் வாழ்க்கை பாங்கில் ஆரம்பித்து தொழுகையில் முடிகிறது. இதன் நோக்கம் அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் இறைவனின் சிந்தனையிலேயே இருக்க வேண்டும் என்பதுதான். இவையெல்லாம் மதரசாவில் படிக்காமல் வேறு எங்கு சென்று படிப்பது ?
என் பிள்ளை ஸ்கூலுக்கும் பிறகு டியூசனுக்கும் போவதால் மதரஸாவுக்கு அனுப்ப நேரம் இல்லை என்று கூறும் பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை சிந்தித்துப் பார்க்கட்டும்.
மஸ்ஜிதை நிர்வாகம் செய்யும் மகத்தான பாக்கியம் பெற்று மஹல்லாக்களில் நல்ல பல சேவைகளை செய்துவரும் மதிப்பிற்குரிய நிர்வாக பெருமக்களே!
நீங்கள் உங்கள் மஹல்லாக்களில் ஏராளமான நற்பணிகளை செய்து வருகிறீர்கள். அவைகளில் தலையாய பணி மட்டுமல்ல முதன்மையான பணி என்ன தெரியுமா ? மதரசாக்களை மேம்படுத்துவதுதான் .
ஏனெனில் அதிகமான மஹல்லாக்களில் நம் சமுதாய இளவல்கள் தடம் மாறிப் போய்க் கொண்டிருக்கிற செய்திகள் நாம் கேள்விப்படாமல் இல்லை. இதற்கு காரணம் நம் பிள்ளைகளில் மார்க்கக் கல்வியும் மார்க்கத்தின் கண்ணியமும் உணரப்படாதது தான்.
ஒரு மஹல்லாவில் ஒரு மனிதனின் தரம் குறைகிறது என்றால் இது பற்றிய கேள்வியும் அல்லாஹ்வின் விசாரணையும் முக்கியமாக பொறுப்புதாரிகளுக்கும் உண்டு.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்:
ما مِن رجلٍ يَغرِسُ غَرسًا إلا كتَبَ اللهُ لهُ منَ الأجْرِ قَدْرَ ما يَخْرُج مِنْ ثَمَر ذلكَ الغَرْسِ.
"எவர் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அந்த மரத்திலிருந்து எவ்வளவு பழங்கள் உற்பத்தியாகும் அவ்வளவு நன்மைகளை அந்த மரத்தை நட்டவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை"
கண்ணியத்திற்குரியவர்களே! சாதாரணமாக ஒரு மரத்தை நட்டவருக்கே இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் போது மிக உயர்தரமான அல்குர்ஆனையும் உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் உயர்ந்த உபதேசங்களையும் கற்றுத் தந்து சுவனத்தின் பாதையைக் காட்டி தரும் மகத்தான  சேவையாகிய மதரசாக்களை உருவாக்கி அதன்மூலம் மார்க்கத்தை மலரச் செய்யும் மேன்மக்களுக்கு எவ்வளவு மகத்தான நன்மைகள் அல்லாஹ் வழங்குவான் என்பதை நாம் உணர வேண்டாமா ?
மக்தப் என்ற இந்த நல்ல நடை முறையை நமது முன்னோர்கள் நமக்கு அமைத்துக் கொடுக்காமல் இருந்திருந்தால் நாம் மார்க்கம் தெரியாத மடையர்களாகி இருப்போம்.
எனவே  கண்ணியமானவர்களே! நமது மஹல்லாக்களில் மக்தப் மதரசாக்களை மேம்படுத்துவோம்! மானுடத்தை அழிவில் இருந்து பாதுகாப்போம் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    நாங்கள் இது போன்று பல அறிஞர்களின் கருத்துகள் வீடியோக் அனைத்தையும் படிக்கின்றோம்
    ஆனால் உதவி கேட்டால் யாரும் உதவுவதில்லை என்ற சில குற்றசாட்டு உள்ளது எங்களுக்கு தான் எங்கே கேட்பது என்று தெரியாமல் தவறாக கேட்கிறோம் என்பதும் புரியவில்லை
    நானும் என்னக்கு தெரிந்த இஸ்லாமிய சகோதரிகள் சேர்ந்து மிகவும் சிறிய அளவில் ஒரு மக்தப் நடத்தி வருகிறோம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக
    இதில் சகோதரிகளை சேர்பது இதற்கு தனி இடம் பாடம் போன்ற அனைத்து செயலுக்கும் மிகவும் சிரமாக வேள்ளது
    உலக விஷயம் என்றால் ஓடி வருகிறார்கள் தீன் என்றால் ஓடி விடுகிறார்கள்
    எங்களின் நோக்கம்
    எங்கெள்ளாம் இஸ்லாம் குடும்ப பெண்கள் உள்ளார்கள அவர்களுக் அவர்கள் வீடுகளிலேயே தீனை எடுத்துரைத்து தீன் வழியிலேயே நடத்தி செல்வது ஒரு நாளைக்கு 30 min எங்களுடைய வாட்சப் வகுப்பை நேரடியாக அவர்கள் கேட்டால் பக்கு பெற்றால் போதும் அல்லாஹ் நிச்சயம் அவர்கள் இதயத்தில் தீனை அசைக்க முடியா இடத்தில் வைப்பான் என்பதே
    துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் எங்கள் நோக்கத்தில் நாங்கள் தளர்ந்து விடாமல் தவறால வழியில் போகாமல் இருக்க

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

நபிமார்களின் அறிவுக் கூர்மை

   இப்ராஹீம் அலை மற்றும் இஸ்மாயீல் அலை ஆகியோரின் அறிவுக் கூர்மை : قَالَ ابْن عَبَّاس لما شب إِسْمَاعِيل تزوج امْرَأَة من جرهم فجَاء إِبْرَاه...