24 நவம்பர், 2020

'நிவர்' காற்றும் நபியவர்கள் கூற்றும்


 சமீப காலங்களில் வந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பெரும் புயல்கள் :

2016 டிசம்பர் வர்தா புயல்

2018 நவம்பர் கஜா புயல்


2020 நவம்பர் நிவர் புயல்

 

  • 1. தேவைக்கதிகமாக பீதி கூடாது ؛
  • 2. சனியன் ஏன் இந்தப் புயல் வருது என்று சபிக்கவும் கூடாது.  
  • 3. அதேநேரம் அசட்டு தைரியமும் ஆகாது
  • ரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனை போல பொறுப்பில்லாமல் இருக்கக்கூடாது.
  •  4. திக்ரு துஆவின் மூலம் அல்லாஹ்விடம் காற்றின் நன்மையை வேண்டி, தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேட வேண்டும்.


1. தேவைக்கதிகமாக பீதி கூடாது ؛
2. சனியன் ஏன் இந்தப் புயல் வருது என்று சபிக்கவும் கூடாது.  

          
- «الرِّيحُ مِن رَوْحِ اللهِ، تَأتِي بِالرَّحْمةِ، وتَأْتِي بِالعَذابِ؛ فلا تَسُبُّوها، وسَلُوا اللهَ خَيْرَها، واسْتَعِيذُوا مِن شَرِّها (أبو داود , وابن ماجه)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் காற்று என்பது அது அல்லாஹ்வின் நாட்டத்திலும் அருளிலும்  உள்ளது.  சில நேரத்தில் அருளாக வருகிறது இன்னும் சில நேரத்தில் வேதனையாகவும் வருகிறது.  எனவே அதை நீங்கள் சபிக்க வேண்டாம். மாறாக அல்லாஹ்விடத்தில் அதனுடைய நன்மையை கேளுங்கள் அதனுடைய தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுங்கள். ( அபூதாவுத், இப்னுமாஜா )


எப்படி பாதுகாப்புத் தேடுவது? 


 روى الإمام مسلم من حديث عائشة رضي الله عنها -: كان النَّبيُّ -صلَّى اللهُ عليه وسلَّم- إذا عَصَفتِ الرِّيحُ قالَ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ؛ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ».


அன்னை ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள்: பலமாக காற்று வீசினால் நபியவர்கள் இப்படி பிரார்த்திப்பார்கள் அல்லாஹ்வே இந்தக் காற்றின் நலவையும் இது எதற்காக அனுப்பப்பட்டதோ அதன் நன்மைகளையும் கேட்கிறேன் இதன் தீங்கை விட்டும் இது எதற்காக அனுப்பப்பட்டதோ அதனுடைய தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (நூல்: முஸ்லிம்)


3. அதேநேரம் அசட்டு தைரியமும் ஆகாது:

 قالتْ: وإذا تَخيَّلتِ السَّماءُ؛ تَغيَّرَ لَونُه، وخَرَجَ ودَخَلَ، وأَقْبَلَ وأَدْبَرَ، فإِذَا مَطَرَتْ سُرِّيَ عَنْهُ، فَعَرَفْتُ ذَلِكَ فِي وَجْهِهِ. قالتْ عائشةُ: فسَأَلْتُه، فقالَ: «لَعَلَّهُ يا عَائِشةُ كَمَا قَالَ قَوْمُ عَادٍ: {فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُمْطِرُنَا .

அதே ஆயிஷா நாயகி ரலி கூறுகிறார்கள்: மேகம் காரணமாக காற்றின் காரணமாக ஏதேனும் வானத்தில் மாறுதல் தென்பட்டால் உடனே நபியவர்களுடைய முகம் நிறம் மாறிவிடும் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக ஒரு கவலையில் காணப்படுவார்கள். மழை வந்துவிட்டால் உடனே ஆனந்தம் அடைவார்கள் அந்த சந்தோஷத்தின் அறிகுறி முகத்தில் தென்படும் இது குறித்து நான் கேட்டேன் நாயகம் அவர்களே மேகமூட்டம் அல்லது காற்று வீசினால் மக்களெல்லாம் மழை வரப்போகிறது என்று தானே ஆனந்தம் அடைவார்கள்?  தாங்கள் மாத்திரம் ஏன் கவலையோடு காணப்படுகிறீர்கள் ஒரு பதட்டம் தென்படுகிறது ஏன் என்று கேட்டேன் அதற்கு நபியவர்கள் சொன்னார்கள் ஆயிஷா ஒருவேளை இந்தக் காற்று என் உம்மத்தின் மீது வேதனையாக அமைந்து விடக் கூடாதே என்றுதான் கவலைப்படுகிறேன்

ஆது கூட்டம் காற்றை பார்த்து இது நமக்கு மழை பொழிய வந்த மேக காற்று என்றுதானே ஆனந்தப் பட்டார்கள் ஆனால் நடந்தது என்ன அதே புயல் காற்றால் ஆதுக்  கூட்டம் அடியோடு அழிக்கப்பட வில்லையா.. என்ன ஒரு கரிசனம் இந்த உம்மத்தின் மீது காருண்ய நபிக்கு?   

عن ابن عباس رضي الله عنه، أن رجلًا لعن الريح عند النبي صلى الله عليه وسلم، فقال: ((لا تلعنوا الريح؛ فإنها مأمورة، وإنه من لعن شيئًا ليس له بأهل رجَعت اللعنة عليه))؛ (رواه الترمذي،

ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு முன்னால் காற்றை திட்டினார் நபியவர்கள் சொன்னார்கள் காற்றை திட்ட வேண்டாம் ஏனெனில் அது அல்லாஹ்வால் ஏவப்பட்டு இருக்கிறது அது எதற்காக ஏவப்பட்டதோ அதை செய்கிறது

யார் தேவையில்லாமல் ஒரு விஷயத்தை திட்டுகின்றனரோ அந்த சாபம் அவருக்கே திரும்பும். 


21 நவம்பர், 2020

சர்க்கரை (நீரிழிவு) கட்டுக்குள் வைக்கலாம் வாங்க !

 சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோயை மிக சுலபமாக கட்டுப்படுத்தலாம் 

கட்டுப்படுத்தும் முறைகள்:

உடல் எடையைக் குறைத்தல் போதிய அளவு உடற்பயிற்சி

காலில் நகம் இடுக்குகளில் காயம் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்

வெறும் காலில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.

உணவுக் கட்டுப்பாடு

காலில் ஏற்படும் காயத்தை Normal Salane) கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்

--------------

இரத்ததில் சர்க்கரை அளவு :

உணவு உண்ணும் முன்: 126 mglal

உணவு அருந்திய பின் : 200 mgid இருந்தால் சர்க்கரை வியாதி ஆகும்


என்ன சாப்பிடலாம் ?

சப்பாத்தி


கோதுமை ரொட்டி


கோதுமை தோசை


கொய்யா காய்


கீரை வகைகள்


கேழ்வரகு ரொட்டி


கேழ்வரகு தோசை


மாதுளை ½ பழம்


ஆப்பிள் 2 துண்டு


உணவில் காய்கறிகள் அதிகமாக சேர்த்துக்

கொள்ள வேண்டும்


காய்கறி சூப் பருகலாம்


சாப்பிடக்கூடாதவை:

அச்சு வெல்லம்

கருப்பட்டி

வாழைப்பழம்

பலாப்பழம்

கொய்யா பழம்

தேங்காய்

கேரட், பீட்ரூட் உருளைக்கிழங்கு

சர்க்கரை வள்ளி

மரவள்ளி கிழங்கு

எண்ணெய்யில் பொறித்த உணவு பொருட்களைத் தவிர்க்க வேண்டும்

15 அக்டோபர், 2020

என்றும் நாயகம் புகழ் தீராதே! |

 பாடல்: A.முஹம்மது மஃரூஃப்

ராகம்: சின்னத் தாயவள் தந்த ராசாவே

-----------

என்றும் நாயகம் புகழ் தீராதே!

என்ன பாடினும் தமிழ் போதாதே!

என்றும் நாயகம் புகழ் தீராதே!

என்ன பாடினும் தமிழ் போதாதே!

சொல் வளம் தாராயோ,

என் எண்ணத்தில் வாராயோ,

எந்தன் ரப்பே, அருள்வாய் நீயோ!

என்றும் நாயகம் புகழ் தீராதே!

என்ன பாடினும் தமிழ் போதாதே!


வார்த்தைகள் யாவும் நீ தர

வார்த்திட மையில் நான் வர

தேன் குரல் கொண்டவர் பாடிட

தேனிசை தென்றல் வீசிட

விண்ணைத் தாண்டியும் இசை கேட்டிட

என்னைப் பாசத்தில் நபி பார்த்திட

ஆசை தீராதோ

என்றும் நாயகம் புகழ் தீராதே!

என்ன பாடினும் தமிழ் போதாதே!

சொல் வளம் தாராயோ,

என் எண்ணத்தில் வாராயோ,

எந்தன் ரப்பே, அருள்வாய் நீயோ!


பாரினில் எங்கும் கேட்கணும்

பாடலில் மனமும் ஏங்கணும்

ஆண்டவன் நீயும் தா வரம்

ஆயுள் முழுதும் என் கரம்

நபி நாதரைப் பாட வேண்டுமே

இன்னும் வார்த்தைகள் தமிழ் தேடுமே!

சொற்கள் வாராதோ!

என்றும் நாயகம் புகழ் தீராதே

என்ன பாடினும் தமிழ் போதாதே!

சொல் வளம் தாராயோ,

என் எண்ணத்தில் வாராயோ,

எந்தன் ரப்பே, அருள்வாய் நீயோ!

என்ன பாடினும் தமிழ் போதாதே!

என்றும் நாயகம் புகழ் தீராதே!

சித்தீக் நாயகம் சிறப்பினையே.. | Islamic Tamil Lyrics

 பாடல்:A.முஹம்மது மஃரூஃப்

ராகம்: சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து


சித்தீக் நாயகம் சிறப்பினையே

சிந்தனை செய்திடுவோம்

செல்லமகள் ஆய்ஷாவின்  தந்தையைப் புகழ்ந்திடுவோம்

(2 முறை)

அண்ணல் நபியின் அருந்தோழர் அவர் புகழைப் பாடிடுவோம்

அல்லாஹ்வுமே அருள் மறையில் உரைப்பதைக் கூறிடுவோம்

சித்தீக் நாயகம் சிறப்பினையே

சிந்தனை செய்திடுவோம்

செல்லமகள் ஆய்ஷாவின்  தந்தையைப் 

புகழ்ந்திடுவோம்


ஆ....ஆ (ஹம்மிங்)

படைத்தவனே இணைத்து வைத்தான் தோழரை நபியுடனே

பயகம்பரும் மணமுடித்தார்

அவர்கள் மகளுடனே

(2 முறை)

பகைவர்களை பயந்திருந்தார் 

குகையில் அவருடனே

பயம் வேண்டாம் நபியுரைத்தார் 

இறைவன் நம்முடனே....ஹோ

(சித்தீக் நாயகம்)


ஆ....ஆ(ஹம்மிங்)

அடிமைகளின் விடுதலையில் அனைத்தையும் வழங்கி நின்றார்

அதன் விளைவால் இறையவனின் 

பொருத்தமும் அடைந்து கொண்டார்

நாற்பதுவாம் வயதினலே வேண்டியதை இறைவன்

நாமும் நிதம் ஓதிவர வேத்தித்தில் பதிவு செய்தான்.....ஹோ

(சித்தீக் நாயகம்)

அண்ணல் நபி உம்மைத் தேடுதே ! | Islamic Tamil Lyrics

 பாடல் எண் :6

எழுதியவர்: A. முஹம்மது மஃரூஃப்


அண்ணல் நபி உம்மைத் தேடுதே !

ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ 

ஆவலால் என் மனமும் நாடுதே!    


அண்ணல் நபி உம்மைத் தேடுதே !

ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ 

ஆவலால் என் மனமும் நாடுதே! 


அரபு மண்ணில் பிறந்தீர்  

அவணி எங்கும் சிறந்தீர் 

அகிலமெல்லாம் படைக்குமுன்னே 

அவன் ஒளியில்  இருந்தீர்  

அருட்கொடையே..(2 முறை) திருநபியே 

அழகிய முன்மாதிரியே 

அடியேன் என் பிழை பொறுக்க 

அவனிடம் பரிந்துரைப்பீரே 


அண்ணல் நபி உம்மைத் தேடுதே !

ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ 

ஆவலால் என் மனமும் நாடுதே! 


ஆதம் நபி முதலாய் 

அனைவரும் முன் மொழிந்தார்

ஆண்டவனை அறியவைக்க 

அஹமதவர்  வருவார்

ஆதரித்தே..(2 முறை) அரவணைப்பீர் 

அவன் பொருத்தம் பெறுவதற்கே 

ஆண்டுகள் பல ஆனாலும் 

அழிவதில்லை உம்  புகழே!


அண்ணல் நபி உம்மைத் தேடுதே !

ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ 

ஆவலால் என் மனமும் நாடுதே! 


வியக்கவைக்கும் மறையின் 

விளக்கமென வாழ்ந்தீர் 

விரல்தானையே அசைத்து  

விண்ணில்  நிலவதனைப் பிளந்தீர் 

விரும்புகிறேன்…(2 முறை) மனதினிலே 

விழியில் உம்மைக்  காண்பதற்கே

விண்ணிலேறி விரைந்து சென்றே 

விளித்தவனை அடைந்தீரே!


அண்ணல் நபி உம்மைத் தேடுதே !

ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ 

ஆவலால் என் மனமும் நாடுதே! 


எம்பெருமான் நபியே 

என் கண்ணின் மணியே 

என்னுடைய ஈமான் நீர் 

ஏற்றிவைத்த ஒளியே

என்றென்றுமே..(2முறை) உமை மறவா 

நினைவுடன் நான் வாழ்வதற்கே 

எவனொருவன் படைத்தானோ

அவனிடமே கேட்பேனே!  


அண்ணல் நபி உம்மைத் தேடுதே !

ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ 

ஆவலால் என் மனமும் நாடுதே!

11 அக்டோபர், 2020

முப்பது மில்லியன் கூட வேணாம்.. முகத்திரை கழற்ற மாட்டேன்!

 (Face Caver) முகத்திரைக்காக அல்குர்ஆன் போட்டியின் 30 மில்லியன் ரூபா பணப் பரிசையும் விட்டுக் கொடுத்த இந்தோனேசியப் பெண்மணி

-------=------------------------------------

இந்தோனேஷியாவில் ஷரீஆ பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தேசிய  அல்குர்ஆன் மனனப் போட்டியில் பங்குபற்றுகிறார்.

இறுதிச் சுற்றிற்கு (Final Round) தெரிவாகிறார்.

வெற்றியீட்டுபவருக்கு 30 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

இறுதிச் சுற்றிற்கு...... தனது  முகத்தை மறைத்த நிலையில் மாணவி மேடைக்கு வந்தவுடன் மத்தியஸ்தர்கள்,

உங்கள் முகத்திரையை நீக்குங்கள்!

மன்னித்துக் கொள்ளுங்கள் உஸ்தாத்! எனக்கு இதை (ஹிஜாபை) திறக்க முடியாது.

தயவு செய்து உங்கள் ஹிஜாபை நீக்குங்கள்.

இது போட்டியின் நிபந்தனைகளில் ஒன்று.

ஒலிவாங்கியை (Mic) ஹிஜாபுக்குள்ளே  வைத்து ஓத முடியாதா?

முடியாது! முடியாது! இதுதான் சட்டம்

உஸ்தாத்! கவலையாக இருக்கிறது.

நான் போட்டியிலிருந்து வெளியேறுகிறேன். 

உஸ்தாத்!

எனக்கு ஹிஜாபை கலட்ட முடியாது.....

என்று கூறிவிட்டு மேடையிலிருந்து வெளியேறுகிறார்.

இந்த ஈமானியப் பெண்மணி தனது ரப்பின் இறைக் கட்டளைதான் எனக்கு 30 மில்லியன் ரூபாவை விட மிக மேலானது என நினைக்கிறாள்.

கவலையுடன் போட்டியிலிருந்து வெளியேறுகிறாள்.

இந்தப் பெண்மணியின் ஆச்சரியமான செய்தி முழு இந்தோனேஷியாவிலும் வைரலாகத் தொடங்கியது.

போட்டி நடைபெற்று 5 நாட்களில் இந்தப் பெண்மணியின் அதீத  ஈமானிய உணர்வைப் பார்த்து 100 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டாள்.

முழு உலகத்திலும் இந்தப் பெண்மணியின் ஈமானிச் செயலை ஊடகங்கள் பகிர்ந்தன.

அல்லாஹ்விற்காக 30 மில்லியன் ரூபாவை விட்டுக் கொடுத்தாள். அதனைவிட 3 மடங்கு (💯 மில்லியன் ரூபாவை) அல்லாஹ் அந்தப் பெண்மணிக்கு கொடுத்தான்.

அதுமட்டுமல்லாமல் முழு உலகத்திற்கும் அந்தப் பெண்மணியின் இதய சுத்தியை (இஹ்லாஸை) அல்லாஹ் வெளிப்படுத்தினான்.

 "நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்விற்காக ஒரு விடயத்தை விட்டுவிடுகிறாறோ அதை விட சிறந்ததை அல்லாஹ் அவருக்கு கொடுப்பான்" 

அல்லாஹ்வின் கட்டளைகளை நிலைநிறுத்தியவர்களை அல்லாஹ் ஒருநாளும் வீனாக்க மாட்டான்.


15 செப்டம்பர், 2020

என்றும் நாயகம் புகழ் தேயாதே ! Tamil Islamic Song Lyrical Video



பாடல்: அல்ஹாஜ் முஹிப்புல் உலமா A.முஹம்மது மஃரூஃப்

ராகம்: சின்னத் தாயவள் தந்த ராசாவே

என்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
என்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
சொல் வளம் தாராயோ,
என் எண்ணத்தில் வாராயோ,
எந்தன் ரப்பே, கவிஞன் நீயோ!
என்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!

வார்த்தைகள் யாவும் நீ தர
வார்த்திட மையில் நான் வர
தேன் குரல் கொண்டவர் பாடிட
தேனிசை தென்றல் வீசிட
விண்ணைத் தாண்டியும் இசை கேட்டிட
என்னைக் காதலால் நபி பார்த்திட
ஆசை தீராதோ
என்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
சொல் வளம் தாராயோ,
என் எண்ணத்தில் வாராயோ,
எந்தன் ரப்பே, கவிஞன் நீயோ!

பாரினில் எங்கும் கேட்கணும்
பாடலில் மனமும் ஏங்கணும்
ஆண்டவன் நீயும் தா வரம்
ஆயுள் முழுதும் என் கரம்
நபி நாதரைப் பாட வேண்டுமே
எந்தன் தாய் மொழி தமிழ் போதுமே
சொற்கள் தாராதோ!
என்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
சொல் வளம் தாராயோ,
என் எண்ணத்தில் வாராயோ,
எந்தன் ரப்பே, கவிஞன் நீயோ!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
என்றும் நாயகம் புகழ் தேயாதே!