11 ஆகஸ்ட், 2013

மனித நேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா?-2

வாழ்கிறதே!

மனித நேயம் காக்க வந்த நாநபி (ஸல்) அவர்களின் வாரிசான நடுவர் அவர்களே. 
சத்தியம் பேச வந்த என் அணியினரான தின்குலத்தின் வீரர்களே வீரதிப்புவின்  பரம்பரைகளே வான்மறையின் நெஞ்சங்களே வீர வாழ்வு கண்ட சிங்கங்களே, நாலுந் தெரிஞ்ச தங்கங்களே மேலும் நாலு விஷயம் தெரிந்த தங்கங்களே.
என் எதிரணியில் பேச வந்திருக்கும் என்  சிநேகித சிநேகிதிகளே  மேலும் இன்றைய உலகில் மனித நேயம் வாழ்கிறதே! வாழ்கிறதே!வாழ்கிறதே! என்ற நடுவரின் நன்றான இறுதியான தீர்ப்பை காது குளிரை கேட்கவந்திருக்கும்.
கல்பில் நிறைந்த கண்மனி நாயகம்(ஸல்) அவர்களின் பாக்கியம் நிறைந்த உம்மத்துகளே,  உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஸலாமை தெரிவித்துக் கொள்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பார்ந்து நடுவர் அவர்களே  மனிதநேயம் வாழ்கிறது என்பதற்கு ஆதாரம் தேடி வெளியே போக வேண்டிய அவசியம் இல்லை.

மனித நேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா?-1



இன்றைய உலகில் மனித நேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா?
வீழ்கிறதே..!

கண்ணியத்திற்குரிய நடுவர் அவர்களே! மனித நேயம் வீழ்கிறது என்ற தங்களின் தீர்ப்புக்கே வலுசேர்க்க வந்துள்ளேன்.

10 ஆகஸ்ட், 2013

வந்து விட்டது வாழ்வியல் நூல்: "பெண்கள் சமுதாயத்தின் கண்கள்"



இதோ வெளிவந்துவிட்டது... 
பெண்களுக்கான ஓர் அருமையான வாழ்வியல் நூல்.

"பெண்கள் சமுதாயத்தின் கண்கள்"


விலை 20 ரூபாய் மட்டுமே. 

1. குடும்பத்தின் குல விளக்கு 
o  நல்ல மனைவி யார்?
o  தொழுவாள்; தொழுமாறு தூண்டுவாள் !
o  பின் தூங்கி முன் எழுவாள்  பத்தினி!
o  வாசல் தெளிப்பது வளம் சேர்க்கும் .
o  வள்ளுவரும் வாசுகியும்!
o  கணவனே சொர்க்கமும் நரகமும் !
o  இலத்தரசி: இல்லத்தின் வாயிற்படி!

2. காரியம் சாதித்த காரிகைகள் 
o  மலடி கூட மன்றாடிக் கேட்டால் மழலைச் செல்வம் உண்டு.
o  தொழுகையும் துஆவும் துணை செய்யும். 

3. பாதுகாப்புப் பெற்ற பாவையர் 
o  தொட்டால் ஷாக் இன்று; தொடாமலேயே ஷாக் அன்று.
o  உடலில் பர்தா; உள்ளத்தில் உறுதியான ஈமான்.
o  பர்தா ஒரு கொடுமையா?
o  கவர்ச்சி, கற்புக்கு களங்கம் மட்டுமல்ல; ஆண்மைக்கும் ஆபத்து!
o  பர்தா அவசியமா? அநாகரீகமா?- விவாதம் 
o  வலிப்பு கூட பரவாயில்லை; ஆடை விலக அனுமதிக்க மாட்டேன்!
o  அந்நியன் பார்வையில் பட்ட அங்கம் அவசியமில்லை!
o  நாணம் வேண்டாமா நங்கையரே?

4. அள்ளி வழங்கிய அன்னையர் 
o  நகையும் தொகையும் தந்த நங்கையர். 
o  ஒரு லட்சம் தீனாரும் ஒரே நாளில் தீர்ந்தது.
o  உம்மு ஷரீக் (ரலி) அவர்களின் உதவி.
o  கதிஜா (ரலி) அவர்களின் கருணை. 

5. சகல துறையிலும் சாதித்த பெண்கள் 
o  ஹதீது கலை 
o  ஆத்மஞானப் பாதை 
o  வீரம் 
o  புலமை 
o  பொதுசேவை

இன்னும் பல தலைப்புகளில் அரிய தகவல்கள்.

தொடர்புக்கு:
ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் தேவ்பந்த் 
        9865369819
sadhakmaslahi@yahoo.com,  sadhak532@gmail.com


07 ஆகஸ்ட், 2013

பெருநாள் தர்மம் (ஈதுப் பெருநாளின் ஈகை)



சதக்கத்துல் ஃபித்ரு: 
பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும். ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும்.

02 ஆகஸ்ட், 2013

நரக விடுதலை கிடைக்க என்ன செய்யலாம்?



யாருக்கு நரகிலிருந்து விடுதலை கிடைத்து சுவனம் நுழைந்து விட்டாரோ அவர் வெற்றி அடைந்து விட்டார்:

{ فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَما الْحَيَاةُ الدُّنْيَا إِلاَّ مَتَاعُ الْغُرُورِ } [آل عمران : 185]
அது கிடைக்க என்னவெல்லாம் செய்யலாம் ?
நிறைய விஷயங்களைப் பட்டியலிடலாம் நபிமொழிகளிலிருந்து.... 

01 ஆகஸ்ட், 2013

நரக விடுதலை- பகுதி 2

எவ்வளவுதான் நன்மை செய்தாலும் நாம் நரகை விட்டும் பாதுகாப்புத் தேட வேண்டும் .
நல்லறங்கள் செய்த ஒருவர் கூட நரகை விட்டு பாதுகாப்புத் தேடாததால் ....

31 ஜூலை, 2013

நரக விடுதலை நமக்கு வேண்டும்!

நரகம் இருக்கிறதா? இருந்தால் அது எப்படி இருக்கும்? அங்கே என்னவெலாம் நடக்கும்?
இதை ஓரளவாவது தெரிந்து கொண்டால்தான் அதைப் பற்றிய ஒரு பயம் வரும் அதை விட்டு பாதுகாப்பு தேடவும் அதை விட்டு நம்மைத் தற்காத்துக் கொள்ளவும் சிந்தனை பிறக்கும்.
நரகம் இல்லை என்று கூறுவோரும் உண்டு. 
நரகம் உண்டு என்று கூறுவோரும் உண்டு அதில் சில பேர் வேடிக்கைக்காக இப்படி கதை எழுதிவைத்துள்ளனர் :
ஒரு இந்தியன் இறந்து நரகத்துக்குப் போனான்