09 மே, 2013

தோல்வியின்றி வரலாறா? துக்கமென்ன என் தோழா!


ஆபத்துகளும் துன்பங்களும் ஏற்படவும் வேண்டும்; அவற்றை துணிவோடு வெல்லவும் வேண்டும் . அதுவே ஆண்மகனுக்கு அழகு '' என்பார் அவ்ரங்கசீப் (ரஹ் )
எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக யாருக்கும்  இறைவன் வழங்கியதில்லை.
பிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இலாமல் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்?
கண்களை மூடிக்கொண்டு எண்ணிப் பாருங்கள்.
ஒரு கட்டம் அப்படி என்றால், மறு கட்டம் இப்படி!

08 மே, 2013

மாரடைப்புக்கு மகத்தான மருந்து


மருத்துவம் 
நண்பர்களே கவனியுங்கள்----

இது உண்மைச் சம்பவம்....

இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.
நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்

பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

- ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ்

தமிழாக்கம்; Mannargudi Banukumar

05 மே, 2013

டிவியால் அதிகம் விளைவது நன்மையா? நாசமா? தீர்ப்பு

இப்போது ஆறு மாணவர்களும் அருமையாக பேசி முடித்துவிட்டார்கள். தீர்ப்பு சொல்ல  வேண்டும்.
என்ன தீர்ப்பு சொல்வது?
நன்மையும்தான் நாசமும்தான் இரண்டுமே உண்டுதான் என்று சொன்னால் .... என்னை செருப்பக் கழட்டி அடிக்க வருவீங்க  ''ஏண்டா.. இதுக்கா  இத்தனை மணி நேரம் பொறுமையா உட்கார்ந்திருந்தோம் என்று பொங்கி  விடுவீர்கள் ''யாருடா இப்படி ஒரு தீர்ப்பை எழுதித் தந்தது'' என்று எங்க ஆசியருக்கும் திட்டு விழும் .
அதுக்காக இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற பத்தாம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்னு சொல்ல முடியுமா ?
நான் ஒத்தி வச்சா நீங்கல்லாம் சேர்ந்து என்னை மொத்தி எடுத்து விடுவீங்க
அதுனால நல்ல தீர்ப்பை சொல்லாம என்னால நழுவ முடியாது . சரி தீர்ப்புக்கு வருவோம்.
இந்த தரப்பில் பேசும்போது என்ன சொன்னார்கள் :
'சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்ச்சியில் எத்தனையோ குடும்ப பிரச்சினைகளை தீர்க்கிறார்கள் பிரிந்து கிடக்கிற குடும்பங்களை சேர்த்து வைக்கிறார்கள்'' என்றார்கள்
ஆனால் இந்த அணி என்ன சொல்கிறது? ''ஒற்றுமையாய் இருந்த எத்தனையோ குடும்பங்கள் நாடகங்களால் நாசமடைந்ததும் உண்டா இல்லையா'' என்று இவர்கள் கேட்கிறார்கள். அதையும் நாம் மறுக்க முடியாது.

உதாரணமாக , வேலை செய்து அலுத்து மனமும் உடலும் கலைத்து வரும் கணவருக்கு சேர்ந்தாற்போல ஒரு பத்து நிமிடம் அருகில் அமர்ந்து இன்று எந்த மனைவியாவது உணவு பரிமாறுவதைப் பார்க்க முடியுமா?
நாடகம் தொடங்கும் முன் தட்டு வரும்  அடுத்த விளம்பர இடைவேளையில் சாதம் ; அதற்கடுத்த இடைவேளையில் சாம்பார்.
இப்படி இடைவேளைகளில் பரிமாறி பரிமாறி கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பெரிய இடைவெளியையே ஏற்படுத்தி விடுகின்றன இந்த டிவி நிகழ்ச்சிகள் 

பஸ்ஸில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் இளவட்டங்களை பார்த்து சில பெரியவர்கள் ''தம்பி.. உள்ளே இடம் கிடக்கும்போது ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்து தொங்கிக்கிட்டு வரணும் என்று சொன்னா,  ''யோவ் பெருசு.. ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரின்னு சொல்லிட்டு கெக்கபிக்கன்னு ஒரு கேவலமான  சிரிப்பு வேற. இதெல்லாம் யாரு கத்துக் கொடுத்தா? சினிமா இல்லையா ?

மதிக்கவேண்டிய பெரியவர்களை மதிப்பதில்லை மரியாதை தரவேண்டிய ஆசிரியர்களுக்கு மரியாதை இல்லை இதன் பின்னணியில் இந்த சினிமாக்கள் இல்லன்னு மறுக்க முடியுமா

அட அதை விடுங்க ..
இந்த வாண்டுங்க என்னமா வயாடுதுக? வகுப்பிற்கு அறுவையான ஆசிரியர் யாராவது வந்து விட்டால் உடனே ஒரு கமென்ட்: வந்துட்டான்யா .. வந்துட்டான்யா 
இதெல்லாம் என்கிருந்து  கற்றுக் கொண்டார்கள் பாழாப்போன சினிமா விலிருந்து தானே?

அதற்காக தொலைக் காட்சியினால் ஒரு பயனும் இல்லைன்னு அடியோடு ஒதுக்கவில்லை அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல நிகழ்ச்ச்சிகளும் உண்டு

  • செய்திகளை உடனுக்குடன் இருபத்து நான்கு மணி நேரமும் தெரிந்து கொள்கிறோம் 
  • டிஸ்கவரி போன்ற சேனல்களில் அதிசய விலங்குகள் பறவைகளின் செயல்பாடுகளிக் கண்டு அல்லாஹ்வின் ஆற்றலை வியக்குகிறோம்.
  • சமையல் குறிப்புகள், அருமையான அலசல்கள், சூடான விவாதங்கள் சுவையான தகவல்கள்.
 இப்படி சில நன்மைகளும் உண்டு நாம் மறுக்கவில்லை ஆனால இவை எல்லாம் குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு மத்தியில் சில குண்டுமணிகளைப்  போல.
ஆனால் டிவியால் ஏற்படும் பாதகங்களை பட்டியல போட பக்கங்கள் போதாது;  நாசங்களைக் கூற நாவு போதாது; கேடுகளை எடுத்துச் சொல்ல ஏடுகள் போதாது .
  • மாணவச் செல்வங்களுக்கு கடுமையான மறதியை  உண்டாக்கிவிட்டது.
  • அவர்களின் மன வளர்ச்ச்சியை மங்கச் செய்து சுறுசுறுப்பில்லாத சோம்பேறியாக்கிவிட்டது 
  • குடும்ப உறவுகளை குலைத்துவிட்டது 
  • மான மரியாதை, நல்லொழுக்கம் இறை பக்தி இவைகளுக்கு இதயத்தில் இடமே இல்லாமல் செய்துவிட்டது. 
  • பெற்றோரை எதிர்த்து அன்னியனோடு ஓடிப் போய் குடும்பக் கவுரவத்தை காற்றில் பறக்கவிடுவதை சாதனையாக காட்டுகிறது டிவி.
  • படிக்கும் பருவத்திலேயே பாய் பிரன்ட் கேள் பிரான்ட் வைத்துக்கொள்கிற அசிங்கத்தை அழகாகக் காட்டுகிறது 
  • கல்வி கற்க வேண்டிய வயதில் கலவியை காமத்தைக் கற்றுத் தருகிறது.

இப்படி ஏராளமான அபாயங்களை அடுக்கிக் கொண்டே போனால் அதன் முடிவாக வருவது டிவியால் அதிகம் விளைவது நாசமே நாசமே என்று தீர்ப்பளித்து இந்த பட்டிமன்றத்தை நிறைவு செய்கிறேன்  

டிவியால் அதிகம் விளைவது நன்மையா? நாசமா?- நடுவர் முன்னுரை

பசிக்கின்ற மனிதனுக்கு ருசிக்கின்ற உணவளித்து ரசிக்கின்ற இறைவா.. உனக்கே புகழனைத்தும்.
வஞ்சி மரக்கிளைகளை தென்றல் கொஞ்சித் தாலாட்டும் காலமெல்லாம் வள்ளல் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் மீதும் நபி வழி நடந்திட்ட நற்றவத் தோழர்கள் மீதும் வாஞ்சை மிக்க  வலிமார்கள் மீதும் இங்கு கூடி இருக்கிற நம் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருளும் அன்பும் உண்டாவதாக.. ஆமீன்

இந்த பட்டிமன்றத்தின் தலைப்பு டிவியால் அதிகம் விளைவது நன்மையா நாசமா ?

இதுபோன்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்துவது காலத்தின் கட்டாயம். காரணம், இந்த கடைசிக் காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலாச்சார சீரழிவுகளும் அனாச்ச்சார பேரழிவுகளும் கொஞ்சமல்ல நெஞ்சமல்ல
இந்த சீரழிவின் பின்னணியில் டிவி செல்போன் போன்ற நவீன கருவிகளுக்கு பெரும் பாங்கு இருப்பதை பரவலாகவே பார்க்கிறோம் .
ஒரு பக்கம் அதீத அறிவியல் முன்னேற்றத்தால் அற்புதமான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு அநேக பலன்கள் கிடைத்துக் கொண்டிருப்பதும் உண்மை. ஆனால், மறு பக்கம் நவீன கருவிகளால் நாசம் ஏற்பட்டுக் கொண்டிருப்பதும் மறுக்க முடியாத உண்மை.
அதிவிரைவான வாகனங்கள் டெலிபோன் செல்போன் கரண்ட் அடுப்பு கம்ப்யூட்டர் இன்டெர்நெட், ஈயத்தட்டு ஈமெயில் கொசுமெயில் இப்படி ஏராளமான் கண்டுபிடிப்புகள் வந்து ஒரு பக்கம் நன்மையைத் தந்து கொண்டிருந்தாலும் மறு பக்கம் நாசத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்.
இவற்றில் எது அதிகம் ? நன்மையா? நாசமா? இதுதான் இங்கு தலைப்பு.
அதிலும் குறிப்பாக சினிமா என்ற சின்னத் திரையும் சீரியல் என்ற வண்ணத் திரையும் சீரழிவைத் தருகிறதா? சீர்திருத்தத்தை தருகிறதா? என்று பேசப் போகிறோம்  டிவியால் நன்மையே என்று பேச மூன்று பேர் முன் வந்துள்ளனர். நாசமே என்று பேச மூன்று பேர் முன்வந்துள்ளனர். முதலி இவர்களை மோதவிடுவோம் பிறகு ஒரு முடிவுக்கு வருவோம்
இப்போது நாசமே என்று பேச நம்ம வீரப் புலி- தவ்பீக் அலி  வருகிறார் .
வாருங்கள் வந்து உங்கள் வார்த்தைகளைத் தாருங்கள்.

24 ஏப்ரல், 2013

மரம்- வல்லவன் வழங்கிய வரம்


மரங்கள் எத்தனை நிறங்கள்
மலர்கள் எத்தனை கலர்கள்
 இப்படி இருந்த இந்த புனித பூமியை நவீன அரக்கர்கள் வந்து நாசப்படுத்தி விட்டனர் 
  • மரங்கள் முளைத்திருந்த இடமெலாம் இன்று கட்டிடங்கள் முளைக்கின்றன 

10 ஏப்ரல், 2013

ஈமானின் இரு இறக்கைகள் :இறையச்சமும் இறைநம்பிக்கையும்

ஜும்ஆ உரை :63

الخوف والرجاء

وَيَدْعُونَنا رَغَباً وَرَهَباً وَكانُوا لَنا خاشِعِينَ (الأنبياء/ 90)

'' அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்.'' (21:90)
அல்லாஹ்வின் தண்டனை மீதான அச்சமும் அவனது அருள் கிடைக்கும் என்ற ஆதரவும் இந்த இரண்டு தன்மைகளும் ஒரு உண்மையான மூமினுக்கு மிக அவசியம். இவை இரண்டும் உயர்ந்த பதவியை நோக்கி நாம் பறந்து செல்ல உதவும் இரு இறக்கைகள். மறுமையின் பாதைகளைக் கடக்க உதவும் இரு சவாரிகள்

07 ஏப்ரல், 2013

எப்பவுமே ஒரே பேச்சுதான்! (mullah stories)


வெகு காலத்திற்குப் பிறகு வெளியூர் அன்பர் ஒருவர் முல்லாவை வந்து சந்தித்தார்.

இருவரும் சுவையாக நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.

பேச்சின் இடையே வெளியூர் அன்பர் முல்லா அவர்களே தங்களது வயது என்ன? என்று கேட்டார்.

நாற்பது வயது என்று முல்லா பதிலளித்தார். வெளியூர் நண்பர் வியப்படைந்தவராக என்ன முல்லா அவர்களே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் தங்களைச் சந்தித்தபோதும் உங்களுக்கு வயது நாற்பது என்றுதான் கூறினீர்கள். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அதே நாற்பது வயதையே கூறுகிறீர்களே * அது எப்படி? என்று கேட்டார்.

நான் சொன்ன சொல் மாறாதவன். ஓரு தடவை சொன்ன சொல்லை மாற்றிச் சொல்லும் ஈனபுத்தி எனக்குக் கிடையாது என்று சிரித்துக் கொண்டே கூறினார் முல்லா.