05 மே, 2013

டிவியால் அதிகம் விளைவது நன்மையா? நாசமா?- நடுவர் முன்னுரை

பசிக்கின்ற மனிதனுக்கு ருசிக்கின்ற உணவளித்து ரசிக்கின்ற இறைவா.. உனக்கே புகழனைத்தும்.
வஞ்சி மரக்கிளைகளை தென்றல் கொஞ்சித் தாலாட்டும் காலமெல்லாம் வள்ளல் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் மீதும் நபி வழி நடந்திட்ட நற்றவத் தோழர்கள் மீதும் வாஞ்சை மிக்க  வலிமார்கள் மீதும் இங்கு கூடி இருக்கிற நம் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருளும் அன்பும் உண்டாவதாக.. ஆமீன்

இந்த பட்டிமன்றத்தின் தலைப்பு டிவியால் அதிகம் விளைவது நன்மையா நாசமா ?

இதுபோன்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்துவது காலத்தின் கட்டாயம். காரணம், இந்த கடைசிக் காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலாச்சார சீரழிவுகளும் அனாச்ச்சார பேரழிவுகளும் கொஞ்சமல்ல நெஞ்சமல்ல
இந்த சீரழிவின் பின்னணியில் டிவி செல்போன் போன்ற நவீன கருவிகளுக்கு பெரும் பாங்கு இருப்பதை பரவலாகவே பார்க்கிறோம் .
ஒரு பக்கம் அதீத அறிவியல் முன்னேற்றத்தால் அற்புதமான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு அநேக பலன்கள் கிடைத்துக் கொண்டிருப்பதும் உண்மை. ஆனால், மறு பக்கம் நவீன கருவிகளால் நாசம் ஏற்பட்டுக் கொண்டிருப்பதும் மறுக்க முடியாத உண்மை.
அதிவிரைவான வாகனங்கள் டெலிபோன் செல்போன் கரண்ட் அடுப்பு கம்ப்யூட்டர் இன்டெர்நெட், ஈயத்தட்டு ஈமெயில் கொசுமெயில் இப்படி ஏராளமான் கண்டுபிடிப்புகள் வந்து ஒரு பக்கம் நன்மையைத் தந்து கொண்டிருந்தாலும் மறு பக்கம் நாசத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்.
இவற்றில் எது அதிகம் ? நன்மையா? நாசமா? இதுதான் இங்கு தலைப்பு.
அதிலும் குறிப்பாக சினிமா என்ற சின்னத் திரையும் சீரியல் என்ற வண்ணத் திரையும் சீரழிவைத் தருகிறதா? சீர்திருத்தத்தை தருகிறதா? என்று பேசப் போகிறோம்  டிவியால் நன்மையே என்று பேச மூன்று பேர் முன் வந்துள்ளனர். நாசமே என்று பேச மூன்று பேர் முன்வந்துள்ளனர். முதலி இவர்களை மோதவிடுவோம் பிறகு ஒரு முடிவுக்கு வருவோம்
இப்போது நாசமே என்று பேச நம்ம வீரப் புலி- தவ்பீக் அலி  வருகிறார் .
வாருங்கள் வந்து உங்கள் வார்த்தைகளைத் தாருங்கள்.

24 ஏப்ரல், 2013

மரம்- வல்லவன் வழங்கிய வரம்


மரங்கள் எத்தனை நிறங்கள்
மலர்கள் எத்தனை கலர்கள்
 இப்படி இருந்த இந்த புனித பூமியை நவீன அரக்கர்கள் வந்து நாசப்படுத்தி விட்டனர் 
  • மரங்கள் முளைத்திருந்த இடமெலாம் இன்று கட்டிடங்கள் முளைக்கின்றன 

10 ஏப்ரல், 2013

ஈமானின் இரு இறக்கைகள் :இறையச்சமும் இறைநம்பிக்கையும்

ஜும்ஆ உரை :63

الخوف والرجاء

وَيَدْعُونَنا رَغَباً وَرَهَباً وَكانُوا لَنا خاشِعِينَ (الأنبياء/ 90)

'' அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்.'' (21:90)
அல்லாஹ்வின் தண்டனை மீதான அச்சமும் அவனது அருள் கிடைக்கும் என்ற ஆதரவும் இந்த இரண்டு தன்மைகளும் ஒரு உண்மையான மூமினுக்கு மிக அவசியம். இவை இரண்டும் உயர்ந்த பதவியை நோக்கி நாம் பறந்து செல்ல உதவும் இரு இறக்கைகள். மறுமையின் பாதைகளைக் கடக்க உதவும் இரு சவாரிகள்

07 ஏப்ரல், 2013

எப்பவுமே ஒரே பேச்சுதான்! (mullah stories)


வெகு காலத்திற்குப் பிறகு வெளியூர் அன்பர் ஒருவர் முல்லாவை வந்து சந்தித்தார்.

இருவரும் சுவையாக நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.

பேச்சின் இடையே வெளியூர் அன்பர் முல்லா அவர்களே தங்களது வயது என்ன? என்று கேட்டார்.

நாற்பது வயது என்று முல்லா பதிலளித்தார். வெளியூர் நண்பர் வியப்படைந்தவராக என்ன முல்லா அவர்களே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் தங்களைச் சந்தித்தபோதும் உங்களுக்கு வயது நாற்பது என்றுதான் கூறினீர்கள். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அதே நாற்பது வயதையே கூறுகிறீர்களே * அது எப்படி? என்று கேட்டார்.

நான் சொன்ன சொல் மாறாதவன். ஓரு தடவை சொன்ன சொல்லை மாற்றிச் சொல்லும் ஈனபுத்தி எனக்குக் கிடையாது என்று சிரித்துக் கொண்டே கூறினார் முல்லா.

குழப்பவாதிகள் (mullah stories)


முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை.

ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள்,
எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார்.

அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் "மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக
குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும்
முல்லா சொல்லிக் கொண்டு திரிக்கிறார் என்று அரசரிடம் முல்லாவைப் பிடிக்காதவர்கள் கூறித் தூண்டி விட்டார்கள்.

உண்மை நிலையை அறிய விரும்பிய அரசர், முல்லாவை சபைக்கு வரவழைத்தார்.

அத்துடன், தத்துவ மேதைகள், மார்க்க ஞானிகள், சட்ட நிபுணர்கள், அறிவுசால் அமைச்சர்கள் அனைவரையுமே கூட்டினார்.
பிறகு முல்லாவை நோக்கி, " இவர்கள் எலலாம் குழப்பவாதிகள் என்று கூறினீர்களாமே?...ஏன் அப்படிக் கூறினீர்கள் ?
இவர்கள் குழப்பவாதிகள் என்று உம்மால் நிரூபிக்க முடியுமா?" என்று கேட்டார்.

இது என்னடா வம்பா போச்சு, சும்மா வாய் பேச்சுக்கு சொன்னதை வைத்து என்னை மாட்டி விடப் பார்க்கிறீங்களா,
அப்போ நீங்க குழப்பவாதிகள் தான், அதை நிரூபித்தால் ஆச்சுது என்று நினைத்து "அரசே என்னால் நிறுபிக்க முடியும்"
என்று கூறிய முல்லா, அனைவரிடமும் ஆளுக்கொரு தாளைக் கொடுத்தார்.

பின்னர் அவர்களிடம், " அறிஞர் பெருமக்களே...நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்கப் போகிறேன்.
அதற்குரிய பதிலை, இந்தத் தாளில் நீங்கள் எழுதிக் கொடுக்கவேண்டும்" என்றார்.

பின்னர், அவர்களிடம் ஒரு தாளை கொடுத்தார், அதில் , " ரொட்டி என்றால் என்ன? " என்று கேட்டார்.

அனைவரும் பதிலைத் தாளில் எழுதி அரசரிடம் கொடுத்தார்கள். அரசர் படிக்க ஆரம்பித்தார்.

ஒருவர்- ரொட்டி என்பது சத்துள்ள பண்டம் என்று எழுதியிருந்தார்.

இரண்டாமவர் - ரொட்டி என்பது ஒரு உணவு என்று குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாமவர் - இறைவன் கொடுத்த கொடையே ரொட்டி.

நான்காமவர் - ரொட்டி என்பது வேகவைத்த மாவுப் பொருள்.

ஐந்தமவர் - ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்த கலப்பு.

ஆறாமவர் - அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சுவையும் வடிவும் பெறுவது ரொட்டி

ஏழாமவர் - ரொட்டி என்பதற்கு சரியான பொருள் யாருக்குமே தெரியாது......என்று குறிப்பிட்டு எழுதியிருந்ததை அரசர் படித்தார்.

எல்லா பதில்களையும் அரசர் படித்து முடிக்கும்வரை பொறுமையுடம் காத்திருந்த முல்லா,
" அரசே ! ...ரொட்டி என்பது என்ன? என்ற எனது சாதாரன கேள்விக்கு,
இவர்கள் அனைவரும் பலவிதமான பதில்களைக் கொடுத்துள்ளார்கள்.
யாருடைய பதிலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகவில்லை பார்த்தீர்களா?
இதனால்தான் நம் நாட்டில் உள்ள அறிஞர்கள் குழப்பவாதிகள் என்றேன்" என்றார்.

அரசர் முல்லாவில் அறிவாற்றலை வியந்து அவர்மீது இருந்த குற்றச் சாட்டினைத் தள்ளுபடி செய்தார்.
அரசவையில் கூடியிருந்த அனைவரும் முல்லாவின் திறமையை பாராட்டினார்கள்.

சட்டி போட்ட குட்டி (mullah stories)


ஒரு நாள் பக்கத்துக் வீட்டுக்காரரிடம் உள்ள பெரிய பானையை
கடனாகக் கேட்டார் முல்லா.

பக்கத்துக் வீட்டுக்காரர் அவநம்பிக்கையுடன் கொடுக்க
மனமில்லாமல் பானையை முல்லாவிடம் கொடுத்தார்.

அடுத்த நாள் காலையில், ‘உங்கள் பானை கர்ப்பமாக இருந்தது.
நேற்று பிரசவ வேதனை கண்டு இதை ஈன்றெடுத்தது’ எனச்
சொல்லி பெரிய பானையுடன் சேர்த்து ஒரு குட்டிப் பானையை
பக்கத்து வீட்டுக்காரரிடம் கெடுத்தார் முல்லா.

பக்கத்து வீட்டுக்காரருக்கு முல்லாவின் செய்கை விநோதமாக
பட்டாலும் வரவை விட வேண்டாமென்று சும்மா இருந்து விட்டார்.

அடுத்த வாரமும் அதே போல் பெரிய பானையை கடன் வாங்கி
மறுநாள் காலை பெரிய பானையுடன் சேர்த்து, குட்டிப் பானையை
புதிய குழந்தை பிறந்திருக்கிறது என பக்கத்து வீட்டுக்காரரிடம்
கொடுத்தார் முல்லா. அதற்கடுத்த வாரம் முல்லா பானையை
கடனாகக் கேட்டவுடனேயே மனமுவந்து பானையை
கொடுத்தார் பக்கத்து வீட்டுக்காரர்.

அடுத்த நாள் வந்தது. முல்லா பானையைத் திருப்பி கொடுக்கவில்லை.
பக்கத்து வீட்டுக்காரர் கவலையடைந்தார்.

இரண்டு நாட்கள் கழித்து முல்லாவிடம் போய் பானையை
திருப்பிக் கேட்டார் அவர்.

“நண்பரே! அது நடக்காது ஏனென்றால் உங்கள் பானை
பிரசவத்தின்போது இறந்துவிட்டது” என்றார் முல்லா.

பக்கத்து வீட்டுக்காரருக்கு கடுங்கோபம் வந்து விட்டது.

‘முட்டாளே! யாரை முட்டாளென்று நீ நினைக்கிறாய்.
பானை பிரசவத்தில் இறக்காது என்று நம் எல்லாருக்கும்
தெரிந்த விஷயம்’ என்று கத்தினார்.

‘நண்பரே! பானை கர்ப்பமாகி குட்டி போடும்போது மட்டும் ஆமாம் என்றீர். உங்களிடம் அதன் இரண்டு குட்டிகள் கூட இருக்கிறதே குறுகிய காலத்தில் மூன்று பிரசவத்திற்குப் பின் உங்கள் பானை உயிரோடில்லாமல் போனது உங்கள் துரதிர்ஷ்டம். அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் அதை நன்கு வளர்த்திருக்கவேண்டும் ’ என்று அமைதியாகச் சொன்னார் முல்லா.

முல்லா ஏன் அழுதார்? (mullah stories)


முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார்.

அவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை
எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: ” பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய்
சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு
எனது அத்தை இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன்
50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துபோறதுக்கு
எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்”

கேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.