05 டிசம்பர், 2011

மன அழுத்தம் வேண்டாம்


வெள்ளம் வரும் முன் அணை போட்டு தடுக்க வேண்டும். 
நோய் வரும் முன் காக்க வேண்டும்” என்பது முன்னோர்கள் கருத்து.
 இது மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் பொருந்தும். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மனஅழுத்தம்.
                                                                                                          மன அழுத்தத்தின் (Mental Stress) பாதிப்புகள்


மன அழுத்தத்தினால் உடல்நலமானது அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதயநோய்கள், ஹைபர்டென்சன், கண்நோய்கள் போன்ற மிகப்பெரிய நோய்களும் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன.
கண்ணுக்குத் தெரியாமல் தொடங்கும் இந்த மன அழுத்தத்தினால் ஒற்றைத்தலைவலி முதல் மாரடைப்பு வரையிலான நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன. மன அழுத்தத்தை போக்கி கட்டுப்படுத்தவே பல்வேறு நிறுவனங்கள் உளவியல் வல்லுநர்களின் உதவியோடு மன அழுத்த மேலாண்மையை உருவாக்கியுள்ளனர்.

இன்றைய சூழலில் அனைத்துத் துறைகளிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. அனைவரையும் பாதிக்கும் மன அழுத்தத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும். அதற்கான தீர்வு நம்மிடம்தான் இருக்கிறது.

''மன அழுத்தமானது உடலையும், உள்ளத்தையும் பாதிக்கின்றது. மனிதனுக்கு வரும் நோய்களில் 75 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே''

என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது.

 மன அழுத்தத்தை கட்டுப்படுத்தினால் நோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மனஅழுத்தத்தின் காரணங்களையும் அதை தவிர்க்க சில ஆலோசனைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்.
                              காரணங்கள்
  • எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

எதிர்பார்ப்புகள் அதிகமாகி அவை நிறைவேறாத போதும், எதிர்பாராத சூழலுக்கு தள்ளப்படும் போதும் மனிதர்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.

  • பண அழுத்தம்

பணமானது மன அழுத்தத்தை உருவாக்கும் முழு முதற் காரணியாக உள்ளது. அனைத்து சூழ்நிலைகளிலும் பணமானது முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான நேரத்தில் தேவையான அளவு பணம் கிடைக்காத பொழுது ஒருவித அழுத்தம் ஏற்படுகிறது. எனவே பண அழுத்தமானது மன அழுத்தத்தை உருவாக்கும் காரணிகளில் முதன்மையிடத்தை வகிக்கிறது.
  • பணிச்சூழல்
பணிச்சூழல் மன அழுத்தத்திற்கு மற்றொரு முக்கிய காரணியாக உள்ளது. சில நேரங்களில் உறவுகளும், வாழ்க்கைத்துணையும், குழந்தைகளுமே மன அழுத்தத்தை தோற்றுவிப்பவர்களாக உள்ளனர்.


  • புகை மற்றும் போதை பழக்கம்

புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதை மருத்து பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை 
பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.

  • முதுமை நிலையை அடைபவர்களிடமும், 
  • மாதவிடாய் காலத்தில்பெண்களிடமும் இந்தமனஅழுத்தம் அதிகமாய்இருக்கும் என்றும் அத்தகையவர்களிடம்அன்புடன் உரையாடி மனஇறுக்கத்தைத் தணிக்கவேண்டும் என்றும்மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

  • சுகமான சுமைகள்

மன அழுத்தம் நல்ல செயல்களில் கூட வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம் போன்ற நிகழ்வுகள், பதவி உயர்வு, இவையெல்லாம் ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம்முடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்கிறது அதே ஆய்வறிக்கை.

தீர்வு என்ன ?

  • உடற்பயிற்சி
உடற்பயிற்சி என்பது மன அழுத்தத்தை போக்கும் மிக முக்கிய வழிமுறையாகும். தினசரி அரைமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியடைகிறது.

எண்டோர்பின்ஸ் உள்ளிட்ட நல்ல ரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன. பாக்ஸிங் எனப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது குறைவு என்கின்றனர் மருத்துவர்கள்.

  •  ரிலாக்ஸ்

தினமும் ரிலாக்ஸ் செய்ய சில மணிநேரம் ஒதுக்கவேண்டும். ஏனெனில் அரக்க பரக்க அலுவலகம் சென்று பணிச்சூழலில் உழன்று திரியும் உள்ளம் அமைதியை எதிர்பார்ப்பது இயற்கை. ஆவேசம், கோபம் இவை மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும்.

தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப் படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன.

  • கட்டுப்பாடான உணவுப்பழக்கம்
கட்டுப்பாடான உணவுப்பழக்கம் மன அழுத்தத்தை மாற்றும்
என்கின்றனர் மருத்துவர்கள். பழங்கள், காய்கறிகள்,
அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம்
மன அழுத்தத்திற்கு எதிரான சூழலை மாற்றி ஆரோக்கிய
வாழ்க்கைக்கு அடிகோலுகிறது.
  • போதுமான உறக்கம்
தினமும் 6 முதல் 7 மணி நேரம் நன்றாக உறங்கவேண்டும். எந்த வித இடைஞ்சலும் ஏற்படாத வகையில் தூங்குவதன் மூலம் மூளை அமைதியடையும் என்கின்றனர் மருத்துவர்கள். உறங்குவதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் நல்ல புத்தகங்களை படித்து ரிலாக்ஸ் செய்துகொள்ளவேண்டும். இனிய இசையை கேட்கலாம்.(முஸ்லிம்கள் இனிமையான கிராஅத் கேட்கலாம்) என்றும் மருத்துவர்கள் ஆலேசனையில் தங்கள் கூறியுள்ளனர்.

இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. மருத்துவர்கள் மற்றும் உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி மன அழுத்தத்தை களைய வேண்டும்.

04 டிசம்பர், 2011

தமிழகத்தின் முதல் முஸ்லிம் மன்னர்



சய்யிது இப்றாகீம் 

(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் நான் தொகுத்த கட்டுரை)
சய்யிது இப்றாகீம் தமிழகத்தின் முதல் முசுலிம் மன்னர் என்று கருதப்படுகிறார்.[1] இவர்
 ஹிஜ்ரி 530 ரமலான் பிறை 3ல் மொரோக்கோவின் ஆளுநரான சய்யிது அகமது- ஃபாத்திமா
 தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.[2]

இளமை

இளமையில் மதீனாவில் கல்வி பயின்ற இவர் இளமையிலேயே எகிப்து லிபியா அல்ஜீரியா
 போன்ற பல நாடுகளுக்கும் சென்று சமயப் பிரச்சாரம் செய்தார். பின்னர் மூவாயிரம்
 பேர்களுடன் சென்று சிலுவைப் போரில் போர் புரிந்தார். போர் முடிவில் பாலஸ்தீனின்
 ஆளுநராக நியமிக்கப்பட்டார். 24 வது வயதில் சய்யிதா அலீ ஃபாத்திமா என்ற பெண்ணை
 மணம் புரிந்தார்.

[தொகு]சேவை

மதீனாவில் இவர் ஒருநாள் படுத்துறங்கும்போது முகம்மது நபி இவரது கனவில் தோன்றி
 இந்தியாவுக்குச் சென்று இசுலாமை பிரச்சாரம் செய்யுமாறு ஏவியதாகவும் அதன்படியே
 அவர் இந்தியாவிற்கு வருகை புரிந்ததாகவும் இசுலாமியர் நம்புகின்றனர். முதலில் ஆயிரம்
 வீரர்களுடன் சிந்து வந்தார். அங்கு ஆண்டுவந்த அரசர்களுக்கு இசுலாத்தில் இணையுமாறு
 அழைப்புக் விடுக்க அதை ஏற்றனர் சிலர்; எதிர்த்தனர் சிலர். எதிர்த்தவர்களுடன் போர் செய்து
 வென்றார். பின்னர் மதீனா திரும்பினார்.

[தொகு]தென்னிந்திய வருகை

சில ஆண்டுகளுக்குப் பின் தம் குடும்பத்தினர் 121 பேர் உட்பட 9000 வீரர்களுடன் மக்கா வந்து
 உம்ரா செய்துவிட்டு பின்னர் ஜித்தா துறைமுகம் வந்து ஹிஜ்ரி 571 ரபீவுல் ஆகிர் மாதம்
 இந்தியாவுக்கு கப்பல் ஏறினார்.இதற்கிடையே அருகிலுள்ள நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில்
 முசுலிம் போர் வீரர்கள் வந்து இவரது அணியில் சேர்ந்துகொண்டனர்.மொத்தம் 23000
 பேர்களுடன் நாற்பது நாட்கள் கடல் பயணம் செய்து கண்ணனூர் வந்து சேர்ந்தார்.
இவரின் வரவை அறிந்த கண்ணனூர் அரசர் மிகுந்த வரவேற்பு அளித்தார்.அவரது ஒத்தாசையால்
 அப்பகுதியில் சமயப் பிரச்சாரத்தை நிறைவாக செய்ய இயன்றது. அதன் பிறகு
 அங்கிருந்து கிளம்பி கொச்சி கொல்லம் வழியாக சேரநாட்டைக் கடந்து பாண்டிய நாட்டுத்
 துறைமுகப் பட்டிணமான காயல்பட்டினம் வந்து சமயப் பிரச்சாரம் செய்தார்.[3]

[தொகு]யுத்தம்

இந்நிலையில் பாண்டிய நாட்டை மூன்று சகோதரர்கள் பங்குவைத்து ஆண்டு வந்தார்கள்.
மதுரையை மூத்தவன் சடையவர்மன் வீரபாண்டியனும் (1175-1180) 
சேது நாட்டை பவித்திர மாணிக்கப் பட்டிணத்தை தலைநகராகக் கொண்டு
 விக்கிர பாண்டியனும்(1180-1190)திருநெல்வேலி மாவட்டத்தை
 குலசேகரப் பாண்டியனும்(1162-1175)ஆண்டு வந்தனர். [4] அவர்களிடையே ஒற்றுமையில்லை.
 சடையவர்மன் குலசேகர பாண்டியன் சய்யிது இப்றாகீம் அவர்களின் உதவியை நாடினார்.
அவர் முதலில் தன் தளபதிகளை வீரபாண்டியனிடம்அனுப்பி சமாதானம் செய்துவைக்க
 முனைந்தார்.பலனில்லாமல் போகவே மதுரை மண்ணிலே இவருக்கும் வீரபாண்டியனுக்கும்
 போர் நடந்தது.முடிவில் இவர் வெற்றி பெற்றார். மற்றுமொரு
 பாண்டிய மன்னர் விக்கிரமனும்
 இவரது சமயப் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போருக்கு
 வரவே இப்போரின் விளைவாக
 சேது நாட்டின் அரசாட்சியும் சய்யிது இப்ராகீம்
 அவர்கள் கையில் வந்தது. தமிழ் நாட்டின்
 ஒரு பகுதியை அரசாண்ட முதல் முஸ்லிம் மன்னர் (கி.பி. 1195-1207) இவர்களே.
வீர மரணம்
 கி.பி. 1207-ல் வீரபாண்டியனுடன் நடந்த மற்றுமொரு போரில்
 காலமானார் இராமனாதபுரம் ஏர்வாடியில் நல்லடக்கம்
 செய்யப்பட்டார்கள். மதினா நகரின் ஒரு பகுதியான யர்புத் என்ற
 இடத்திலிருந்து அவர்கள் புறப்பட்டு வந்ததால் அவர்கள்
 அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கும் யர்புத் என்றே பெயர்
 சூட்டப்பட்டது. இச்சொல்
 நாளடைவில் ஏர்வாடி என்று மருவி விட்டது.[5]