📝 ஷைக் முஹம்மது ஹஸ்ஸான் அவர்கள் விவரித்த ஒரு வியப்பான நிகழ்வு. அவர் கூறுகிறார்:
நான் அவரிடம், "உள்ளே வாருங்கள் வாருங்கள் தந்தையே! அமருங்கள். உங்கள் நிகழ்வு என்ன கூறுங்கள்" என்றேன். அவர் என் அருகில் அமர்ந்தார்.
அவர் ஒரு செல்வந்தர். நிறைய செழிப்பும் செல்வாக்கும் நிறைந்த வணிகர், ஆனால் அவர் வாதத்தால் முற்றிலும் முடங்கிப்போயிருந்தார். அவர் கூறுகிறார், "நான் லண்டனுக்குச் சென்றேன், உயர்ந்த சிகிச்சை செய்தேன். பலனில்லை. நான் பிரான்சுக்குச் சென்றேன், ஆனால் இறைவன் எனக்கு ஒரு சிகிச்சையைத் தரவில்லை. நான் அமெரிக்காவுக்குச் சென்றேன், அங்கும் பெரிய அளவில் செலவு செய்தும் சிகிச்சை பலன் தரவில்லை.."
"ஒரு நாள், நான் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தபோது, மக்காவின் புனித இறையில்லத்திலிருந்து தொழுகையும் பிரார்த்தனையும் ஒளிபரப்புவதைக்
கண்டேன். நான் அதைக் கவனித்துக் கொண்டிருந்தபோது என்னையும் அறியாமல் உணர்ச்சிகள் பொங்கி அழுதேன், பின்னர் என் பிள்ளைகளிடம்
, "மக்களே! நான் ராஜாவின் வீட்டிற்குச்
செல்ல விரும்புகிறேன்" என்று சொன்னேன். அவர்கள், "ராஜா யார், தந்தையே?"
என்றனர்.
"நான் ராஜாக்களின் ராஜாவிடம் செல்ல விரும்புகிறேன். நான் உம்ராவுக்குச்
செல்ல விரும்புகிறேன்" என்றேன்.
"என்ன உம்ராவா? முற்றிலும் முடங்கிப் போயிருக்கிற உங்களால் நடக்க இயலுமா ?"
நான், "என் பணத்தில் எனக்காக ஒரு தனி விமானத்தை வாடகைக்கு எடுததாவது
உம்ராவிற்கு செல்வேன்..." என்றேன்.
பிள்ளைகள் தனி விமானம்
ஏற்பாடு செய்து அழைத்து சென்றனர்.
அங்கிருந்து காரிலும்
பின்னர் சக்கர நாற்காலியிலும் தூக்கி தூக்கி வைத்து காபாவின் அருகே கொண்டு
சென்றனர்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக, என் மகனே, நான் இந்த வார்த்தைகளால்
மட்டுமே பிரார்த்தனை செய்தேன்
والله ما انا طالع من بيتك إلا على رجليه أو
على المقابر"
"இறைவன் மீது ஆணையாக,
நான் இந்த இல்லத்திலிருந்து ஒன்று என்
கால்களால் நடந்து செல்ல வேண்டும் இல்லையெனில் கப்ருக்கு செல்லவேண்டும்” என்று திரும்ப
திரும்ப ஒருமணி நேரம் சொல்லிக் கொண்டு இருந்திருப்பேன் . அப்படியே என்னையும் அறியாமல் நாற்காலியிலேயே அயர்ந்து தூங்கிவிட்டேன்திடீரென ஒரு அசரீரி போல
எனக்கு கேட்டது
قم إمش .. قم إمش .. قم إمش...
'எழுந்திரு, நட... எழுந்திரு,
நட' என்று சொல்வதைக் கண்டேன்." அது மூன்றாவது முறையாக, "எழுந்திரு, நட..." என்று
கூறியது. அதனால் நான் விழித்தேன்... எழுந்திரு... நான் எழுந்தேன், நட... நடந்தேன்.
சில அடிகளுக்குப் பிறகு,
நான் உணர்ந்தேன். நாம் முடங்கிப் போயல்லவா
இருந்தோம். இப்போது எப்படி? ! அதனால் நான் கத்தினேன், இறைவா நீ என்னைக்
கைவிடவில்லை. والله ما خيبت من لجأ إليك ... உன்னிடம் அடைக்கலம் தேடுபவரை நீ கைவிட மாட்டாய்!
ادعوني استجب لكم " مجيب لكل عباد.
ولم يشترط ان تكون طائع او عاصي
استجاب لابليس عندما دعا قال " ربي
فانظرني"
قال" انك من المنظرين" افلا يستجيب
لك انت؟!
ஆம்!! "என்னை அழையுங்கள்
, நான் உங்களுக்குப் பதிலளிப்பேன்" என்று
உன் திருமறையில் நீ கூறுகிறாய்.
"என் இறைவனே, எனக்கு அவகாசம் வழங்கு" என்று ஷைத்தான் அழைத்தபோது கூட
அவனுக்கும் செவிசாய்த்து
"நீ அவகாசம் வழங்கப்படுபவர்களில்
ஒருவன்" என்று அவர் கூறினாய்.
சபிக்கப்பட்ட அவனுக்கே நீ
செவிசாய்த்தாயே.. எங்களுக்கும் பதிலளிக்க மாட்டாயா? நிச்சயம் எங்கள் வேண்டுகோளை
நிறைவேற்றுவாய்.
قال صل الله عليه وسلم
" ان الله حيي كريم
يستحي ان يرفع العبد اليه يديه فيردهما صفرا خائبتين "
நபி (ஸல்) அவர்கள்,
"நிச்சயமாக, அல்லாஹ் தாராள மனப்பான்மை கொண்டவன். ஒரு அடியான் தன் கைகளை தன்னிடம்
உயர்த்தினால், அவற்றை வெறுமையாகவும் ஏமாற்றமாகவும்
திருப்பி அனுப்ப அவன் மிகவும் வெட்கப்படுகிறான்" என்று கூறினார்கள்.
குர்ஆன் வசனம் ஒன்று :
"أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ"
"அல்லது துன்பப்படுபவர் தன்னை
அழைக்கும்போது அவருக்கு பதிலளித்து தீமையை நீக்குபவர் யார்?"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்