இப்ராஹீம் அலை மற்றும் இஸ்மாயீல் அலை ஆகியோரின் அறிவுக் கூர்மை :
قَالَ ابْن عَبَّاس لما شب إِسْمَاعِيل تزوج امْرَأَة من جرهم فجَاء إِبْرَاهِيم فَلم يجد إِسْمَاعِيل فَسَأَلَ امْرَأَته فَقَالَت خرج يَبْتَغِي لنا ثمَّ سَأَلَهَا عَن عيشهم فَقَالَت نَحن بشر فِي ضيق وَشدَّة وَشَكتْ إِلَيْهِ فَقَالَ فَإِذا جَاءَ زَوجك فاقرئي عليه السلام وَقَوْلِي لَهُ يُغير عتبَة بَابه فَلَمَّا جَاءَ فَأَخْبَرته قَالَ ذَاك أبي وَقد أَمرنِي أَن أُفَارِقك الْحق بأهلك
இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் பருவ வயதை அடைந்த
பொழுது ஜூர்ஹும் குலத்திலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்தார்கள் சில
நாட்களுக்குப் பிறகு மகனையும் மருமகளையும் பார்ப்பதற்காக இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்
அங்கு வந்தார்கள் அப்பொழுது இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் வீட்டில் இருக்கவில்லை
வெளியிலே வேலைக்கு போயிருந்தார்கள்
உன் கணவர் எங்கே என்று கேட்டார்கள் அவர் வெளியே
சென்றிருக்கிறார் என்று சொன்னார் அந்த பெண்மணி. உங்கள் வாழ்க்கை எப்படி போகிறது
என்று வினவிய பொழுது “அதை ஏன் கேட்கிறீர்கள் நாங்கள் கடும் நெருக்கடியிலும்
கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று புலம்பி தீர்த்தார். அந்த பெண் எத்தகைய
குணநலமுடையவர் என்பதை புரிந்து கொண்ட இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் உன் கணவன் வந்தால்
அவருக்கு என் சலாமை எத்தி வைத்துவிட்டு வீட்டு வாசற்படி சரியில்லையாம் அதை மாற்ற
வேண்டுமாம் என்று நான் சொன்னதாக கூறு என்று சொல்லிவிட்டு போய்விட்டார்கள். இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் வேலை முடித்து
வீட்டுக்கு திரும்பிய பொழுது யாரோ வந்திருப்பதை உணர்ந்து கொண்டார்கள் “என்ன
நடந்தது என்று கேட்டார்கள் அப்பெண் நடந்த விஷயத்தை சொன்னார் வந்தது யார் என்பதை
புரிந்து கொண்ட இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அது எனது தந்தை தான் வாசற்படி என்று
சொன்னது உன்னைத்தான் நீ இந்த உயர்ந்த குடும்பத்திற்கு வாழத் தகுதி இல்லை எனவே
உன்னை பிரிந்து விடும்படி அவர் எனக்கு உத்தரவிட்டு சென்றிருக்கிறார் என்று
சொன்னார்.
மருமகளின் பேச்சை வைத்தே அவள் எத்தகைய குணம்
உடையவள் என்பதை புரிந்து கொண்ட புத்திசாலித்தனம் வாசற்படி என்று இல்லத்தரசியை
குறிப்பிட்டு சொன்ன புத்திசாலித்தனம். அதை மகன் இஸ்மாயில் (அலை) மிகத்
தெளிவாகவே புரிந்து கொண்டு கெட்ட குணமுடைய மனைவியை பிரிந்து அதன் பின்னால் நல்ல
குடும்பத்தில் நல்ல ஒரு பெண்ணை திருமணம் செய்து இல்லறம் நடத்தினார்கள்
என்பது வரலாறு.