20 அக்டோபர், 2012

எல்லா நோய்களும் நீங்கிட மழைநீர் மருத்துவம்


روى السّيد الجليل عليّ ابن طاوس (رحمه الله) انّ قوماً من الاصحاب كانوا جلوساً اذ دخل عليهم رسول الله (صلى الله عليه وآله وسلم) فسلّم عليهم فردّوا عليه السّلام فقال: ألا أعلّمكم دواءاً علّمني جبرئيل (عليه السلام) حيث لا أحتاج الى دواء الاطبّاء وقال علي  وسلمان وغيرهم: وما ذاك الدّواء؟ فقال النّبي (صلى الله عليه وآله وسلم) لعليّ : تأخذ من ماء المطر بنيسان وتقرأ عليه كلاًّ من فاتحة الكتاب وآية الكرسي و ﴿قُلْ هُوَ اللهُ اَحَدٌ﴾ و ﴿قُلْ اَعُوذُ بِرَبِّ الْفَلَقِ﴾ وَ ﴿قُلْ اَعُوذُ بِرَبِّ النّاسِ﴾ و ﴿قُلْ يا اَيُّها الْكافِرُونَ﴾ سَبعين مرّة وزادت رواية أخرى سورة ﴿اِنّا أنزَلْناهُ﴾ ايضاً سبعين مرّة وتشرب من ذلك الماء غدوة وعشيّة سبعة أيّام متواليات والّذي بعثني بالحقّ نبيّاً انّ جبرئيل (عليه السلام) قال: انّ الله يرفع عن الّذي يشرب هذا المآء كلّ دآء في جسده وبعافية ويخرج من جسده وعظمه وجميع أعضائه ويمحو ذلك من اللّوح المحفوظ والذي بعثني بالحقّ نبيّاً إن لم يكن له ولد بعد فشرب من ذلك الماء كان له ولد وإن كانت المرأة عقيماً وشربت من ذلك الماء رزقها الله ولداً
“எனக்கு ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஒரு மருந்தை கற்றுத்தந்தார்கள். அம்மருந்து ஒன்றே போதும். வேறு எந்த மருந்தும் தேவை இல்லை. எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா நோய்களையும் இந்த ஒரு மருந்தின் மூலமே குணப்படுத்தி விடுவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஒரு சமயம் ஸஹாபாப் பெருமக்களிடம் கூறியபோது, அலீ போன்ற தோழர்கள் (ரலியல்லாஹு அன்ஹும்)  அதை தத்தமக்குக் கற்றுத்தருமாறு வேண்டினார்கள்.
அப்போது “(முகட்டிலோ மரத்திலோ )வேறு எதிலும் படாத சுத்தமான மழைத் தண்ணீரில் ஃபாத்திஹா, ஆயத்துல் குர்ஸீ, காஃபிரூன், இக்லாஸ், ஃபலக், நாஸ் ஆகிய சூராக்களை எழுபது எழுபது தடவை ஓதி அதில் ஊதி வைத்துக் கொண்டு, எப்படிப்பட்ட நோயால், செய்வினை மற்றும் கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களும் காலையும், மாலையும் தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் என்னை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக் நிச்சயம் அந்த நோய் நீங்கிவிடும். மலட்டுத்தன்மை உடையவர் இவ்வாறு இதைக் குடித்து வந்தால் நிச்சயம் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பெறுவார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளினார்கள்.

4 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய யூசுஃப் மவ்லானா..
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      எந்த ஒரு கருத்தையும் காய்தல் உவத்தலின்றி
      கவனிப்பவன் நான்.
      ஆகவே தங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன்
      ஆனாலும்..
      விரிவான தகவல்கள் இல்லை என்று எழுதியுள்ளீர்கள்.
      என் வலைப் பதிவில் ஜும்ஆ உரைகள் மட்டுமல்ல..
      சிறு குறிப்புகளும் அவ்வப்போது இடம்பெறும்.
      அதில் ஒரு குறிப்பைத்தான் இங்கு தந்துள்ளேன்
      நீங்கள் ஜும்ஆ உரையை எதிர்பார்த்து இந்த கருத்தைக் கூறியிருந்தால்
      அதை மேலே ஜும்ஆ பயான் என்று ஒரு தலைப்பு இருக்கும் அதில் க்ளிக் செய்து ஏராளமான உரைகளைப் பார்வையிடலாம் நன்றி.

      நீக்கு
  2. தாங்கள் கூறிய ஹதீஸின் மூலநூலை குறிப்பிட்டால் பொறுத்தமாக இருக்கும்,மேலும் மேல் ஹதீஸின் பொருளில் ஆயத்துல் குர்ஸியும்,சூரா காபிரூனும் விடுபட்டுள்ளது.மற்றபடி தங்களின் மற்ற ஆக்கங்கள் பயனுள்ளவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மவ்லானா..
      உங்கள் சுட்டிக் காட்டலுக்கு
      நன்றி.
      இதோ இப்பொழுது சரியா?

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...