08 அக்டோபர், 2012

வரதட்சணைக்கு பெரிதும் காரணம் பெண்களே-3


திருமணச் சடங்கு
நடுவர் அவர்களே! 
ஒரு பெண்ணைக் கட்டிக் கொடுத்தால் அவளுக்கு புகுந்த வீட்டில் ஏற்படும் கொடுமைகளில் ஒன்று நாத்தனார் கொடுமை. இந்த நாசம் பிடித்த நாத்தனார்கள் சுனாமிகளைப் போல் குடும்பத்தை நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

  •  இந்த மாமியார் நாத்தனார் என்ற பெண்களின் கோரப்பிடியில் சிக்கி சீரழியும் பெண்கள் எத்தனை? 
  • இவர்களால் ஸ்டவ்கள் வெடித்து பரிதாபமாய் பலியான பெண்கள் எத்தனை? 
  • தீக்குளித்த பெண்கள் எத்தனை? 
  • விஷம் குடித்த பெண்கள் எத்தனை? 
  • தற்கொலை செய்துகொண்ட பெண்கள் எத்தனை? 
இப்படி ஏராளமான மாபாதகங்களை செய்துகொண்டிருப்பவர்கள் இந்த பெண்கள்தான்.

ஒரு வாலிபன் வரதட்சணை வேண்டாம் என்று மறுத்தாலும் அவனைப் பெற்ற தாயும் சகோதரியும் சும்மா விடுவதில்லை. 
இதுல இரட்டை சீர்வரிசைன்னு ஒன்னு இருக்குங்க.. இதை எவதான் கண்டுபிடிச்சாளோ தெரியல.. இரட்டை சீர்வரிசைன்னா என்ன தெரியுமா? 
  • அண்டாவானா ரெண்டு; குண்டாவானா ரெண்டு.
  • சட்டியானா ரெண்டு பெட்டியானா ரெண்டு. 
இப்படி அண்டா குண்டா எல்லாமே ரெண்டு கொடுத்தா மட்டும் போதாது.அதுக்குள்ள 101 லட்டு வக்காட்டி குத்தம்; குழல் பணியாரம் வக்காட்டி குத்தம்; தேங்காயில ஒன்னு குறைஞ்சால குத்தம். இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் குத்தம் கண்டுபிடிச்சு மார்க்கத்திலில்லாத மடமைகளை கடமைகளாக்கி வைத்திருப்பவர்கள் இந்த பெண்கள்தான். 

ஆகவே வரதட்சணை வாங்குவது பெண்களின் மடமை!
அதை வாங்காமலிருப்பது ஆண்களின் கடமை!!
எனவே வாட்டி வதைக்கும் வரதட்சணைக் கொடுமைக்கு பெரிதும் காரணம் பெண்களே! பெண்களே!! என்று உறுதிபடக் கூறி அமர்கிறேன்.

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இந்த கேள்வியை இதுவரை நிறைய பேர் கேட்டாச்சு..
      இன்ஷா அல்லாஹ் மிகவிரைவில் வெளியாகும்
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...