05 அக்டோபர், 2012

வரதட்சணைக்கு பெரிதும் காரணம் ஆண்களே-3


எனக்கு முன்னால் பேசிய .............................. அண்டப் புழுகு; ஆகாசப் புழுகு ; உலக மகாப் புழுகு.
வரதட்சணைக்கு யார் காரணம்னு பேசச் சொன்னா தேவையில்லாம எங்களைத் திட்டிட்டுப் போயிருக்கிறார். 
அருமையும் பெருமையும் நிறைந்த பெண்ணினத்தை தங்கத்திற்கு நிகரான தாய்க்குலத்தை தரைக்குறைவாய் பேசிவிட்டுப் போயிருக்கிறார்.

நடுவர் அவர்களே!
நாங்களெல்லாம் அக்கிரமச் செயல்களை செய்வதாக கதை கட்டிட்டுப் போயிருக்கிறார். ஆண்களின் அக்கிரம செயல்களை பட்டியலிட்டுக் காட்டட்டுமா? 
  • நாட்டிலே நடக்கும் கொலை கொள்ளை மோசடி திருட்டு போன்ற எல்லா நாசகார செயல்களை அதிகமாக செய்பவர்கள் ஆண்களில்லையா?
  • குடித்துக் குடித்துக் கும்மாளமடித்து குடும்பத்தைக் கெடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஆண்களில்லையா? 
  • போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி அவமானச் சின்னங்களாக வலம் வருபவர்கள் ஆண்களில்லையா? 
உத்தமத் திருநபி ஸல் அவர்கள் கூறினார்கள்:
خيركم خيركم لاهله 
உங்களில் சிறந்தவர் யாரென்றால் உங்கள் மனைவியிடம் சிறந்தவரே! ஆனால் இன்றைக்கு மணப் பெண்ணிடம் வரதட்சணை வாங்கிய ஆண்கள்கள்தான் அதிகம். இவர்களால் இதை மறுத்துப் பேச முடியுமா?
இங்கு அமர்ந்திருக்கும் திருமண ஆண்களைப் பார்த்து கேட்கிறேன்: உங்களில் எத்தனை பேர் வரதட்சணை வாங்காமல் திருமணம் முடித்திருக்கிறீர்கள் இன்றைக்கு ஒரு சில இளைஞர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் முடிப்போம் என்று புறப்பட்டிருக்கிறார்களாம் ஆனால் அவர்கள்கூட புடிச்சாலும் கூட பெரிய புளியங்கொப்பாய்ப் பார்த்துத்தான் புடிக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன்: நீங்கள் வரதட்சணை வாங்காமல் முடிக்கிறீர்கள் சரி..
ஆனால் குடிசையில் வாழும் குமர்களை ஏன் முடிப்பதில்லை? ஏழை வீட்டு ரோஜாக்களை ஏன் மணம் புரிவதில்லை? வசதி இல்லாத குடும்பத்தில் ஏன் பெண் எடுப்பதில்லை? இதையெல்லாம் விட்டுவிட்டு வசதியான குடும்பத்தில் போய் வரதட்சணை வேண்டாம் என்று திருமணம் முடிப்பதுதான் நியாயமா? இதுதான் சீர்திருத்தமா? 

நடுவர் அவர்களே!
ஒரு கவிஞன் இப்படி சொன்னான்:
கைக்கூலி கொடுமையினால்
கரை சேர முடியாமல்
ஏழைவீட்டு ரோஜாக்கள் வாடுது
ஒரு பெண்ணுக்கு மணம் முடிக்க
பையனுக்கு பை நிறைய தரும் கொடுமை
தலைவிரித்தாடுது!

இது எவ்வளவு பெரிய உண்மை?
ஆண்களின் அக்கிரமத்திற்கு ஒரு உண்மை சம்பவம் சொல்லட்டுமா?

தமிழ் நாட்டிலே ஒரு ஊரில் இரண்டு பெண்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் மூத்த பெண்ணை திருமணம் முடித்துக் கொடுத்து விட்டார்கள். இரண்டாம் பெண்ணுக்கு வசதி இல்லாததால் என்ன செய்வது என வழி தெரியாமல் கை பிசைந்து நின்றார்கள். பெண்ணின் தந்தை தன் மனைவியிடம் சொன்னார்: நாம கவுரமான குடும்பம். நாம யாருட்டயும் போய் உதவி கேட்டு நிற்கக் கூடாது. நம்ம பொண்ணைக் கட்டிக் கொடுக்க 2 லட்சம் தேவைப்படுது. அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு. அதை நான் சொல்கிறேன் யாருட்டயும் சொல்லாதே! நான் காலையில் எழுந்ததும் சைக்கிளை எடுத்துக் கொண்டு மெயின் ரோட்டில் வரும் லாரியில் மோதி உயிரை விடுகிறேன். செய்தி கேள்விப்பட்டு இன்ஷுரன்ஸ் அதிகார்கள் வந்து என் பேரில் இருக்கும் பாலிசிக்கு 2 லட்சம் தருவார்கள். அதை வாங்கி நம்ம பொண்ணு கல்யாணத்தை ஜாம் ஜாம்முன்னு முடிச்சுடு.'' என்று சொல்லிவிட்டு இரவு படுத்தார். சொன்னது போலவே காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு  லாரியில் மோதி உயிரை விட்டார். செய்தி அறிந்து மனைவி ஓடி வந்து நெஞ்சிலும் முகத்திலும் அடித்துக் கதறி அழுதாள். ''லாரியில் விழப்போறேன் லாரியில் விழப்போறேன்னு சொன்னீங்களே.. சொன்னதுபோல செஞ்சிட்டீங்களே. என்று கதறி அழுதாள். 
இதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்ஷுரன்ஸ் அதிகாரிகள் இது விபத்தல்ல தற்கொலை என்று சொல்லி கொடுக்கவேண்டிய 2 லட்சத்தையும் கொடுக்காமல் போய்விட்டனர். 
ஒரு உயிரும் போயி குமரும் கரையேற வழியில்லாமல் போய்விட்டது. இந்த பரிதாபத்திற்கும் பரிதவிப்பிற்கும் எது காரணம்? நெஞ்சுல கைவச்சு சொல்லுங்க.. ஈவிரக்கமில்லாமல் ஆண்கள் கேட்கும் வரதட்சணைதானே! 

கண்ணியமிக்க இந்த சமுதாயத்தின் மானமரியாதையை குழிதோண்டிப் புதைக்கும் வண்ணம் ஒரு அநியாயம் நடக்குதுங்க.  எந்த இந்து சமுதாயத்தின் கோயிலிலும் நடக்காத செயல். எந்த கிறிஸ்தவ சர்ச்சுகளிலும் நடக்காத செயல். முஸ்லிம்களின் புனிதமிக்க பள்ளிவாசல்களில் நடக்குதுங்க. என்னன்னு கேட்குறீங்களா? பெண்ணை பெற்றெடுத்த பெற்றோர்கள் வரதட்சணை கொடுக்க வழியில்லாமல் பள்ளிகளிலே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 
ஏ மணம் முடிக்கும் மாப்பிள்ளைகளே! ஆண்மக்கள் எனப் பெருமை அடிக்கும் நீங்கள் யாரிடம் தெரியுமா பணம் கேட்கிறீர்கள்?
ஊண்மறந்து உறக்கம் மறந்து தன் இரத்தத்தைப் பாலாக்கி குழந்தைக்கு உணவாக்கி கொடுக்கிற தாய். அந்த குழந்தையை பெற்றெடுக்கும்போது அவள் படுகிற வேதனைக்கு நிகராக இந்த உலகத்தில் வேறு ஏதாவது உண்டா?
மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்புகிறாள். அப்பேற்பட்ட அந்த தியாகச் செம்மல்களிடமா கூலி கேட்கிறீர்கள்?



1 கருத்து:

  1. ஒரு விஷயத்தை ஆரம்பிச்சா பரிபூர்ணமாக முடிக்கணும் இல்லண்ணா ஆரம்பிக்க கூடாது

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...