07 அக்டோபர், 2012

வரதட்சணைக்கு பெரிதும் காரணம் பெண்களே-2


தனிக்காட்டு ராஜாவாக அமர்ந்திருக்கும் சிங்கமே!
மரியாதைக்குரிய நடுவர் அவர்களே!
வரதட்சணை வன் கொடுமைக்கு பெண்கள்தான் காரணம் என்று அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்து சொன்னதற்குப் பிறகும் இந்த வருங்காலக் கிழவிகளுக்கு இன்னுமா புரியவில்லை?
வரதட்சணைக்கு மாத்திரமல்ல.. நடுவர் அவர்களே! உலகில் நடக்கும் அத்தனை தீமைகளுக்கும் இந்த பெண்கள் தான் காரணம். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பார்கள் பெண்களால் ஆகின்றதோ இல்லையோ அழிவுதான் அதிகம் நடந்துகொண்டே இருக்கிறது.

ஆதிமனிதனாம் ஆதம் (அலை) அவர்களுக்கு பிறந்த காபீல் என்பவர் ஹாபீலைக் கொலை செய்தார். உலகில் நடந்த முதல் கொலை யாரால் நடந்தது தெரியுமா? இக்லிமா என்ற பெண்ணால்தான். அதுமட்டுமல்ல பெண்கள் சிறந்தவர்கள் பெண்கள் உயர்ந்தவர்கள் என்று பேசுகிறாங்க பெருசா..
அன்றைய பெண்களின் நிலை என்ன? இன்றைய பெண்களின் நிலை என்ன? அன்று தாய்மார்கள் குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டும்போது இஸ்லாமிய பாடல்களை பாடினார்கள்.
கண்ணுறங்கு கண்மணியே! கருவில் வந்த கற்கண்டே !!
ஆண்டவன் தந்த அற்புதமே !
அல்லாஹு அக்பர் என்று உறங்கு! 
நீ அண்ணல் நபி ஆசியோடு உறங்கு 

ஆனால் இன்னைக்குள்ள தாய்மாருக்கு தாலாட்டுப் பாடவே தெரியல.. அப்படியே பாடினாலும் என்ன தெரியுமா பாடுறாங்க..

''ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி ''
(இந்த இடத்தில் வேறு ஏதாவது பாடலை சேர்த்துக் கொண்டாலும் சரியே)

இந்தமாதிரி பாலாய்ப்போன சினிமாப் பாடலைப் பாடி பாடி குழந்தைகளைக் கெடுத்து சமுதாயத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த பெண்கள்.

நடுவர் அவர்களே! நோகாம நொங்கு திங்குறதுன்னா என்ன தெரியுமா? சொல்றேன் கேளுங்க.. தன் பையனுக்கு மாத்திரம் நகையும் நட்டும் காசு பணத்தையும் அதிகமாக வாங்கி மருமகள் கொண்டு வந்ததையெல்லாம் தன் மகளுக்கு போட்டு கல்யாணம் பண்ணி வைக்கிற லேட்டஸ்டு கலாச்சாரம்தான் நோகாம நொங்கு திங்குறது.

ஆதியிலே வந்தவன் வீதியிலே போனானாம்.. நேத்து வந்தவன் நெய்யூத்தி தின்னானாம். அந்த கதையாவுல இருக்கு?
ஒரு பொம்பள தன் மகனுக்கு பொண்ணு பார்க்க போயி 150 பவுன் நகை போடனும்னு கேட்டாளாம். ''அடி ஆத்தி.. அப்படியென்ன ஒம் மகன் லாடு வூட்டு லபக்கு தாஸா.. இல்ல லாடு வூட்டு கொலாப்புட்டா? என்ன உத்தியோகம் பார்க்கிறான் என்று கேட்டால், ''எம்புள்ள S.I யா இருக்கான் அப்படின்னாங்க '' ''அது என்ன S.I அப்படின்னு கேட்டால், ''சும்மா ருக்கிறதுதான்'' அப்படின்னு சொன்னாங்க.
''சரி 150 பவுன் போடுகிறோம்.. நீங்க என்ன போடுகிறீர்கள்.? என்று கேட்டால் ''நாங்க அதை வாங்கி எடை போடுவோம்; குறைஞ்சா கல்யாணத்துக்கு தடை போடுவோம்'' அப்படின்னாங்க.
இப்படிப்பட்ட பெண் மாமியாரின் அவலட்சணங்களால்தான் வரதட்சணைக் கொடுமை காட்டுத்தீயாய் சமூகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது.

அருமையானவர்களே!

  • ஏங்கித் தவிக்கும் ஏழைக் குமர்களின் ஏக்கப் பெருமூச்சுகளைத் துடைத்திட 
  • வாடி வதங்கும் வண்ண மலர்களின் வருத்தங்களைக் கலைந்திட
  • கண்ணீர்க் கடலில் தினம் தினம் கலங்கிக் கிடக்கும் கன்னியரின் கவலைப் போக்கிட 
  • வாழ வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் பெண் குமர்கள் கரை சேர்ந்திட
  • வேதனைத் தீயில் வெம்பித் துடிக்கும் பெண் இனத்தின் துயர் தீர்ந்திட
  • கல்யாணச் சந்தையில் விலைபோக முடியாமல் விரக்தியின் விளிம்பில் நடைப் பிணமாய் வாழும் எண்ணற்ற அன்பு மலர்களை, அழகுப் பதுமைகளை வாழவைத்திட 
ஆண்கள் மாத்திரமல்ல பெண்களும் திருந்தவேண்டும் குறிப்பாக மாமியார் என்ற அல்லி ராணிகள் கெட்ட கள்ளி ராணிகள் கொள்ளை ராணிகள் திருந்தினால் மட்டுமே வரதட்சணை சனியனை ஒழிக்க முடியும். ஆகவே வாட்டி வதைக்கும் வரதட்சணைக் கொடுமைக்கு பெரிதும் காரணம் பெண்களே பெண்களே என்று கூறி என்னுரையை நிறைவு செய்கிறேன்.


சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! 

3 கருத்துகள்:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...