இஸ்லாத்தின் கடமைகளில் சில உடல் சார்ந்த கடமைகள் உதாரணமாக தொழுகை நோன்பு ۔ உடல் ஆரோக்கியம் இருந்தால் மட்டும் போதும்۔
இன்னும் சில பொருள் சார்ந்த கடமைகள். உதாரண்மாக ஜகாத். இதற்கு பொருள் வேண்டும் உடல் ஆரோக்கியம் தேவையில்லை.
ஆனால் ஹஜ் மட்டும் உடல், பொருள் இரண்டும் சார்ந்தது. உடல் ஆரோக்கியமும் பொருள் வசதியும் இருந்தால் கடமை.
இந்தாண்டு நம் இந்தியத் திருநாட்டிலிருந்து 1.7 லட்சம் பேர் ஹஜ் புனித யாத்திரைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு சென்றுகொண்டிருக்கிறார்கள் தமிழகத்திலிருந்து 12,110 பேர் விண்ணப்பத்திருந்தனர். அதில் 2,683 பேருக்கு ஹஜ் யாத்திரை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
யாருக்கு அல்லாஹ் நாடுகிறானோ அவர்களுக்கு கிடைத்தே தீரும். அன்று கஃபாவை உயர்த்திக் கட்டிய பின் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் மக்களே ஹஜ்ஜுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தபொழுது அது யாருடைய செவிகளிலெல்லாம் சென்று சேர்ந்ததோ அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அழைத்துக் குரல் கொடுத்தபொழுது தந்தைமார்களின் முதுகந்தண்டிலிருந்தும் தாய்மார்களின் கருவறையிலிருந்தும் சந்ததிகள் அதை செவிமடுத்து பதிலளித்தார்கள். லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் என்று தல்பியா முழங்கினார்கள். ஒரு முறை முழங்கியவருக்கு ஒரு ஹஜ் கிடைக்கும் இரண்டு முறை முழங்கியவருக்கு இரண்டு ஹஜ், இப்படியாக....... யார் மூன்று முறை ஹஜ் செய்கிறாரோ அவருக்கு நரகம் தடை. (நூல்: அஷ்ஷிஃபா)
உண்மையில் அது பெரும்பாக்கியம்தான்.
ஏனெனில், அங்கு ஹாஜிகள் சந்திக்கப்போவது சாதாரண இடங்களல்ல; சரித்திரம் வாய்ந்த இடங்கள். கண்ணியமிக்க இறைத்தூதர்கள் பலரின் காலடி பட்ட களங்கள். அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்கள் அமைந்துள்ள அற்புத தளங்கள்.
வாருங்கள் நாமும் அவற்றை வலம் வருவோம் கண்ணியம் வாய்ந்த அந்த இடங்களைக் கண்டுகளிப்போம்
கஃபா:
கஃபாவிற்கு எண்ணற்ற சிறப்புகள் உண்டு. பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. அவற்றில் ஒரு சில..
• إنه أول بيت عام وضع للناس كافة في الأرض للعبادة وللاتجاه إليه قبلة ,
و أول بيت بنته الملائكة وآدم وإبراهيم عليهم السلام جميعا , وأول بيت طيف به في الأرض وبعد الطوفان .
• هو مثابة الناس ومرجعهم دائما , إليه يفدون وإليه يعودون ويكررون الزيارة , إما لحج أو عمرة , أو تكرار حج أو عمرة , أو كسب ثواب , أو ابتداء توبة أو استئنافها , أو تكرار لقاء , أو عكوف ومجاورة , أو تقويم وإصلاح للحال في أمر الدين والدنيا , أو يثوبون إليه شوقا وتعلقا أو كل ذلك مجتمعا . فهو المثابة والمرجع للناس جميعا دوما وأبدا .
• من فضله أن من قصده لا يعود إلا بأجر أو غنم أو ضمانة جنة , ومن قصده لا دافع له غير الصلاة فيه عاد كيوم ولدته أمه , ومن زاره مخلصا ومات في طريقه إليه دخل الجنة بدون حساب .
• هو مثابة الناس ومرجعهم دائما , إليه يفدون وإليه يعودون ويكررون الزيارة , إما لحج أو عمرة , أو تكرار حج أو عمرة , أو كسب ثواب , أو ابتداء توبة أو استئنافها , أو تكرار لقاء , أو عكوف ومجاورة , أو تقويم وإصلاح للحال في أمر الدين والدنيا , أو يثوبون إليه شوقا وتعلقا أو كل ذلك مجتمعا . فهو المثابة والمرجع للناس جميعا دوما وأبدا .
• من فضله أن من قصده لا يعود إلا بأجر أو غنم أو ضمانة جنة , ومن قصده لا دافع له غير الصلاة فيه عاد كيوم ولدته أمه , ومن زاره مخلصا ومات في طريقه إليه دخل الجنة بدون حساب .
அதை நாடி வருபவர் வீண் போவதில்லை. ஏதாவது ஒரு பெரும் லாபத்தோடுதான் திரும்புவார்.
நல்ல முறையில் ஹஜ்ஜை முடித்து திரும்பினாலும் பாவங்கள் நீங்கிய பரிசுத்தமானவராக அன்று பிறந்த பாலகனாக திரும்புவார்
ஒருவேளை வழியில் மரணித்துவிட்டாலும் அதன் முழுமையான கூலியை அல்லாஹ் கொடுத்து விசாரணை இன்றி சுவனம் நுழைவிப்பான்
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا خَرَجَ الْحَاجُّ مِنْ بَيْتِهِ كَانَ فِي حِرْزِ اللَّهِ , فَإِنْ مَاتَ قَبْلَ أَنْ يَقْضِيَ نُسُكَهُ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ , وَإِنْ بَقِيَ حَتَّى يَقْضِيَ نُسُكَهُ غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ , وَإِنْفَاقُ الدِّرْهَمِ الْوَاحِدِ فِي ذَلِكَ الْوَجْهِ يَعْدِلُ أَرْبَعِينَ أَلْفَ أَلْفٍ فِيمَا سِوَاهُ "
ஆதம் அலைஹிஸ் ஸலாம் கஃபாவைக் கட்டியபொழுது கேட்டார்கள்: யா அல்லாஹ் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு கூலி உண்டு. நான் இந்த ஆலயத்தை எழுப்பியுள்ளேன். எனக்கு என்ன கூலி?''
இதை நீர் சுற்றி வந்தால் உமக்கு என் மகத்தான மன்னிப்பு உண்டு''
''யா அல்லாஹ் இன்னும் அதிகப்படுத்து'' ''சரி.. உம் சந்ததிகள் இதை வலம் வந்தால் அவர்களுக்கும் மன்னிப்பு உண்டு.'' ''யா அல்லாஹ் இன்னும் அதிகப்படுத்து'' '' சரி.. அவ்ர்களுக்கு மட்டுமல்ல; அவர்கள் யாருக்கெல்லாம் பாவமன்னிப்புத் தேடுகிறார்களோ அவர்களுக்கும் மன்னிப்பு உண்டு போதுமா?'' ''போதும் போதும் ''
மனிதனைப் படைக்கப் போகிறேன் என்று வானவர்களிடத்தில் வல்ல ரப்பு சொன்னபொழுது பூமியில் குழப்பத்தை உண்டாக்கும் மனித சமுதாயத்தையா படைக்கப்போகிறாய் என்று வானவர்கள் கருத்து சொல்ல அந்த வார்த்தையை அல்லாஹ் விரும்பவில்லை. தங்கள் மேலுள்ள அல்லாஹ்வின் கோபம் தணிவதற்காக அர்ஷை ஏழு நாட்கள் சுற்றி சுற்றி வந்தார்கள் . (இன்று உலகில் ஒருவரின் கோபத்தை தணிக்க அவரையே சுற்றி சுற்றி வருவது போல.) அதன் பலனாக அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான் ''இதே போல பூமியில் ஒரு ஆலயத்தை எழுப்புங்கள் ஆதமின் சந்ததிகள் மீது அவர்களின் பாவங்கள் காரணமாக நான் அதிருப்தி அடைந்தால் அந்த ஆலயத்தை சுற்றி சுற்றி வந்து என்னை திருப்திப் படுத்துவார்கள் அல்லவா?' என்றான். உடனே வானவர்கள் கஃபாவை எழுப்பினார்கள்.
- சூரியனை நடு மத்தியில் வைத்து மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன அதனால் சூரியனின் ஒளியையும் சில சக்திகளையும் பெற்று பலன் பெறுகின்றன.
- பைத்துல் மஃமூரை வானத்தின் நடு மத்தியில் வைத்து வானவர்கள் சுற்றி வருகின்றனர். அதனால் அல்லாஹ்வின் விஷேச திருப்தியைப் பெறுகின்றனர்.
- கஃபாவை பூமியின் நடுமத்தியில் வைத்து ஹாஜிகள் சுற்றி வருகின்றனர். அதன்மூலம் அதில் ஒவ்வொரு நாளும் இறங்கும் 120 வகையான ரஹ்மத்தை பெற்று பரிசுத்தம் அடைகின்றனர் அன்று பிறந்த பாலகனைப் பொல ஆத்ம சுத்தி அடைகின்றனர்.
இதை சிலர் தவறாக விளங்கிக் கொள்கின்றனர் போல..
அப்படித்தான் ஒரு ஹாஜியார் ஹஜ் பயணம் முடிந்து ஊர் வந்து வரவேற்பு பொன்னாடை என்று அமர்க்களப்படுத்தியபின் மறுநாள் சுப்ஹு தொழுகையில் பார்த்தால் தாடியும் இல்லாமல் மீசையில்லாமல் செட்டியார் கோலத்தில் வந்து நிற்க பதறிப்போன ஆலிம்சா،
''என்னங்க ஹாஜி.. இந்த கோலம்? என்று கேட்க, என்னங்க ஆலிம்சா நீங்கதான் ஒரு பயானில் சொன்னீங்க ஹஜ் செய்தவர் ஊர் திரும்பும்போது அன்று பிறந்த பாலகனைப் போல திரும்புவார்னு சொன்னீங்க. அன்று பிறந்த பாலகனுக்கு தாடி ஏது? மீசை ஏது? அதுதான் இந்த கோலம்'' என்றாரே பார்க்கலாம். ஆலிம்சா அப்படியே ஷாக்காயிட்டார். நல்லவேளை.. அன்று பிறந்த பாலகனுக்கு ஆடை எங்கே என்று சொல்லி ஆதிவாசி கோலத்தில் வந்து நிக்காம போனாரு. நின்னா.. ஆலிம்சா மட்டுமல்ல மக்கள் அனைவரும் மயக்கம் போட்டே விழுந்திருப்பார்கள்.
• تعظيم الأمة الإسلامية لهذا البيت الشريف سبب لإحاطتهم بالخير واستمراره عليهم , وبضياع تعظيمها يكون هلاكهم .
• الطواف بالبيت سبعا يعدل عتق رقبة , والطائفون هم موضع مباهاة الله عز وجل ملائكته بهم , وكثرة الطواف به سبيل لمحو الذنوب , لدرجة أن المكثر من الطواف به يصير دائما كيوم ولدته أمه , شريطة أن يحصر لسانه في طوافه على التحميد والتهليل والتكبير وألفاظ الدعاء والذكر .
• إن الطواف به عند خلوه من الطائفين في الظروف القاسية كحال سقوط المطر وشدة الحر وغير ذلك يجلب للطائف ما لا يحصى من الأجر , وذلك حتى لا يخلو البيت من الطائفين في أي جزء من الزمان .
• لقد أرضى الله سبحانه وتعالى نبيه محمدا صلى الله عليه وسلم بتقرير اتجاه القبلة إليه '' قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتب ليعلمون أنه الحق من ربهم وما الله بغفل عما يعملون
• وأخيرا جعل الله الكعبة البيت الحرام قياما للناس , أي مركز نظامهم المادي المحسوس , وكذا الروحي الذي ينطلقون منه والذي يتجهون إليه , والمعلم البارز الذي يوحد أهدافهم ومصائرهم ومنصرفات حياتهم , والذي يشع معه شعاع التوحيد الذي يحمله المسلمون إلى أنحاء الدنيا كلها .
• الطواف بالبيت سبعا يعدل عتق رقبة , والطائفون هم موضع مباهاة الله عز وجل ملائكته بهم , وكثرة الطواف به سبيل لمحو الذنوب , لدرجة أن المكثر من الطواف به يصير دائما كيوم ولدته أمه , شريطة أن يحصر لسانه في طوافه على التحميد والتهليل والتكبير وألفاظ الدعاء والذكر .
• إن الطواف به عند خلوه من الطائفين في الظروف القاسية كحال سقوط المطر وشدة الحر وغير ذلك يجلب للطائف ما لا يحصى من الأجر , وذلك حتى لا يخلو البيت من الطائفين في أي جزء من الزمان .
• لقد أرضى الله سبحانه وتعالى نبيه محمدا صلى الله عليه وسلم بتقرير اتجاه القبلة إليه '' قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتب ليعلمون أنه الحق من ربهم وما الله بغفل عما يعملون
• وأخيرا جعل الله الكعبة البيت الحرام قياما للناس , أي مركز نظامهم المادي المحسوس , وكذا الروحي الذي ينطلقون منه والذي يتجهون إليه , والمعلم البارز الذي يوحد أهدافهم ومصائرهم ومنصرفات حياتهم , والذي يشع معه شعاع التوحيد الذي يحمله المسلمون إلى أنحاء الدنيا كلها .
சமீபத்தில் 600 சீனர்கள் புனித மார்க்கத்தைத் தழுவியதற்கு இந்த புனித தலங்கள் காரணமாக இருந்துள்ளன
அதாவது மக்காவிலிருந்து மதினா வரையிலான மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிக்காக சீனக் கம்பெனி ஒன்று டெண்டர் எடுத்து 5000 சீனர்களை அனுப்பியது. அந்த வேலை முடிக்கும் முன்பாகவே அதில் 600 சீனர்கள் கலிமா சொல்லியிருக்கிறார்கள். கடவுள் என்றால் யார்? இறை தியானம் எப்படி இருக்கும்? மன அமைதியை இறை தியானத்தில் பெறுவது எப்படி என்றெல்லாம் தெரியாமலேயே வெறும் கார்ல் மாக்ஸை மட்டுமே படித்த இந்த இளைஞர்கள் இன்று இறை மார்க்கத்தால் கவரப்பட்டு அதிகமதிகம் இஸ்லாத்தை ஏற்கின்றனர். ஹாஜிகளின் ஒரேமாதிரியான சீருடை ஏழை பணக்காரன் அரசன் ஆண்டி என்ற வித்தியாசமின்றி ஒரே கோலத்தில் செல்கின்ற சமத்துவம். பாங்கு சொல்லப்பட்டுவிட்டால் கடையே அப்படியே போட்டுவிட்டு கடமையை முடிக்கின்ற அந்த கண்டிப்பு. அந்த புனித தலங்களில் கிடைக்கிற மன அமைதி இன்னும் இத்தியாதி.. இவையெல்லாம் அவர்களை வெகுவாக கவர்ந்துவிட்டன.
சுனிதா வில்லியம்ஸ் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ஹைதராபாத்திலிருந்து வெளியாகும் “ஸியாஸத் நியூஸ்” (20-08-2007) இல் வெளியான ஒரு செய்தி |
அமெரிக்கா நாசா நிறுவனத்தின் பிரபல விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. அதை மறுத்தும் சில இணையங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அவர் கலிமா சொன்னாரா? இல்லையா? என்பது முக்கியமல்ல.. விண்வெளியிலிருந்து திரும்பியதும் அவர் கூறிய தகவல் ஆச்சரியமானது.
''தான் ஆகாயத்திலிருந்து பூமியை தொலைநோக்கி கருவி மூலம் பார்த்ததாகவும் அப்போது பூமி கடும் இருட்டாக தென்பட்டபோதும், மக்கா மற்றும் மதீனா ஆகிய இரண்டு நகரங்கள் மாத்திரம் பிரகாசமாக தென்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதான் இங்கு கவனிக்கவேண்டிய தகவல்.
பூமியில் உள்ளோருக்கு வானில் நட்சத்திரங்கள் மின்னுவது போல பூமியில் அல்லாஹ்வை நினைவு கூறப்படும் இடங்கள் வானிலுள்ளோருக்கு மின்னும் என்ற நபிமொழி எவ்வளவு உண்மையானது?
அவ்வப்போது திக்ரு நடைபெறும் இடங்களுக்கே இந்த நபிமொழி பொருந்தும் என்றால் ஒரு விநாடி கூட இடைவெளி இல்லாமல் இபாதத் நடைபெறும் அந்த இரண்டு புண்ணியத் தலங்களைச் சொல்லவா வேண்டும்?
அதுமட்டுமல்ல.. 120 வகையான அருள் அனுதினமும் அங்கே இறங்கிக் கொண்டிருக்கும்போது ஒளிவெள்ளத்திற்கு என்ன குறை?
கஃபாவைக் கண்ணியப்படுத்தியவர்களுக்கு கண்ணியம் கிடைத்ததுபோல அதை அவமதிக்க முயன்ற அனவருக்கும் அழிவு ஏற்பட்ட வரலாறும் உண்டு.
கஃபாவை ஆரம்ப காலத்தில் குஸாஆ என்ற குரைஷியக் கோத்திரத்தில் ஒரு பிரவினர் நிர்வகித்து வந்தனர், இவர்களின் காலத்தில்தான் சிலைகள் இல்லாத தூய்மையான புனித அந்த இல்லத்தில் சிலைவைக்கப்பட்டு, அதன் நோக்கம் மாசுபடுத்தப்பட்டது. அந்தப்பாவத்தை முதல் முதலில் அம்று பின் லுஹை அல்குஸாயி என்பவனே அதனுள் அரங்கேற்றினான். அதனால் நபி (ஸல்) அவர்கள் அம்றுபின் லுஹைல் அல்குஸாயை நரகத்தில் அவனது குடல்களை இழுத்துக் கொண்டு வேதனை செய்யப்படுவதைக் கண்டேன், அவனே கஃபாவில் முதல்முதலில் சிலை வணக்கத்தை உண்டாக்கியவன் எனக் கூறினார்கள். (புகாரி).
இவர்களின் பின்பு குரைஷியரிடம் அதன் நிர்வாகம் கைமாறியது. அதிலும் இணைவைத்தலும், பல சமூகக் கொடுமைகளும் அரங்கேறவே செய்தன. உயர் சாதி குரைஷியர் அவர்களின் குலத்தில் இல்லாத, தாழ்த்தப்பட்ட மக்களை? புனித கஃபாவில் ஆடையின்றி நிர்வாணமாக தவாஃப் செய்ய விட்டனர், எல்லோரும் அரஃபாவில் தங்கி இருக்க, இவர்களோ முஸ்தலிபாவில் தங்குவர், இப்படி பல நடைமுறைகள். இவர்களின் ஆட்சியில்தான் கஃபாவினுள் 360 சிலைகள் வைக்கப்பட்டன. அவற்றை அல்லாஹ்வின் தூதர் ஹிஜ்ரி 8வது வருடம் மக்கா வெற்றியின் போது ‘ சத்தியம் வந்தது, அசத்தியம் ஒழிந்தது, அசத்தியம் ஒழிந்தே தீரும் என்ற திருமறைவசனத்தைக் கூறியவர்களாக உடைத்தெறிந்தார்கள். (பார்க்க : புகாரி, முஸ்லிம்).
கஃபாவை தகர்க்க எடுத்து முயற்சி சுக்குநூறாகியது
அபீஸீனிய மன்னனின் ஆட்சியில் ஏமன் நாட்டின் பிரதிநிதியாக செயல்பட்டு வந்த ஆப்ரஹா என்பவன் கி.பி. 571-ல் பிரமாண்டமான யானைப் படை ஒன்றைத் தயார் செய்து கஃபாவை இடிப்பதற்காக அனுப்பிவைத்தான், அதை அழிப்பதற்காக அபாபீல் என்ற பறவைகளின் சொண்டுகளில் சூடேற்றப்பட்ட கற்களை கவ்விக்கொண்டு வரச் செய்து, அந்தப்படையை மெண்டு துப்பிய வைக்கோலைப்போல் அல்லாஹ் ஆக்கினான் என்பதை அல்ஃபீல் அத்தியாயம் தெளிவு படுத்துகின்றது.
கஃபாவை இறுதிக்காலத்தில் ஒருவன் இடிக்க வருவான்.. அப்போது என்ன நடக்கும்?
அவன் பைதாஃ என்ற இடத்தை நெருங்கும்போது பூகம்பம் ஏற்பட்டு அவர்கள் அனைவரும் அழிக்கப்படுவர் எனபது நபியின் முன்னறிவிப்பு.
ஜம் ஜம் நீர்- வற்றாத நீரூற்று
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் வற்றாத நீரூற்று
இன்று நாள்தோறும் சராசரி ஆறாயிரம் கேலன் தண்ணீர் தருகிறது ஜம்ஜம்.
ஹரம்ஷரீஃபில் தொழுகைக்காக வருவோர் அருந்துவதற்காக ஆயிரக்கணக்கான குடுவைகளில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா செல்லும் சுமார் 30 லட்சம் ஹாஜிகள் பருகுவதற்கு மட்டுமின்றி அவர்கள் கேன்களில் பீப்பாய்களில் ஊர்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் நீரினை வழங்குகிறது. இவ்வாறு ஈந்த பின்னரும் குறைவில்லாமல் பெருகிக் கொண்டிருக்கும் ஜம்ஜம் இறைவனின் அருட்கொடைகளில் ஒன்று என்பதில் ஐயம் உண்டா?
கிபி. 1968 ஆம் ஆண்டில் பெருமழை ஏற்பட்டபொழுது மழை நீர் கிணற்றுக்குள் புகுந்துவிடாதபடி கிணற்றிலிருந்து தண்ணீர் பொங்கிக் கொண்டே இருந்ததும் ஒரு புதுமையாகும். ஒரு தடவை மருத்துவர்கள் சுகாதரத்திற்காக இக்கிணற்றை சுத்தப்படுத்த ஆலோசனை சொன்ன பொழுது அதை ஏற்ற சவுதி அரசாங்கம் எட்டு பம்பு செட்டுகள் வைத்து 15 நாட்கள் இரவு பகலாக இதன் நீரை இறைக்க முயன்றும் முடியவில்லை.நீர் குறைவதற்கு பதில் ஒரு அங்குலம் உயர்ந்திருந்தது.
ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஜம் ஜமைப் பற்றி ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இறைவனின் திருப்பெயரை மொழிந்தவர்களாக ஆய்வாளர்கள் சிலர் கிணற்றுக்குள் மூழ்கினர். ஆய்வுக்காக நிபுணர்கள் எடுத்துச் சென்ற விளக்குகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கப்பால் செயல்படவில்லையாம். நூற்றுக்கணக்கான மூடைகளில் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாத்திரங்களும் பிற பொருட்களும் இருந்தன. (அது ஜுர்ஹூம் கிளையார் கிணற்றுக்குள் போட்டு மூடிவிட்டுச் சென்ற பொருட்களாக இருக்கலாம்.)
அதன் நீர் ருசியில் சற்று இளைப்பாக இருந்தாலும் இதில் பல்வேறு மருத்துவகுணங்களும்,உடல் நலத்திற்குத்தேவையான பல சிறப்புத்தன்மைகளும் அமைந்துள்ளதால் ,"பூமியில் உள்ள நீர்களில் மிகச்சிறந்தது ஜம்ஜம் நீராகும்"என்பதாகவும்,"ஜம்ஜம் எதற்காக குடிக்கப்படுகின்றதோ அதற்குரியதாகும்"என்பதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.
மேலும் இந்தக்கிணற்றருகே நின்று துஆ கேட்டால் உடனே ஏற்றூகொள்ளப்படும் என்றும் கூறினார்கள்.
ஜம்ஜம் நீரின் மருத்துவத் தன்மைகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்ந்து வெளியுட்டுள்ளனர். வாய்வுத் தொல்லையைப் போக்கும் மெக்னீசியம் சல்ஃபேட், மூட்டுகளில் ஏற்படுகின்ற வலியைப் போக்கி வயிற்றோட்டத்தையும் மலச்சிக்கலையும் மாற்றும் சோடியம் சல்ஃபேட், இரத்தத்தை உற்பத்தி செய்யவும் தூய்மைப் படுத்தவும் பயன்படும் சோடியம் குளோரைடு; மந்தத்தைப் போக்கி பசியைத் தூண்டக்கூடிய கால்சியம் கார்பனைட்; சுறுசுறுப்பை ஊட்டி ஆஸ்துமா காசநோய் போன்ற வியாதிகளை நீக்கும் பொட்டாசியம் நைட்ரேட்; வயிற்றுப்ம் பூச்சிகளைக் கொன்று வயிற்றுக் கோளாறுகளைப் போக்கி சொறி சிரங்கு தோல் வியாதிகளையும் போக்கும் ஹைட்ரஜன் சல்பேட்
இவை அத்தனையும் ஒருங்கே அமையப்பெற்றுள்ள ஜம்ஜம் நீரைக் கண்டு ஆய்வியளார் ஆச்சரியப்படுகின்றனர்.
மக்காவிலுள்ள மற்ற முக்கிய இடங்களையும் அவற்றின் சிறப்பையும் அறிந்துகொள்ள இந்த அரபு இணைய தளத்தில் சென்று வாசிக்கவும் அழகான விளக்கப் படங்களுடன் அருமையான தொகுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்