28 அக்டோபர், 2012

பெருநாள் கொண்டாட்டமா? பெரும் திண்டாட்டமா?



பொதுவாக நோன்புப் பெருநாளாகட்டும்.. ஹஜ்ஜுப் பெருநாளாகட்டும்.. இஸ்லாமியப் பெருநாட்களில் என்னவெல்லாம் இருக்கும்?

வணக்கம் இருக்கும்! எல்லோருக்கும் மத்தியில் ஒரு இணக்கம் இருக்கும்!!
ஏழைகளை ஆதரிக்கிற ஏற்றமான பண்பு இருக்கும்.

உறவினர்களை உபசரிக்கிற உயர்ந்த குணம் இருக்கும்.
அண்டை வீட்டாரை அனுசரிக்கிற அழகிய பண்பாடு இருக்கும்.
கைகொடுத்து கொடுத்து கட்டித் தழுவி- 
கரத்துடன் கரம் சேர்த்து- கல்புடன் கல்பை சேர்த்து -
அன்பை அள்ளி வழங்கி- பாசத்தைப் பகிர்ந்துகொள்கிற பண்பாடு இருக்கும்.
வேற்றுமையை வேரறுத்து- ஒற்றுமையோடு ஓங்கி ஒலிக்கிற தக்பீர் இருக்கும்.
மனக்கசப்புகளை மறந்து- மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிற ஒரு மாற்றம் இருக்கும்.

அதற்கு மாறாக,
பட்டாசு வெடித்து காசைக் கரியாக்கி காற்றை மாசுபடுத்துகிற கண்றாவித்தனம் இருக்கக்கூடாது.
வெடிவெடித்து உடல் கரித்து உயிர்ப் பலியாகின்ற ஊதாரித்தனம் இருக்கக்கூடாது.
கலர்ப் பொடிகளைக் கலக்கி வைத்துக்கொண்டு காண்போர் மீதெல்லாம் 
அள்ளித் தெளித்து ஆடைகளை அசிங்கப்படுத்துகிற அலங்கோலம் இருக்கக்கூடாது.
இதுதான் இஸ்லாமியப் பெருநாள்; இன்பத் திருநாள்.
இஸ்லாமியப் பெருநாட்களிலே குதூகலத்திற்கு குறைவிருக்காது; ஆனால் அந்த குதூகலமும் மகிழ்ச்சியும் மார்க்கம் அனுமதித்துள்ள மாண்பார்ந்த வழிகளிலே இருக்கவேண்டும்.
  • குடித்துக் குடித்துக் கும்மாளமடித்து குடியைக் கெடுப்பதுதான் கொண்டாட்டமா? 
  • சிலுக்கு சட்டையைப் போட்டுக்கொண்டு குலுக்குக் கட்டை விளையாடுவதுதான் குதூகலமா?
  • காலையிலே கலிமாவை முழங்கிவிட்டு மாலையிலே சினிமாவை ரசிப்பதுதான் பெருநாள் தர்மமா?
  • காலையிலே பெருநாள் தொழுகையில் பக்திப் பரவசம்; மாலையிலே மலட்டாறு சென்று பாலாய்ப்போன பழரசம்.
  • காலையிலே தக்பீர்; மாலையிலே 'கிக்'-பீர் (கிக் தரும் பீர்) 
  • சலாம் சலாம் என்று சாந்தியைப் பரப்பவேண்டிய நாளில் பிராந்தியைக் குடித்துவிட்டு வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறோமே? என்ன கலாச்சாரம் இது?
திருநாட்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் ஆனந்தத்தை அள்ளிப் பருகவும் ஆகுமான வழிகளை வழங்கியுள்ளது இஸ்லாம். ஏராளமான எடுத்துக்காட்டுகள் இதற்கு உள்ளன. 

விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வீரத்தை ரசிக்கலாம்.


أخرجه البخاري ومسلم  من حديث أم المؤمنين عائشة - رضي الله عنها - قالت : كان الحبشُ يلعبون ، فسترني رسولُ الله - صلَّى اللهُ 
عليه وسلَّم - وأنا أنظر ، فما زلتُ أنظرُ حتى كنتُ أنا أنصرف ، فاقدروا قدر الجارية الحديثة السن الحريصة على اللهو . 
وفي روايةٍ أن النبي - صلَّى اللهُ عليه وسلَّم - قال لها : (( يا حُميراء , أتُحبين أن تنظري إليهم ؟ )) قالت : نعم ) 

ஒரு பெருநாள் தினத்தில் பள்ளிவளாகத்தில் அபீஸீனிய வீரர்கள் வீர விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, நபிகள் நாயகத்தின் பின்னால் நின்று நானும் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாகத் திரும்பும் வரை அவர்கள் எனக்குத் துணை நின்றார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். (புகாரி 5190)
தஃப்ஸ் பாடல்கள்:
விஷேச தினங்களில் மத்தளம் இல்லாத எளிமையான தஃப்ஸ் அடித்து சில ஆகுமான பாடல்களைப் பாடி அதை நபியவர்கள் கேட்டுக்கொண்டிருந்த நிகழ்வும் நடைபெற்றிருக்கிறது

ஆஷூரா அன்று சிறுமிகள் மதீனாவில் தஃப் அடித்து பாடல்கள் பாடியதை ருபைவு பின்து முஅவ்வித் (ரலி-அன்ஹா) என்ற பெண்மணியிடம் கூறப்பட்டபொழுது, ''அதில் ஒன்றும் தவறில்லை; காரணம் எனது திருமண நிகழ்வின்போது சில சிறுமிகள் நபியவர்களுக்கு முன்பாக தஃப் அடித்து தங்கள் முன்னோர்களைக் குறித்து பாடல்கள் பாடியபொழுது நபி அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் தடுக்கவில்லை. அதில் ஒரு வரியை மட்டும் கண்டித்து இப்படிப் பாடவேண்டாம் இதற்கு முன்னர் நீங்கள் பாடிக்கொண்டிருந்த அந்த வரிகளையே பாடுங்கள் என்று சொன்னார்களே தவிர விஷேசங்களில் பாடல்கள் என்பது அறவே கூடாது என்று தடுக்கவில்லை'' என்றார்கள்.  (இப்னு மாஜா 1887, புஹாரீ 3700)

 قالت الربيع بنت معوذ بن عفراء جاء النبي صلى الله عليه وسلم فدخل حين بني علي فجلس على فراشي كمجلسك مني فجعلت جويريات لنا يضربن بالدف ويندبن من قتل من آبائي يوم بدر إذ قالت إحداهن وفينا نبي يعلم ما في غد فقال دعي هذه وقولي بالذي كنت تقولين
قال المهلب : في هذا الحديث إعلان النكاح بالدف وبالغناء المباح 
و في رواية الصحيحين عن عائشة قالت : دخل أبو بكر وعندي جاريتان من جواري الأنصار تغنيان بما تقاولت الأنصار يوم بعاث . قالت : وليستا بمغنيتين ، فقال أبو بكر : أمزامير الشيطان في بيت رسول الله صلى الله عليه وسلم ؟ وذلك في يوم عيد ، فقال رسول الله صلى الله عليه وسلم : يا أبا بكر إن لكل قوم عيدا ، وهذا  
 .
ஒரு பெருநாள் அன்று ஆயிஷா ரலி-அன்ஹா அவர்களது இல்லத்தில் இரு சிறுமிகள் சில பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். அந்நிலையில் அங்கு வந்த அண்ணல் நபி ஸல் அவர்கள் விரிப்பில் படுத்து முகத்தை சற்று வேறுபக்கம் திருப்பிக்கொண்டார்கள். (அவர்கள் அதை விரும்பி ரசிக்கவில்லை என்றாலும் முற்றிலும் தடுக்கவில்லை). அந்த நேரம் அபூபக்கர் ரலி அவர்கள் அங்கு வந்து என்ன.. அல்லாஹ்வின் தூதருக்கு முன்னாலேயே ஷைத்தானின் வாத்தியக் கருவிகளா? என்று அதட்டியபொழுது அண்ணல் நபி ஸல் அவர்கள் , விடுங்கள் தோழரே.. ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு திருநாள் உண்டு இது இவர்களின் திருநாள். ''


எனவே ஆகுமான வழிகளில் ஆனந்தத்தை அனுபவிக்க தடையில்லை;
அனாச்சாரமான வழிகளைக் கையாண்டு அழிந்துவிடக்கூடாது என்றுதான் மார்க்கம் கூறுகிறது.



சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே!

4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி சீனி..
      உங்கள் வரவுக்கும்
      கருத்துக்கும்!

      நீக்கு
  2. அல்ஹம்துலில்லாஹ்
    தேவையான நேரத்தில். பொருத்தமான. கட்டுரையை தந்துள்ளீர்கள்
    ﺟﺰﺍﻙ ﺍﻟﻠﻪ ﺧﻴﺮﺍ ﻓﻲ الدارين

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...